Jump to content

தேசத்தின் புதல்வன் அபிராம் (நிரோஜன் / சேரா)


Recommended Posts

யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 


96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார்.  உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்கை பகுதியில் இணைத்திருந்தனர், சிங்கள அரசும் சர்வதேசமும் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதென அறிவிக்கப்பட்ட பின்னரும் அபிராம் குறித்து அச்சம் கொண்டமைக்கு அபிராமின் ஆளுமையும் கடந்த கால வீரச் செறிந்த நடவடிக்கைகளுமே காரணமாகும். 
 
தேடப்படுவோர் பட்டியலில் இருந்ததால் கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் தலைமறைவு வாழ்க்கையில் செயற்பட்டு வந்த  அபிராம்  21.10.2021 மாரடைப்பால் காலமானார். 

தமிழீழ விடுதலையின் புலனாய்வுப்  போரியல் வரலாற்றில் குறிக்கத்தக்க பங்காற்றிய அபிராமுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🕯️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்சப்பில் நேற்று இந்த செய்தி வந்தது. சர்வதேச காவல்துறை சிவப்பு பட்டியலில்/தேடப்படுவோர் பட்டியலில் அவர்கள் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் லக்ஸ்மன் கதிர்காமரின் மரணத்துடன் தொடர்புபட்டதாய் கருதப்படும், த. வி.பு உடன் சம்மந்தப்பட்ட ஒருவரின் பெயர் மட்டுமே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்சப்பில் வந்த காணொலி ஒன்றில் இந்துவின் மைந்தன் அபிராமின் பூதவுடலை இன்று பார்த்தேன். மிகவும் துயரமாக உள்ளது. 

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பாதையை பல்வேறு புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன. அபிராம் அவர்களும் ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ உருவாகி வெளிநாடு ஒன்றில் சுகபோகமாக வாழ்ந்து இருக்கலாம். கால சூழ்நிலைகள் அவரை ஒரு போராளியாக்கி, தலைமறைவு வாழ்க்கை வாழ வைத்து கடைசியில் எங்கோ ஒரு மூலையில் இறுதி காலத்தை கழிக்க செய்துவிட்டது. 

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு பன்னிரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. ஆயுத போராட்டத்தில் பங்கு பற்றியவர்களின் ஒரு பகுதி இன்று திக்கு, திக்காக வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். போராட்டம் காரணமாக இவர்களின் உடல், உளநலம் எவ்வளவு பாரதூரமாக பாதிக்கப்பட்டு இருக்கும். இதை பற்றி யார் கவலைப்பட போகின்றார்கள்?  போரில் ஈடுபட்ட அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வது, இயல்பான வாழ்க்கை வாழமுடியாது பரிதவிப்பது பற்றி செய்திகளில் அறிகின்றோம். PTSD போன்ற கொடூரமான மன நோய்கள் மனித வாழ்க்கையை நரகம் ஆக்குபவை. போரில் கலந்துகொண்ட, போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து போராளிகளினதும், மக்களினதும் மன வடுக்களையும், வலிகளையும் காலம் தான் மருந்து இட்டு குணப்படுத்த வேண்டும்.

அபிராம் ஆத்மா சாந்தியடையட்டும்! அமைதியாக இளைப்பாறட்டும்.

 ஓம் சாந்தி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.