கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் பதியப்பட்டது October 24, 2021 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது October 24, 2021 இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..! 12 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted October 25, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2021 ராஜவன்னியன்... ஒரு நாட்டிற்கு செல்லும் போது.... அந்த நாட்டின், கிராமங்களுக்கு செல்லும் போது தான்... அந்நாட்டின்... அழகை, உண்மையாக தரிசிக்க முடியும். அதனை குறுகிய காலத்தில்... நன்றாக திட்டமிட்டு... ரசித்துள்ளீர்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted October 25, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2021 உணவை உண்ணும்போது அறு சுவைகளையும், அதாவது இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு. என ஒவ்வொன்றின் சுவையையும் தனித்தனியாக உணர்ந்து உண்ணக்கூடியவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுபோல்... கண்கள் காணும் அழகில் இருக்கும் காட்சிகளையும் உணர்ந்து ரசிப்பவனது உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பிறரையும் மகிழவைக்கும் என்பதற்கு கள உறவு ராசவன்னியர் ஒரு சாட்சி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said: இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 22 minutes ago, குமாரசாமி said: ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது? வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 47 minutes ago, Paanch said: வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை. இது மட்டும் தெரியும்... You can not chat because you're in block list. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 1 hour ago, குமாரசாமி said: எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை. இது மட்டும் தெரியும்... You can not chat because you're in block list. அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? *** Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 7 hours ago, குமாரசாமி said: ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது? சுவிட்சர்லாந்து வருகை முதலில் இரண்டு நாள் திட்டமாக இருந்தது. பின்னர் பலரும் சொல்லிய இடங்களை சுற்றிப்பார்க்க அதாவது சுவிஸ் ஆல்ப்ஸ் (Top of Europe), இன்டெர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகள் மிகவம் ரம்யமானவை, வாழக்கையில் தவறவிடக்கூடாது என சொல்லியதால், நான்கு நாட்கள் சூரிட்சில் தங்கியிருந்து அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு இரண்டு முறை இன்டர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு ஞாயிறு அதிகாலை துபாய் திரும்பினேன். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 7 hours ago, குமாரசாமி said: ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது? 7 hours ago, Paanch said: வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்.. ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை. வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன். படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன். 3 hours ago, ஈழப்பிரியன் said: வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள். நிச்சயம் கலந்துகொள்வேன். 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 (edited) 13 hours ago, கிருபன் said: சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள். Lauterbrunnen மற்றும் Grindelwald ஆகிய இரு இடங்களும் அவசியம் கால்நடையாக நடந்து ரசிக்கக் கூடிய அற்புதமான இடங்கள். என்னுடன் வந்த இருவருடனும் சில தூரம் நடந்துவிட்டு, பின்னர் காரிலேயே சுற்றிப் பார்த்தோம். "Top of Europe" இன்னும் அற்புதம்..! நேரம் கிட்டும்போது சுவிட்சர்லாந்து பயண நினைவுகளை எழுதுகிறேன். Edited October 26, 2021 by ராசவன்னியன் 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Sasi_varnam Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 24 minutes ago, ராசவன்னியன் said: என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்.. ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை. வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன். படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன். நிச்சயம் கலந்துகொள்வேன். ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்? எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் "இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 3 hours ago, Sasi_varnam said: ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்? எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் "இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை உண்மையை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..? எங்களுக்கு ஒரே தாகமாக இருந்தது. முதல்முறை, உடன் வந்த அரபி வற்புறுத்தி கூப்பிட்டதால் (எனக்கு காஃபி சாப்பிடும் பழக்கம் இல்லாவிட்டாலும் )உள்ளே அவர்களுடன் சென்று உட்கார்ந்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து வந்துவிட்டேன். மறுபடியும் உள்ளே சென்று வந்தேன், தப்பா நினைக்காதீங்க, ரெஸ்ட் ரூமிற்குத்தான்..! மற்ற எதையும் கவனிக்கவில்லை..! பாஞ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் கேட்டேன், அவரும் இங்கிருக்கும் விசேசம் மற்றி ஒன்றும் சொல்லவில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 "டாப் ஆஃப் ஈரோப் - Jungfraujoch " செல்ல Lauterbrunnen ரயில் நிலையத்திற்கு வந்து மலை ரெயிலில் ஏறி, மலை மேலே மூன்று இடங்களில் ரயிலில் மாறி செல்ல வேண்டும். உச்சம் தொட்டு மேலே சென்றால் நின்றால் பனி மூடிய மலைகள், சறுக்கு விளையாடுமிடங்கள்.. வெண்பனி மூடிய பல இடங்கள்.. வெற்று மணல் பாலைவனத்தையே 23 வருடங்களாக பார்த்திருந்த எனக்கு இந்த பனிமலைகளை தொட்டு சறுக்கி சிலிர்த்த அனுபவத்தை இன்னமும் ரசிக்கிறேன்..! கீழே இணைத்துள்ள காணொளி அவ்விடத்தை பற்றி சொல்லும்.. 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 15 minutes ago, ராசவன்னியன் said: பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம். அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும். உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 26, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 2 minutes ago, குமாரசாமி said: அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும். உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான். என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..! இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..! என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2021 49 minutes ago, ராசவன்னியன் said: என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..! இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..! என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது. ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். என்ன ஒன்று சிறந்த ஸ்திரமான அரசியல் இருந்தால் எல்லாமே சிறப்பாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் விட சுவீஸ் ஒரு குட்டி நாடு. அதை பேணி பாதுகாக்க அவர்களால் முடிகின்றது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 28, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 28, 2021 On 27/10/2021 at 01:47, குமாரசாமி said: ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். ............ இந்தியாவா............ஆஆஆ..........................? எனக்கு தமிழ்நாடு மட்டும்தான் தெரியும்..! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 28, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 28, 2021 On 26/10/2021 at 12:32, Paanch said: அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? *** அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள் போலும்.... சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted October 29, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 29, 2021 நேரமின்மையாலும், வயதின் காரணமாக பயத்தாலும் தவறவிட்ட அருமையான பயணம், கிரிண்டல்வாடில் (Grindelwald) உள்ள இந்த த்ரிலிங் ஜிப் ட்ரைவ்(Zip drive)பயணம்தான். நாங்கள் கேபிள் கார் மூலம் மட்டுமே பயணம் செய்து பசுமை பள்ளத்தாக்குகளை ரசித்தோம். உறவுகள் யாரும் அங்கு சென்றால், தவறாமல் ஜிப் ட்ரைவில் பயணம் செய்யுங்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Paanch Posted October 30, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted October 30, 2021 On 28/10/2021 at 16:42, குமாரசாமி said: அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள் போலும்.... சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி குமாரசாமி என்று பெயரைக் கொண்டவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது என் கணிப்பு, என் பெரியப்பா ஒருவர் பெயரும் குமாரசாமி. பிள்ளையாரைப்போல் குண்டாக வண்டியும், தொந்தியும் கொண்டவர். திருநெல்வேலியிலுள்ள பழங்கிணற்றடிப் பிள்ளையார் கோவிலில் பூனூல் அற்ற பூசாரியாக இருந்து பூசைகளை மேற்கொண்டு வந்தவர். எல்லோரும் அவரைச் சாமியார் என்று அன்போடு அழைப்பார்கள். அத்தனை மென்மையான உள்ளமும் கொண்டவர். எங்கள் யாழ்கள உறவு சாமியாரிடம் உள்ள மென்மையான உள்ளத்தையும் கள உறவுகள் பலரும் அறிவார்களே ஐயா. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ராசவன்னியன் Posted November 6, 2021 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 6, 2021 மீண்டும் காணாமல் போவதற்கு முன் சிறிய பகிர்வு..! சார்ந்த தொழிற் கல்வியின் மூலம் என்னிடம் தொற்றிக்கொண்ட பருந்துப் பார்வையின் மூலம் தமிழ் நாட்டின் சில மலைப்பகுதிகளை கண்டிருக்கிறேன். அதன் மூலம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட கட்டிடமோ அல்லது சிறப்பான அமைப்பு கொண்ட வடிவங்கள், ஓடைகள், அணைகள், பாலங்கள் போன்றவற்றை காணும்போது (Area of Interest) சாட்டிலைட் படங்களிலோ அல்லது கூகிள் மேப்பில் குறித்துவைத்து மனதில் நிறுத்திக்கொண்டால் அவை என்றும் மனதைவிட்டு நீங்காது. அப்படியான சிலவற்றின் வடிவங்களை மறுபடியும் ட்ரோன் காணொளி மூலம் காணும்போது நிச்சயம் அடையாளம் காண முடியும். அப்படி சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனென்(lauterbrunnen),வென்ஞன்(Wengen),கிரிண்டெல்வாட்(Grindalwald) போன்ற பகுதிகளில் நான் பார்த்து ரசித்து குறித்துக்கொண்ட சில பகுதிகளை இக்காணொளியில் காணும்போது ஏற்படும் இனிமையான அனுபவம் அலாதியானது. காலங்கள் மாறலாம், ஆனால் என் சுவிஸ் பயணத்தின் இனிமை நினைவுகள் என்றும் மறையாதிருக்கும். அதற்கு இதுபோன்ற காணொளிகள் உதவும். மீண்டும் பிறிதொரு நாளில் சந்திப்போம்..! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted December 3, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 3, 2021 On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said: இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் நல்ல காலம் ஒக்ரோபரில் சுவிட்சலாந்து சென்று வந்துவிட்டீர்கள் இப்போது கொரோனா ஐரோப்பாவில் அதிகம் சுவிட்சலாந்தில் மேலும் அதிகமாம். Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts