-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்? சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1284258 -
By ஏராளன் · பதியப்பட்டது
இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை Getty ImagesCopyright: Getty Images தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=6290c7a84259031cb5a254a5%26இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை%262022-05-27T14%3A16%3A12.027Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:b16f4de9-5392-4cff-b7c7-f0bce521bdd9&pinned_post_asset_id=6290c7a84259031cb5a254a5&pinned_post_type=share -
ஐபிஎல் 2022: பெங்களூருவின் கனவு தகர்ந்தது... பட்லர் சதத்தால் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, ஐபிஎல் 2022இல் பட்லரின் நான்காவது சதம் இது. ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆர்.சி.பியின் நீண்ட நாள் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் பெங்களூருவை வீழ்த்தி 2008க்கு பிறகு 2வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபயர் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் பெரும்பாலும் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், இந்த முறை டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பொறுப்பான ஆட்டம் - சாதித்த படிதர் விராட் கோலி 7 ரன்களில் ப்ரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு டூ பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரஜத் படிதர் கடந்த ஆட்டத்தை போன்றே இந்த முறையும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பான ஷாட்களால் பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்ட படிதர், 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் டு பிளெசிஸ் 25, மேக்ஸ்வெல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். படிதர் 42 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் விளாசி 58 ரன்களில் விடைபெற்றார். ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்திருக்கிறார் ரஜத் படிதர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தானின் பந்துவீச்சு தாக்குதல் பெங்களூருவின் ரன் குவிப்பை துல்லியமான பந்துவீச்சின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது ராஜஸ்தானின் பந்துவீச்சுப் படை. குறிப்பாக ராஜஸ்தான் பவுலர் பிரசித் கிருஷ்ணா விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதே சமயம் மெக்காயும் தனது பங்குக்கு 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம்: எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" 158 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே 2 சிக்சர் 1 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்து அதிரடியை தொடங்கியது. பவர் பிளே முடிவில் 67 ரன்கள் சேர்த்து போட்டியை தன் வசப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஜெய்ஸ்வால் 21, சஞ்சு சாம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தாலும் களத்தில் தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தார் அதிரடி பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். பட்லர் சதத்தால் தகர்கப்பட்ட ஆர்.சி.பியின் கனவு சிக்சரும் பவுண்டரியுமாக பறக்கவிட்ட பட்லர், 59 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். நடப்பு தொடரில் இது அவருக்கு 4வது சதம். ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார் பட்லர். சதம் அடித்த கையோடு ஹர்ஷல் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு விளாச, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 60 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கேப்டன் தோல்விக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ், "முதல் செஷன் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று இருந்தது. உண்மையில் அதிகமான பவுன்ஸ் இருந்தது. 180 ரன்கள் எடுக்க நினைத்தோம் என்றார். ஆர்.சி.பிக்கு இது ஒரு சிறப்பான சீஸன். மிகவும் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் ஆர்.சி.பி அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கு சென்று விளையாடினாலும் ஆர்.சி.பி.. ஆர்.சி.பி என்கிற முழக்கத்தை கேட்க முடிந்தது. மும்பை விளையாடியபோது கூட ஆர்.சி.பிக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டது உணர்வுப்பூர்வமாக இருந்தது. எங்கள் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றார். பட மூலாதாரம்,@JOSBUTTLER படக்குறிப்பு, ஜோஸ் பட்லர் பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், டாஸ் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. உண்மையில் அது முக்கிய பங்கு வகித்தது. 2வது இன்னிங்சில் ஆடுகளம் மாறியிருந்தது. ஜாஸ் பட்லர் போன்றதொரு சிறந்த பேட்ஸ்மேன் கிடைப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என மகிழ்ச்சியுடன் கூறினார். 14 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியில்... ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 2வது முறை.. 2008ல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மறைந்த ஷேன் வார்ன் தலைமையில் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதற்கு பின்னர் 2013, 15,18ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்று வரை வந்த ராஜஸ்தானுக்கு வெற்றி கைகூடவில்லை. இப்போது மீண்டும் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ள ராஜஸ்தான், பலம் வாய்ந்த குஜராத் டைடன்ஸை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. குவாலிஃபயரின் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத்திடம் தோல்வியை தழுவியது கவனிக்கத்தக்கது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் இறுதி யுத்தம் ஞாயிற்றுக்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்ல இரு அணிகளும் சம பலத்துடன் போராடும் என்பதால் ஆடுகளத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். https://www.bbc.com/tamil/sport-61615366
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.