Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நெடுக்கர்…. அப்பக்கடை நடத்தியவரா?

இவ்வளவு நாளும், இது தெரியாமல் போச்சே…. 🤣

நெடுக்கர் நடாத்தவில்லை அங்கு சாப்பிட்டு நொந்து இங்குவந்து கலவரம் பண்ணியவர் 😀

 • Haha 2
Link to comment
Share on other sites

 • Replies 133
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

இது உண்மை - அதனால் தான் நீரிழிவின் நிலை என்னவென்று ஆராயாமல் ஏன் ஐரோப்பாவில் இன்சுலின் எல்லோருக்கும் கொடுக்கிறார்கள் எனக் குழம்புகிறேன்.  எங்கள் உடலில் இரண்டாம் வகை நீரிழிவு ஆரம்பிக்கும் போது நடப்பது இ

Justin

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அ

Justin

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான்

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

வெந்தயம் ஊற வைச்சு சாப்பிடுவதிலும் பார்க்க அப்படியே வெறும் வயித்தில் மென்று சாப்பிட்டால் தான் பலனாம் 
நான் ஊரில் இருக்கும் போது முருங்கை இலையை திரும்பியும் பார்ப்பதில்லை ...அதில் இருக்கும் சத்து வேறு எதிலும் இல்லை ...அதையும் இடைக்கிடை கருஞ் சீரகத்தோடு சேர்த்து  அவித்துக் குடிப்பது உண்டு 

தெரிந்த நண்பர் ஒருத்தர் விடிகாலையில் வெந்தயம் தானும் உண்டு எங்களையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் நமக்கு தான் கோப்பியின்றி விடியாதே .

Edited by பெருமாள்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10வருசமா முளைகட்டிய வெந்தயத்தை காலமை சாப்பிடுறனான். என்ர GPயும் இரத்த பரிசோதனையில் அடி ஆழம் வரை போய் டயாபடீஸ் இருக்கா என்டுதேடிப்பாக்கிறார்.சிங்கன் சிக்கினால் தானே

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதை சாப்பிட்டால் என்னென்ன நோய்க்கு நல்லது.....என்ன  நோய் வராது எண்டு உங்கடை அனுபவத்தை சொன்னால் goshan_che போன்ற பாமரமக்கள் பயன் பெறுவினம் எல்லோ...😎

நீங்கள் மேட்டுகுடியள் அண்ணை உந்த நைட்டி ரைஸ் எல்லாம் உங்களுக்கு சர்வசாதாரணம். பாமரன் நான் இன்னும் கூப்பன் அரிசிதான். கேட்டு அறிய ஒரு ஆவல் அவ்வளவுதான் 🤣. சுகர் குறையும் எண்டால் 2 பிளேட்டை பழையபடி 3 பிளேட் ஆக கூட்டலாம் எண்டு பாக்கிறன்🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

 சுகர் குறையும் எண்டால் 2 பிளேட்டை பழையபடி 3 பிளேட் ஆக கூட்டலாம் எண்டு பாக்கிறன்🤣.

மூன்று பிளேட் சோறா… 😂

சோறு போட்டே… கை உழைஞ்சிடும் போலை கிடக்கே… 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

50 minutes ago, நந்தன் said:

கடந்த 10வருசமா முளைகட்டிய வெந்தயத்தை காலமை சாப்பிடுறனான். என்ர GPயும் இரத்த பரிசோதனையில் அடி ஆழம் வரை போய் டயாபடீஸ் இருக்கா என்டுதேடிப்பாக்கிறார்.சிங்கன் சிக்கினால் தானே

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

யோவ் என்னய்யா பயப்புடுத்திறொயள்… நானும் முளைகட்டினதுதான் ரெண்டுவருசமா சாப்பிடுறன்.. ஒருத்தனும் சொல்லேல்ல உப்பிடி..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

எழுதுவமோ விடுவமோ எண்டு நான் யோசிக்க நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

இலங்கை போன நேரம் ஒரு வகையான தேனீரை எல்லாரும் சொல்லி வாங்கி வந்தேன். ஒரு மாசம் போன பின் சுகரும் கொஞ்சம் குறைந்தது, ஆனால் “ஆர்வமும்” குறைந்தது போல ஒரு பீலிங்.

கெதியெண்ட்டு செத்தாலும் பரவாயில்லை கம்பீரமாக சாவோம் எண்டு நிப்பாட்டி போட்டன் 🤣.

பாவிச்சத ஜி பியுடம் சொல்லவே இல்லை. டோஸ் விழும் என்ற பயத்தில்.

இதே போல் மஞ்சள்தூளும். எங்கள் வீட்டில் எல்லாம் ஆம்பிளை பிள்ளையளுக்கு முட்டை பொரியல் மஞ்சள் இல்லாமல் தனியா செய்வார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.  

பிகு

எனக்கு தெரிஞ்ச ஒருவருக்கு தலை முடி கொட்டுது எண்டு ஒரே கவலை. எங்கயோ £5000 கட்டி டிரீட்மெண்ட் எண்டு போனவர். போன இடத்தில் இப்படி ஒரு பக்க விளைவு வரலாம் எண்டு சொன்னார்களாம்.

” நான் தலை மயிர் வளர வேண்டும் எண்டு ஆசை படுறதே இதற்குத்தான், இதில்லாமல் நான் தலைமயிரை வைத்து என்ன கொண்டையா கட்ட முடியும்” எண்டு ஆள் விட்டுட்டு வந்துட்டு🤣.

ஜேர்மனி வாசிகள் முடிந்தால் உறுதிப்படுத்தவும். அங்கே இப்போ டயபிடிஸ் என உறுதி செய்தால் அதன் பின் மாத்திரைகள் கொடுப்பதில்லையாம்? நேரே ஊசிதானாம். உள்ளதில் பக்கவிளைவு குறைவான விடயம் என்பதாலாம். 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யோவ் என்னய்யா பயப்புடுத்திறொயள்… நானும் முளைகட்டினதுதான் ரெண்டுவருசமா சாப்பிடுறன்.. ஒருத்தனும் சொல்லேல்ல உப்பிடி..

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

🤣 அடி மடியில கைவைத்தா பதறுமா இல்லையா 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

54 minutes ago, suvy said:

பாலபத்ரர் நீங்கள் அவசரத்தில் நிழலியின் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லைபோல் தெரிகிறது......ரெண்டு வருடமாய் சாப்பிடுகிற நீங்கள்தான் சொல்லவேணும் ......!   😎

அவருக்கு முதல் 10 வருசமா ஒருவர் சாப்பிடுகிறார்... 😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

இந்த கறுப்பு,பிறவுண், சிவப்பு அரிசிகள் சாப்பிட்டால் ஒரே சத்தி வாற மாதிரி இருக்கு..செமிபாடும் குறைவு என்ன தான் செய்வது..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மூன்று பிளேட் சோறா… 😂

சோறு போட்டே… கை உழைஞ்சிடும் போலை கிடக்கே… 🤣

சிறித்தம்பி! அது சும்மா கை இல்லை...அன்னமிட்ட கை ......ஒருத்தராலையும் அசைக்கேலாது 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நான் ஊரில் இருக்கும் போது முருங்கை இலையை திரும்பியும் பார்ப்பதில்லை ...

உப்பிடியான ஆக்கள் கன பேர் திரியினம்.
கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, யாயினி said:

இந்த கறுப்பு,பிறவுண், சிவப்பு அரிசிகள் சாப்பிட்டால் ஒரே சத்தி வாற மாதிரி இருக்கு..செமிபாடும் குறைவு என்ன தான் செய்வது..

நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். 

ஒருவர் வெள்ளை அரிசி சாப்பிடும் அளவில் மூன்றிலொரு பங்கு தான் தீட்டாத அரிசி சாப்பிட முடியும் - ஏனெனில் நார்ச்சத்துக் காரணமாக சமிக்க நேரமெடுக்கும். இது நல்லது, இதனால் தான் நீரிழிவு வாய்ப்புக் குறைகிறது. 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

நீங்கள் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். 

ஒருவர் வெள்ளை அரிசி சாப்பிடும் அளவில் மூன்றிலொரு பங்கு தான் தீட்டாத அரிசி சாப்பிட முடியும் - ஏனெனில் நார்ச்சத்துக் காரணமாக சமிக்க நேரமெடுக்கும். இது நல்லது, இதனால் தான் நீரிழிவு வாய்ப்புக் குறைகிறது. 
 
ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

Link to comment
Share on other sites

12 minutes ago, யாயினி said:

ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! நீங்கள் இருக்கிற இடத்திலையும் எக்கச்சக்கமான  ஏசியன் அரிசிக்கடை இருக்கெண்டு கூகிள் சொல்லுது....😁

Food-Inspiration international: Internationale Supermärkte

Dhl GIF | Gfycat Deutsche Post DHL Group | Produkte

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...
இன்று DHL எக்ஸ்பிரஸ் பொதிமூலம் கிடைத்தது. :)
மிக்க நன்றி அண்ணா. 🙏

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

Dhl GIF | Gfycat Deutsche Post DHL Group | Produkte

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...
இன்று DHL எக்ஸ்பிரஸ் பொதிமூலம் கிடைத்தது. :)
மிக்க நன்றி அண்ணா. 🙏

மறக்காமல் பாஞ்ச்  அண்ணருக்கும் கொண்டுபோய் குடுத்து விடுங்கோ.......!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

3266
7
 
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice benefits

கருப்பு கவுணி அரிசியின் முக்கியத்துவம் சமீப காலங்களில் அனைத்து மக்களிடமும் சென்றடைந்திருக்கின்றது. இந்த அரிசியை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கவுனி அரசியில் உள்ள சத்துக்கள் (Kavuni Arisi)

இந்த கருப்பு கவுணி அரசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, மற்ற வகை அரிசிகளை விட இதில் கூடுதலாக  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அந்தோசயினின் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 1 (Kavuni Arisi Benefits)

அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 2 (Karuppu Kavuni Arisi Benefits)

குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுணி அரிசியில் செய்த உணவுகளை உண்பதன் மூலம் மிக எளிதாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 3 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த அரிசி நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. கவுணி அரிசியில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதுடன், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்குகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 4 (Karuppu Kavuni Arisi Benefits)
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு கவுணி அரிசியை உண்பதால் நம் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. நமது உடல் எடையும் கண்காணித்து ஆற்றலை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 5 (Karuppu Kavuni Arisi Benefits)

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கருப்பு கவுணி அரிசியை தினசரி உணவாக சாப்பிடுவதன் மூலம் நமது உடலானது நீரிழிவு நோய் எதிர்த்து போராட உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள் – 6 (Karuppu Kavuni Arisi Benefits)
இந்த கருப்பு கவுணி அரிசியில் உயிர்ச்சத்து விட்டமின் பீ/ஈ அதிகளவு நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தோல் பாதுகாப்புக்கு நல்லது, தசைப்பிடிப்புக்கு நல்லது, நரம்புகளுக்கு சிறந்தது.

கருப்பு கவுனி அரிசியை கொண்டு என்னென்ன உணவுகளை சமைக்கலாம்?

இனிப்பு பொங்கல், பாயசம், சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை ஆகியவைகளை செய்து சாப்பிடலாம்.

https://kallaru.com/karuppu-kavuni-rice-benefits/?__cf_chl_jschl_tk__=pmd_4FV7h1Lk0egShPvBNFv3GB2J0SBcrhZxH6WJ4vLdXSs-1635182613-0-gqNtZGzNAmWjcnBszQi9

 • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

கறுப்பு அரிசி, சிவப்பரிசி, பிறவுண் அரிசி - இவை எல்லாமே தீட்டிய வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானவை. இதன் காரணம், அரிசித் தானியத்தின் மேல் படையான தவிட்டில் (bran) தான் அனேகமான நுண் போசணைகள் இருக்கின்றன, அத்தோடு நார்ச்சத்தும் தவிட்டில் தான் அதிகம். தவிட்டை தீட்டுதல் மூலம் அகற்றி விட்டால் கிடைப்பது சுவையான, ஆனால் நார்ச்சத்தும் போசணைகளும் அற்ற சுத்திகரித்த மாச்சத்து! இது உடனடியாக உடலினுள் உறிஞ்சப் பட சீனி உடலில் ஏறும், இன்சுலினும் ஏறும் - இது மீள மீள நடந்தால் இரண்டாம் வகை நீரிழிவு (T2D) காலப் போக்கில் வரலாம்! 

Longitudinal cross section of grain [21] | Download Scientific Diagram

பட உதவி : நன்றியுடன்:Arlina Prima Putri

இந்த கறுப்பரிசியின் தவிட்டில் அந்தொசயனின் என்ற நிறப்பொருள் இருப்பதால் கரிய அல்லது நாவல் நிறம். இந்த அந்தோசயனின் antioxidant என்பதால் இது புற்று நோயிலிருந்து காக்கும் எனவும் சொல்லப் படுகிறது - ஆனால் அனேக ஆய்வுகள் ஆய்வு கூட மட்டத்தில் மட்டும் செய்யப் பட்டவை. 

ஆனால், நீரிழிவு வராமலிருக்க கறுப்பு, சிவப்பு, பிறவுண் அரிசி வகைகள் உதவும் என்பது நிரூபணமான தரவு. 

இணையத்தில் தேடி வாசித்தபோது நீங்கள் சொன்ன antioxidant இன் அளவுதான் ஏனைய அரிசி வகைகளிலிருந்து வேறுபடுகிறது. 

வெள்ளை அரிசி தவிர ஏனைய அரிசிகள் நீரிழிவு வராமல் இருக்க ஓரளவு உதவுமே தவிர நிவாரணி அல்ல.

சில அரிசி வகைகள் நீரிழிவுக்கு 'நல்லதாம்' என்ற தவறான கருத்தால் நீரிழிவு உள்ளவர்கள் இந்த அரிசி வகைகளைத் தாராளமாக உண்ணுகின்றனர். இது நீரிழிவு நோயைக் குணப்படுத்தாது. Glycemic Indexe இல்தான் வித்தியாசங்கள் உள்ள்ளனவே தவிர கலோரிகளின் அளவுகளில் (glucide - சீனி) மிகக் குறைவான வித்தியாசமே உள்ளது.

உதாரணமாக வெள்ளை அரிசிக்கும் தீட்டாத அரிசிக்கும் உள்ள வேறுபாடு
100 கிராம் தீட்டாத அரிசி 326 KCal  -  வெள்ளை அரிசி 320 KCal

Glycemic அளவு  தீட்டாத அரிசி 50/100 - வெள்ளை அரிசி 70/100 

சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

 சரியான தகவல்கள் இணையவன் - இதை வேறு இடங்களில் நான் எழுதியிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் 3 வழிகளில் தீட்டாத அரிசி நீரிழிவு போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கும்:

1. இயற்கையாகவே ஒருவர் உள்ளெடுக்கும் அளவு தீட்டாத அரிசி சாப்பிடும் போது குறையும் - வயிறு நிறைந்து விடுவதால் -இங்கே உள்ளெடுக்கும் கலோரி குறையும். வெள்ளை அரிசி போன்ற அளவில் சாப்பிட்டால் இந்த வழி வேலை செய்யாது.

2. சமிபாடடையும் வேகம், குடலினூடாக நகரும் வேகம் தீட்டாத அரிசிக்குக் குறைவு. எனவே குளூக்கோஸ் உறிஞ்சுதல் குறைவு, இரத்த குளூக்கோஸ் உடனே கூடாது. இது கணையத்திற்கு நல்லது. 

3. நார்ச்சத்துள்ள எந்த உணவும் - தீட்டாத அரிசி உட்பட - எங்கள் குடலில் இருக்கும் நுண்ணங்கிகளின் (microbiome)  பரம்பலை, வகைகளை மாற்றும். இது, நீண்ட காலப் போக்கில் உடலுக்கு நல்லது. இந்த குடல் நுண்ணங்கிகளினால் உருவாக்கப் படும் SCFA எனப்படும் கொழுப்பமிலங்கள் பல உடற் தொழிற்பாடுகளில் பங்களிப்புச் செலுத்துகின்றன. 

ஆனால், சோத்தால் அணைகட்டி, குழம்பால் குளம் கட்டிச் சாப்பிட்டால் தீட்டாத அரிசியும் நஞ்சு தான் என்பதை நினைவிற் கொள்ள வேணும்! 😄 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சாப்பிடமுன்னம் நார்மலா இருக்கும் சுகர் சாப்பிட்டவுடன் சடன் எண்டு ஏறி 150,200 க்கு வந்துடும்.. இப்படி சுகர் அதிகரிப்பவர்களுக்கு நிண்டு நிதானமா மெதுவா சமிபாட்டடையும் உணவுகள்தான் சரி.. இவைதான் மெதுமெதுவாக சமிபாடடைவதால் இவற்றில் இருந்து வரும் கார்ப்பும் மெதுவாக உடம்பில் சேரும்.. அதனால் சுகரும் மெதுவாகத்தான் அதிகரிக்கும்.. அந்தவகையில் மெதுவாகசமிபாடடையும் முழுத்தானியங்கள் கறுப்பரிசி உள்ளடங்களாக நல்லதே.. நான் கீழ் உள்ள தானியங்களை மிக்ஸ் பண்ணி ( மிக்ஸ் பண்ணி விக்கிறார்கள் விதும்பினால் தனித்தனிய வாங்கியும் மிக்ஸ் பண்ணலாம்) அதோட ஒரு கைப்பிடி சிவப்பு பச்சை அரிசியும் சேத்து சமைச்சு தனி அரிசிச்சோறுக்கு பதிலா சோறா பாவிக்கிறனான்… அதே ரேஸ்ற்றா இருக்கு.. எவ்வளா சாப்புட்டாலும் சுகர் முதல் நாலு அவறுக்கு 125 ஜ தாண்டவில்லை.. சாப்பிட்டு ஒவ்வொரு மணித்தியாலமும் பரிசோதித்து பார்த்தேன் பலமுறை..

buckwheat, red lentils, squash seeds, green lentils, bulgur, millet, sunflower seeds, red quinoa, white quinoa, black quinoa+ நம்ம அரிசி

1 hour ago, nunavilan said:

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

இதுக்கு வைன் மாதிரி ஒண்டும் வராது.. எவ்வளா சாப்பிட்டாலும் பூரா செமிச்சுடும் ஒண்டும் நடக்காத மாதிரி.. ஒரு கப் வைன் சாப்பாட்டுக்கு முன் கீல வெடக் நா புள்ள

2 hours ago, யாயினி said:

ஒரு குழந்தை பிள்ளைகளுக்கு பீட் பண்ற அளவு அதிகமா....

என்ட சாப்பாட்டு முறை(வித்தியாசம்) ரொம் குறைவு..

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.