Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க

குடாரப்புத் தரையிறக்கம்

Balraj landing with his troops in Kudaarappu for Iththaavil fighting.jpg

'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் விரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.'

 

 

 

முன்னுரை

 

"குடாரப்பு புல்லாவெளி கரைகளிலே சென்று 
குதித்த புலிகளின் கதைகேளும்!"

--> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து

 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகவும், ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காத்திரமான அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஒரு தரையிறக்கமாகவும் திகழ்ந்தது தான் குடாரப்புத் தரையிறக்கம் ஆகும். இதுதான் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் தொடக்கம் ஆகும். இந்நிகழ்வானது வட தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு எ மருதங்கேணிப் பகுதியின் நாகர்கோவில் தெற்கு ஊர்நிலதாரி பிரிவிற்குட்பட்ட 'குடாரப்பு' சிற்றூரின் தெற்கிலும், செம்பியன்பற்று வடக்கு ஊர்நிலதாரிப் பிரிவிற்குட்பட்ட 'மாமுனை' சிற்றூரின் வடக்கிலுமாக இரண்டு சிற்றூர்களின் கடற்கரையிலும் 26/3/2000 ஆம் ஆண்டு இரவு 8:45 மணிக்கு முதலாவது தரையிறக்கம் நடந்தேறியது. இவையே மேற்கொண்டு நடைபெறப்போகும் தாக்குதல்களின் உவர்க்கத்தலையாக பயன்படுத்தப்பட்டன.

புலிகளின் போரியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் (மண்டைதீவில், புல்லாவெளியில், கிழக்கரியாலையில்-அறுகுவெளியில்) பின்னருமாக (அல்லைப்பிட்டியில், எருக்கலம்பிட்டியில், சிறுத்தீவில், நெடுந்தீவில், அளம்பிலில்) பல்வேறு தரையிறக்கங்களை அவர்கள் செய்திருந்தாலும் அனைத்தைக் காட்டிலும் பெரியதானதும் சிறப்புடையதானதுமாக விளங்குவது இதுவேயாகும். இத்தரையிறக்கத்தினை தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் 1200 தரைப்புலிகளை 11கிமீ காவிச் சென்று சிங்களப் பகைவனின் காவலரண்களுக்குப் பின்னால் இருந்த குடாரப்பு-மாமுனை சிற்றூரில் தரையிறக்கினர். பின்னால் வரப்போகும் போராளிகளின் வெற்றிக்கு வித்திடும் விதமாக முன்சென்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணியினர் 26 ஆம் திகதி இரவு 7 மணி சொச்சத்திற்குத் தரையிறக்கப்பட்டனர். பின்னர் மேற்கொண்டு ஏனைய போராளிகளும் இரவு 8:45 முதற்கொண்டு தரையிறக்கப்பட்டனர். இத்தரையிறக்கமானது அடுத்த நாள் காலை 10மணிவரை நீடித்தது.

இப்பேர்பட்ட வரலாற்று மாட்சிமைமிக்க இத்தரையிறக்கமானது ஈழத்து வரலாற்று ஆசிரியர்களால் இரண்டாம் உலகப்போரின்போது செருமனியின் நோர்மண்டியில் நேசநாட்டுக் கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதாகும்.

முதற் தரையிறக்கத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 14 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். அப்புலிவீரர்களது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலேயே விதைக்கப்பட்டதோடு பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் பரம்பப்பட்டு கைப்பற்றப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் இத்தரையிறக்கம் தொடர்பான நினைவுக்கல்லொன்று இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் (நோய்ச்சாவிற்குப் பின் பிரிகேடியராக தரநிலை உயர்த்தப்பட்டார்) அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. அந்நினைவுக்கல்லானது பின்னாளில் சிங்கள வல்வளைப்புப் படைகளால் இடித்தழிக்கப்பட்டது.

குடாரப்புத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சிக் கிழக்கிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதாவது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் இச்செம்பியன்பற்றுப் பகுதியில் சோழப் பேரரசின் படைகள் தரையிறங்கியதாக குறிப்புகள் உள்ளதாக கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் மீண்டும் தமிழர் சேனை மற்றுமொரு தரையிறக்கத்தினை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாவணக்கட்டில் இத்தரையிறக்கம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். அதாவது இத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தரையிறங்கியோருக்கான தரைவழி வழங்கல் பாதை திறக்கப்பட்ட 29/3/2000 வரையிலான 4 நாட்களில்(26,27,28,29) வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்தவை தொடர்பான தகவல்கள் மட்டுமே இதனுள் உள்ளது. இத்தாவில் பெட்டிச்சமர் முதல் ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழ்ந்தது வரையிலான ஆனையிறவுச் சமர் தொடர்பான ஏனைய அனைத்துத் தகவல்களும் பிறிதொரு ஆவணக் கட்டில் விரிவாக வழங்கப்படும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். மேலும், இவ்வாவணக்கட்டானது எதிர்வரப்போகும் ஒரு ஆவணக்கட்டின் ஓர் உறுப்பு என்பதையும் முன்கூட்டியே அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

 

  • குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கும் பொருட்டு இதனுள் நான் எழுதப் போகும் தகவல்கள் யாவும் - படைத்துறையின் படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். 
  1. Artillery - சேணேவி
  2. Howitzer - தெறோச்சி
  3. Mortar - கணையெக்கி
  4. Tank - தகரி
  5. Garrison - தானைவைப்பு

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திட்டவரை:
இங்கு எழுதப்- பட்ட,படப்போகும் தகவல்கள் யாவும் தமிழர் தரப்பினது மட்டுமே. வேண்டிய தலைப்பின் மேல் சொடுக்கினால் உங்களை அந்தந்த பெட்டிக்கு எடுத்துச் செல்லும்.

 

முன்னுரை

கட்டளையாளர்கள் & சமர் ஒழுங்கு

வலு

இழப்புகள்

நினைவுக்கற்கள்

படிமங்கள்

நிகழ்படங்கள்

காலக்கோடு

வானிலை

வரைபடம்

சமர்க்கள விரிப்புகள் (பொழிப்பு --> திட்டம் --> முன்னேற்பாடுகள் --> தரையிறக்கம் --> 4 நாட்கள்

அடிபாட்டுச் செய்திகள்

முடிவுரை

பின்னிணைப்பு-1 (கரும்புலிகளின் நகர்வு)

பின்னிணைப்பு-(கரும்புலிகளின் படிமங்கள்)

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 கட்டளையாளர்கள் & சமர் ஒழுங்கு

 

 

இதனுள் இத்தரையிறக்கத்தில் நேரடியாக பங்கெடுத்த படையணிகளின் விரிப்பு உள்ளது.

 

  • ஓயாத அலைகள் மூன்று கட்டம்-4 ஒருங்கிணைப்புக் கட்டளையாளர்: கேணல் பானு

 

 

🟢 தரைப்புலி முதன்மைக் கட்டளையாளர்கள்:

 

  • தரையிறக்கத் தலைமைக் கட்டளையாளர்: கேணல் பால்ராஜ்

 

  • முதற் கணத் தரையிறக்கக் கட்டளையாளர்கள் - சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நேசன்.
    • இவரின் கீழ் மேஜர் கோபித் மற்றும் மேஜர் இலக்கியன் தலைமையில் இரு அணிகள்

 

  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி - சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் இராஜசிங்கன்
  • மாலதி படையணி - சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் யாழினி எ விதுசா
  • சோதியா படையணி - சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் மேழிகா எ துர்க்கா
  • கிட்டு பீரங்கிப் படையணியின் கணையெக்கிப் பிரிவு - லெப். கேணல் தர்சன்
  • இம்ரான் பாண்டியன் படையணி
    • விக்டர் கவச எதிர்ப்புப் படையணி - தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் இளங்கீரன் எ சேட்டன்
    • மயூரன் குறிசூட்டுப் பிரிவு - கட்டளையாளர் பெயர் அறியில்லை
    • ராதா விமான எதிர்ப்பு அணி - கட்டளையாளர் பெயர் அறியில்லை
  • சிறப்பு எல்லைப்படை - கட்டளையாளர் பெயர் அறியில்லை. (இவர்கள் சாள்ஸ் அன்ரனியோடு இணைக்கப்பட்டிருந்தனர்.)
    • கட்டம் மூன்றின் போது கட்டளையாளர் வேந்தன் அவர்கள் இவர்கட்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • எல்லைப்படை - கட்டளையாளர் பெயர் அறியில்லை.
  • கள மருத்துவப்பிரிவு - தரையிறக்கப்பட்டவர்களுள் அறியப்பட்ட சில படைய மருத்துவர்களின் பெயர்கள்: மருத்துவர் வித்தகி, மருத்துவர் அருள்நங்கை, மருத்துவர் தணிகை, மருத்துவர் லெப். கேணல் இசைவாணன், மற்றும் மருத்துவர் சத்தியா.

 

 

🔵கடற்புலி கட்டளையாளர்கள்:

அறியப்பட்டோர்...

  • கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்: கேணல் சூசை
  • சாள்ஸ் சிறப்புக் கடற்தாக்குதல் அணிலெப். கேணல் செழியன்
  • கடல் வழங்கல் கட்டளையாளர்: மேஜர் எழிற்கண்ணன் 

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வலு

 

  • தரையிறக்கப்பட்ட மொத்தப் போராளிகள்: 1200 பேர்
    • இவர்களில் ஆண் போராளிகள்: 600 பேர் 
    • இவர்களில் பெண் போராளிகள்: 600 பேர் | ஆதாரம்: புதினம், 5 சூன் 2006 
    • ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திலும் இருந்த ஆளணி எண்ணிக்கை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.
  • கவசவூர்திகள்:  பயன்படுத்தப்படவில்லை.
  • படைக்கலங்களில் குறிப்பிடத்தக்கவை: எஸ்.பி.ஜி.-9 போன்ற பின்னுதைப்பற்ற சுடுகலன்கள், 120 மிமீ கணையெக்கிகள், 81/82 மிமீ கணையெக்கிகள், 107 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தி மற்றும் ஏனைய கனவகை சுடுகலன்கள் படகுகள் மூலம் காவிச் செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன. 
  • சண்டைப்படகுகள்: 7 (ஆதாரம்: 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்')
    • - இவற்றுள் 2 வோட்டர் ஜெட்கள் (ஒன்றில் சிபியு - 4 பொருத்தப்பட்டிருந்தது) மற்றும் சில (பெயர் அறியில்லா) சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்களின் நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இதை விட வேறேதும் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. 
  • தரையிறக்க கலன்கள்: எண்ணிக்கை அறியில்லா கட்டைப்படகு(Dinghy) வகையைச் சேர்ந்த புளூ இசுரார்(Blue Star), தனுசா மரைன்(Dhanusa Marine), நீல் மரைன் (Neil Marine) மற்றும் சானே (Shaane) வகுப்புப் படகுகள் மற்றும் உப்பயானங்கள் (Inflatable boats) ஆகியவற்றில் ஆளணிகளும் படைக்கலன்களும் கொண்டுசெல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன
  • தரையிறக்கப்பட்ட சேணேவிகள்: 60மிமீ, 81/82 மிமீ, 120மிமீ கணையெக்கிகள்.
  • சேணேவி சூட்டுவலிமை (வெளியிலிருந்து) : 85மிமீ தெறோச்சி, 122 மிமீ தெறோச்சி, 130 மிமீ தெறோச்சி மற்றும் இதர கணையெக்கிகள்

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இழப்புகள்

 

 

தமிழீழ விடுதலைப்புலிகள்:

  • வீரச்சாவடைந்த போராளிகள்: 48 பேர்
    • முதற் தரையிறக்கத்தின் போது சிறீலங்காக் கடற்படையுடனான கடற்சமரில் மட்டும் சில படகுகளுடன் 14 போராளிகள் வீரச்சாவடைந்ததாக தவிபு ஆல் அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு நடைபெற்ற சமர்களில் சில அதிகாரிகள் தவிர கட்டளையாளர்கள் யாரையும் இழக்கவில்லை. 27/3 அன்று கடற்புலி மேஜர் எழிற்கண்ணன் அவர்கள் வழங்கல் நடவடிக்கையில் காயமுற்றார்.

martyrs of Kudaarappu landing 26_03_2000-29_03_2000.jpg

'இதனுள் குடாரப்பு தரையிறக்கம் மற்றும் அதனோடான சமர்களின்போது வடமராட்சி கிழக்குப் பகுதியில் வீரச்சாவடைந்த போராளிகளின் விரிப்பு மட்டும் உள்ளது. இவற்றோடு இத்தரையிறக்கத்திற்காக பளையில் சேணேவித்தளம் செயலிழக்கச் செய்து வீரச்சாவடைந்த 2 கரும்புலிகளையும் சேர்த்திருக்கிறேன்.  தரையிறக்கத்தோடு தொடர்பின்மையாதலால் ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்தோரை இவ்வட்டவணையினுள் சேர்க்கவில்லை. | ஆதாரம்: http://veeravengaikal.com/'

  • காயமடைந்தோர்: அறியில்லை
  • சண்டைப்படகுகள்:
    • சண்டை ஆரம்பித்த பின்னர் 26 ஆம் திகதி இரு சண்டைப்படகுகளும், 27 ஆம் திகதி ஒரு சண்டைப்படகும் சேதமாகின.ஆதாரம்: 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்'
  • தரையிறக்கக் கலன்கள்:
    • 26 ஆம் திகதி இரவு நடுச்சாமத்தில் லெப். கேணல் யாழினி எ விதுசா அவர்களை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுகொண்டிருந்த படகு கடலில் எரிந்து மூழ்கியது.ஆதாரம்: 'வேருமாகி விழுதுமாகி'
      • இவற்றைத் தவிர வேறு ஏதாவது படகு மூழ்கியதா என்பது பற்றிய எந்தவொரு குறிப்புகளும் இல்லை.
    • தரையிறக்கிய பெரும்பாலான கட்டைப்படகுகள் திரும்பிச் சென்றன; வெகுசில அங்கேயே தரித்து நின்றன, அவசரத் தேவைக்காக.

 

 

சிறீலங்கா படைத்துறை:

  • கொல்லப்பட்ட படையினர்: 100+
    • மீட்கப்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான சிங்களப் படையினரின் சடலங்கள் சிதறிக் கிடப்பதை நேரில் கண்டதாக பல பொதுமக்கள் தமிழ்நெற் செய்தியாளரிடம் தெரிவித்திருந்தனர் என தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • காயமடைந்தோர்: அறியில்லை

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுக்கற்கள்

 


"பாடுபட்டு உழைச்சு நம்ம 
பூமி கிடைச்சுப் போச்சுது

ஆடு-மாடு பாஞ்சான்போல 
ஆமி ஓட்டம் பிடிக்கிறான்"

--> அலையின் வரிகள் இறுவெட்டின் 'காட்டுக் கரையினிலே' என்ற பாடலிலிருந்து

 

 

தரையிறக்க நினைவுக்கல்

 

'முதற் தரையிறக்கத்தின்' போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் வீரச்சாவடைந்த 14 போராளிகளது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலே விதைக்கப்பட்டத. இப்போராளிகள் விதைக்கப்படும் முன்னர் யாழ் மாவட்ட முன்னாள் கட்டளையாளரான லெப். கேணல் செல்வராசா வலத்து வாரியவை,

"நிச்சயமாக இவர்களின் இந்த இடம் தமிழீழம் மீட்கப்படுகின்ற காலப்பகுதியில் ஒரு புனித பிரதேசமாக, எங்கள் வீரவரலாற்றினை சொல்லுகின்ற பூமியாக, எங்கள் தாக்குதல் சம்பவத்தை சித்தரிக்கின்ற ஒரு கல்வெட்டாக, நிச்சயமாக விளங்கும்... "

Lt. Col Selvarasa.jpg

'முன்னாள் யாழ் மாவட்டக் கட்டளையாளர் லெப். கேணல் செல்வராசா வீரவணக்க உரையாற்றுகிறார்'

 

14 Maaveerars of first landing.jpg

'வித்தான 14 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகின்றன'

 

 

 

 

 

 

 

 

பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் மீட்கப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில், இத்தரையிறக்கம் தொடர்பான ஓர் நினைவுக்கல்லானது இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 இல் தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது.

kudaarappu 26-3-2003.png

 

elephant-ltte-pass-landing-1024x768.jpg

 

 

 

 

============================

 

 

 

 

சேணேவித்தள அழிப்பு நினைவுக்கல்

 

"கருவேங்கை புயலென
புகுந்தது பளையினில் - எங்கள்
சுதாஜினி, தனுசனும்
கலந்தனர் நினைவினில்..."

--> தேசத்தின் புயல்கள் - 4 இறுவெட்டிலிருந்து

 

 

பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. 

Elephantpass memorial stone for Land Black Tigers KIA in Artivatte during Kudaarappu landing2.jpg

Elephantpass memorial stone for Land Black Tigers KIA in Artivatte during Kudaarappu landing.jpg

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படிமங்கள்

 

 

"வான்-தரை-கடல் வழிச் சமரிலே - முன்
வரிப்புலி இழப்பினை ஏன் கண்டான்?

ஏனிது என்பதன் விடைகண்டு - தலைவன்
ஏவிய கடற்புலி செயம்கொண்டான்!"

--> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து

 

Balraj discussing Iththaavil landing preparations with Sea Tiger Commander Admiral Soosai.jpg

'குடாரப்புத் தரையிறக்கத் திட்டமிடலின்போது'

 

 

 

 

===========================================

 

 

 

குடாரப்புத் தரையிறக்கத்திற்கு முதல் சந்திப்பின் போது அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் சூசை

 

Kudarappu Landing - குடாரப்புத் தரையிறக்கம்

 

116041868_294780905298180_2616118753209396916_n.jpg

'உட்கரையில் இரு மிராஜ் வகுப்புப் படகுகளும் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டைப்படகும் நிற்பதைக் காண்க'

 

 

 

 

 

===========================================

 

 

 

 

தரையிறக்கத்திற்குச் செல்வோருக்கு அறிவுரைகளை புலற்றும் கட்டளையாளர்கள்

 

brigadiar-balraj.png

'குடாரப்புத் தரையிறக்கத்திற்குச் செல்லும் போராளிக்கு அறிவுறுத்தல்கள் வழங்குகிறார், தரையிறக்கத் தலைமை கட்டளையாளர் கேணல் பால்ராஜ்' 

 

92811417_232815844705912_468151632832495616_n.jpg

'குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் உள்ள கண்டிவீதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போகும் அணிகளிற்கு அறிவுரை புலற்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜசிங்கன்'

 

kudaarappu landing.png

 

 

Kudarappu Landing ltte Tamileelam.jpg

'கடற்கரையில் வைத்து கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை தரையிறங்கப்போவோருக்கு அறிவுரைகள் புலற்றுகிறார்'

 

 

 

அறிவுரைகளை செவிமடுக்கும் போராளிகள்

kudaarappu landing 2.png

'தரையிறங்கப்போகும் தரைப்புலிகளுக்கு அறிவுரைகள் வழங்கும் கடற்புலித் தலைமையும் அதை செவிமடுக்கும் ஆண் போராளிகளும்'

 

before landing in kudarappu.jpg

'தரையிறங்கப்போவோரில் ஒரு தொகுதி பெண் போராளிகள்'

 

arsenal.jpg

'தரையிறங்குவோர் கொண்டுசெல்லப்போகும் கனவகை படைக்கலன்கள்'

 

 

 

 

===========================================

 

 

 

 

வெற்றிலைக்கேணியின் கோவிலடி கடற்கரையிலிருந்து தரையிறங்க ஆயத்தமாகுகின்றனர், போராளிகள்

 

kudaarappu landing3.png

Kudaarappu landing 2.jpg

v vuy.png

kudaarappu landing.jpg

bviugi.png

 

 

வழங்கல்கள் கொண்டு செல்லும் கட்டைப்படகு கடலேற்ற ஆய்த்தமாய்

Kudarappu landing.jpg

 

 

 

 

===========================================

 

 

 

 

 

கடலேற்றப்படும் தரையிறக்கக் கலங்கள்

 

Tiger Teams going for the Kudarappu Landing on the evening of march 26, 2000.jpg

'வெற்றிலைக்கேணி கோவிலடிக் கடற்கரையிலிருந்து ஒரு உப்பயானத்தில் கடலேறும் போராளிகள்'

 

Kudarappu Landing ltte Tamileelam .jpg

'தரையிறங்க வேண்டிய அணிகள் வெற்றிலைக்கேணி கோவிலடிக் கடற்கரையிலிருந்து கடலேற்றப்படும் போது அதைக் கரையில் நின்றபடி கவனிக்கும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை, தரையிறக்க படைத்தொகுதி கட்டளையாளர் கேணல் பால்ராஜ், ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு'

 

 

 

 

===========================================

 

 

 

 

"தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை
தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள்

கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற் 
கலந்தரையிறக்கினார் கரும்புலிகள்"

--> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து

 

 

large.TigersDingiesandRubberBoatsduringKudarappulanding.jpg.43ce2600de4bea1952f272b08c939298.jpg

'குடாரப்பு/மாமுனையில் காலை வேளையில் தரையிறக்கம் நடந்துகொண்டிருக்கும் காட்சி. கடற்புலிகளின் கட்டைப்படகுகள் மற்றும் உப்பயானங்கள் (இறப்பர் படகுகள் எனப்படும்) ஈடுபட்டிருக்கின்றன. அவற்றில் பெண் போராளிகள் அமர்ந்திருக்கின்றனர்.'

 

 

 

===========================================

 

 

 

 

தரையிறக்கத்தின் பின் புன்னையடி வைரவர் கோயிலடியிலிருந்து நகர்ந்து இத்தாவிலை அடையும் போது...

 

இவர்கள் முதலில் 2கிமீ தரவை வெளியையும், பின்னர் 1 1/2 கிமீ வீரக்களி ஆற்றின் நீரையும், பின்னர் சதுப்பு நிலங்களையும் கண்டல் பற்றைகளையும் கடந்தே இத்தாவில்-இந்திரபுரத்தை அடைந்தனர்.

 

Wading_ElephantPass_2000.jpg

 

kudaarapppu4.png

'இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் படிமமே'

 

16425886_690341907793787_3725368539290047490_n.jpg

 

வீரக்களி ஆற்றினூடாக இத்தாவில் பெட்டி நோக்கி நகரும் ஈழத் தமிழரின் சுந்தந்திரப் போராட்ட வீரர்கள்.png

 

வீரக்களி ஆற்றினூடாக இத்தாவில் பெட்டி நோக்கி நகரும் ஈழத் தமிழரின் சுந்தந்திரப் போராட்ட வீரர்கள்.jpg

 

Moving in.jpg

'இத்தாவில் பெட்டி நோக்கி நகரும் தமிழரின் ஆர்பிஜி கொமாண்டோக்கள்'

 

 

வீரக்களி ஆற்று நீரூடாக இத்தாவில் பெட்டி நோக்கி இழுத்துச் செல்லப்படும் கணையெக்கிகள்:

 

271579745_138468438618660_3693893530721785689_n.jpg

'120 மிமீ கணையெக்கியை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் பெண் போராளிகள்'

 

Kudaarappu landing during Unceasing Waves-3 phase-4.jpg

'120 மிமீ கணையெக்கிகளை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் ஆண் போராளிகள்'

 

Balraj in preparations for Elephant Pass operation.jpg

'இத்தாவிலை அடைந்த கொஞ்ச நேரத்திற்குப் பின், அடுத்து செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்து கட்டளையாளர் கேணல் பால்ராஜ் விளக்கும் போது'

 

 

 

 

 

===========================================

 

 

 

 

"கடல்வழி வான்வழி பகைப்படைகள் - வர
கதைகளை முடித்தனர் கடற்புலிகள்"

--> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து

 

 

image (9).png

'குடாரப்புத் தரையிறக்கத்தின் போது தரையிறக்கத்திற்கு பாதுகாப்பு வழங்கும் கடற்புலிகளின் 'வோட்டர் ஜெட்' வகுப்புச் சண்டைப்படகுகள்'

 

during kudarappu landing.jpg

'குடாரப்புத் தரையிறக்கத்தின் போது தரையிறக்கத்திற்குக் காப்பு வழங்கும் கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகுகள்'

 

Sea Tigers 'Water Jet' class boat with ZPU-4 AAA as its main armament. During the Kudarappu landing.jpg

'வேவ் ரைடரின் முதன்மைச் சுடுகலனாய் இருப்பதுவே சிபியு-4 ஆகும். (சிதிலமடைந்த திரைப்பிடிப்புத் தான்.) அண்மையாக்கப்பட்ட படிமம். சிபியு-4 தெளிவாகத் தெரிகிறது பாருங்கள்.'

 

 

 

 

===========================================

 

 

 

 

"தடைகள் தாண்டினர் புயற்புலிகள் - வெற்றி 
தந்துவிட் டோடினர் நரிப்படைகள்"

--> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து

 

 

வசமான தாழையடியும் வசப்படுத்தியோரும்...

 

Inside the _Vaththirayan box_ army complex at Sempiyanparru on 03-29-2000.jpg

fs 2.jpg

'வசமான தாழையடியினுள் நடந்து செல்லும் தமிழீழ சிறப்புப்படையினர் (கரும்புலிகள்)'

 

thaalaiyadi.png

'தாளையடியில் சிங்களவரிடமிருந்து பிடிக்கப்பட்ட காவலரண்களில் போராளிகள் நிலைகொண்டுள்ளனர்'

 

thaalaiyade.png

''தாளையடி துணை அஞ்சலகத்தினுள் நிற்கும் இம்ரான் பாண்டியன் படையணியின் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினர்''

 

25446037_1762382010500916_7495799042804533209_n.jpg

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்படங்கள்

 

 

குடாரப்புத் தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்புச் சமர் பற்றிய நிகழ்படம்: https://eelam.tv/watch/க-ட-ரப-ப-தர-ய-றக-கம-ஓய-த-அல-கள-3-கட-டம-4-kudarappu-landing-ஆன-ய-றவ-ம-ட-ப-ச-சமர_mslZYeVtH66ksnM.html

 

 

 

'ஈரத்தீ' | பளை சேணேவித்தளத் தாக்குதல் தொடர்பான திரைப்படம்: https://eelam.tv/watch/ஈரத-த-eerathi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலக்கோடு 

 

  • 1/3/2000 - கொடியேற்றப்பட்டு படையணிகளுக்கான பயிற்சிகள் மாதிரி தளத்தில் தொடங்கப்படுகின்றன. அதிகாரிகளானோர் 'அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி'க்கு மேலதிக பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர்.

(பயிற்சிகள் முடிவுற்றன)

 

  • 24/3/2000 பகல் - கரும்புலிகள் தங்கள் ஆயுதங்களுக்கு நீர்க்காப்பிட்டு வெடிபொருட்களை சரிபார்த்து தம்மை தயார்ப்படுத்துக்கொண்டிருக்கின்றனர்.

  • 24/3/2000 மாலை - 15இற்கும் மேற்பட்ட கரும்புலிகளை ஏற்றிய இரு உப்பயானங்கள் வெற்றிலைக்கேணிக்‌ கடற்‌கரையிலிருந்து கடலில் இறக்கப்பட்டு குடாரப்பு நோக்கிய தம் பயணத்தை ஆரம்பித்தன. இவ்வணிக்கு தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் தலைமை தாங்கினார்.

  • 24/3/2000 இரவு - குடாரப்புப் பகுதியில் கரும்புலிகள் தரையிறக்கப்பட்டு இலக்கு நோக்கி நகர்கின்றனர்.

  • 25/3/2000 காலை - போராளிகள் பேருந்துகள் மற்றும் உழுபொறிகள் மூலம் சுண்டிக்குளம் நீரேரிக்கு அருகில் ஏற்றிப்பறிக்கப்படுகின்றனர். அற்றைநாளே அனைவரும் அந்த 3 கிமீ நீள நீரேரியினைக் கடக்கின்றனர். 

  • 25/3/2000 இரவு - கடந்தவர்கள் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைகின்றனர்.

  • 25/3/2000 யாமம் - எதிரியின் காவல்வேலிக்குப் பின்னால் நகர்ந்த கரும்புலிகள் அகிலன்வெட்டையை வந்தடைகின்றனர்.

  • 26/3/2000 காலை - அனைவரும் ஒரு பரந்தவெளியில் ஒன்று கூடினர். போராளிகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றனர்; தரையிறக்கத் தாக்குதல் தொடர்பான அறிவுரைகள் கட்டளையாளர்களால் வழங்கப்படுகின்றன.

  • 26/3/2000 நண்பகல் - பின்னர் நடவடிக்கைக்கான உலர் உணவுகள் (அதிக கலோரிகள் கொண்ட சொக்லெட்டுகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு போராளிகளுக்கு பக்குகளில் (pocket) எடுத்துச்செல்ல வழங்கப்பட்டது) மற்றும் மேலதிகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மதிய உணவு வழங்கப்படுகின்றது; கூச்சலும் கும்மாளமுமாக இருக்கின்றது அவ்விடம்.

  • 26/3/2000 பிற்பகல் - படகேறும் பயிற்சிக்கு அணித்தலைவர்கள் செல்கின்றனர்; போராளிகள் தத்தமது பொருட்களை சரி பார்த்துவிட்டு வந்து நின்ற உழுபொறிகளில் ஏறி வெற்றிலைக்கேணி கோவிலடி கடற்கரையினை வந்தடைகின்றனர்.

  • 26/3/2000 மாலை - கேணல் சூசை தரையிறங்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார். தெற்கில் இருந்து வடக்காக வானூர்தி ஒன்று பறந்துபோனது. சிறிது நேரத்தில் வழமையான எறிகணைகள் அவ்விடத்தில் வீழ்கின்றன. போராளிகள் உடைந்த சிங்களத்தின் காப்பரண்களுக்குள் காப்பெடுக்கின்றனர். தரையிறக்க அணிகளை படகேற்றி அனுப்பும் பணியிற்கு லெப். கேணல் மங்களேஸ் பொறுப்பாகச் செயற்படுகிறார். உதவிக்கு லெப். கேணல் பாக்கி செயற்படுகிறார்.

  • 26/3/2000 இரவு 6:40ற்கு முன் - முதலில், இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் கடலேறின. இவற்றைத் தொடர்ந்து கடற்புலிகளின் சேமத்திற்கான (escort) சண்டைப்படகுகள் கடலேறின.

  •  26/3/2000 இரவு 6:40 - குறித்த நேரத்தில் தரையிறக்க அணிகளைக் கொண்ட தரையிறக்கக் கலத்தொகுதிகள் புறப்படுகின்றன. நீரின் போக்கைத்தவிர இவர்களுக்கு வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

  • 26/3/2000 இரவு - தாழையடி கதுவீ தளத்தில் இருந்த சிங்களப் படையினருக்கு ஐயமேற்பட்டதால் சிங்கள டோறா சுற்றுக்காவல் படகுகள் உலாவத் தொடங்க கடற்புலிகளின் படகுகள் வழிமறிக்க விரைகின்றன. தரையிறக்க கலங்களின் வேகம் அதிகரிக்கப்படுகின்றது.

( முதலாவது கணத்தின் தரையிறக்கம் நிகழ்கிறது. லெப். கேணல் நேசன் தலைமையிலான ஏழு படகுகளில் சென்ற சாள்ஸ் அன்ரனியின் இரு அணிகள் குடாரப்பில் கால்பதிக்கின்றனர். கண்டிவீதியை பிளந்ததுவாக நிலை கொள்வதற்காக இத்தாவில்-இந்திரபுரம் நோக்கி கமுக்கமாக நகர்கின்றனர்.)

 

  • 26/3/2000 இரவு 8:30 - முட்டுப்பட்டு கடற்சமர் வெடிக்கின்றது. 6 டோறாக்கள் கடலில் நிற்கின்றன. தரையிறக்க கலன்களை அண்மித்த டோறாக்களை போக்குக்காட்டி வேறிடத்திற்கு வலிந்திழுத்துச் செல்கின்றனர், கடற்புலிகள்.

  • 26/3/2000 இரவு 8:45 - முதற் கலத்தொகுதி தரையிறங்‌கியது, கட்டளையாளர் கேணல் பால்ராச்சுடன்‌. 

(11 கிமீ கடற்பயண ஏற்றிப்பறித்தல் தொடர்கின்றது)

  • 26/3/2000 இரவு 9:30 - 10:00 - குடாரப்பு-மாமுனை கடற்கரைகளை இலக்குவைத்து டோறாக்கள் தரை நோக்கிய தாக்குதலைத் தொடங்குகின்றன. எம்மவருக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சமநேரத்தில் எறிகணைகளும் வீழத்தொடங்குகின்றன.

  • 26/3/2000 நடுச்சாமம் 11:32- இவற்றிற்கிடையில் பளை 'ஆட்டிவத்த' சேணேவித் தளமானது 11 பேர் கொண்ட தரைக் கரும்புலிகளால் செயலிழக்க செய்யப்படுகின்றது. அங்கிருந்த 11 தெறோச்சிகளும் அழிக்கப்பட்டதோடு ஒட்டுமொத்த சேணேவித் தளமும் அதிகாலைவரை செயலிழக்க செய்யப்படுகின்றது. இதில் 2 கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர்; கடலில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 2 சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றன.

  • 26/3/2000 நடுச்சாமம் 11:30 - ஏ9 வீதியின் இத்தாவில்-இந்திரபுரப் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது

  • 26/3/2000 நடுச்சாமம் 11:00 - 12:00 - திரும்பிச் சென்றுகொண்டிருந்த கட்டளையாளர் விதுசா பயணித்த படகு அடி வேண்டி ஏற்கனவே சேதமடைந்திருந்ததால் எரிந்து மூழ்குகிறது. 

  • 27/3/2000 அதிகாலை 3:00 - டோறாக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்கிறது. சமநேரத்தில் தரையில் இருந்து 5 தகரிகள் கடலை நோக்கி சுட்டுக்கொண்டிருக்கின்றன.

  • 27/3/2000 காலை 7:00-7:30 - போராளிகள் வந்தது தெரியாமல் மக்கள் நடமாட்டத்தை தொடங்குகின்றனர். இவர்களை கண்ட சிலர் தத்தமது வீடுகளுக்கு அருகில் நின்றவர்களுக்கு தேநீர் முதலிய சிற்றுணாக்கள் வழங்குகின்றனர். மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு போராளிகள் பணிக்கின்றனர். மாமுனைத்தளம் கைப்பற்றப்படுகிறது, மாலதி படையணியால்.

(மேற்கொண்டு சமர் நடக்கிறது. சிங்களப் படைகளின் கடல்-தரை தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இரு தரப்பினது எறிகணை வீச்சும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. சமநேரத்தில் கடல் வழியான வழங்கல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.)

  • 27/3/2000  காலை 6:00-9:00 - கடும் கடற்சமரால் ஆளணிகளை ஏற்றிய தரையிறக்கக் கலங்கள் மிகவும் மெள்ளமாக கடலிலே நகர்கின்றன.

  • 27/3/2000 காலை 10:00 அளவில் - தரையிறக்கம் முடிவிற்கு வருகிறது. முழு ஆளணியும் தரையிறக்கப்பட்டுவிடுகின்றன.  முதற் தரையிறக்கத்தின் போது கடலில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரில் வீரச்சாவடைந்த 14 போராளிகளின் வித்துடல்களும் தலைவரின் அறிவுறுத்தலின்படி குடாரப்பிலேயே விதைக்கப்படுகின்றன.

  • 27/3/2000 நண்பகல் - பின்னுதைப்பற்ற சுடுகலன்களும் வெடிபொருட்களும் கணைகளும் வந்துசேர்கின்றன; கடல் வழங்கலணி கட்டளையாளர் மேஜர் எழிற்கண்ணன் காயமடைகின்றார். படகு தரைதட்ட கள மருத்துவயிடம் நோக்கி கொண்டுசெல்லப்படுகின்றார்.

  • 27/3/2000 மாலை - தரையிறங்கியோர் தாழையடித் தாக்குதலுக்கான வேவுகளில் ஈடுபடுகின்றனர். தெற்கிலிருந்து (வெற்றிலைக்கேணிப் பக்கத்தால்) தாழையடி நோக்கி கடற்புலிகளின் சூட்டி தரைத்தாக்குதல் அணி உள்ளடங்கிய கேணல் தீபனின் படைத்தொகுதி முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அவர்களை வழிமறித்து சிங்களவரின் 5/6 தகரிகள் தீரமுடன் சமராடுகின்றன. அவை உதவிக்கு வந்த கடற்புலி படகுகளையும் விரட்டியடிக்கின்றன. இதனால் புலிகள் 500-600 மீ கைப்பற்றிய நிலப்பகுதியை விட்டு பின்வாங்குகின்றனர்.

(இவற்றிற்கிடையில் கடற்புலிகளின் மற்றொரு படகும் சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றது. ஏனைய நான்கு படகுகள் மட்டும் தொடர்ந்து சமராடுகின்றன, தளம் திரும்பாமல்!)

  • 28/3/2000 அதிகாலை 2:30 - புலிகள், தாழையடி நோக்கி தெற்கில் இருந்து அதிவிரைவாக மீண்டொருமுறை உடைத்துக்கொண்டு முன்னேறுகின்றனர்.

  • 28/3/2000 காலை - தாழையடித் தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது; அன்றைய உணவும் கடல்வழியாக வந்து சேர்கின்றது. பெரும் சிரமத்திற்கு நடுவிலும் கடல்வழியான வழங்கல் நடைபெறுகிறது; தரையிறங்கியோரால் ஏற்கனவே ஏ9 வீதி இந்திரபுரத்தில் ஊடறுக்கப்பட்டு கட்டுப்பாடில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாவில் பெட்டிச் சமர் நடந்துகொண்டிருக்கிறது.

(கணைகள் மற்றும் கனவகை படைக்கலன்கள் கொணர்தல், காயமடைந்த போராளிகளை வன்னித் தளத்திற்கு அனுப்புதல், வித்துடல்கள் காவுதல் மற்றும் உணவு கொணர்தல் என ஓயாமல் சுழல்கின்றனர் கடற்புலிகள்)

  • 28/3/2000 நண்பகல் - தரையிறங்கியோரே சமைக்கத் தொடங்குகின்றனர். சமையலில் அவ்வூர் பொதுமக்களின் உதவியையும் நாடிப் பெற்றுக்கொள்கின்றனர். மக்களில் சிலர் நேரடியாக உதவுகின்றனர்; இத்தாவில் பெட்டி களமுனைக்கு மட்டும் உணவு சென்றடைவதில் சிக்கல் தொடர்கிறது.

  • 28/3/2000 பிற்பகல் 4:00 - கடற்புலிகளின் கடல் நடவடிக்கைகள் ஓய்விற்கு வருகின்றன. 

  • 28/3/2000 சாமம் 11:00 -12:00 - தாழையடி தளம் மீதான கடும் தாக்குதல் தொடங்குகிறது. 

  • 29/3/2000 - சமையல் நடந்து கொண்டிருந்த இடம் மீது வான்குண்டுவீச்சு நடக்கின்றது. உயிர்சேதமின்றி சமையல்காரப் பொதுமக்களும் போராளிகளும் தப்புகின்றனர். இடமும் மாற்றியமைக்கப்படுகின்றது. 

  • 29/3/2000 நண்பகல் 1:00 - வெற்றிலைக்கேணி கடற்கரை வழியாக உடுத்துறையிலிருந்து வத்திராயன் பொக்ஸ் வரை தொடர்ந்து முன்னேறிச் சென்ற கட்டளையாளர் கேணல் தீபனின் படைத்தொகுதியின் தாக்குதலாலும், குடாரப்பில் தரையிறங்கி மாமுனையைக் கைப்பற்றி செம்பியன்பற்று கடற்கரை வழியாக வந்த படையணிகளின் தாக்குதலாலும் மருதங்கேணியில் இருந்த தாழையடித் தளம் தமிழரிடம் வீழ்கிறது.

  • 29/3/2000 பிற்பகல் -  மருதங்கேணிச் சந்தி படைத்தளமும் கைப்பற்றப்பட்டு தரையிறங்கியோரும் தரைவழியால் வந்தோருமாக இவ்விடத்தில் கைகுலுக்குகின்றனர். தரையிறங்கியோருக்கான 12 கிமீ நீள தரைவழி வழங்கல் பாதையும் திறக்கப்படுகின்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 15 கிமீ நீளமும் 2 கிமீ அகலமுமான 30 சதுர கிமீ நிலப்பகுதி புலிகளால் மீட்கப்பட்டது.

 

 

 

இத்தோடு ஓயாத அலைகள் மூன்றினது கட்டம் நான்கின் முதலாம் கட்டம் நிறைவடைந்து படையணிகள் யாவும் இரண்டாம் கட்டத்திற்கு நகர்கின்றன. 

 

 

ஆதாரம்: 

  1. 'வேருமாகி விழுதுமாகி', (பக்கம் 349 - 366)
  2. 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்', (பக்கம் 86 - 87)
  3. 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்', (சூசை அவர்களோடான நேர்காணல் பகுதி)
  4. எரிமலை சூன் 2001, (பக்- 45)
  5. உயிராயுதம் - பாகம் 8
  6. விடுதலைப்புலிகள், வைகாசி-ஆனி, 2000 பக்கம்: 12-13 & 15
  7. ஓயாத அலைகள்-3 கட்டம்-4 | நிகழ்படம்
  8. ஈரத்தீ திரைப்படம்
  9. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4881
  10. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4884
  11. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4885
  12. https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000329ltte.htm
  13. https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000422ltte.htm#LTTE

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வானிலை

 

  • வெப்பநிலை:

துல்லியமான வானிலை கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் வேருமாகி விழுதுமாகி புத்தகத்தில் இருக்கின்ற குறிப்புகளின் அடிப்படையிலும் ஆனையிறவுச்சமர் நிகழ்படத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போது வானிலை வழக்கமான சூரிய வெப்பத்தோடுதான் இருந்துள்ளது. அதேபோல் தரையிறக்கம் நிகழ்ந்து 21 ஆண்டுகள் கழித்து அவ்விடத்தில் உள்ள வெப்பநிலையும் 28 - 31 தான். எனவே இதுதான் அக்காலத்திலுமாக இருந்திருக்கக்கூடும். சிலவேளை தசம் அளவில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

  • நீரோட்டம்:

கடல் நீரோட்டமானது இவர்கள் தரையிறங்கத் தீர்மானித்திருந்த நாளிற்கு முன்னதான, 'இரண்டொரு' நாட்களாக, வழமையைவிட வேறுபாடாக இருந்ததை வேருமாகி விழுதுமாகி என்ற புத்தகத்தில் கேணல் சூசை அவர்களின் அறிவுரை மூலம் நாம் அறியக்கூடியவாக உள்ளது. 

"கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்"

--> வேருமாகி விழுதுமாகி, பக்- 352

ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 'வழமையை விட வேறுபாடான' என்ற சொற்றொடரின் பொருள் பிடிபடவில்லை! அற்றை நாளில் மிகு அலைகள் எழுந்திருக்கக் கூடும் என்பது என் துணிபு.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வரைபடம்

 

 

ஓயாத அலைகள்-3 கட்டம்-4 இன் குடாரப்புத் தரையிறக்கத்தினை காட்டும் நிலவரைபடம்

maruthankerny map showing the exact location of kudarppu landing.jpg

'படிமப்புரவு: வடமராட்சி தெற்கு வரைபடத்தில் நான் கீறியது. | வெற்றிலைக்கேணி கோவிலடியில் இருந்து குடாரப்பு-மாமுனையில் கடற்புலிகள் தரையிறக்கிய கடல்வழியை வரைபடம் காட்டுகிறது. அடிவேண்டி மூழ்கினாலும் வேளைக்கு நீந்தி கரையைத் தொடுவதற்காக தரையிறக்க கலன்கள் கடற்கரையை அண்டியதாகவே நகர்ந்தன.'

 

 

தெற்காசியாவின் புத்தியல் காலத்தின்(Modern time) முதலாவது தரையிறக்கமான குடாரப்புத் தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்புச் சமரும் (ஓயாத அலைகள்-3 கட்டம்-3 & 4)

 

elephantpass battle ... Unceasing waves - 3 phase 3.png

'படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்' இதழ் | தென்மராட்சியில் கடற்கரை ஓரமாக உள்ள தடித்த கோடு சிங்களவரின் மாற்றுவழி வழங்கல் பாதையாகும். '

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

பொழிப்பு

 

  • மூலம்: சமராய்வுப் பிரிவு, தமிழீழம் (ஆண்டு அறியில்லை)
  • முதன்முதலில் எழுத்துருவில் வெளியிடப்பட்டது: 2000 ஆம் ஆண்டு. தமிழ்செய்திக்கதிர்.blogspot.com 
  • தனித்தமிழில்: 26/10/2021

 

 

கரு: குடாரப்புத் தரையிறக்கத்தின் பொழிப்பு பார்வை மற்றும் ஆனையிறவுச்சமரின் மேலோட்டப் பார்வை.

 

ஆனையிறவு கூட்டுப் படைத்தளத் தாக்குதல் சிறீலங்கா படைத்துறையினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறீலங்கா படைத்துறையினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாழையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்கு தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய படைத்துறைத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

அறைகூவல்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கரந்தடிப் போராளிகளுக்கான பொதுவிதி.

ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.

26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள்.

வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகவலுவான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வழங்கல் பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.

தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படைத்தொகுதி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி அனைத்து வழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் வலுவோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் தகரிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மிக இடரான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகு கலத்தொகுதி ஆழக்கடல் சென்று இரண்டு மணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடுஞ்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறா அதிவேக சுற்றுக்காவல் படகுகள் அடங்கிய கலத்தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமராடின.

கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த சேணேவித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு தெறோச்சிகளை செயலிழக்கச் செய்திருந்தனர்.

தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைக் கட்டளையாளர்களாக சோதியா படையணிக் கட்டளையாளர் துர்க்கா, மாலதி படையணிக் கட்டளையாளர் விதுசா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளையாளர் (பின்னர் பிறிதொரு நேரத்தில் வீரச்சாவடைந்த) லெப். கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த  இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.

புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வழங்கலைக்கூடச் செய்யமுடியாத நிலை.

கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான சமர் கட்டளையாளர்கள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்பு வரை அரச படையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வழங்கல் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வழங்கலை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாழையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.

இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வழங்கலை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாழையடி உட்பட்ட மிகவலுவான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.

அதுவரை சரியான வழங்கலை, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவூர்திகள், சேணேவிகள், படையணிகள் என்று அனைத்தையும் பயன்படுத்தினான். மிகமிக முரட்டாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.

கவசப்படைக்குரிய பல ஊர்திகள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான சேணேவிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவூர்திகள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய தெறோச்சிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத கெதியில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.

முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடியோசையாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.

சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து படைத்துறை மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

 

 

 

 

 

 

===================================================

 

 

 

 

 

கரு: கரும்புலிகளால் பளையில் 11 தெறோச்சிகள் அழிக்கப்பட்டமை.

 

26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் கமுக்கமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.
 
குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய சேணேவித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை சேணேவித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.
 
குறிப்பிட்ட சேணேவித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. சேணேவித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.
 
சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. சேணேவித்தளத்தை காத்து நின்ற நூற்றுக்கணக்கான தரைப்படையினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். சேணேவித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.
 
சேணேவிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு தெறோச்சிகள் இருந்தன. ஓடிய எதிரி வலுவைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி தெறோச்சிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு தெறோச்சிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். தெறோச்சிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அச்சேணேவித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.
 
தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் கமுக்கமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.
 
பளை சேணேவித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அமையம் தேவைப்பட்டது.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

திட்டம்

 

 

"ஆனையிறவின் மேனி தடவி
போனது போனது பூங்காற்று!

அதன் மேல் ஏறி 
ஓயாத அலையில் 
புலிகள் போயினர் அட நேற்று!"

--> அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஆனையிறவின் மேனி தடவி' பாடலிலிருந்து

 

 

  • குறிப்பு: இது விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலும் அவர்களின் நகர்வுப் பாதைகளையும் வைத்து என்னால் எழுதப்பெற்றதாகும். இதை வாசிப்பதன் மூலம் உங்களுக்கு குடாரப்புத் தரையிறக்கத்தின் திட்டம் பற்றிய ஒரு மேலோட்டமான கருத்துரு கிடைக்கும்.

 

சிறீலங்கா படைத்துறையால் வல்வளைக்கப்பட்டிருந்த ஆனையிறவில் இருந்த கூட்டுப் படைத்தளத்தினைக் கைப்பற்றி விடுவிப்பதற்காக குடாரப்பில் தரையிறங்கி அங்கிருந்து வெற்றிலைக்கேணி வரை வேகமான தரைத்தொடர்பினை ஏற்படுத்தும் அதே வேளை இந்திரபுரப்பகுதியில் இருந்த ஏ9 வீதியினை ஊடறுத்து, துண்டெடுத்து, ஆனையிறவிற்கான முக்கிய வழங்கல் பாதையினை துண்டித்து ஆனையிறவை விடுவிப்பதே திட்டமாகும்.

இப்படியான ஒரு தற்கொலைக்கு ஒப்பான அதியுச்ச திகைப்பூட்டும் திட்டத்தினை சிங்களப்படைகள் ஒருகாலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை புலிகள் நன்கறிந்திருந்தனர். ஆகையால்தான் இதனை துணிந்து தேர்ந்திருந்தனர்.

இதற்கமைவாக மேற்குறிப்பிட்ட படையணிகளில் இருந்து தேரப்பட்ட 1200 பேர் கொண்ட தரைப்புலி படைத்தொகுதி ஆயத்தப்படுத்தப்படுவர். இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து சுண்டிக்குளம் கடனீரேரிக்கு கொண்டுவரப்படுவர். அங்கிருந்து கட்டைப்படகுகள் மூலம் 3 கிமீ தாண்டியிருந்த, நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட ஓரிடத்திற்கு ஏற்றிப்பறிக்கப்படுவர். அங்கிருந்து சிலர் நடந்தும் சிலர் உழுபொறிகள் மூலமும் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைவர். அங்குவைத்து இவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளுக்கும் புலற்றப்படும். தேவையான மேலதிக பொருட்கள் - மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுகள், இனிப்புகள், அன்றைய மதிய உணவு - வழங்கப்படும். அங்கிருக்கும் புலிவீரர்களின் அணித்தலைவர்கள் முன்னரே கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு படகேறும் பயிற்சிகள் வழங்கப்படும். பின்னர் இவர்கள் உழுபொறிகள் மூலம் வெற்றிலைகேணி கோவிலடி கடற்கரைக்கு ஏற்றிப்பறிக்கப்படுவர்.

அங்கிருந்து ஏற்கனவே அணியமாகவுள்ள தரையிறக்கப் படகுகளாக மாற்றப்பட்டிருந்த உப்பயான விதம் மற்றும் புளூசுரார் விதம் ஆகிய கட்டைப்படகுகளில் கடற்புலிகளால் ஏற்றப்பட்டு தாழையடி தானைவைப்பு மீதிருந்து வரும் தாக்குதல்களையும் கடலில் டோறாக்களின் தாக்குதல்களையும் சமாளித்தவாறு கரையோர காவலரண்களை மேவிக்கடந்து, 13 கிமீ பயணித்து,  குடாரப்பு-மாமுனை கடற்கரையில் கனவகை படைக்கலன்களுடன் தரையிறக்கப்படுவர், சாள்ஸ் சிறப்பு கடற்தாக்குதல் அணியினரால்.

கடல்வழி நகர்வின்போது கடற்சமர் மூண்டு படகுகளுக்கு நேர்ச்சிகள் ஏற்பட்டு மூழ்கும் சமயத்தில் படகினில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியாதலால் அவர்கள் இலகுவாக நீந்திக் கரைசேர்வதற்கு ஏற்றவாறு கடற்புலிகள் படகுகளை கரையினை அண்டியவாறே ஓட்டிச்செல்லுதல் வேண்டும்.

தரையிறக்கமானது சூரிய உதயத்திற்கு முன்னர் நடந்தேறியிருக்க வேண்டும். இல்லையேல் பகல் பொழுதில் சிங்கள வான்படையின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்; இதனால் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது முக்கியமாக கருத்திலெடுக்கப்பட்டிருந்தது. 

தரையிறங்குவோர் செல்லும் படகுகளில் எந்தவொரு எதிர்தாக்குதல் செய்யும் வசதிகளும் இல்லாமையால் இவர்களுக்கு சேமமாக கடற்புலிகளின் 7 சண்டைப்படகுகளும் செல்லும். கடற்புலிகளுக்கு எவ்வளவுதான் இழப்புகள், உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் தரையிறக்கப்படுவோருக்கு சிறு கீறலும் இல்லாமல் இறக்கப்பட வேண்டும். அதுவே தேசியத் தலைவரின் ஆணையாகவும் இருந்தது.

இவற்றிற்கிடையில் மற்றுமொரு அதிரடித் தாக்குதலும் நடந்தேறும். பளைப்பகுதியில் சிங்களப் படைகள் அமைத்திருந்த சேணேவித்தளமான 'ஆட்டிவத்த' (தமிழில்: சேணேவிவத்தை) மீது 11 பேர்(5 ஆண்கள் 6 பெண்கள்) கொண்ட கரும்புலி அணி மூன்று குழுக்களாகப் பிரிந்து மின்னல்வேகத் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டும். இதற்காக அவர்கள் முன்னொரு நாளில் கடல்வழியாக உப்பயானங்கள் மூலம் உட்கொண்டுசெல்லப்பட்டு பின்னர் தரைவழியாக ஊடுருவி நகர்ந்து பதுங்கியிருப்பர். கைப்பற்றிய பின்னர் தெறோச்சிகளை பின்னகர்த்த புலிகளின் தாக்குதலணியொன்று உதவிக்கு அனுப்பப்படும். அது வர ஏலாமல் போக்கும் சமயத்தில் அங்கிருக்கும் தெறோச்சிகளை வெடிபொதிகள் மற்றும் கான் சார்ச்சுகள் கொண்டு அழிப்பதன் மூலமும் தளத்தினுள் இருந்த எறிகணைகளை வெடிவைத்து தகர்ப்பதன் மூலமும் சேணேவித்தளத்தினை பல மணிநேரத்திற்கு மீளப் பயன்படுத்த முடியாத நிலைக்கு செயலிழக்கச் செய்வர். இதனால் தரையிறங்கப் போகும் அணிகளுக்கு உடனடி சேணேவித் தாக்குதல் ஏதும் நிகழாமல் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவர். பின்னர் கரும்புலி அணியினர் பாதுகாப்பாக தளந்திரும்புவர்.

பேரணி தரையிறக்கப்படுவதற்கு முன்னர், தலையணியாகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓரணியானது 7 படகுகளில் முன்சென்று தரையிறங்கி, வேகமான மெள்ளத்தில் சதுப்பு நிலத்தைப் பூகோள அமைவிடமாகக் கொண்ட கடனீரேரி வழியாக சுமார் 10 கிமீ தொலைவை இரவின் துணையுடன் நடந்து கடந்து, இத்தாவில் பகுதியில் சச்சரவில்லாமல் கமுக்கமாக நிலைகொள்ள வேண்டும். நிலைகொள்வோர் ஈரணியாகி, தென்மராட்சியில் புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் நடுவே இருந்த பகுதியில், தொண்டைமானாறு நீரேரிக் கரைப்பக்கம் 2கிமீ அகலத்தையும், யாழ் நெடுஞ்சாலைப் பக்கம் 800மீ அகலத்தையும், மொத்தமாக 4கிமீ நீளத்தையும் கொண்டு தொண்டைமானாறு நீரேரிக்கு முதுகையும் கிளாலி கடலிற்கு முகத்தையும் காட்டியபடி 'நாக்கு' வடிவில் இத்தாவில்-இந்திரபுரத்தில் இருந்த ஏ9 வீதியில் நிலையெடுக்க வேண்டும். நிலையெடுப்போரில் ஓரணி பளையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் மற்றைய அணி முகமாலையிலிருந்த பாரிய தளத்தினை பார்த்தவாறும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களமைத்து நிலைகொள்ள வேண்டும். இந்த கமுக்கமான தொடக்க நகர்வின் வெற்றியில்தான் ஏனைய நகர்வுகள் தங்கியிருந்தன.

தலையணி நிலைகொள்ளும்போது பேரரையர் பால்ராச்சும் ஏனையோரும் தரையிறக்கப்-படுவர்;பட்டிருப்பர். தரையிறங்கியோரில் பேரரையர் பால்ராஜ் தலைமையிலான 4 குழாங்கள்(Company) முழுதாக வெயில் வருவதற்குள் 2 கிமீ தரைவழியாகவும், பின்னர் 2 கிமீ விரக்களி ஆற்றினூடாகவும் பேந்து கண்டல் பற்றைகள், சதுப்பு நிலங்களைக் கடந்து இத்தாவில் அடைந்து அங்ஙுள்ள அணியோடு கைகோர்க்க வேண்டும்.

இவர்களுக்கு முன்னரே தரையிறங்கும் சிற்றரையர் மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலிகள் அணியானது இயக்கச்சி, கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் உள்ள சேணேவித் தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இன்னபிற பணிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஏனையோர் இறங்கியவுடன் அருகில் இருக்கும் மாமுனையில் உள்ள தானைவைப்பினை அழிக்க வேண்டும். பின்னர் அங்கு ஒரு கட்டளைப்பீடம் அமைக்க வேண்டும்.

சம நேரத்தில் நாகர்கோவில் படைத்தளத்தை பார்த்தவாறு நாகர்கோவில் தெற்கின் வடதிசையில் ஓரணியும், முகமாலை-கிளாலியினை பார்த்தவாறு மற்றொரு ஓரணியும், இத்தாவில் பெட்டிக்குச் செல்லும் எஞ்சிய வழி மூடிடாதபடி பளையை பார்த்தவாறு பிறிதொரு அணியும் உள்தடுப்பு அரண்கள் அமைத்து நிலைகொள்ள வேண்டும். ஏனைய அணிகள் செம்பியன்பற்றினைக் கைப்பற்றி தாழையடியினை வசமாக்கிடும் பணியில் ஈடுபட வேண்டும். அதேநேரம் ஊடறுக்கப்பட்ட கண்டி வீதிக்குச் செல்வோர் சிங்களம் ஏற்படுத்தும் மாற்று வழங்கல் பதையான கறுக்காய்தீவு - புலோப்பளை உள்ளடங்கிய ஒடுங்கிய கிளாலி-கச்சாய்-சாவகச்சேரி வீதி மீதும் எறிகணைத் தாக்குதல் செய்ய வேண்டும்.

தாழையடி என்பது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகும். ஏனெனில் இவ்வாறு தரையிறக்கப்பட்டோரை மீள எடுப்பது ஏலாத காரியமாகும். அதனால் அவர்கள் தரைவழியாகவே வந்து சேரவேண்டும் என்பதும் மிக முக்கியமாக இருந்தது. அதற்கு தடையாக இருந்த தாழையடி தளத்தினைக் கைப்பற்றி வன்னியோடான தரைவழிப்பதை திறத்தலே ஒரே தீர்வாகும்.

தரையிறக்கப்படுவோருக்கு தரைவழி வழங்கல் ஏதுமற்ற நிலையில் முழு வழங்கலும் கடல் வழியாகவே நடைபெபெறும். கடல் வழங்கல்கள் பாரிய கடற்சமர்களுக்கும் வான் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்துதான் வந்து சேர வேண்டும். ஆனாலும் தடங்கலின்றி நடைபெறவேண்டும். தொடர் கடல்வழி வழங்கல் சீராக இருக்கப்போவதில்லை என்பதால் தரையிறங்கியோர் தரைவழி வழங்கல் பாதை ஒன்றினை இயன்றளவு கெதியாக ஏற்படுத்த வேண்டும்.

தரைவழி பாதையினை திறப்பதற்காக பேரரையர் தீபன் தலைமையிலான மற்றொரு படைத்தொகுதியில் சூட்டி தரைத்தாக்குதல் அணி, ஜெயந்தன் படையணியின் ஒரு பிரிவு, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி உட்பட்ட இம்ரான்-பாண்டியன் படையணியின் சில பிரிவுகள், சிறப்புப்படை ஆகியவற்றுடன் ராதா விமான எதிர்ப்பு அணியும் உதவிக்கு புலனாய்வுத்துறை தாக்குதலணியும் இணைந்து கட்டைக்காட்டில் இருந்து முன்னேறி உடுத்துறை, ஆழியவளை ஆகியவற்றைக் கடந்து தெற்குப் பகுதியில் இருந்து தாழையடியை இரவு நேரத்தில் தாக்கி நெருக்க வேண்டும். இவர்களுக்கு உதவியாக கடலில் இருந்து கரையோரக் காவலரண்கள் மீது கடற்புலிகள் தாக்கவேண்டும். சமநேரத்தில் வடகில் இருந்து தரையிறங்கிய அணிகள் தாழையடியினை தாக்கி நெருக்க வேண்டும். அதே சமயம் சிறப்புப்படையினர் பல குழுக்களாக படைத்தளத்தினுள் ஊடுருவி முக்கிய தாக்குதல்கள் நிகழ்த்த தாழையடி தமிழர் வசமாகும்.

பேந்து, மருதங்கேணிச் சந்தியில் இருக்கும் சிங்களப் படைத்தளத்தினையும் வீழ்த்திட வேண்டும். அதன் பின்னரே குடாரப்பில் தரையிறங்கியோருக்கான தொல்லையில்லா தரைவழிப் பாதை உடுத்துறை வழியாக திறக்கும். அதன் பின்னர் வடமராட்சி கிழக்கில் சமராடிய போராளிகள் ஏனைய சமர்க்களங்கள் நோக்கி நகர வேண்டும்.

இதுவே தரையிறக்கத்தோடான தாக்குதல் திட்டம் ஆகும்.

இவ்வாறாக 2ம் உலகப்போரில் நோர்மண்டியில் நேசநாட்டுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமானது எவ்வாறு போரின் போக்கில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி ஒரு முழு படைத்துறை வெற்றியினை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்ததோ அதுபோலவே இதுவும் இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். அவர்கள் நம்பினது போலவே படைவலுச் சமநிலை மாறி மாபெரும் வெற்றியினை ஈட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது உலகின் பெரும் வல்லரசுகளின் பார்வையையும் தமிழர் பக்கம் திருப்பியது என்பது மறுக்கவியலா உண்மைகளாகும்.

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

 

 

 

 

------------------------------------------------------------------

 

 

  • வத்திராயன் பொக்ஸ் - வத்திராயனில் உள்ள ஒரு சமரணியின் தலைமையகத்தையும் முள்ளியானில் உள்ள படைத்தொகுதி தலைமையகத்தையும் உள்ளடக்கிய  தானைவைப்பிற்கு சிறீலங்கா படைத்துறை அதிகாரிகள் 'வத்திராயன் பொக்சு' என்று பெயரிட்டனர். முள்ளியான் மற்றும் வண்ணான்குளம் கரையோரச் சிற்றூர்களுக்கு இடையில் நீண்டு செல்லும் இச் செவ்வகப் பரப்பானது 3 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் கொண்டது ஆகும்.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள் 

முன்னேற்பாடுகள்

 

அடுத்து, தரையிறக்கத்திற்கு முன்னர் என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப்பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூலில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய தரையிறக்கத்திற்கான முன்னேற்பாடுகள் எப்படி இருந்தன என்பதை அறியமுடிவதோடு, அவர்களின் அனுபவங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதையும் நாம் அறியலாம்.

 

பக்கங்கள்: 349-353

எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021

 

ரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்க நடவடிக்வகைக்கான கடின பயிற்சி அது. ஏனைய படையணிகளுடன் எமது படையணியின் இரு கொம்பனிகள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தன. மகளிர் படையணிகளின் பயிற்சி நடவடிக்கைக்குப் பொறுப்பாக சுகி நின்றார். எமது படையணிக்கான ஒன்றுகூடல் முடிந்த சில நாட்களிலேயே தரையிறக்கச் சமருக்கான பயிற்சி நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதால், ஐமுனாவின் கொம்பனியே முதலில் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. கல்லூரியைச் சுத்தப்படுத்தும் வேலையும் இவர்களுக்கே கிடைத்து.

2000.03.01அன்று அணிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. பரந்த வெளியில் புலிக்கொடி கம்பிரமாக ஏறிப்பறக்க, தொடங்கப்பட்ட பயிற்சிகள் குறுகியகாலத்திலேயே வேகமெடுத்தன. மன்னார் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தர்சாவின் கொம்பனியும் சில நாட்களின் பின்னர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சியில் இணைக்கப்பட்டது. தடையணிகள், உள்நுழைந்து தாக்கும் அணிகள் என ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளுக்கேற்றவாறு பயிற்சியினைப் பெற வர்ணா, புரட்சிகா, செய்மதி, பிருதுவி, அங்கயற்கண்ணி ஆகியோரால் எமது அணிகளுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

2000.03.25 அன்றைய மாலைப் பொழுதில், பயிற்சியை முடித்துக்கொண்ட எமது படையணியின் இருகொம்பனிகளும் உழவு இயந்திரங்களில் ஏறி ஒரு நீரேரிக்கு அண்மையில் இறங்கினோாம். பழுப்பு நிறக் கரையையும், இடையிடையே பச்சைக்குடை விரித்ததுபோல் அடர்ந்த தாவரங்களையும்கொண்ட அந்நீரேரிதான் 'சுண்டிக்குளம் நீரேரி' என அங்கு படகு வைத்துக்கொண்டு நின்ற ஓட்டி ஒருவர் சொன்னார். அந்த அழகிய நிரேரியைச் சிறிய படகுகள்மூலம் கடந்தோம். கத்தரிநீல நிறப் பூக்களைக்கொண்ட புற்கூட்டம் சிறுசிறு தீவுகளைப்போலப் பரந்திருந்தது அந்த அழகினை இரசித்தவாறே உல்லாசப் பயணத்துக்குச் செல்கின்ற உணர்வுடன் கரையை நெருங்க, எறிகளை வீச்சிலே வீழ்ந்து கிடந்த மரங்களும், ஆழத் தோண்டப்பட்டிருந்த குழிகளும் திடீரென இறுக்கமான ஓர் உணர்வை மனதில் தோற்றுவித்தன.

கரையில் உழவு இயந்திரங்கள் எமக்காகக் காத்திருந்தன மீண்டும் உழவு இயந்திரப் பயணம் தொடர, கட்டைக்காடு எம்மை வரவேற்றது. ஈச்சம் பற்றைகளும் புல்வெளிகளும், பல்வகை மரங்களுமாக இணைந்த அப்பகுதி நாலைந்து மாதங்களின் முன்புதான் சிறீலிங்காப் படைகளிடமிருந்து எம்மால் மீட்கப்பட்டிருந்தது என்பதால், படையினர் விட்டுச் சென்ற தடங்களெதுவும் மாற்றமுறாமல் அப்படியே இருந்தன. இரவில் அங்கு சென்ற நாம், மறுநாள் காலையில் ஒன்று கூட்டப்பட்டடோம்.

பரந்த வெளியொன்றில் அனைத்து அணிகளும் வரிசையதாய் நின்ற காட்சி ஓர் வேகத்தை ஏற்படுத்தியது. மரங்களுக்கு மேலால் உயர்ந்த சூரியனின் கதிர்கள் சூரியக் குழந்தைகளைத் தொட்டுத் தழுவ, எமது இயக்கத்தின் மேன்மைமிகு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான உறுதியுரையை முடித்துக்கொண்டோம். தரையிறக்கத் தாக்குதலை வழிநடத்தும் தளபதிகள் அனைவரும் சண்டைபற்றி உரை நிகழ்த்தினர். தலைவர் அவர்கள் எதிர்பார்க்கின்ற வெற்றியைப் பெறவேண்டியதன் தேவை எல்லோர் மனங்களையும் மீணடும் நிரப்பியது.

பின்னர், தாக்குதல் நடவடிக்கைக்கான மேலதிக பொருட்கள், உலர் உணவுகள் என்பன எங்களுக்கு வழங்கப்பட்டன. தமது பணியை இலகுபடுத்துவதற்காகத் தேவையானவற்றை முற்கூட்டியே தயார்ப்படுத்தும் பணியில் அணித்தலைவர்கள் ஈடுபட்டிருக்க, தரையிறக்கச் சமர் நடவடிக்கைக்குத் தாம் தெரிவுசெய்யப்பட்டது குறித்த மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இதனால் கூச்சலும் கும்மாளமும் அந்த இடத்தை நிறைக்க, மதிய உணவும் வந்து சேர்ந்தது.

அதற்கிடையில் கடலில் எப்படிப் பயணிக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துமுகமாக நடக்கவிருந்த படகேறும்பயிற்சிக்கு எல்லா அணித்தலைவர்களும் சென்றிருந்தனர். தாக்குதலின் இடையில் உண்பதற்காகக் கொடுக்கப்பட்ட கன்டோஸ் பொதிகள் சில, இப்போதே இல்லாமற் போகத்தொடங்கின. படகேறும் பயிற்சிக்குப் போனவர்களில் சிலர் கடலின் அடி ஆழத்தையும் பார்த்துவிட்டு வந்துசேர்ந்தனர். போராளிகளின் இனிய கூச்சல், கும்மாளங்களைப் பார்த்தவாறு ஆதவன் மேற்கில் மறைந்து கொண்டிருந்தான்.

தாக்குதல் அணிகள் புறப்படும் வேளை வந்தது. அனைத்து அணிகளையும் ஏற்றுவதற்கு உழவு இயந்திரங்கள் வந்து நின்றன. ஏற்கனவே தயாராயிருந்த நாம் எமது பொருட்கள் எல்லாம் சரியாக உள்ளதா என மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டோம். ஒவ்வொரு அணிகளாக ஏற்றிய உழவு இயந்திரங்கள் நீண்ட மணற்பாதையைப் புயல் வேகத்தில் தாண்டி வெற்றிலைக்லைக்கேணியில் இறக்கின. அதுவரை ஆளையாள் இறுக்கிப் பிடித்தபடி நின்ற அனைவரும் கடகடவெனக் கீழே குதித்தனர். அப்போது பனைகளின் இடைவெளியினூடே மஞ்சள் நிலா மேற்கு வானில் மெல்லிய கோலம் காட்டியது .

"கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்"

என எம்மோடு கதைக்கும்போது நம்பிக்கை தந்திருந்த கேணல் சூசையின் கட்டளைப்படி படகுகள் கரையில் நின்றன. கூடவே மனம் நிறைந்த நம்பிக்கைப் புன்னகையுடன் கடற்புலிப் போராளிகளும்.

குளிர்ந்த மண் காலில் பட, மனம் நெகிழ்ந்தது. கரையில் பாதுகாப்புக்கென இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த 'உடைந்த' காப்பரண்களையும், முட்கம்பித் தடைகளையும் தாண்டி கரையை அண்மித்தோம். அப்போது தெற்கிலிருந்து வடக்காக வானூர்தி ஒன்று செல்லும் ஒளிர்வு விட்டு விட்டுத் தெரிந்தது. தீடீரென நாம் நின்ற பகுதிக்கு அண்மையாக எறிகணைகள் வீழ்நது வெடிக்க, சலசலவெனத் தெறித்தன சிதறுதுண்டுகள். இது படைத்தரப்பின் வழமையான வேலைகளில் ஒன்று எனப் புரிந்துகொண்ட நாம், உடைந்த காப்பரண்களுக்கு அண்மையில் நின்று கடலைப் பார்த்தோம். அது அலைகளின் வீச்சுக்கு அதிர்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலையெனத் திரண்ட ஒவ்வொருவரதும் மனநிலை சொல்லவொண்ணா உணர்வெழுச்சிக்கு உட்பட்டிருந்தது.

உயர வீசும் அலைகளெல்லாம் கடலன்னையின் குழந்தைகள். ஓயாது வீசிக்கொண்டிருக்கும் நாங்கள் தமிழன்னையின் குழந்தைகள். ஆகவே அலையின் வலிமை எங்களுக்கும் வேண்டும். மனம் எங்கோ சிறகடிக்க முற்பட்டது. எல்லோரும் நாம் பயணம் செய்யப்போகும் கடற்தாயின் அலைக்கரங்களை இரசித்துக்கொண்டிருக்க, எம்மை ஏற்றும் படகுகள் தயாராகின.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

தரையிறக்கம்

 

அடுத்து, தரையிறக்கத்தின்போது என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப்பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூல், 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாறு கூறும் நூல் மற்றும் 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற குடாரப்புத் தரையிறக்கத்தில் தொடங்கி சமாதான காலத்தில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டு யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் நுழைவது வரையிலான அனைத்து அனுபவங்களையும் ஆவணப்படுத்திய நூல் ஆகியவற்றில் இருந்து எடுத்துள்ளேன்.

இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தரையிறக்கம் எப்படி இருந்தது என்பதை அறிவதோடு, நீங்களும் அத்தரையிறக்கம் நடந்த குடாரப்பில் நிற்பது போன்ற உணர்வினையும் உங்களுக்கு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

 

எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021

 

  • முதலாவதாக 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 86-87

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் முக்கிய பணிகள் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதிலேயே நடவடிக்கையின் வெற்றி தங்கியிருந்தது

நடவடிக்கையின் முதற்கட்டமாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணிகள் அதன் துணைத்தளபதி லெப் கேணல் நேசனின் தலைமையில் முன்னரே குடாரப்புவில் தரையிறக்கப்படும்.

அந்த அணி ஒரு வெற்றிகரமான இரகசிய நகர்வை மேற்கொண்டு ஏ௯ வீதியால் சென்று, மேஜர் கோபித், மேஜர் இலக்கியன் ஆரியோரின் தலைமையிலான இரு அணிகளாகப் பிரிந்து ஆனையிறவை நோக்கியும் யாழ்ப்பாணத்தை நோக்கியும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து எதிரித்தளத்தைப் பிளந்து நிலைகொள்ளும். இந்த ஆரம்பச் செயல்களின் வெற்றிகளிலேயே அடுத்தகட்டங்களின் எதிர்காலம் தங்கிநின்றது. லெப் கேணல் நேசனின் அணிகள் வெற்றிகரமாகத் தம் பணியை முடித்து நிற்க, அடுத்ததாகத் தரையிறக்கப்படும் படைத்தொகுதிகளுடன் தரையிறங்கும் சிறப்புத் தளபதி லெப் கேணல் ராஜசிங்கன் தனது மேஜர் நகுலன், மேஜர் ரோய் ஆகியோரின் அணிகளுடன் நகர்ந்துவந்து இணைப்பை ஏற்படுத்துவர். எல்லாப் படையணிகளையும் இணைத்து கேணல் பால்ராஜ் அவர்கள் கண்டி வீதியிலிருந்து பெருங்கடல் வரையான நீண்ட பகுதியில் எதிரித் தளத்தைப் பிளந்து, உறுதியான, உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து, வியூகத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனையிறவுத் தளத்தின் பிரதான வழங்கல் பாதையைத் துண்டித்து, எதிரியின் போர்ப்பலத்தைக் கவர்ந்து சிதறடித்தபடி நிலைமைகளுக்கேற்ப முன்னகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். தலைவர் அவர்களால் இறுதிக்கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவுத்தளம் வீழ்த்தப்படும்வரை இத்தாவிற் களத்திற் போரிடவேண்டும்.

 

 

 

 

  • இரண்டாவதாக 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 353- 360

நேரம் அப்போது ஏழரையைத் தாண்டியிருந்தது. இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் முதலில் படகேறின. கடற்புலி அணியினர் தமது பணியினை மிகுந்த வேகத்துடன் செய்யத் தொடங்கினர். தர்சாவின் தலைமையிலான எமது படையணி அலை மீது தாவ, ஓங்கியடித்தது அலை.

ஆரம்பத்தில் படகேறிய அணிகளுக்குக் கடலின் மாறுதலான போக்கைத்தவிர வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் நேரம் செல்லச் செல்ல படைத் தரப்புக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்போலும். அந்தப் பகுதியில் கடற்படைப் படகுகள் உலாவத்தொடங்கின. காத்திருந்த கடற்புலிகளின் சண்டைப் படகுகள் அவற்றை மறிப்பதற்காக அத்திசைநோக்கி விரைந்தன.

தாக்குதலணிகளை ஏற்றும் படகுகள் தமது வேகத்தை இன்னும் அதிகரித்தன. அவர்களின் செயலில் தெரிந்த வேகம் எம்மையும் விரைவாகச் செயற்படவைத்தது படகேறிப் பழக்கம் அற்றவர்கள்கூடப் பாய்ந்து உள்ளே ஏறினர். தொடர்ந்து ஏற்றுவதும், கொண்டுசென்று தரையிறக்குவதுமாக இருக்க, கடலில் தாக்குதல் தொடங்கியது.

"இந்தத் தரையிறக்கிற நடவடிக்கையில் தாக்குதலணிக்குச் சின்னக் கீறல் கூட வரக்கூடாது"

என்ற தலைவரின் கண்டிப்பான பணிப்பை நிறைவேற்றுவதற்காகக் கடற்புலி அணியினர் தமது உயிரைக் கொடுக்கவும் தயராகநின்றனர். கடற்படைப் படகு எமது படகுகளுக்கு அருகில் வரமுன்பே, அவற்றுக்குப் போக்குக்காட்டி வேறு திசையில் வலிந்திழுந்துச் சென்று சண்டையிட்டனர் அவர்கள். நெருப்புத் தணல்களாகப் புறப்பட்ட சன்னங்கள் கடலின் இருளைக் கிழித்தன. இரண்டு கடற்படைகளின் மோதலை நேரடியாகக் கண்ட புளுகத்துடன், பயணத்தில் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் இடையிடையே வந்துபோனது. ஒவ்வொரு தடவை கடற்படைப் படகுகள் மோதுகின்றபோதும் தலைவர் எம்மோடு கதைத்த காட்சிகள் மனதில் நிறைந்து, வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதுள் விரித்தது. இதுவரை எந்தவிதப் பாதிப்புமின்றித் தாக்குதல் அணிகள் தரையிறங்கிக் கொண்டிருந்தன.

தர்சாவின் அணியில் கீர்த்தி, தனுசா ஆகியோரின் பிளாட்டூன்கள் கிட்டத்தட்ட இரவு 10.00 மணியளவில் குடாரப்புப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. ஒரு போதுமே கடற்பயணத்தில் பழக்கப்படாத போராளிகள் மயங்கிவிழாத குறையாக கடற்கரை மண்ணில் வந்து இறங்கினர். கடுங்குளிரில் நடுங்கி உப்புக் காற்றைச் சுவாசித்தபடி வந்து கரையேறும்போது கடற் தண்ணீருக்குள்ளே வீழ்ந்து முற்றுமுழுதாக நனைந்துவிட்டிருந்தனர்.

இதற்குள் கரையைநோக்கிக் கடற்படைப் படகுகள் தாக்கத்தொடங்கின. மயக்கத்தோடு இறங்கியவர்கள் கடற்கரை மண்ணிலே வீழ்ந்துபடுத்தனர். நல்ல காலமாக எல்லாச் சன்னங்களுமே தலைக்கு மேலே விரிந்திருந்த தென்னைகளை உரசிப் பறந்தன.

இப்போது வெவ்வேறு பக்கங்களில் கடற்சமர் வலுத்திருந்தது. சமரணிகள் பயணம் செய்த படகுகளில் கடற்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக எம்மைச்சூழ சண்டைப் படகுகள் நின்றன. நேரம் கிட்டத்தட்ட ஒரு மணியை அண்மிக்க கேணல் விதுசாவை ஏற்றிய படகு புறப்பட்டது. ஆர்.பி.யீ. போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் அதில் பயணம் செய்தனர். 

புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே,

"இப்ப படகு எதுக்கு நேரே போகுது?"

"இப்ப வெற்றிலைக்கேணி தாண்டிற்றம்"

"கரையிலிருந்து எவ்வளவு உயரத்தில போய்க்கொண்டிருக்கிறம்?"

"இரண்டு கடல்மைல் உயரத்தில போறம். இப்ப மருதங்கேணிக்கு நேரே போறம். அடுத்தது தாழையடி."

இப்படியே படகினுள் கலகலப்பான உரையாடல் நடந்துகொண்டிருக்க, நடுக்கடலில் கடும் எதிர்ப்பு உண்டானது. தூரத்தே இருந்து தாக்கியபடியே வந்த கடற்படைப் படகு எமது படகை அண்மித்தது. மேலால் சீறிப் பறந்தன சன்னங்கள்.

'சடார்' என்ற ஓசையுடன் கையில் பட்ட காயத்தின் வேகத்தில் படகுக்கு வெளியே தலை தொங்கக் கிடந்தார் கப்டன் தண்ணிலா. அவரை வேகமாக இழுத்தெடுக்கவும்,

"ஒரு எஞ்சின் பழுதாய்ப்போட்டுது. இனி வேகமாய்ப் போக ஏலாது. கெதியாய் அறிவியுங்கோ"

படகோட்டிய போராளி சொன்னார். அந்த சன்னம் இயந்திரத்தின் பணியையும் தடைசெய்திருந்தது.

'இனி முடிஞ்சுதா கதை. நேவிக்காரன் துரத்தி துரத்தி அடிக்கப்போறான்' என நினைத்துக்கொண்டு எமது ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவும், கடற்படைப் படகைநோக்கித் தாக்கியபடி கடற்புலிப் படகு ஒன்று முன்னேறியது. பிறகு இரண்டையுமே காணவில்லைப் போலிருந்தது. சிறிது நேரத்தில் எம்மிலிருந்து அதிக தூரத்தில் இரு படகுகளுக்குமிடையே சண்டை நடந்தது. அதேநேரம் இன்னுமொரு தாக்குதலணிப் படகு வந்து எமது படகைக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்தது. தொடர்ந்து கடற்படையினர் வருவதும், சண்டைப் படகுகள் மறிப்பதுமாக ஒரு விளையாட்டுப்போன்று கடற் பயணம் நடந்துகொண்டிருந்தது.

திடீரெனக் கடற்படைப் படகு ஒன்று அருகில் வருவது போன்று இருந்தது. பின்னர் ஒன்றையும் காணவில்லை. இருள்நேரத்தில் நுரைத்து எழும் அலைகளை அண்டிய பகுதி கடும் இருட்டாகத் தெரிய, அது எமது கண்களுக்குப் படகுபோலத் தெரிந்தது போலும். மனம் நிம்மதி அடைந்தது. இப்போது குடாரப்பை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே பெரும் கடற்சமர் நடந்துகொண்டிருக்க, எமது படகு கரையை நோக்கித் திரும்பியது. இடையில் காற்றுப் படகுகள் நிற்க, அதற்குள் தாவினோம். சில நிமிடங்களிலேயே கரையில் இறங்கியதும் எங்காவது கீழே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஆகக் கூடுதலாக மயக்கமுற்றவர்கள் மண்வெட்டிகளை வைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்தார்கள். கும் கும் என அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் வீழந்த எறிகணைகள் எம்மை அங்கு இருக்கவிடவில்லை.

கரையில் நின்ற கேணல் பால்ராஜ் ஏற்கனவே நகர்ந்த அணியுடன் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தபடி நின்றார், தரையிறங்கிய கேணல் விதுசாவுடன் அப்போதைய நிலைமைபற்றிக் கதைத்துவிட்டு, அவர் இத்தாவில்நோக்கி நகரத்தொடங்க, எமது அணிகள் நாகர்கோயில் பகுதியை நோக்கியதான வெளிப்பாதுகாப்புக்கு நகர்த்தப்பட்டன. அவர்களுடன் ஒரு ஆண் போராளி புவிசார் நிலைகாண் முறைமையுடன் நிலையமைக்கப்படும் இடங்களைப் பதிவுசெய்தபடியே நகர்ந்தார்.

"தரையிறக்க நடவடிக்கையின் போது எங்களுடைய .50 கலிபர்கள் இரண்டையும் மாலதி படையணியுடன் விடும்படி தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். பெருங்கடற் பரப்பருகே மாலதி படையணி நிற்கப் போவதால் அவர்களுக்கு அவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தரையிறங்க முன்பே .50 கலிபர்களை அவர்களோடு விட்டுவிட்டோம்"

என்று அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார் கேணல் துர்க்கா.

கேணல் விதுசா வந்த படகு பழுதடைந்ததால் அதனைக் கட்டி இழுத்துவந்த படகு காயமடைந்த போராளியுடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தாக்குதலணிகள் இன்னும் முழுமையாக வந்துசேராத நிலையில் கடற்சமர் பலமடையத் தொடங்கியிருந்தது. 

தாம் கடும் தாக்குதலுக்கு மத்தியில் வந்துகொண்டிருயப்பதாக கேணல் விதுசாவுக்கு அறிவித்தார் சாந்தகுமாரி. அறிவித்த அந்தக் கணத்திலயே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றத்தொடங்கியது.

"சேரா-01 மெயின், சேரா-01 மெயின்"

அந்த தொடர்புக் கருவிக்குமே தொடர்பு கிடைக்கலை, எல்லோர் மனதிலும் இடி விழுந்தது. சாந்தகுமாரியுடன் ஒரு பிளாட்டுன். ஏற்க முடியுமா?

கடல் நடுவில் கண்ணெதிரே எம் தோழிகளைச் சாவிழுங்கிய துயரத்தில் முழ்கிப்போனோம். எதுவும் செய்யமுடியாத நிலையில் சோகம் இதயத்தைப் பிழிந்து, கணப்பொழுதுக்குள் எல்லாமே முடிந்துவிட்டதான உணர்வு, அவர்களது பணியை யார் செய்வார்? ஒவ்வொருவருக்கும் ஆளை மிஞ்சிய பணிகளல்லவா காத்திருந்தன.

எல்லாவற்றுக்கும் விடையாக சாந்தகுமாரியின் குரலைச் சுமந்துவந்தது காற்று.

"மெயின் சேரா-01, எங்களுக்குப் பிரச்சனை இல்லை. முதல் அடிவேண்டின போட்தான் இப்ப எரியுது"

விடயம் சங்கேத மொழியில் வந்துசேர்ந்தது.

"அது விதுசாக்கா வந்த போட்தான்"

எல்லோர் வாய்களும் உரத்துச் சொல்லிக்கொள்ள எல்லோரின் மனதுக்குள்ளும் கடவுள்கள் வந்துபோயினர்.

சற்று நேரத்தில் சாந்தகுமாரியின் அணி தரையிறங்க குதூகலம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. வேகமாக அவரவர் இடங்களுக்கு அணிகளை அனுப்பிய விதுசா, நாகர்கோயில் பக்க நிலைகளிலிருந்து 100 மீட்டரில் தனது கட்டளைப் பீடத்தை அமைத்தார்.

இதுவரை நேரமும் தரையிறங்கும் அணிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட்ட தனுசாவின் அணி கொம்பனி மேலாளர் தர்சாவுடன் தொண்டைமானாறு நீரேரியை நோக்கி மணல் வீதியூடாக நகரத்தொடங்கியது. நாகர்கோயில் பகுதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் பழுதடைந்த தார் வீதியைக் கடந்து, ஆள் உயரப் புற்களை விலக்கியபடி நீருக்குள் கால் வைத்தனர்.

அடுத்து தரையிறங்கிய கீர்த்தியின் பிளாட்டூன், தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அணிகளின் பாதுபாப்புக்காகக் கொம்பனியின் கட்டளை அதிகாரி லக்சனாவுடன் செம்பியன்பற்றுப் பகுதியில் தயாராக நிற்க, மற்றைய அணிகள் தத்தமது திசைகளைநோக்கி நகரத்தொடங்கின. 

அது இருள் கலையாத நேரம். மக்களின் குடியிருப்புக்கள் எங்கே என்று தெரியாதநிலையில் எமக்கு வாய்ப்பான இடங்களிலே வேகவேகமாக நிலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் சண்டை தொடங்கும் என்பது நிச்சயம். அதனால் அமைதியாகப் பணிகள் அரங்கேறின. 

மெல்லிய குளிர் காற்று மேனியை வருட, மண்வெட்டி மண்ணில் ஆழமாக இறங்கியது. சிறிய வாளியும் கையில் நாலைந்து குவளைகளுமாக சிவப்பு உடையணிந்த ஒரு சிறிய உருவம் திடீரென அங்கே தோன்றியது. எல்லோர் விழிகளும் அங்கேயே நிலைத்தன. பற்றைகளை விலக்கியபடி எம்மைநோக்கி வந்து கொண்டிருந்தது ஓர் அன்னை. எனினும் எங்கள் இராணுவ உணர்வு எச்சரிக்கை செய்தது. அப்பாலே உற்றுப் பார்த்தோம். எதையுமே காணவில்லை. புன்னகையுடன் வந்த அன்னை தேநீரைக் குவளைகளில் ஊற்றி எம்மிடம் நீட்டினார். வீட்டில் விடியற்காலை குளிருக்குள் படிப்பதற்காக எம்மை எழுப்பிவிட்டபின்னர், சுடச் சுடத் தேநீரைத் தயாரித்துத் தரும் எங்கள் அம்மாவின் பரிவும் கனிவும் அவர் பார்வையில் இருந்தது. 

வீட்டிலே 'நன்றாகப் படிக்கவேண்டும்' என்பதற்காக அம்மா தேநீரைத் தந்தார். இந்த அம்மா, நன்றாகச் சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தேநீரைத் தந்திருப்பாரா? எதுவாக இருந்தாலும் ஐதீகக் கதைகளில் வருகின்ற அமுதம்கூட அந்த அன்னையின் தேநீருக்கு ஈடாகாது என்பதுமட்டும் உண்மை. தேநீரை அருந்துகின்றபோது எல்லோர் விழிகளிலும் நீர் திரையிட்டது.

சாந்தகுமாரியின் கொம்பனி மாமுனைக் கடற்கரை தொடக்கம் நீரேரிக்கரைவரை நிலையெடுத்திருந்தது. நேரம் ஏழரையைத் தாண்டியிருக்கும். மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தத்தமது வேலைகளுக்காகப் புறப்பட்டவேளைதான் போராளிகள் அங்கு நிற்பதைப் புரிந்துகொண்டனர். வீதியால் விற்பனைக்குப் பாண் கொண்டுவந்த தந்தையொருவர் திகைத்துப்போனார்.

"எப்...ப பிள்ளையள் வந்தனீங்கள்?"

ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் தடுமாறிக்கொண்டு நின்ற ஐயாவிடம்

"விடியத்தான் ஐயா வந்தனாங்கள். நீங்கள் அங்கால போக ஏலாது. சண்டை தொடங்கப்போகுது. திரும்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போங்கோ"

என்று சொல்ல

'நீங்கள் வந்ததே காணும் பிள்ளைகள்’ என்ற எண்ணப் பார்வையுடன் பெட்டியோடு பாணை இறக்கி எம்மிடம் தந்துவிட்டுப் போய்விட்டார்.

அள்ளி அள்ளி வெளியில் எறிந்தாலும், மீளவும் பள்ளத்தைநோக்கி வழிந்து விழுகின்ற மணலுடன் போட்டி போட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் இருந்தவாறு பகை இருக்கும் திசைநோக்கிச் சுடுகலன்களுக்கு ஏற்றவாறு நிலைகளைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தோம். 

 

 

 

 

 

  • கடைசியாக 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற புத்தகத்தில் இருந்து... கேணல் சூசை அவர்களின் அனுபவப் பகிர்வு

எழுத்துருவாக்கம்: eelaoli.stsstudio.com மார்ச் 27,2019

 

குடாநாட்டுக்கான தரைவழியான பாதை அமைப்பதற்கென எமது தேசியத்தலைவரின் திட்டப் படி ஆயிரக்கணக்கான போராளிகளையும் பல தொன் வெடிபொருட்களையும் கொண்டு செல்வதற்கான பணி எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. எமக்கு உதவியாக கேணல் கிட்டு பீரங்கிப் படையணி முதலானவையும் ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் பங்குபற்றிய அனைவருமே தமது பங்கினை மிகச்சிறப்பாக வழங்கியிருந்தனர்.

கடலில் தற்காப்புச் சண்டையுடன் பக்குவமான தரையிறக்கமும் நடைபெற வேண்டும். தரையிறங்கிய அணிகளுக்கு உரிய வழங்கலும் தடங்கலின்றி நடைபெறவேண்டும்.

மார்ச் 26 ஆம் திகதி மாலை 7 மணியளவில் ஆரம்பித்த இந்த நடவடிக்கை 28 பிற்பகல் 4 மணி வரை தொடர்ந்தது. ஏழு சண்டைப்படகுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன. 9.30 மணியளவில் கடலில் சண்டை ஆரம்பமானதும் அச்சமயம் ஐந்து டோராக்கள் கடலில் நின்றன. அதேவேளை கடலும் சாதகமில்லாத நிலை. கடற்கொந்தளிப்பு கூடுதலாக இருந்தது. இரவு 3 மணியளவில் டோறாக்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் சண்டை அணிகளை முன்னே நகர்த்தி தரையிறக்கலைத் தாமதிக்கவேண்டியிருந்தது.

எமது தரப்பில் சண்டை ஆரம்பித்த பின்னர் 26 ஆம் திகதி இரு சண்டைப் படகுகளும் 27 ஆம் திகதி ஒரு படகும் சேதமாகின. 28 ஆம் திகதி 4 மணிக்கு இந்த நடவடிக்கை ஓயும் வரைக்கும் இயற்கைக் கடனைக்கூட கடலிலே மேற்கொண்டபடிதான் மிகுதி நான்கு சண்டைப் படகுகளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. தூக்கமோ சாப்பாடோ எதுவுமே இல்லாமல் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

26 ஆம் திகதி குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றிய எமது படைகள் தரையிறக்கப்பட்டோருக்கான விநியோகத்துடன் பகல் முழுவதுமாக சண்டையைக் கடலில் தொடர்ந்தன. வானத்தில் கிபிர்… கடலில் டோறாக்கள்…. சுமார் நூற்றைம்பது மீற்றருக்கொன்றாக தரையில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள்…… இவற்றுடன் 5 யுத்த டாங்கிகள்… இவையனைத்தினதும் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் தான் இவ்வளவற்றையும் செய்யவேண்டியிருந்தது.

சண்டை என்றால் என்ன? ஒன்றுக்கு ஒன்றுதானே… ஆனால் எமது கையில் உள்ள பலத்துடன் நாம் வெற்றிகரமாக செய்துமுடித்தோம்.

ஒரு கட்டத்தில் தளபதி கேணல் விதுசாவின் படகின் கொமாண்டர் விசும்பனும் படகோட்டி றொபின்சனும் வீரச்சாவெய்தினர். கடலில் படகு தத்தளித்துக்கொண்டிருந்தது. தாக்குதலுக்கு மத்தியில் அங்கு விரைந்த மேஜர் ஹில்மனின் படகு, விதுசாவின் படகுக்குக் கயிறு எறிந்து, அதனையும் தன்னுடன் பிணைத்துக்கொண்டு வந்தது.

இதே ஹில்மன் 27 ஆம் திகதி பகல் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். மிகத்திறமையாகச் செயற்பட்ட எழிற்கண்ணன் படுகாயமடைந்தார்.

இந்தச் சண்டையில் புலனாய்வுத்துறையினரின் தாக்குதலணிகள், சோதியா படையணி, கடற்புலிகளின் மகளிர் படையணி உட்பட அனைத்துப் படையணிகளும் தரைப் பாதைத் திறப்புக்காக மிகத்துணிச்சலான சண்டையை மேற்கொண்டனர். சிறிலங்கா இராணுவத்தின் மிகச்சிறந்த படைப்பிரிவு என்று கருதப்படும் 53ஆம் பிரிகேட் மற்றும் 54 ஆவது பிரிகேட்டுகளே எமது தாக்குதலுக்குள்ளாகின. காமினி கெட்டியாராச்சி தலைமையிலான இந்தப் படையணிகள் எமது போராளிகளின் தாக்குலுக்கு முகங்கொடுக்கமுடியாது டாங்கிகளுடன் ஓட்டமெடுத்தன.

மாமுனைப்பகுதிகளில் இருந்த படையினரில் ஏறக்குறைய அனைவருமே கொல்லப்பட்டனர். அங்கிருந்த வெட்டவெளியான பாதையினால் ஓடிவந்த எமது படையணிகளைக் கண்ட தாழையடி முகாம் படையினர் எமது அணிகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் மருதங்கேணிப் பாலத்தினூடாக டாங்கிகளுடன் ஓடித்தப்பினர்.

உடுத்துறையிலிருந்து சென்ற எமது படையணிகளுடன் தரையிறக்கப் பட்ட படையணிகள் தாழையடி முகாமில் கைகுலுக்கிக்கொண்டன. தாழையடி முகாம் வீழ்ச்சியுடன் 29ஆம் திகதி பிற்பகல் 4மணிக்கு இச்சமர் முடிவுக்கு வந்தது“ என்றார் சூசை.

இவ்வாறான நடவடிக்கை ஒன்று நடைபெறவுள்ளதாக இராணுவத்தரப்பு ஊகித்ததா?

என்று அவரிடம் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே, “நாம் கடலில் ஒரு சண்டை செய்யப்போகிறோம் என்றே ஆரம்பித்தில் இராணுவத்தரப்பு கருதியது. முதல் தரையிறக்கம், பின்னர் தான் எமது திட்டம் – நோக்கம் புரிந்தது” என்றார், எதிரியால் ஊகிக்கமுடியத போர்த்திட்டங்களை வகுப்பது தானே எமது தேசியத்தலைவரின் தனித்துவம்!

தொடர்ந்து திரு – சூசை அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில்,

இத்தரையிறக்கல் நடவடிக்கைக்கு முன்னர் நடைபெற்ற ஏற்பாடுகள் பற்றிக்குறிப்பிட முடியுமா?

எனக் கேட்டபோது, “எமது தேசியத் தலைவர் இத்திட்டத்தினை விளக்குகையில் வரலாற்றில் நெப்போலியன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டியபோது, எமது பெண்போராளிகள் கடல்வழிப்பாதை வழியே செல்லும் நாம் நிச்சயம் தரைவழிப்பாதை வழியே தான் வந்து சேருவோம் என அவருக்கு உறுதியளித்தனர்” என்றார் சூசை.

அத்துடன், ”அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நான் படித்துள்ளேன். தொண்டமானாறு, சுண்டிக்குளம், வட்டுவாகல், செம்பியன்பற்றுப் பகுதிகளில் சோழர் காலத்தில் தமிழர் படைகள் தரையிறக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் ஒன்றான செம்பியன்பற்றுப் பகுதியில் மீண்டும் தமிழர் படைகள் தமது எழுச்சியைக் காட்டியுள்ளன ” என்று கூறினார்.

தரை – கடல்பகுதிகளில் நிகழ்ந்த இச்சாதனைக்கு, வான்வழியே வந்த எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டீர்கள்?

என்று வினவியபோது, ”எமது விமான எதிர்ப்பு அணியினர் இதில் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அனைவரதும் ஒன்றிணைந்த முயற்சியே இந்த வெற்றி.” என்று கூறினார் கேணல் சூசை.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

 4 நாட்கள்

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: முதலாம் நாள்

மூலம்: vayavan.com, மார்ச் 19, 2019

 

படை அமைத்தலில், படை நடத்தலில், படை இணைத்தலில் அது ஓர் புதிய சாதனை.

பெருங்கடலையும் பெருந்தளங்களையும் தாண்டித் தரையிறங்கி பகை வென்ற சாகச்சமர்.
 
4 ஆவது நாளில் பிரிகேடியர் தீபன் அவர்களால் தரைவழி திறக்கப்பட்டாலும்,

முதல் மூன்று நாட்களும் வழங்கலுக்கான தரைவழிப்பாதை அறவே இல்லாத மிகப் பெரும் சமர்.
 
பாரிய போராயுதங்களினால் விழுப்புண் அடைந்து உயிருக்குப் போராடும் வீரர்களை உடனடிச் அறுவைப் பண்டுவத்திற்கு அனுப்ப வேண்டியவர்களையே அனுப்ப முடியாத வெறிகொள் செங்களம்.

சிங்களம் திகைத்திடக் களமாடும் வீரர்களுக்கு மிக அருகே நின்று அன்னையாய் தந்தையாய் மாறி பண்டுவம் அளித்தனர், களமருத்துவர்கள்.

காயமடைந்தவர்களில் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டவர்களுக்கு தாங்கள் கூல் பொக்ஸில் கொண்டு சென்ற குருதியை ஏற்றினர்.
 
“படகு கவிழ்ந்தாலும் கூல் பொக்ஸில் உள்ள குருதியைக் கைவிட்டுவிட வேண்டாம்” எனக் கூறி சுண்டிக்குளத்தில் வைத்து திருமிகு இ. ரேகா அவர்கள் கையில் தந்துவிட்ட குருதி உயிர் காக்கத் தொடங்கி இருந்தது.

ஆண் போராளி ஒருவர் நெஞ்சிலே ஏற்பட்ட காயத்தால் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

நுரையீரலுக்கும் நெஞ்சறைச் சுவருக்கும் இடையே உள்ள புடைக்குழியினுள் குருதி வெளியேறியதால் நுரையீரல்(A space between Lung and chest cavity) விரிவடையமுடியாமல் இருந்தது. ஆதலால் மூச்சு எடுக்கக் கடினப்ப்பட்டார்.

மின்னலென விரைந்து செயற்பட்டு Intercostal Drainage Tube(ICD tubu)போட்டு அவரைக் காப்பாற்றினர் தமிழர்சேனையின் சிறப்பு மருத்துவ அணியினர்.

நீரின் வெளியே மீனாகத் துடித்தவர் இப்போது ஆழமான மூச்சுவிட்டு அமைதி அடைந்தார். 

தனக்கு அடுத்த நிலையிலிருந்த அணித்தலைவரிடம் செய்யவேண்டிய பணிகளை ஒப்படைத்தார்.

“அடுத்த அடுத்த கிழமைகளில் நாம் அடையப்போகும் வெற்றிக்கான வேதனையை வெற்றி கண்டு உள்ளோம்” என உச்சத்துப் பல்லி போல மருத்துவர் வித்தகி அச்சம் இன்றிச் சொன்னாள்.

பாரிய கட்டடங்கள் அல்லது முன்கூட்டியே அமைக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்கழிகள் அங்கு இருக்கவில்லை.

ஆதலால், திறந்த பதுங்ககழிகளிலேயே காவு படுக்கையுடன்(With Stretcher) தூக்கி வைத்தோம்.

அஞ்சிஞ்சி மோட்டார்களிலிருந்துப் விண்ணில் ஏவப்பட்ட எதிரியின் பரவெளிச்சங்கள் இரவைப் பகலாக மாற்றிக்கொண்டிருந்தது.

அந்தப் பரவெளிச்சத்திலேயே உதவு மருத்துவர் வண்ணன் லெப்.கேணல் சாந்தகுமாரியிற்கு ஒவ்வொரு மணித்தியாலமும் தவறாமல் குருதி அமுக்கத்தை சோதித்துக் கொண்டிருந்தார்.

சின்னஞ் சிறிய படகுகள் கொண்டு பாரிய போர்த்தளபாடங்களுடன் அறுவைப் பண்டுவக் கூடத்தையே எம்முடன் கடல்வழி இறக்கிவிட்ட கடல்புலிகளின் வலுவை எப்படி உரைப்பது?

 

 

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: முதலாம் நாள்

மூலம்: vayavan.com, ஏப்ரல் 25, 2020

 

குடாரப்பு தரையிறக்கத்தில் போர்ப்படகிலிருந்து நாங்கள் தரையிறங்க முன்னரே பல முனைகளில் இருந்தும் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சண்டைப்படகில் அணியத்தில் நாங்கள் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் இருந்தோம். சுருங்கக்கூறின் ஒரு சிறு அறுவைப் பண்டுவக் கூடத்தையும் கடல்வேங்கைகள் எமக்காய் எம்முடன் சுமந்து வந்தனர்.
 
கடலில் கடற்படை டோறாக்கள் தாக்கத் தொடங்கின. கரும்புலிப்படகுகள் எமைக்காத்த வண்ணம் எங்கள் அருகே வந்து கொண்டிருந்தபடியால் டோறாக்கள் எங்கள் அருகில் வந்து தாக்கத் தயங்கின.

எங்களுக்கு பின்னால் இயந்திர அறையில் எங்கள் படகையும் கதுவீ கருவியையும் இயக்கிய கடற்புலி போராளிக்கு வேட்டுக்காயம் ஏற்பட்டது.
 
சுண்டிக்குளம் கரை மணலில் எம் வீரத்தளபதி சூசை அவர்கள் மற்றும் மருத்துவப் பொறுப்பாளர் திரு.இரேகா ஆகியோரின் ஆசியுடன் கடலில் தொடங்கிய எங்கள் கடற்பயணமானது ஆழமான கரையினை அண்டியபடியே தொடர்ந்தது.

அந்த நாள் கடல்சீற்றம் அதிகமாய் இருந்த நாள் அதைவிட சிறீலங்கா கடற்படையின் தாக்குதல் காரணமாக படகுகள் கடலில் மூழ்க நேரிட்டால் நீச்சலடித்து கரையை நோக்கிச் செல்வதற்கு ஏற்பாடகவே ஆழ்கடலை அண்டாமல் கரையை அண்டிச் செல்லுங்கள் என கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கடலோடிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
 
பொதுவாக வானூர்திப்பயணத்தில் நாடுகளின் பெயர்கள், முக்கிய இடங்களின் பெயர்கள்
சொல்வதைப் போல ஒவ்வொரு ஊரின் கடற்கரைகளை அண்டிச் செல்லும் போதும் அவ்வூர்களின் பெயர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக மேந்தலைகளால் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, ஆழியான்,மருதங்கேணி,தாளையடி, செம்பியன்பற்று கடற்கரைகளை வெற்றிகரமாகத் தாண்டி மாமுனையை அடைந்தது.

மாமுனைக் கிராமத்தை அடைந்தவுடன் மாமுனைச் சந்தியில் ஏலவே தாக்கியழிக்கப்பட்ட மாமுனை மினிமுகாமிலிருந்து தப்பிய தரைப்படையைச் சேர்ந்த ஒருவன் தரையிலிருந்து தாக்கியதால் இந்த கடல்வேங்கை விழுப்புண் அடைந்தான்.
 
மின்னலென விரைந்து முதலாவது பண்டுவத்தை களமருத்துவர் வண்ணன் செய்தார்.

படகிலிருந்தபடியே எமைச் சுதாகரித்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் பயணப்பட்டு குடாரப்பில் தரையிறங்கினோம்.

ஆம், எமது மகத்தான மருத்துவ பணி படகிலேயே ஆரம்பித்தது…

நிற்க!

குடாரப்பு தரையிறக்கத் தாக்குதலிலும் அதைத் தொடர்ந்த வந்த நாட்களில் வீரச்சாவு அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் சமர்பல வென்ற சமர்களநாயகனுக்கும் வீரவணக்கம்.🙏

 

 

 

 

கோழி அடிச்சு குழம்பு வைச்சு… குடாரப்புத் தரையிறக்கத்தின் வலி ஒன்று


மூலம்: https://www.uyirpu.com/?p=9032
எழுதியவர்: இ.கவிமகன்

ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது. அந்த சம்பவம் உண்மையில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் எப்படியெல்லாம் தங்களின் கூரிய பங்கை தந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை இலகுவாக சொல்லிச் சென்றது.

'குடாரப்புத் தரையிறக்கம்' சொல்ல முடியாத வரலாற்று பக்கத்தை கொண்டது. இதில் பல ஆயிரம் சம்பவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்று இன்றைய இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அதிர்ப்த்தியை தரலாம். அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் பற்றி பதிவிடப்படவில்லை என்று கோவிக்கலாம். அல்லது என் மீது இந்த சம்பவத்தை பதிவதால் எதிர்ப்பு எழலாம். ஆனால் இது மதம் தொடர்பான பதிவல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதியப்பட வேண்டி முக்கிய சம்பவம்.

எம் விடுதலைப் போராட்டம் தனக்குள் சாதி மத பேதமின்றியே தன்னகத்தே அனைவரையும் ஒரு கோட்டில் இணைத்து வைத்திருந்தது. மதக் கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எப்போதும் தடை விதித்ததில்லை. அது பல விமர்சனங்களை உருவாக்கி இருந்தாலும் தடை இல்லை என்பதுவே நியம். அதற்கு மடு மாதா ஆலயம், வற்றாப்பளை கண்ணகி ஆலயம் போன்றவை போல பல நூறு வணக்க தலங்களின் பெருவிழாக்களை அவர்களே பாதுகாப்பு வழங்கி மக்கள் செய்து வந்ததை குறிப்பிடலாம்.

இந்த நிலையில், அனைத்து மத குருக்களும் விடுதலைப்புலிகளால் மதிக்கப்பட்டே வந்தார்கள். அது இந்து கிறிஸ்த்தவம் என்ற பாகுபாடில்லை.

இந்த நிலையில் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றான "கொல்லாமை உண்ணாமை" என்ற பெரும் விடயம் இந்து மத குருக்கள் மாமிச உணவுகளை உண்ணாமையை குறித்து பேசுகிறது. கொல்வதும் அதை உண்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. உண்மையில் தீவிர இந்து மதம் சார்பானவர்கள் மாமிச உணவுகளின் அருகே செல்லக்கூட மாட்டார்கள். அவ்வாறான ஒரு இந்து மத குரு பற்றியே இந்த பத்தி கூற விளைகிறது.

குடாரப்புச் சண்டை தொடங்கிய முதல் நாள், அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். அவர்களில் இந்து மத குருவும் ஒருவர் இருந்தார். அவர் இயக்கப் போராளிகளைக் கண்டதும் பெரும் மகிழ்வடைகிறார். கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உணர்த்துகிறார்.

“தம்பி உங்களக் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டம். இன்றுதான் மனசு நிறைஞ்சிருக்கு.

என்று மகிழ்வின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு புலிகளைக் கண்டது பெரு மகிழ்வைத் தந்தது. கடல், இத்தாவில், நாகர்கோவில், மருதங்கேணி என நான்கு புறமும் படயினரின் பயங்கர தாக்குதல்கள் அந்த பகுதி எங்கும் நடக்கின்றது.

மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். போராளிகள் தம் இலக்குகளை அடையும் ஓர்மத்தோடு சண்டையிடுகிறார்கள். அதைப் போலவே சிங்கள படைத்துறையும் தனது படை வலுவை பிரயோகிக்கிறது. இரு தரப்பும் அதியுச்ச பலத்தை பிரயோகித்து கொண்டிருந்தனர். அப்படியான சண்டைக்களத்தில் காயமடையும் போராளிகளுக்கான மருத்துவ அணியையே அவர் சந்தித்திருந்தார். அவர்களும் அவரை கண்ட மகிழ்வில் இருக்கிறார்கள்.

"அப்பா நீங்கள் கவனமா இருங்கோ. இது சண்டைக்களம் இங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியாதப்பா. கவனமா இருங்கோ பங்கர்ல…"

மருத்துவப் போராளிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புகிறார்கள்.

"சரியப்பு, சாப்பாடுகள் என்ன மாதிரி? சாப்பிட்டீங்களா?" அவர் உணவை பற்றி வினவிய போது, "ஓம் அப்பா, சாப்பாடு இருக்கு. பட்ஜட் கொண்டு வந்தனாங்கள். சாப்பாட்ட பற்றி நினைக்க முடியாதப்பா. இந்தச் சண்டை வெற்றி பெறும் வரைக்கும் எங்களால சாப்பிட முடியாது அப்பா. மருதங்கேணி பக்கமாக உடைச்சு பாதை எடுக்கும் வரை இது தான் அப்பா சாப்பாடு."

என்று மருத்துவ போராளி ஒருவர் தனது உணவுத் தொகுதிப் பையை காட்டுகிறார். அதற்குள் சில உலருணவுகள், பொரித்த இறைச்சித் துண்டு போன்றவை இருக்கின்றன. அதைக் கேட்ட உடனே அவருக்கு கவலையாக இருந்தது.

"சரியப்பு நான் பிறகு வாறன்."

என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.

அங்கே சண்டையணிகள் உலருணவை மட்டுமே நம்பி சண்டையை செய்தனர். அவர்களுக்கு உணவு வருவதென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதனால் உணவைப் பற்றி அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் எண்ணங்கள் முழுவதும் சண்டை பற்றியே இருந்தது.

ஆனால், காயப்பட்டு வரும் போராளிகளுக்கு உணவுத் தேவை எழுந்தது. உலருணவை சாதாரணமான போராளிகள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை ஆனால் காயப்பட்ட போராளிகளுக்கு இருக்கவில்லை. அவர்களால் உலருணவை உண்ண முடியாது. அதனால் உடனடி சமைத்த உணவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.

இந்த நிலையில் அங்கே தரித்து நின்ற மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர் தணிகை, வித்தகி மற்றும் மருத்துவ போராளிகளான வண்ணன் மற்றும் நிர்த்தனா ஆகியோர் களைப்படைந்து காணப்படுகிறார்கள். வரும் காயக்காரரை பாதுகாக்க அவர்கள் அயராது உழைக்க வேண்டி இருந்தது.

இத்தாவில் பக்க களமுனைக்கு கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் படைய மருத்துவர் சத்தியா மற்றும் மருத்துவப் போராளி திருவருள், சுதர்சன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களும் இவர்களைப் போலவே சண்டையை எதிர் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு தொடர்ந்த தாக்குதல்கள் தூக்கமற்ற இரவுகளாகவே இருந்தன. அதோடு உணவுகளும் இல்லாமல் இருந்தது. காயப்பட்ட போராளிகளும் மருத்துவர்களும் சோர்வடைந்து இருந்த போதும், அவர்களுக்கான உணவு வளங்கல்கள் கிடைப்பது பெரும் சிக்கலாக இருந்தது.

சண்டை தொடங்கி 2 ஆவது நாள் மேலே குறிப்பிட்ட இந்து மதக் குரு அங்கே வருகிறார். போராளிகள் படும் கஸ்டங்களை அவரால் தாங்க முடியாது இருந்தது. எதுவும் பேசாது திரும்பி சென்றவர். தன் வீட்டில் கூட்டுக்குள் நின்ற இரண்டு சேவல்களை பிடித்து கொண்டு ஓடி வருகிறார்.

“தம்பி நான் கொலை செய்ய மாட்டன் எனக்கு உரிக்கவும் தெரியாது. இதை உரிச்சு தர முடியுமாப்பு.? நான் சமைச்சு கொண்டு வாறன்."

மருத்துவர்களால் அவரின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே காயப்பட்டிருந்த 6 போராளிகளுக்கு சிகிச்சை செய்திருந்தார்கள். கைகள் , உடை என்று அனைத்தும் அந்த போராளிகளின் குருதியில் நனைந்தருந்தன. அதை விட தொடர்ந்தும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பல போராளிகளை மீள்உயிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டியும் இருந்தது. அதனால் அவர்கள் மறுக்கிறார்கள்.

 “இல்லை அப்பா நிறைய போராளிகளுக்கு சிகிச்சை குடுக்க வேணும். நாங்கள் இதில மினக்கட இப்ப நேரம் இல்லை அப்பா. பரவாயில்ல நீங்கள் யோசிக்க வேணாம் அப்பா நாங்கள் உலருணவு சாப்பிட்டனாங்கள் சாப்பாட்டை பற்றி கவலையில்லை அப்பா."

அவர்கள் தம் கடமையில் மூழ்கிப் போய்விட இந்து மத குருவால் எதையும் செய்ய முடியவில்லை. கொல்வதும் உண்பதும் தவறான செயல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்ந்து வரும் அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளான போராளிகள் பசியோடு இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. அவரின் மனப் போராட்டம் இறுதியாக அடிப்படை இந்துதத்துவ கோட்பாட்டை உடைத்தெறிகிறது. கோழியை கொன்று உரிக்கிறார். சோறும் சுவையான கோழிக் கறியும் சமைக்கிறார். உயிரை கொல்லுதல் பாவம் என்று வாழ்ந்த அந்த இந்துமதக் குரு, போராளிகளுக்காக இரண்டு கோழிகளை கொலை செய்தும், அதை தன் கைகளால் சமைத்தும் பெரும் வெற்றி ஒன்றுக்காக தம்மை ஆகுதி ஆக்கத் தயாராக இருந்த அந்த போராளிகளின் பசியை போக்கினார்.

எங்கள் மக்களுக்காக அவர்களின் வாழ்வுக்காக போராளிகள் எதையும் செய்ய தாயாரானவர்கள் எதையும் தியாகிக்க துணிந்தவர்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறானவர்கள் அல்ல, தமது குடும்பம், தனிநபர் விருப்பங்கள் என்றும் மதம், சாதியம் போன்ற கொள்கைகள் என்றும் பலவாறான கட்டுப்பாட்டு விழுமியங்களை பின்பற்றியே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப் போராளிகளுக்கும் எம் போராட்டத்துக்குமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் எம் மக்கள் என அந்த இந்துக் குரு சொல்லி நின்றார்.

இது நடந்து 3 ஆவது நாள் போராளிகளுக்கான உணவு வழங்கள் மருதங்கேணி பகுதியில் இருந்து ஒழுங்காக கிடைக்கத் தொடங்கிய போது இந்து மதக் குரு கொஞ்சம் ஆறுதலடையத் தொடங்கினார். ஆனால் அவர் அதன் பிறகு கூட காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் உதவியை மருத்துவ அணிக்கு செய்தார். உணவூட்டி தண்ணீர் பருக்கி அவர்களுக்கு உதவினார். வரு சண்டைக் கள முனையில் போராளிகளுக்கு உதவ எந்த பயமும் இன்றி

ஆனால் அன்று பின்னேரம் காலில் பாரிய காயமடைந்திருந்த சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணிப் போராளி வைத்தியை (வைத்தி அண்ணை) அவசர சிகிச்சைக்காக தமது மருத்துவ பதுங்ககழி நோக்கி தூக்கிக் கொண்டு வந்தார்கள் மருத்துவர்களான வித்தகி மற்றும் தணிகை ஆகியோரை தாண்டி திடீர் என்று கிபிர் தாக்குதல் நடக்கிறது. நடந்த கிபிர் தாக்குதலில் தப்பிக்க நிலத்தில் நிலை எடுக்கிறார்கள். பல வான்குண்டுகள் அந்த பிரதேசம் எங்கும் கிபிரால் விதைக்கப்பட்ட போது, இந்துக் குருவின் வீட்டுப்பக்கத்தில் இருந்தும் பெரும் புகைமண்டலம் எழுந்தது. அப்போது அவர்களின் மனதில் அந்த மதகுரு வந்து போனார்.

அவரின் வீட்டை நோக்கி ஓடிய போராளிகள் காலை வரை தமக்கு உணவளித்து தம் தந்தையாக நின்று தம்மை பராமரித்த அந்த மதக்குரு உடல் உயிரற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு மனமுடைந்தார்கள். அவரை தூக்கினார்கள் உயிரற்ற வெற்றுடலை துப்பரவு செய்தார்கள். அப்போது அந்த பெரியவரின் மனைவி ஓடி வருகிறார். கதறி அழுதார். போராளிகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து குடுக்க வேணும் என்றுதான் அவர் அவர்களுடன் செல்லாது இங்கே தங்கி இருந்ததை எண்ணி மனம் வருந்தினார்கள் போராளிகள்.

ஆனாலும் தளரவில்லை. குடாரப்பில் வீரச்சாவடைந்த போராளிகளோடு இன்றும் அவரை நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்…

 

 

 

 

============================================================

 

 

 

 

இனி, அந்த தரையிறக்கம் நடந்த நாளில் இருந்து தரையிறங்கிய அணிகளுக்கு தரைவழி பாதை திறக்கும் வரை அங்கு என்ன நடந்தது என்பதை 'படைய மருத்துவர் தணிகை' தெரிவித்ததை வாசிப்போம். இவையாவும் 2021 ஆம் ஆண்டு அம்மருத்துவரால் எழுதப்பட்டவையாகும். ஆகையால் அனைத்தும் போருக்குப் பின்னான சூழ்நிலையில் எழுதப்பட்டவை என்பதை மனதில் நிறுத்துக.

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை

மூலம்: vayavan.com, மார்ச் 28, 2021

 

இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளை மருத்துவப் போராளிகளைப் போலவே பெரும்பாலும் எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள்.

களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள் (Field compressor) வைத்திருப்பார்கள்.

ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட வேண்டும் எந்தெந்த காயங்களை எப்படியெல்லாம் நகர்த்த வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும்.

எங்களிடம் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்ப்பட்ட போது அந்தக் கட்டுக்களை அவிழ்த்து மணலும் சேறும் சகதியுமாய் இருந்த காயங்களை சேலைன் மூலம் கழுவித் துப்பரவு செய்தோம்.

இப்போது காயங்களில் கிருமித் தொற்றுக்கள் (Infection) ஏற்படாது தடுப்பதற்காக நோயுயிர் முறிகள் (Antibiotics) போடப்பட வேண்டும்.

நோயுயிர்முறிகளில் பொதுவாக பென்சிலின் (Penicillin) வகை மருந்துகள் சிறந்தவை.

இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து இன்று வரை பக்ரீரியாக்களுடன் அல்லது நுண்ணுயிர்களுடன் போரிட்டு மாந்தரின் உயிர்காக்கும் அந்த மருந்துகளை ஊசி மூலம் நாளத்தினூடக (Intravenous) ஏற்றவேண்டும்.

இரவு முழுவதும் அதிகரித்த தாக்குதல் காரணமாகவும் மின்சூழ் வெளிச்சம் கூட பாவிக்க முடியாத காரணத்தால் பென்சிலின் போடுவதற்கான சோதனை ஊசி (Penicillin sensitive test) போடுவது சாத்தியமற்று இருந்ததது.

எதிரியின் சண்டை உலங்கு வானூர்தி வட்டமிட்டு வட்டமிட்டு தாக்கிய வண்ணம் இருக்க அநேகமான பெரிய காயக்காரருக்கு அம்பிசிலின் ஊசி மருந்துகளையே (Ampicillin Injection) ஏறினோம்.

இன்று காலையும் காயமடைந்தவர்களை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு அனுப்ப முடியாதிருப்பதை புரிந்திருந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் கட்டளையாளர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம்.

யாழ் மாவட்ட முன்னாள் கட்டளையாளர் திருமிகு செல்வராசா அவர்கள் தளமிட்டிருந்ததால் அவரின் மூலம் கடலில் எங்கள் படகுகள் வரக்கூடியதாக உள்ளதா என்பதை அறிந்து கொண்டோம்.

பெனிசிலினிற்கான சோதனை ஊசிகளை பெண் மருத்துவர் வித்தகி ஏற்றி பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

செறிவான குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் ஒரு கொலைவலயத்தில் காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஒரு எறிகணையிலேயே நிறைய பேரை இழக்க வேண்டிவரும் என்ற போரியல் பட்டறிவு எம்மிடம் இருந்தது.

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரின் போது தமிழீழத்தின் பரவலறி பாடகர் சிட்டு விழுப்புண் அடைந்து பண்டுவம் அளிக்கப்பட்ட பின்னர் தற்காலிக மருத்துவநிலையின் மீது வீழ்ந்த குண்டினால் மீளவும் பாரிய காயமடைந்தே வீரச்சாவு அடைந்தார்.

அந்தச் சம்பவம் போல இங்கேயும் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம்.

வெவ்வேறு மரங்களின் கீழும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள பதுங்ககழிகளில் பாதுகாத்தோம். வெம்மை கூடிய அந்த மணல் பிரதேசத்தில் பென்னம்பெரிய மரம் ஒன்று கூட இருக்கவில்லை. பரட்டையான மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் இருந்தன.

சிறுபராயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போனால் கடற்கரைக்கும் செல்வோம். எழில் மிகு மணல் திட்டிகள் தாண்டிச் செல்வது கனி பறிக்கஇ ஆம் நாவல் கனி பறித்துச் சுவைத்து உண்பதற்கு!

இன்றும் அதே கடற்கரையின் சற்றுத் தெற்கே வெற்றிக்கனி பறிப்பதற்காய் தரையிறங்கி நிற்கின்றோம் என்பதை மனம் எண்ணிக் கொண்டது!

அந்த அருங்கனிக்காக நண்பர்களின் இன்னுயிர்களையும் அங்கங்களையும் கொடுக்கவேண்டி இருக்கின்றதே என நினைத்த போது நெஞ்சு கனத்தது.

குண்டுகளால் நிலம் அதிர்ந்து கொண்டிருந்தாலும்இ நம்பிக்கைகளுடன் காலை விடிந்தது.

தங்கை அருள்நங்கை ஈரத்துணியால் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளின் முகங்களை தாயன்புடன் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“உண்ண எதாவது கொடுக்கலாமா?”
என்று அருள்நங்கை கேட்டாள்.

ஆம் எனச் சொல்லிவிட்டு சாப்பிடு வதற்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார் பொறுப்பு வைத்தியர்.

அப்போதுதான் எங்களின் உலர் உணவுப் பொதிகளும் தீர்ந்துவிட்டமை அவளிற்கு நினைவில் வந்தது.

மூன்று நாட்களுக்குத் தேவையான உலர் உணவு தந்து அனுப்பப்படிருந்தாலும் சண்டையில் நின்ற போராளிகளும் தங்களது ஆயுதங்களையே அதிகம் கவனம் கொண்டிருந்ததால்இ மீதமிருந்த கொஞ்ச உணவுகளையும் தவறவிட்டுவிட்டார்கள்.

நாங்களும் உயிர் காக்கும் உன்னத பணியினை மிகச்சரியாக செய்ய வேண்டும் எனும் உந்துதலே மேலிட்டு நின்றதால் மருந்துப் பொருட்களையும் மருத்துவ தளபாடங்களையும் காவி வந்தோமே ஒழிய உலர் உணவுகளை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

இப்போது நோயாளருக்கு உணவு இல்லையே என்ற போது அனைத்து களமருத்துவ போராளிகளின் முகமும் வாடிவிட்டது.

 

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை

மூலம்: vayavan.com, ஏப்ரல் 3, 2021

 

குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது.
 
அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைப்புலிகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் முதன்மை பங்கினை வகித்தார்.

பல்வேறு படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு வழங்கல் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர்.
 
வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் சிறீலங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள்.

நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதிநவீன இசுரேல் தயாரிப்பான “மிதக்கும் கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள் வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன.

காங்கேயன்துறை, திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்பர் டோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன.

அத்தனை கடல் படைவகுப்புகளையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான கலத்தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது.

தாழையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் தகரி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி.ஜி-9(ஸ்PG – 9) உட்பட சில கனவகை ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான இன்றியமையா பொருள்களுடன் அந்த கலத்தொகுதி வந்து கொண்டிருந்தது.

வளர்ச்சியடைந்த  நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் படைவகுப்பினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது.
 
'கடற்சூரியன்' என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் கலத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார்.

படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா நிலைக்கு இட்டுச் சென்றது.

கலத்தொகுதிக் கட்டளையாளரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

அங்கேயே பராமரிக்கப்பட்ட எழிற்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவர் தூயவன் அவர்களின் கடமையிலிருந்த
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த வீரன் ஒரு ஊர்தி நேர்ச்சியில் சிக்கி 2006 ஆண்டு புரட்டாதி மாதம் சாவடைந்தார்.

 

 

 

 

============================================================

 

 

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: மூன்றாம் நாள் 

இவர் எழுதியது கிடைக்கப்பெறவில்லை!

 

 

 

 

============================================================

 

 

 

 

 

குடாரப்புத் தரையிறக்கம்: நான்காம் நாள் - வழி திறக்கப்பட்டது…

மூலம்: vayavan.com, மார்ச் 31, 2021

 

குடாரப்பில் கடல்வழி தரையிறங்கிய அணிகளுக்கான தரைப்பாதை திறக்கப்பட்டமை ஆனையிறவு முற்றுகை போருக்கான முதல் கட்ட வெற்றி ஆகும்.

இந்த தரைவழிப்பாதை திறக்கப்பட்ட அந்த கணங்களின் உற்சாகத்தையும் மகிழ்வினையும் சொற்களில் வடிக்க முடியாது.
 
களத்திலும் தளத்திலும் நின்ற போராளிகளுக்கும் களநிலவரங்களை நன்கு அறிந்த பொதுமக்களுக்கும் கால்கள் தரையில் முட்டவில்லை.

வன்னிப் பெருநிலப்பரப்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே அமைந்துள்ள எல்லை ஊரில் தொடங்கி கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆழியவளை, உடுத்துறை, தாழையடி ஊடாக அந்த தரைப்பாதையை ஏற்படுத்தியவர் பிரிகேடியர் தீபன் ஆவார்.

பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையை ஏற்று சமராடிய படையணிகளாவன,

  1. புலனாய்வுத்துறை  தாக்குதலணி
  2. கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணி
  3. ஜெயந்தன் படையணி
  4. ராதா வான்காப்புப் படையணி

ஆகிய படையணிகளுடன் வேறு சில அணிகளும் களமாடி அந்தச் சண்டையை வென்றனர்.

நீண்ட கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த சிறீலங்காப் படைத்துறையினரின் பதின்மூன்று (13) கிலோமீற்றர்கள் நீளமான படைத்துறை வேலிகளையும் தளங்களையும் தங்ககங்களையும் கைப்பற்றி தகர்த்தழித்து தரைப்பாதையை தமிழினத்தின் விறலோன்கள் திறந்தனர்.
 
விழுப்புண் அடைந்த வீரர்களையும் படுகாயமடைந்த சில பொதுமக்களையும் வன்னியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பக் கிடைத்தமை ஆறுதல் தந்தது.

அஃதே,

முற்று முழுதாக தீர்ந்துவிட்ட மருந்துவ பொருட்களையும் உடனடியாகவே வன்னியிலிருந்து எடுத்துக் கொள்ளவும் முடிந்தது.

நான்காவது நாளாகிய இந்த நாளில் தாழையடி பெருந்தளம் மீட்கப்பட்டு கண்ணிவெடி, பொறிவெடிகள் ஆகியன முழுமையாக அகற்றிடாத அந்த நேரத்தில் எங்களைப் பார்க்க ஜவான் அண்ணர் விரைந்து வந்தார்.
 
ஆம், இருபத்தொரு (21) ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் “புலிகளின்குரல்” வானொலிப் பணிப்பாளர் திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்கள் இத்தாவில், நாகர்கோவில் களமுனைகளில் போராளிகளைச் சந்தித்து வாழ்த்துக் கூறி உற்சாகம் ஊட்டினார்.

ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் பெட்டிச்சமர் நடைபெற்ற பகுதிக்கு வந்தார்.

சமர்களநாயகன் தொடக்கம் சாதாரண போராளிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் வரை ஒவ்வொரு வரையும் அவர்களின் காவலரண்களுக்கு சென்று சந்தித்து கைலாகு கொடுத்து வாழ்த்தினார்.

“ஊரிலும் புலம் பெயர் நாடுகளிலும் எங்கடை சனம் வெற்றிச் செய்திக்காக பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றனர்” என திரு.தமிழன்பன் (ஜவான்) அவர்கள் சொன்ன போது பல போராளிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

அஃதே,

களமுனை வீரர்களின் உள்ளத்துச் சிந்தனைகளையும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய சேதிகளையும் பேட்டிகளாக எடுத்துச் சுடச்சுட பகல் நேர தமிழீழ வானொலியிலும் இரவு நேர புலிகளின் குரல் வானொலியிலும் (VoT) ஒலிபரப்புச் செய்தார்.

திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்களை போலவே விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் திருமிகு காக்கா (சங்கர்) அவர்களும் தொடர்ந்து வந்த நாட்களில் களத்திற்கு வருகை தந்தார்.

இருவருமே நல்லூக்கம் நல்கியதுடன் நின்றுவிடாது அந்த வியன்களத்தை வரலாறாகவும் பதிவு செய்தார்கள்.

காக்கா அண்ணனால் எழுதப்பட்ட அந்த வரலாற்று ஆவணமானது “மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்” எனும் பெயரில் நூல் வடிவில் வெளியீடு செய்ய்ப்பட்டது.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் இரண்டாம் நாளான 27 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்
  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4872

27 மார்ச் காலை 9:44 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
தாழையடி மற்றும் மாமுனையில் இருந்த சிறீலங்கா படைத்துறையின் தானைவைப்பு மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒருங்கமைப்பட்ட தாக்குதலால் யாழ் தென்கிழக்கு கடற்கரைப்பகுதியில் கடும் சண்டை மூண்டுள்ளது. 

அதேநேரம் தாழையடி மீதான இருமுனை வலுவூட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறையில் இருந்த சிறிலங்காப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஒரு சேர்படையினர் நாகர்கோவிலில் இருக்கின்ற தானைவைப்பில் இருந்தும் மற்றொன்று புதுக்காடு-மருதங்கேணி வீதி வழியாகவும் ஏ9 வீதிக்கு தெற்காக செல்கின்றனர்.

விடுதலைப்புலிகள் தாழையடிக்கு இரண்டு கிமீ தொலைவாக வடக்கில் உள்ள புன்னையடி வரை முன்னேறி வந்துவிட்டதாக மாமுனை மற்றும் தாழையடி சமர் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமிழ்நெற்றின் வடமராட்சி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளனர்.

எனினும் பருத்தித்துறையில் இருந்த சிறீலங்காப் படை வட்டாரங்கள், விடுதலைப்புலிகள் தமது மாமுனை மற்றும் தாழையடி தானைவைப்புகளை பரம்பிவிட்டனர்(overrun) என்ற செய்தியை அடியோடு மறுத்ததோடு அவ்விடங்களில் சமர் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேநேரம் வேட்டுப்பரிமாற்றத்தில் காயமடைந்த பொதுமக்கள் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர். அவர்களின் பெயர் விரிப்பு:

  1. தவஞானம் வதனராசன், 20
  2. வைரவிப்பிள்ளை விஜயகுமார், 36
  3. கேசவஞானம், 52
  4. செபமாலை டேவிட், 9
  5. தேவராசா ராணி, 47
  6. ஜெ.தெரசம்மா, 40
  7. வ.சுபாஜினி, 31
  8. வ.பாக்கியம், 65.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4873

27 மார்ச் நண்பகல் 12:58 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 

விடுதலைப்புலிகள் தாழையடி மற்றும் மாமுனை தானைவைப்புகள் மீதான தாக்குதலை தொடர்ந்ததால் அம்பனில் இருந்த சிறீலங்காப்படையினர் அவர்களின் முகாமினை காலிசெய்து வெளியேறினர். பருத்தித்துறை-மருதங்கேணி வீதியில் உள்ள குடாரப்பு, புன்னையடி, மாமுனை ஆகிய இடங்களில் இருந்த மூன்று சிறுபாலங்களை விடுதலைப்புலிகள் தகர்த்துவிட்டதாக போர் வலயத்தினை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிறீலங்காப் படைகளின் மாமுனை முகாமினை புலிகள் முற்றுகையிட்டுள்ளதோடு தாழையடி தளம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தாழையடிக்கு மேற்காக ஒரு கிமீ தொலைவில் உள்ள 'நெல்லியான்' என்ற சிற்றூரில் இருந்து விடுதலைப்புலிகளின் பாரிய சண்டைப் பிரிவுகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பருத்தித்துறைக்கு தெற்கில் உள்ள சிறீலங்காப் படைகளின் நாகர்கோவில் தளத்தின் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் வடமராட்சியில் உள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையில், கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் இன்று யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் நடந்த சண்டைகள் பற்றி எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளன, ஆனால் அதே பகுதியின் செம்பியன்பற்றுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் சண்டைகள் நடந்த தகவல்கள் உள்ளதாக தெரிவித்தன.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4874

27 மார்ச் பிற்பகல் 3:48 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
ஓயாத அலைகள் மூன்றினை விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர்ந்திருப்பதாக அவர்களின் இலண்டன் பணிமனையின் செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு அறிக்கையாவது: 

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் வடமராட்சியின் கிழக்குக் கரையோரப் பகுதியோடான தாழையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி மற்றும் ஆனையிறவு கூட்டுத்தளத்திற்கு அருகில் உள்ள பளை மற்றும் இயக்கச்சி ஆகியவற்றில் உள்ள சிறீலங்காத் தரைப்படையின் தளங்கள் மீது ஒரே நேரத்தில் பாரிய கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியதால், சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

ஓயாத அலைகள்-3 என குறியீட்டுப் பெயரிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தொடர் நடவடிக்கை நேற்று இரவு 9 மணியளவில் வெடித்தெழுந்ததோடு இந்தப் பகுதிகளில் கொடிய தறுகண்மையுடன் தொடர்கிறது. புலிகளின் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் பளையில் உள்ள படைத்துறை வலுவெதிர்ப்பு வேலிகளை உடைத்து ஏ9 நெடுஞ்சாலையை (கண்டி வீதி) துண்டித்ததோடு இயக்கச்சி மற்றும் ஆனையிறவு தளங்களுக்கான நில வழங்கல் பாதையை முற்றுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை பாதுகாக்கும் இந்த இரண்டு கேந்திர தளங்களும் இப்போது புலிகளால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு முன்னேற்றத்தில், புலிகளின் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் பளையில் உள்ள படைத்துறையின் தானைவைப்பு மீது நுழைந்து முக்கிய சேணேவித் தளத்தையும் வெடிமருந்துக் கிடங்கையும் அழித்துள்ளனர். அதில் பதினொரு கனவகை சேணேவிகள் வெடிபொருட்களால் அழிக்கப்பட்டன.

அண்மைய தகவல்களின்படி, விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள் இயக்கச்சி படைத்தளத்தில் உள்ள சிறீலங்கா படைத்துறையின் வலுவெதிர்ப்பு வேலிகளை ஊடறுத்து உள்நுழைந்துள்ளன. அவர்கள் தெறோச்சி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் முகாமினை குத்துவதால் இயக்கச்சியில் கடும் சண்டை தொடர்கிறது.

கடலோரப் பகுதியில், புலிகளின் சண்டைப் பிரிவுகள், சிறீலங்காப் படைத்துறையின் வலுவெதிர்ப்பு வேலிகளை அடித்து நொறுக்கி தாழையடியை நோக்கி முன்னேறிவருகின்றன.

யாழ்ப்பாண நுழைவாயிலில் உள்ள பல தானைவைப்புகள் மற்றும் தளங்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடிபாட்டு பிரிவுகளின் திடீர் மற்றும் தன்னியல்பான தாக்குதல் சிறீலங்காப் படைத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு குறிப்பிட்ட சில பகுதிகளில் நேற்றிரவு குழப்பமும் சீர்குலைவும் ஏற்பட்டது. சிறீலங்காப் படைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை படைத்துறை உலங்குவானூர்திகள் மூலம் அகற்ற போராடி வருவதாகவும்  விடுதலைப் புலிகளின் களக் கட்டளையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்."

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4875

27 மார்ச் மாலை 7:30 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
சிறீலங்கா படைத்துறையின் இன்றைய செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது,

"மேற்கொண்டு இன்று 1530 மணிநேரத்தில் செய்திக்குறிப்புக்கு:

அகற்றல் நடவடிக்கையின் போது பளையின் பொதுப் பகுதியில் பயங்கரவாதிகளின் குழுவோடு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் கணையெக்கி எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக 11 வீரர்கள் கொல்லப்பட்டதோடு 23 பேர் காயமடைந்தனர். பொதுப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இருந்ததை தரைப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதன்மை வழங்கல் பாதை (ஆனையிறவு-யாழ்ப்பாணம்) இல் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏற்பட்ட இடைவெளியானது தரைப்படையினரால் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள மாமுனை மீனவ ஊரில் பாதுகாப்புப் படையினரின் கரையோரப் பிரிவினர் பயங்கரவாதிகளின் கணையெக்கி சூட்டுக்கு இலக்காகினர்.

அகற்றும் பணி தொடர்கிறது."

வடமராட்சி கிழக்கு வட்டாரங்களின்படி, இன்று பிற்பகல் செம்பியன்பற்று - மாமுனை பிரிவில் இடம்பெற்ற வேட்டுப்பரிமாற்றத்தில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளளனர். பளைக்கு வடக்கே ஏ9 முகமாலையில் தரைப்படை அனைத்து போக்குவரத்தையும் திருப்பிவிட்டுள்ளது.   

இதேவேளை, இன்று காலை போர் வலயத்தில் இருந்து வெளியேறிய மாமுனை குடியிருப்போர், அந்த கரையோர ஊரில் உள்ள சிறீலங்காப் படைகளின் தானைவைப்பினை புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4876

27 மார்ச் நடுச்சாமம் 11:35 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினர் பளைக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாவில் என்ற இடத்தில் சிறீலங்கா தரைப்படையினன் சுட்டதில் உயிரிழந்தனர். ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த பெண்ணின் சகோதரி படுகாயமடைந்தார். இணையரின் 4 நாட்களே ஆன குழந்தை காயமின்றி உயிர் தப்பியது.

படுகொலையின்போது காயமடைந்த இளம்பெண்ணையும் கைக்குழந்தையையும் படுகொலையில் இருந்து மீட்டவர்களில் ஒருவரான தமிழ்நெட்டின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கையில், அந்த குழந்தை மீது இறந்த பெற்றோரின் குருதியும் சதையும் சிதறிக் கிடந்தது என்றார்.

குமாரசாமி சிறீதரன் (40), அவரது மனைவி சிறீதரன் யோகேசுவரி (38) ஆகியோரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் ஆவர். உயிரிழந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சிவலிங்கம் கணேசலிங்கம் வயது 24 என அடையாளம் காணப்பட்டார்.

புலிகளின் தாக்குதல் பளையிலிருந்து தங்கள் திசையில் திரும்பும் என்ற அச்சத்தில் இத்தாவிலில் பீதியடைந்த சிறீலங்காப் படையினர் முச்சக்கர வண்டியை நிறுத்தி ஊர்தி நோட்டம் செய்யாமல் சுடுகலச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4877

27 மார்ச் நடுச்சாமம் 11:47 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுத் தளம் வரையிலான முதன்மை வழங்கல் பாதையின் ஒரு பகுதியை பளை பகுதியில் இன்று மாலை விடுதலைப் புலிகள் வசப்படுத்தி வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள சிறீலங்கா படைத்துறைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, யாழ் குடாநாட்டில் ஓயாத அலைகள் - 3 தாக்குதலை புலிகளின் புதிய அடிபாட்டுப் பிரிவுகள் தொடர்வதாக புலிகளின் குரல் வானொலி இன்று தனது இரவு செய்தித் தொகுப்பில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பச்சிலைப்பள்ளி, சோரன்பற்று மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள சிறீலங்கா தரைப்படை நிலைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், வடமராட்சி கிழக்கில் கடற்புலிகள் சிறீலங்காக் கடற்படையின் கடற்கலங்களோடு பொருதிவருவதாகவும் புலிகளின்குரல் தெரிவித்துள்ளது.

தற்போது இயக்கச்சி மற்றும் ஆனையிறவில் உள்ள தனது தளங்களுக்கு மற்றொரு வழங்கல் பாதையை பயன்படுத்துவதாக சிறீலங்கா தரைப்படை கூறியது. எவ்வாறாயினும், இயக்கச்சி - ஆனையிறவுப் பகுதிக்கான மாற்று வழங்கல் பாதையாகச் செயற்படக்கூடிய ஏ9 நெடுஞ்சாலையின் மேற்கில் உள்ள மலங்கிய உள்வீதிகள் மற்றும் பாதைகள் கனவகை ஊர்திகள் மற்றும் அதிக போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என யாழ்ப்பாண வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது புலிகள் வசமுள்ள முதன்மை வழங்கல் பகுதியை மீட்பதற்காக ஏ9 நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் படையினர் நடவடிக்கையை ஆரம்பித்ததாக கொழும்பில் உள்ள சிறீலங்காப் படைத்றையின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திற்கும் இயக்கச்சி - ஆனையிறவுப் பகுதிக்கும் இடையிலான முதன்மை வழங்கல் பாதையில் ஏற்பட்ட உடைப்பினால் தென்மராட்சிப் பிரிவின் தெற்குப் பகுதியிலுள்ள போர் வலயங்களில் இருந்து படைத்துறையினருக்கு வலுவூட்டல்களை அனுப்புவதிலும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதிலும் தளவாடச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வடக்கின் படைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் வானூர்தி எதிர்ப்புச் சூட்டு அச்சுறுத்தலையும் மீறி உலங்குவானூர்திகள் போர் வலையத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

நேற்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட பளை சேணேவித்தளத்தில் 130 மி.மீ, 152 மி.மீ மற்றும் 122 மி.மீ தெறோச்சிகள் இருந்ததாக யாழ். சிறீலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பளையில் உள்ள சிறீலங்காத் தரைப்படையின் முக்கிய சேணேவித் தளத்தில் உள்ள சுடுகலன்கள் மற்றும் வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை அழிக்கப்படுவது ஆனையிறவின் வலுவெதிர்ப்பை மோசமாகப் பாதிக்கலாம், ஏனெனில் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள இந்த தானைவைப்பில், புலிகளின் எதிர்காலத்திய முன்னரங்க நிலைகளுக்கு முன்னாலான எந்தவொரு தாக்குதல் செறிவைக் குத்துவதற்குப் பின்பகுதியிலிருந்து போதுமான சூட்டாதரவு வலு இல்லை. 

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் மூன்றாம் நாளான 28 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்
  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4878

28 மார்ச் நண்பகல் 11:10 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

சண்டையால் இடம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோர ஊர்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பொதுமக்கள் செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் எறிகணை வீச்சு மற்றும் வேட்டுப்பரிமாற்றங்களில் காயமடைந்த இருபது பொதுமக்கள் போர் வலயத்திலிருந்து பண்டுவத்திற்காக அழைத்து வரப்பட்டதாக பருத்தித்துறை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வடமராட்சி கிழக்கு மற்றும் பளை உட்பகுதிகளில் மேலும் காயமடைந்த பொதுமக்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என நேற்றைய சண்டையில் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தெற்குப் பகுதியில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்கிறது என புலிகளின் குரல் தனது காலை செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. சண்டையில் கொல்லப்பட்ட நான்கு புலிவீரர்களின் பெயர்களை வானொலி வழங்கியது.

புலிகளின் குரலின்படி, ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் அண்மைய கட்டத்தில் வீரச்சாவடைந்த புலிவீரர்கள்-

1.இசையரசன் (யாழ்ப்பாணம், சண்முகம் சந்திரகுமார்)
2.விசும்பன் (மட்டக்களப்பு, நடராஜா ரஜனிகாந்த்)
3.நிலவன் (யாழ்ப்பாணம், புஷ்பராஜா சிவகுமார்)
4.தங்கலட்சுமி (யாழ்ப்பாணம், மனோகரன் சுதர்ஷினி)

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4879

28 மார்ச் நண்பகல் 11:59 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
பாதுகாப்பு அமைச்சின் செயற்பாட்டுத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பளைக்கு கிழக்கே பொதுப் பகுதியில் சண்டை தொடர்ந்தது. மாமுனைப் பிரிதளமும் நேற்றிரவும் கடும் சூட்டுக்கு உள்ளானது. பாதுகாப்புப்படைக் கட்டளையாளரின் அறிவுறுத்தலின் பேரில் செம்பியன்பற்றுக்கு வடக்கே ஆயத்தப்படுத்தப்பட்ட மாற்று நிலைக்குத் திரும்ப இழுத்துச்(அப்படியே) செல்லப்பட்டது.

பளைக்கு அருகில் உள்ள சுடுகலன் நிலையில் ஏற்பட்ட தீ நேர்ச்சியால் மூன்று சேணேவி சுடுகலன்கள் சேதமடைந்துள்ளன. (அப்படியே) பழுதுபார்ப்பதற்காக இந்த சுடுகலன்கள் மீண்டும் பலாலிக்கு இழுக்கப்பட்டன.

வத்திராயனில் பயங்கரவாதிகள் தொடர்ந்து முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் மற்றும் அப்பகுதியில் அகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது கணையெக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய தகரியை பாதுகாப்புப் படையினர் தகர்த்தனர்.

பாதுகாப்புப் படையினரில் ஒரு அதிகாரி மற்றும் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 அதிகாரிகள் மற்றும் 152 பேர் காயமடைந்தனர்."

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4881

28 மார்ச் நடுச்சாமம் 11:50 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

தற்போது யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் மாமுனையில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகள், வன்னியிலிருந்து கடல் வழியாக கொண்டுசெல்லப்பட்ட தமது பெரும் எண்ணிக்கையிலான சிறப்புப் பிரிவினர், தாழையடி தளம் மற்றும் வத்திராயனில் உள்ள அதன் முன்னரங்க நிலைகள் மீதான தாக்குதலைத் தொடர்வர் எனத் தெரிவித்தனர்.

இன்று காலை அப்பகுதிக்கு வருகை செய்த தமிழ்நெற் செய்தியாளர், விடுதலைப் புலிகள் மாமுனை முகாமிலும், கரையோரத்தில் உள்ள அதன் பிரிதளத்திலும் இன்று புலிக்கொடி ஏற்றியதாக தெரிவித்தார்.

மாமுனையில் அழிக்கப்பட்ட சிறிலங்கா தரைப்படை தளத்தில் சுமார் 12 சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்கள் சிதறிக் கிடப்பதாக அவர் கூறினார். வீழ்ந்த முகாமில் இருந்து தப்பிய சுமார் இருபது தரைப்படையினர் கொண்ட போர் வலயத்திலிருந்து வெளியேற முற்பட்ட பேருந்து மீது புலிகள் தாக்குதல் நடத்தியதில் அனைவரும் கொல்லப்பட்டதகாவும் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஆயிரத்தி ஐந்நூறுக்கும் மேற்பட்ட புலிகள், பெரும்பாலும் பெண் போராளிகள், இன்று கடல் வழியாக மாமுனை பொதுப் பகுதிக்கு நகர்ந்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் தாழையடிக்கு முன்னால் உள்ள சிற்றூர்களில் சிறீலங்கா வான்படையின் கிபிர் வகை தாரை வானூர்திகள் குண்டுவீசின. செம்பியன்பற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான ஆறு வீடுகள் இன்று கிபிர் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தமிழ்நெற்றின் வடமராட்சி கிழக்கு செய்தியாளர் தெரிவித்தார்.

நாகர் கோவிலில் உள்ள சிறீலங்கா தரைப்படையின் நோட்டச் சாவடி வழியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சண்டையிலிருந்து தப்பித்து பருத்தித்துறையில் தஞ்சம் புகுந்துள்ளதாக தமிழ்நெற்றின் வடமராட்சி கிழக்கு செய்தியாளர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவின் ஏனைய பகுதிகளுக்கும் எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடையில் உள்ள முதன்மை நெடுஞ்சாலையான ஏ9க்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து புலிகள் இயங்கி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவுக்கான வழங்கல் பாதையான ஏ9 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக சிறீலங்கா தரைப்படையின் மூத்த கட்டளையாளர் ஒருவர் கூறினார்.

புலிகளின் குரல் தனது இரவு செய்தி ஒலிபரப்பில், லெப். தரநிலையில் உள்ள மூவர் உட்பட பதினொரு போராளிகள், ஓயாத அலைகள் நடவடிக்கையின் கடைசி கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்ததாக கூறியது.

இதேவேளை, சிறீலங்கா வான்படையின் ஆளில்லா வான்வழி ஊர்தி ஒன்று இன்று பலாலியில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறங்கியதில் பலத்த சேதமடைந்துள்ளது.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் நான்காம் நாளான 29 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்
  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4882

29 மார்ச் பிற்பகல் 3:18 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

ஏ9 நெடுஞ்சாலையில் (கண்டி வீதி) ஆனையிறவு மற்றும் இயக்கச்சியில் உள்ள சிறீலங்கா தரைப்படையின் கூட்டுத்தளங்களுக்கான முதன்மை வழங்கல் பாதை யாழ்ப்பாணத்தில் எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடையில் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா படைத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணத்தில் வெளியாகும் தமிழ் நாளிதழான உதயன், திங்கட்கிழமை தொடக்கம் விடுதலைப் புலிகளால் ஊடறுக்கப்பட்டு துண்டெடுக்கப்பட்ட இடைவெளியை இணைக்கும் முயற்சியில் தரைப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடைப்பட்ட ஏ9 ஊரான இந்திராபுரத்தில் முதன்மை வழங்கல் பாதையின் ஒரு பகுதியை புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், பளைக்கு வடக்கே இத்தாவிலுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் அண்மையில் சீர்செய்யப்பட்ட ஆனைவிழுந்தான் சிறுபாலத்தை வெடிக்கச் செய்துள்ளதாகவும் வடக்கின் சிறீலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்பாணத்திற்கும் ஆனையிறவு மற்றும் இயக்கச்சியில் உள்ள பாரிய தானைவைப்புகளுக்கும் இடையிலான தொடர்பை பேணுவதற்காக, ஏ9க்கு மேற்கே புலோப்பளை ஊடாக உள்ள உள்வீதியை சிறீலங்கா தரைப்படை தற்போது பயன்படுத்துகிறது. 1993 இல் கிளாலியைக் கைப்பற்றுவதற்காக சிறீலங்கா தரைப்படையால் தொடங்கப்பட்ட 'யாழ்தேவி நடவடிக்கை' என்ற பெருங்குறிக்கோள்கொண்ட தாக்குதல் இந்தப் பாதையில்தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் கிளாலிக்கு தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் கரையோரத்தில் வன்னி நிலப்பரப்பில் இருந்து போராளிகளை தரையிறக்கியுள்ளதாகவும், அங்கிருந்து தரைப்படை நிலைகளை கறங்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், புலிகள் மேற்கொண்ட பல முயற்சிகளை படையினர் முறியடித்ததாக சிறீலங்கா தரைப்படை கூறியது.

போரின் காரணமாக பளையில் தடுத்திருந்த அலுவலர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, சிறீலங்காத் தரைப்படையினர் இந்த ஊரில் இல்லை என்றும், குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் அது வெறிச்சோடி காணப்பட்டது என்றும் கூறினார்.

இன்று காலை முதல் ஏ9 வீதியில் மிருசுவிலுக்கு அப்பால் எவரையும் படையினர் செல்ல விடுவதில்லை என அப்பகுதிக்கு சென்ற தமிழ்நெற்றின் யாழ்.செய்தியாளர் தெரிவித்தார். நேற்றுவரை முகமாலைவரை மக்கள் செல்ல படையினர் அனுமதித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4883

29 மார்ச் பிற்பகல் 4:16 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் தாழையடியில் உள்ள சிறீலங்காப் படைத்தளம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டது. மருதங்கேணியில் உள்ள சிறீலங்கா தரைப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக இன்று சண்டையில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மாலைக்குள் முகாம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இப்பகுதியின் செயற்பாடுகளை வழிநடத்தும் புலிகளின் களக் கட்டளையாளர் ஒருவர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார்.

தாழையடி பகுதியில் நேற்று இரவு முதல் இடம்பெற்ற கடும் சண்டையில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக இன்று மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடும் சண்டை காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் பண்டுவத்திற்காக வரமுடியவில்லை.

புலிகள் வன்னியில் இருந்து கடல் வழியாக செம்பியன்பற்று மற்றும் மாமுனைக்கு நூற்றுக்கணக்கான போராளிகளை ஏற்றிச் செல்வது தொடர்கிறது. கிராமியப்படை மற்றும் எல்லைப்படைகளை உள்ளடக்கிய புலிகளின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள்படைப் பிரிவுகளும் அவர்களின் நடவடிக்கையின் படையேற்பாட்டு பணிகளுக்காக நகர்த்தப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி சந்தியில் உள்ள தரைப்படை முகாம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளும் முடுக்கி விடுகின்றனர் என இன்று போர் வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது ஏ9 மற்றும் யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கடற்கரைக்கு இடைப்பட்ட வீதியில் உள்ள ஒரு கேந்திர சந்தியாகும்.

சண்டையில் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினரின் உடல்கள் தாழையடியில் சிதறிக் கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கூற்றுப்படி நேற்றிரவு நடந்த சண்டையில் புலிகளின் பெண் சண்டை உருவாக்கங்களும் வலுத்த இழப்புகளைச் சந்தித்தன.

இதற்கிடையில், சிறீலங்கா வான்படையின் கிபிர் தாரை வானூர்திகள் தாழையடி மற்றும் மருதங்கேணி ஊர்கள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசியது. சிறீலங்கா கடற்படையின் சுடுகலப் படகுகளால் கரையோரப் பகுதியும் தாக்கப்பட்டதாக இன்று அங்கிருந்து தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாகர் கோவிலில் உள்ள சிறீலங்கா தரைப்படைத் தளம் கடுமையான கணையெக்கி தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாக பருத்தித்துறையில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4884

29 மார்ச் பிற்பகல் 4:36 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
தாழையடி-மருந்தங்கேணி-செம்பியன்பற்று கூட்டுத்தளத்தினை விடுதலைப் புலிகள் புதன்கிழமை கைப்பற்றியதில் 100க்கும் மேற்பட்ட சிறீலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டும் 25 விடுதலைப் புலிகளும் வீரச்சாவடைந்ததாகவும் அவர்களின் இலண்டன் பணிமனையின் செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு அறிக்கையாவது: 

"வடமாராட்சியின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இருந்த தாழையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று படைத்தளமான மிகப் பெரிய மற்றும் நன்கு வலுப்படுத்தப்பட்ட படைத்தளம், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் படைகளிடம் வீழ்ந்ததால் சிறீலங்கா தரைப்படை பெரும் தோல்வியைச் சந்தித்தது. 

நேற்று தாழையடி கடற்கரைக்கு அருகில் ஒரு கடற்கரை தலையை நிறுவிய விடுதலைப் புலிகளின் சேர்படையினரான சிறப்பு புலி அதிரடிப்படைகள், நேற்று இரவு தள முகாமிற்குள் நுழைந்து சிறிலங்கா படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினர்.

கடுமையான சண்டை வெடித்தெழுந்ததோடு 12 மணி நேரத்திற்கும் மேலாகவும் தொடர்ந்தது. புலிகளின் தாக்குதலின் முரட்டுத்தனத்தால் கறங்கிய படையினர் இறுதியாக இன்று மதியம் 1 மணியளவில் முற்றிலும் சீர்குலைந்து வெளியேறினர். கூட்டுப் படைத்தளத்தினுள் 1500 நன்கு பயிற்சி பெற்ற படையினர் தங்கியிருந்தனர்.

யாழ் குடாநாட்டின் நுழைவாயிலில் உள்ள படைத்துறை அரணிருக்கைகளில் (Stronghold) ஒன்றான இந்த முக்கிய தள முகாமின் வீழ்ச்சி வடமராட்சிக்கும் தென்மராட்சியின் சில பகுதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தச் சமரில் 100க்கும் மேற்பட்ட சிறீலங்காப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சண்டையில் 25 புலிவீரர்களும் வீரச்சாவடைந்தனர்.

புலிகள் தள முகாமில் இருந்து ஏராளமான படைக்கலன்கள் மற்றும் கணைகளையும் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட ஆனையிறவு மற்றும் இயக்கச்சி தள முகாம்களுக்கான முக்கிய வழங்கல் பாதையான ஏ9 நெடுஞ்சாலையில் (கண்டி வீதி) புலிகள் துண்டித்துள்ள பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகளுக்கும் சிறீலங்கா படைத்துறைக்கும் இடையில் இன்று மூன்றாவது நாளாக தீவிர சண்டை தொடர்கிறது. 

கடுமையான தளவாடச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் ஆழ கால்பதித்திருக்கும் புலிகளின் அதிரடிப்படைகளை வெளியேற்ற சிறீலங்காப் படைத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது."

 

 

 

====================================================

 

 

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் நான்காம் நாளான 29 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உதயன் நாளேட்டின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

 

மூலம்: https://noolaham.net/project/560/55972/55972.pdf

 

மூன்றாவது நாளாக நேற்றும் பளைப்பகுதியில் கடும் சண்டை!
கண்டி வீதியை இணைக்க படையினர் தீவிர முயற்சி

 

யாழ்ப்பாணம்‌.மார்ச்‌ 29 

வடமராட்சி கிழக்கு ஊடாக கடந்த ஞாயிறன்று பெரும்‌ தாக்குதல்‌ ஒன்றைத்‌ தொடக்கி பளைப்‌ பகுதிவரை முன்னேறி உள்ள புலிகளின்‌ அணிகளுக்கும்‌ படையினருக்கும்‌ இடையே மூன்றாவது நாளாக நேற்றும்‌ கரும்‌ சண்டை இடம்பெற்றது. பளைப்‌ பகுதியில்‌ துண்டிக்கப்பட்ட நிலையில்‌ உள்ள கண்டி வீதிப்‌ பகுதியை மீண்டும்‌ கைப்‌பற்றப்‌ படையினர்‌ தொடர்ந்து தீவிர முயற்சியில்‌ ஈடுபட்டதாக இராணுவ வட்டாரங்கள்‌ தெரிவித்தன. 

நேற்றுவரை இடம்பெற்ற சண்டையில்‌ தமது தரப்பில்‌ இரு அதிகாரிகள்‌ உட்பட 50 படையினர்‌ உயிரிழந்ததாகவும்‌ 9 அதிகாரிகள்‌ உட்‌பட 94 படையினர்‌ காயமடைந்துள்‌தாகவும்‌ பாதுகாப்பு அமைச்சின்‌ நடவடிக்கைத்‌ தலைமையகம்‌ தெரிவித்தது. படைத்தரப்பில்‌ மேலும்‌ 172 பேர்‌ சிறு காயங்களுக்கு உள்‌ளாகி இருப்புதாகவும்‌ புலிகள்‌ தரப்‌பில்‌ 150 பேர்வரை பலியாகியுள்ளதாகவும்‌ அறிவிக்கப்பட்டது. 

பளைக்கு அருகே இத்தாவில்‌, இந்திரபுரம்‌, முகமாலை ஆகிய பகுதிகளில்‌ படையினருக்கும்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இடையில்‌ நேற்‌றும்‌ சண்டை தொடர்ந்து இடம்பெற்‌றது.

அந்தப்‌ பகுதி ஷெல்‌ சத்தங்களால்‌ அதிர்ந்த வண்ணம்‌ இருந்ததாக அண்டிய பிரதேச மக்கள்‌ தெரிவித்தனர்.

விமானங்களும்‌ ஹெலிகளும்‌ இந்தப்‌ பகுதியில்‌ பறந்த வண்ணம்‌ இருந்தன.

பளைக்கு அருகே வண்ணாங்‌கேணியில்‌ படையினரின் டீசல்‌ பவுஸர்‌ ஒன்று புலிகளின்‌ தாக்குதலுக்கு இலக்காகி நேற்று முன்றினம்‌ இரவு முழுவதும்‌ எரிந்து கொண்டிருந்தது. அதனால்‌ அந்தப்‌ பகுதி புகைமண்டலமாகக்‌ காட்சியளித்ததாக அப்பகுதி மக்கள்‌ தெரிவித்தனர்.

கண்டிவீதியில் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை கைப்பற்றப்‌ படையினர்‌ தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வீதியின் பெரும் பகுதியை மீட்டுள்‌ளதாகவும்‌ - 

துண்டிக்கப்பட்ட வீதிப்‌ பகுதி முழுவதும் எந்நேரமும் தம்வசமாகும் என்றும் - 

படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பளையில் வெட்டுக்காடு என்ற இடத்தில் படையினர் தேடுதல்களை நேற்று மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் இருக்கவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத்‌ தலைமையகம்‌ நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


(ஐ-3-7-8)

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்திற்குப் பிறகான 30 ஆம் திகதி வெளியான சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்
  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4885

30 மார்ச் அதிகாலை 1:29 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

தாழையடியை தளமாகக்கொண்டிருந்த சிறீலங்கா தரைப்படையின் அதிசிறப்பு 53 ஆவது படைப்பிரிவின் ஒரு படைத்தொகுதி மற்றும் 14 கிலோமீற்றர் வரை பரவியிருந்த அதன் வலுவெதிர்ப்புகள் இன்று(29/3/2000) விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டதாக புலிகளின் குரல் தனது இரவுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

தாளையடி, மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய முதன்மை தளமானது மூன்று நாட்கள் புலிகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்குப் பின்னர் வீழ்ந்ததாக வானொலி கூறியது.

விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் வேம்படி வழியாக நகர்ந்து, 53 ஆவது படைப்பிரிவின் வலுவெதிர்ப்பைத் தாக்கி உடைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியது.

கடற்புலிகள், 19 சிறிலங்கா கடற்படை தாக்குதல் கலங்கள், இசுரேலிய கிபிர் தாரை வானூர்திகளின் குண்டுவீச்சு, தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் கடற்கரையில் இருந்து தரைவரை உள்ள சிறீலங்கா தரைப்படை தானைவைப்புகளில் இருந்து கடல் நோக்கி வரும் கனதியான சுடுகல சூடுகள், பாரிய சண்டை உருவாக்கங்கள் மற்றும் ஏந்தனங்களுக்கு நடுவில் சமராடினர்.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் தரையிறக்கப்பட்ட புலிவீரர்கள், சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புனூடாக ஊடுருவி ஏ9 வழியே முகமாலையை வந்தடைந்ததாக புலிகளின் குரல் தெரிவித்திருந்தது.

53 ஆவது படைப்பிரிவின் அதிரடிப்படை பிரிவுகளும், வான்-நடமாட்ட படைத்தொகுதியும் (Air-mobile brigade) தென்கிழக்கு கடற்கரையில் கடுமையான தடுப்பாற்றலை (புலிகளுக்கு) வழங்குவதற்காக தங்களை நிலைநிறுத்தியதாக வானொலி கூறியது.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தென்மராட்சிப் பகுதியில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் சேணேவித் தளங்களை இலக்காகக் கொண்டிருந்தன. இன்று சாவகச்சேரிக்கு அருகிலுள்ள தம்புத்தோட்டத்தில் சிறீலங்காவின் 11 நீண்ட தூர சேணேவிகளையும், தாமரைக்குளத்தில் நான்கு சேணேவிகளையும் புலிகளின் சிறப்புப்படைப் பிரிவினர் வெற்றிகரமாக வெடிக்கச் செய்துள்ளதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தரைப்படையின் வலுவெதிர்ப்பை புலிகளின் சண்டை உருவாக்கங்கள் உடைத்து செல்வதாகவும், புலிகளின் நிலைகளை தாண்டி ஏ9 வழியாக முகமாலையை அடைந்த போது நேற்றுமுதல் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடுமையான சண்டை இடம்பெற்றதாகவும் வானொலி தெரிவித்துள்ளது.

சண்டையில் கொல்லப்பட்ட சிறீலங்கா தரைப்படை வீரர்கள் மற்றும் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படைத்துறை ஏந்தனங்கள் குறித்து புலிகள் சரியான கணக்கு எடுக்கவில்லை என்றும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

53 ஆவது படைப் பிரிவானது சிறீலங்கா தரைப்படையின் சிறந்த சண்டையிடுதல் பிரிவாகும், இது சிறப்புப்படைகள், ஒரு வான் நடமாட்ட படைத்தொகுதி, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் பிரிவு போன்றவற்றை உள்ளடக்கியது, இந்தப் பிரிவு அமெரிக்க சிறப்புப்படைகளின் பயிற்சி மற்றும் ஆலோசனைகளைப் பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4889

30 மார்ச் மாலை 7:10 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளுடனான சண்டையில் 5 அதிகாரிகள் உட்பட 80 சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 அதிகாரிகள் உட்பட 613 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, வியாழக்கிழமை பிற்பகல் ஒரு செய்திக்குறிப்பில்.

முழு அறிக்கை பின்வருமாறு:

"படையினர் ஏ9 வீதியில் (கண்டி-யாழ்ப்பாணம்) புதிதாக நிறுவப்பட்ட நிலைகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். எமது சேணேவிகள், சிறீலங்காக் கடற்படை மற்றும் வான்படை ஆகியவை வெற்றிலைகேணிக்கு வடக்கே கிழக்கு கடற்கரையோரத்தில் பொதுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத இலக்குகளோடு பொருதுகின்றன.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் அவர்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளதோடு அவர்களின் ஊர்திகள் மற்றும் படகுகள் சில அழிக்கப்பட்டுள்ளன என்று கண்காணிக்கப்பட்ட புலிகளின் தொடர்பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. சங்குப்பிட்டி மற்றும் நாகதீவைத்துரை (அப்படியே) பொதுப் பகுதிகளில், ஏராளமான படகுகள் நங்கூரமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதோடு சேணேவிகள் அவற்றோடு பொருதுகின்றன.

அதனைத்தொடர்ந்து படையினர் அப்பகுதியில் இருந்து கடுமையான புகை மேகத்தை அவதானித்தனர், இது சேணேவித் தாக்குதலால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது, இதனால் படகுகள் சேதமடைகின்றன.

மோதல் தொடங்கியதில் இருந்து 05 அதிகாரிகள் மற்றும் 80 படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 15 அதிகாரிகள் மற்றும் 203 படையினர் காயமடைந்துள்ளனர். 16 அதிகாரிகள் மற்றும் 379 படையினர் சிறு காயங்களுக்குள்ளாகி பலாலி படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வருகின்றனர்."

சிறீலங்காப் படைத்துறையின் அறிக்கையானது பூநகரிக்கு கிழக்கே உள்ள நாகதேவன்துறையை நாகத்தீவைத்துறை என்று தவறாகக் குறிப்பிடுகிறது என்பதை கவனமெடுக்குக.

எவ்வாறாயினும், குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்கள், திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்த முகாம்களிலும் அதனைச் சூழ நடந்தச் சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா தரைப்படை வீரர்களின் நூற்றுக்கணக்கான சடலங்களை தாங்கள் பார்த்ததாகக் கூறினர்.

அவர்களின் உடல்கள் புலிகளால் அடையாளம் காணக்கூடிய நிலையில் மீட்கப்பட்டு, அத்தகைய சூழ்நிலையில் கொல்லப்பட்ட படையினர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிறீலங்காப் படைத்துறையிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சகத்தால் 'நடவடிக்கையில் காணாமல்போனார்' என வகைப்படுத்தப்படுவர்.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முடிவுரை

 

இத்தோடு குடாரப்புத் தரையிறக்கம் தொடர்பான அனைத்துத் தகவலும் என்னால் இயன்றளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டு நிறைவடைகின்றன. எதிர்காலத்தில் எனக்கு தரையிறக்கம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்குமாயின் இக்கட்டை இற்றைப்படுத்துவேன் என்பதையும் இங்கே அறிவித்துக்கொள்கிறேன்.

இதை நான் பல காலமாக எழுத வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் நோர்மண்டி தரையிறக்கத்தினைப் பற்றி வாசிக்கும்போதும் அதைப் பார்க்கும்போதும் எனக்கு குடாரப்புத் தரையிறக்கம் ஞாபகம் வருவதோடு அதை நாம் ஆவணப்படுத்தவில்லையே என்ற ஏக்கமும் எழுவதுண்டு. இதனால் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கனவு பிறந்தது. ஆனால் அதை ஆவணப்படுத்த எம்மிடம் எந்தவொரு ஆதாரங்களோ தகவல்களோ இல்லாமையால் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனக்கு 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகம் கிடைத்தது. அதை வாசித்த போது அதனுள் தரையிறக்கம் பற்றி அதை ஆவணப்படுத்தும் அளவிற்கு போதிய தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். கையோடு அதனை ஒரே மூச்சில் ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணி எனது கனவையும் நனவாக்கிக் கொண்டேன். 

எமது வரலாறுகளை நாம் சிதறு துண்டுகளாக எழுதி வைத்தால் அவை அழிந்து போய்விடும். ஓத்துவான தகவல் கொண்ட எல்லாவற்றையும் ஒரே ஆவணமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை;கொள்கை. அப்படி எழுதுவதால் எம்மால் அதனை இலகுவாக காக்க முடிவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அதனை கடத்தலாம். எமது தீவில் 2700 ஆண்டுகளுக்கு(அநுராதபுரத் தமிழ்ப் பானையோடு) மேலாக நாம் வசித்து வந்தாலும் எமக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பது தொடர்பான தொடர் வரலாறுகள் இல்லை. இதே இழிநிலை இனிமேலும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். அதனால்தான் இவ்வாறு என்னால் இயன்றளவு எமது சமர்க்கள வரலாறுகளை ஆவணப்படுத்துகிறேன், எனக்குத் தெரிந்த முறையில்!

 

நன்றி

 

 

"தனியரசானதும் தமிழுன்னைப் பாடிடும்

தாய்மனம் குளிர்ந்திடும் பார்...

எங்கள் சந்ததி தன்னது

பங்கினைச் செய்தது

என்றது மகிழ்ந்திடும் பார்..."

-->அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஓடாதே ஓடாதே' பாடலிலிருந்து...

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பின்னிணைப்பு-1

 

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி, 2000, பக்கம்: 12-13 & 15
மூல எழுத்தாளர்: கிள்ளிவளவன்‌
தட்டச்சு & தனித்தமிழ் & தகவற்பிழை திருத்தம்:  நன்னிச் சோழன்

உசாத்துணை: https://eelam.tv/watch/ஈரத-த-eeraththi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html

 

 

கருவேங்கைகள் பயணம்

 

வழமைக்கு மாறான செயற்‌பாடுகள்‌, என்றும்‌ இல்லாத முகமாற்றங்கள்‌, நின்று கதைப்பதற்கோ, இருப்பதற்கோ நேரமில்லாது கெதியாய்‌ கழிந்தது பொழுது. எல்லாம்‌ அன்று மாற்றமானதாகவே இருந்‌தது. ஒவ்வொரு கரும்புலி வீரரும் தன்னையும்‌ தான்‌ கொண்டுசெல்லவேண்டிய ஆயுத தளவாடங்களையும் இறுதி நேரம்‌ தயார்ப்படுத்துவதில்‌ மிக மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்‌கள்.

அவர்களிற்கு ஏதோ ஒரு உணர்வு திரும்பத்‌ திரும்ப அவர்‌களை நிறைவுபடுத்திக்‌கொண்டிருந்தது. அவர்களிற்காக வந்த சாப்பாட்டுப்‌ பொட்டலங்களைக்‌கூட கவனிக்காது தாங்கள்‌ கொண்டுபோகும்‌ பொருட்சளிற்கு நீர்க்காப்பு போடுவதிலும் அவற்றை சரியா என்று தேர்வாய்வதிலும்‌ அக்கறை கொண்டிருந்‌தார்கள்‌. 24-03-2000 அன்‌றைய பகற்பொழுது இப்படித்‌தான்‌ அவர்களிற்குக்‌ கழிந்தது.

பொழுது மங்கத்‌ தொடங்கிய வேளை அவர்கள்‌ தங்களிற்கான பொருட்களோடு புறப்படத்‌ தயாரானார்கள்‌, பாரம்‌ சற்று அதிகமனதாய்‌ இருந்தது. ஒவ்வொருவரும்‌ தங்‌களிற்கு வழங்கப்பட்ட வெடிபொருட்களைவிட மேலதிகமாகவும்‌ சில வெடிபொருட்‌களை கொண்டு சென்றனர்‌. எத்‌தனை இரவுகள்‌ இப்படியான எதிர்பார்ப்புகளுடனும்‌, ஆவலுடனும்‌ அவர்கள் வேவுக்காக திரிந்திருப்பார்கள்‌. அவர்களின்‌ அந்த தேடல்‌ முயற்சியிலே எத்‌தனை தோழர்களை அவர்கள்‌ இழக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை நாட்‌கள் ஒருதுளி தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் அதற்காக அலைந்திருப்பார்கள். எல்லாம் அவர்களின்‌ நினைவில்‌ நிழவாடுவதாய்‌ இருந்தது.

"எங்கட கையால்‌ 'சாஜ்‌' கட்டி 'ஆட்டி' உடைக்கோணும்‌, எத்தனையோதரம்‌ சந்தர்ப்பம்‌ வந்து நழுவிற்றுது, இனியொருக்‌காவரும்‌ அந்த சந்தர்ப்பத்தில் 'ஆட்டி'யை உடைச்சு அண்ணை நினைக்கிறதை செய்து காட்ட வேணும்‌.'' இப்படி ஒவ்வொருவரின்‌ ஆழமான உணர்வும்‌, காற்று அவர்களோடு பேசுவதாய்‌ உணர வைத்தது. அவர்கள்‌ அத்தனை பாரங்களோடும்‌ ஒவ்வொருவரிடமும்‌ விடைபெற்றுக்‌ கொண்டிருந்தார்கள்‌. "நாங்கள்‌ போறம்‌, இந்த முறை எப்படியும்‌ நினைச்‌சத செய்து முடிப்பம்‌ இல்‌லாட்டி...." சிரித்தார்கள். எல்லோரும்‌ ஒரே பொருளோடு சிரித்தார்கள்‌. கைகுலுக்கினார்கள்‌, கட்டித்தழுவினார்கள்‌. "ஒவ்வொருவற்ற காதுக்கும்‌ நிச்சயமா வெற்றிச்‌ சேதிவரும்‌" என்று மூச்சைப்‌ பேச்சாக்கினார்கள்.

அவர்களின்‌ பார்வை வானத்‌தையோ அல்லது பூமியை நோக்கியபடி இறுதியாய்‌ ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள்‌ ஒவ்வொருவரது கால்களும்‌ இலக்கை நோக்கி நடப்பதற்காக குறுகுறுத்‌தன. வெற்றிலைக்கேணிக்‌ கடற்‌கரையிலிருந்து அவர்களின்‌ பயணம்‌ ஆரம்பமானது. சிறிய படகுகள்‌ அலைகளில்‌ ஓசையின்றி இருளோடு இருளாகப்‌ புறப்பட்டன.

வானவிளிம்பு, உயர்ந்த பெருத்த தென்னந்‌தோப்புக்களையும்‌, அடர்ந்த மரங்களையும்‌, வெளிகளையும்‌ பிரித்துக்‌ காட்டியது. வெள்ளிகளின் மங்கிய வெளிச்சம்‌ வானத்திலும்‌ ஓலைக்‌ குடிசைகள்‌ இருப்பது போலவும்‌, அந்த குடிசைகளின்‌ துவாரங்களினாலேயே இந்த ஒளி கசிவதாகவும்‌ தெரிந்‌தது. படகு மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருத்தாலும்‌ அவர்‌களின்‌ இதயம்‌ வேகமாகத்‌ துடித்துக்கொண்டிருந்தது. திட்டம்‌, நகர்வு, தாக்குதல்‌ என்று ஒவ்‌வொன்றையும்‌ சுரம்மாறாது நினைவுகள்‌ அசைபோட்டன.

தாழையடி படைத்தளத்திலிருந்து கடற்கரையை நோக்கி வெளிச்சங்கள்‌ தெரிந்தது. அந்த வெளிச்சங்கள்‌ அவனது சின்ன 'மின்சூழ்' வெளிச்சங்களில் இருந்துதான்‌ கசிந்திருக்கும்‌. அவன்‌ சுற்றுக்காவலிற்காகவோ அல்லது வேறு வலுவெதிர்ப்பு ஏற்பாடு ஒன்றிற்காகவோ நகர்ந்துகொண்டிருக்‌கிறான்‌ அல்லது பயத்தில்‌ இருளை தனக்குக்‌கிட்டே வரவிடாது விரட்‌டுவதற்காக இவ்வாது செய்கிறான்‌ என்று மனதிற்குள்‌ நினைத்துக்‌கொண்டு சிரித்தார்கள்‌.

படகுகளில் மெளனம்‌ குடிகொண்டிருந்தது. காற்று ஈரத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது. ஓசையில்லாது படகு கரையைத்‌ தொடும்‌ தொலைவிற்குள் வந்துவிட்‌டது. படகின்‌ இரண்டு கரைகளாலும்‌ இரு கறுப்பு உருவங்கள்‌ தண்‌ணீருக்குள்‌ குதித்தன. அவர்கள்‌ சுமந்து செல்லும்‌ பொருட்களின்‌ தோற்றம்‌ அவற்றை பெரிய மனிதர்களாக உருமாற்றிக்‌ காட்டியது. தண்ணீருக்குள்‌ இறங்கியவர்கள்‌ சுடுகலனை மூடியிருந்த நீர்காப்பை அகற்றி சுடுவதற்கு தயாரானார்கள்‌. எந்த நேரமும்‌ தாக்குதல்‌ ஆரம்பிக்கலாம்‌, எனென்‌றால்‌ அது எதிரியின்‌ கோட்டைகள் நிறைந்த இடம்‌. செம்பியன்‌பற்றுக்கும்‌ மாமுனைக்கும்‌ இடையிலான பகுதியில்தான்‌ இது நிகழ்ந்து கொண்டிருந்தது.

இறங்கிய இருவரும்‌ சுடுகலனை சுடுவதற்கு ஏற்றவாறு பிடித்‌துக்கொண்டு சற்றுக்குனிந்து ஓசையில்லாது இரண்டு முனைகளிலும்‌ பிரிந்து ஓடியது வானவிளிம்பில்‌ தெளிவாகத்‌ தெரிந்தது. அவர்கள்‌ நிலையெடுத்தபின்‌, எந்தவிதமான ஊறும் தென்படவில்லையென்பதற்கு மணிக்கூட்டு வெளிச்‌சத்தில்‌ சமிக்கை செய்தார்கள்‌. அதன்‌ பின்னே படகு கரையடைந்‌தது. அந்த படகிலிருந்து மற்றப்‌ படகிற்கு சமிக்கை காட்டப்படடது. அதுவும்‌ விரைந்துவந்து கரையைத்‌ தொட்டது. ஒவ்வொரும்‌ பொறுமையாக எதற்கும்‌ தயாராக படகுகளிலிருந்து குதித்தார்கள்‌.

அவர்களின்‌ பார்வை இப்போது முன்னோக்கியதாக கூர்மையடைந்திருந்தது. படகில்‌ ஏற்றிவந்தவர்‌களிற்கும்‌, இதுவரை ஒன்றாகவே நின்று இறுதிக்கணமும்‌ பிரியமனமின்றி தவித்துநிற்கும்‌ தோழர்களிற்காகவும்‌ ஒருமுறை திரும்பிப்‌ புன்னகைத்தார்கள்‌. அதற்குமேல்‌ அவர்களிற்கு வேளை கிடைக்கவில்லை. நகருவதற்கான வியூகங்‌கள்‌ அமைத்து முன்னேறத்‌தொடங்கினார்கள்‌. கால்‌ புதைந்து புதைந்து எழும்‌ அந்த மணல்‌கடற்கரை பக்கமாகவே வளைந்து நெளிந்துபோகும்‌ பாதை, மணல்‌ மேடுகளின்‌ நடுவில்‌ வளர்ந்திருக்‌கும்‌ கண்டல்காடுகள்‌ அவற்றினூடு அவர்களின்‌ கால்கள்‌ முன்னேறின. 

அடர்ந்த கண்டல்‌ காடு நிறைந்த ஒரு இடத்தில் அவர்கள் ஒன்‌று சேர்ந்தார்கள்‌. அகற்றப்படாதிருந்த அனைத்து நீர்க்காப்புகளும் அகற்றப்பட்டன. அங்கே தடயங்‌களாக இருந்த பொருட்களை மணலில்‌ குழிதோண்டிப்‌ புதைத்து விட்டு மிக கவனத்தோடு எழுந்து நடந்தார்கள்‌. அவர்கள்‌ போகும்‌ திசையில்‌ தொலைவில் தெறோச்சிகள் இயங்கிய ஓசை; அதைத்‌ தொடர்ந்து, வானத்தையும்‌ பூமியையும்‌ அதிரவைக்கும்‌ ஓசை எல்லாம்‌ தெளிவாக கேட்டது. எல்லோருடைய மனதிலும்‌ நம்பிக்கை; எங்களுடைய இலக்குகள்‌ இருக்கின்றன. இனி எப்படியும்‌ அவை அழிக்கப்‌பட்டுவிடும்‌ என்று.

நடந்துகொண்டிருந்‌தபடியே தனது தோளை வெட்டிய வெடிமருந்துப்‌ பொதிகளைச்‌ சீர்செய்து விட்டு,

"சத்தம் போடுங்கோ, இஞ்ச உங்களுக்கான சாமான்களோட நான்‌ வாறனெண்டு உங்‌களுக்குத்‌ தெரியாதுதானே?”

என்று எல்லோரும் கேட்கும்படியாக கூறிவிட்டுச்‌ சிரித்தான்‌ தனுசன்‌. அவனின்‌ இயல்பே தனித்துவமானது. உச்சி பிரித்து, மேவி வாரப்பட்டிருக்கும்‌ தலைமயிரும்‌ கறுப்பும்‌ சாம்பலும் கலந்த நிறத்தில்‌ இருக்கும்‌ அவனது கண்களும் கதைக்கும்‌ போதும்‌ சிரிக்கும்‌ போதும்‌ கண்ணை மூடிமூடித்‌திறக்கின்ற அசைவுகளும்‌, உயர்ந்த உடற்கட்டான அவனுடைய உருவமும்‌ அவனை ஒருமுறை, பார்த்தவர்க்ளின் மனதைக்கூட பற்றிக்கொள்ளும்‌. அவனது சொற்களிலிருந்த உறுதியும்‌ நகைச்சுவையும்‌ எல்லோரையும்‌ ஒருகணம்‌ சிரிக்க வைத்தது.

தனுசனது கவசமே அலட்டிக்‌ கொள்ளாது அதிகமான செயற்‌பாடுகள்‌ மூலமே தன்னை வெளிப்படுத்திக்‌ கொள்ளும்‌ இயல்புதான்‌. இலக்‌கிற்காக அவன்‌ தெரிவு செய்‌யப்பட்டதிலிருந்து பயிற்சி எடுத்தது, அதற்காக நகர்வது அனைத்திலுமே அவனின் செயற்பாடுகளில்‌ தன்னை இனங்காட்டிக்‌கொண்டான்‌. எல்லாப்‌ போராளிகளுடனும்‌ அதிகமாக சிரித்துக்‌கதைத்தான்‌. அடிக்கடி,

"இந்த ஆட்டிலறிகளை நிச்சயமா உடைப்‌பன்‌"

என்று உறுதியாய்க்கூறி புன்னகைத்தான்‌. இன்று, இலக்‌கிற்கும்‌ அவனிற்குமான தொலைவை காலடிகள்‌ குறைத்துக்‌கொண்டிருந்தன. அவன்‌ உறுதியோடும்‌ தன்னம்பிக்கையோடும்‌ இருந்தான்‌. அவனிற்கென கொஞ்‌சப்‌ பொதிகள்‌ கொடுத்தபோதும்‌ அவன்‌ மேலதிகமாகவும்‌ புறப்படும்‌போது தனக்கு வழங்கிய வெடிமருந்துப்‌ பொதிகள்‌ போதாது என்‌று,

"இன்னும்‌ கொஞ்சம்‌ தாங்கோ. நான்‌ கொண்டுபோவன்‌, தேவைப்படும்‌!"

என்று வாங்கி அதையும்‌ சேர்ந்து சுமந்து கொண்டு நடந்தான்‌. ஒவ்வொருவரது நெஞ்சிற்குள்ளும்‌ தலைவர்‌ கதைத்தது, கட்டளையாளர்கள் எடுத்துரைத்தது, போராளிகள்‌ விடை கொடுத்தது என்று, ஒவ்வொன்றும்‌ வந்துபோனது.

அணிகள்‌ நகர்ந்து அகிலன்வெட்‌டைக் கரையை (சிறுநீரேரி) வந்தபோது நேரம்‌ நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. அகிலன்‌ வெட்டையில்‌ பரந்து நின்றிருந்த நீர் காற்றுவீசும் நேரம் தவிர மீதியெல்லாம் அமைதியாய் இருந்தது. தெறோச்சிகள் ஏவப்படுகின்ற ஓசை அவர்களிற்குள்‌ ஒரு  வேகமேற்படுத்தியது. மெல்லமெல்ல ஒவ்வொருவராக நடந்தார்‌கள்‌. ஆழம்‌ அதிகமான இடங்களில்‌ சத்தியாவும்‌, ஆந்திராவும்‌ தாண்டு மீண்டார்கள்‌. இரண்டு பேருமே உருவத்தில்‌ சிறியவர்கள். அவர்களின் இந்த சிறிய தோற்றம்‌ பலதடவைகளில்‌ அவர்‌களிற்கு இலக்கு கிடைக்காது போவதற்கு காரணமாய்‌ இருந்தது. என்றாலும்‌, இம்முறை அவர்களிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மலர்விழி தந்தலைமையிலேயே இவ்விருவரையும் அழைத்துச்‌ சென்றாள். தண்ணீரின்‌ ஆழம்‌ அதிகமான இடங்களில்‌ நுனிக்காலில்‌ நடத்தும்‌, அதை விட அதிகமானால்‌ மலர்விழியின்‌ தோள்களில்‌ பிடித்தபடியும் சத்‌தியா தன்‌ தண்ணீர் கடப்புப் பயணத்தை தொடர்ந்தாள். ஆந்திராவும் அப்படியே. மற்ற கரும்‌புலி வீரர்களும்‌ அவர்களிற்கு உதவினார்கள்‌. தண்ணீரும் பாதங்களை பிடித்திழுக்கும் சுரிகளும்‌ பயணத்தை சிரமமாக்கியது. யாரும்‌ அதைக்‌ கடினமாகப் பெரிதுபடுத்தவில்லை. எந்தவிதமான தடயமும் ஏற்படாது கரையேறியவர்கள்‌, சற்றுத் தொலைவு நடந்து ஒரு மறைப்பான இடத்‌தில்‌ ஓய்வெடுத்துக்கொண்டார்‌கள்.

சிலர்‌ தங்கள்‌ சுடுகலன்களைத் துப்புரவு செய்தார்கள்‌. சிலர்‌ அப்‌படியே அந்த புதர்கள்‌ மண்டிக்‌கிடந்த இடத்திலேயே படுத்திருந்‌தார்கள். சிலர்‌ தாங்கள்‌ கொண்டுவந்த உலர்‌ உணவுகளை சாப்பிட்டுக்‌ கொண்டும்‌ மற்றவர்களிற்கு அன்பாய்‌ கொடுத்துக்‌கொண்டுமிருந்தார்கள்‌. அது ஒரு படையவலயம் என்ற உணர்வு தெரியாது அவர்கள் இயல்பாகவே பேசினார்கள், சிரித்தார்கள்‌. ஆளாளாய்‌ கிண்டலடித்‌தார்கள். அந்த இடத்திலேயே மறுநாள் பகற்பொழுது கழிந்தது. 

பகற்பொழுதில்‌ தான்‌ அந்த இடமெல்லாம்‌ படை நடமாட்டம்‌ அதிகமான இடமெனத் தெரிந்தது. படையச் சப்பாத்‌தின்‌ அடையாளங்கள்‌ ஆங்காங்கே பளிச்சிட மாலைச்‌ சூரியன்‌ சற்று மரங்களிற்குள்‌ மறையத்‌ தொடங்கினான்‌. இதுவரையும்‌ ஒன்றாக நகர்ந்த அணி இரண்டாகப்‌ பிரிந்து வேறுதிசையில்‌ இன்னொரு இலக்கைத்‌ தேடப்போகிறது. களத்தினுள்ளும்‌ ஓர்‌ உணர்ச்சிபொங்கும்‌ பிரிவு. பளையில்‌ அமைந்திருந்த சேணேவித்தளம் நோக்கிப்‌ போகின்ற தனுசன்‌, சுதாஜினி அடங்கிய அணியைப்‌ பார்த்து,

"உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, இதைவிடக்கூடாது, ஆட்டி தகர்க்க வேணுமெண்டது கனபேற்ற எதிர்பார்ப்பு."

என்றாள் மலர்விழி. கூறிவிட்டு தனது தோள்ப்‌பையிலிருந்த 'பழரின்‌' ஒன்றை எடுத்து வெட்டினாள்‌. ஒரு தாயிற்குரிய பரிவோடும், பாசத்தோடும் ஒவோரு போராளிக்கும் கொடுத்தாள். அந்த கணங்‌களில்‌ கண்கள்‌ மெல்லக் கசிந்தன. இதே அணிகளில்‌ இனியார் வெற்‌றிச்‌ சேதியேடு திரும்புவார்கள்?

அங்கு தாமதம்‌ என்ற சொல்லுக்கு இடமில்லை. ஒவ்வொரு மணித்துளியும்‌ ஒவ்வொரு துளி அரத்தமாக மதிக்கப்பட்டது. தனுசன், சுதாயினி அடங்கிய குழு பளை நோக்கியும்‌, மலர்விழி, சத்தியா, ஆந்திரா அடங்கிய குழு தாமரைக்குளம்‌ நோக்கியும்‌, பிரிந்து நடந்தனர்‌. இனி கடக்கவேண்டிய மிகப்பெரும்தடை கண்டி வீதி ஏ9 - முதன்மைச்சாலை.

வீதியோரத்தில்‌ முட்கம்பி வேலிகள். அதைக்‌ கடந்தால்‌ சுற்றுக்காவல் வந்துபோகும்‌ படையினர். அதிகளவு ஒளிசிந்தி இரைந்தபடி ஓடித்திரியும்‌ 'பாரவூர்தி'கள். அத்தனை ஊறுகளையும் கடந்துவிட்டால்‌ இலக்கு தகர்க்கப்படுவது உறுதியாகிவிடும்‌. இந்‌தக்கணத்திலும்‌ அவர்கள்‌ எடுத்துக்‌ கொண்ட உறுதியை மீண்டும்‌ சொல்லிக்கொண்டனர்‌. "ஓராள் மிச்சமென்டாலும்‌ உள்ளுக்கபோய்‌ ஆட்டியை உடைக்கோணும்‌."  ஒவ்வொருவருமே அதன்‌ திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்‌டிய விதத்தையும்‌ நன்கு அறிந்து வைத்திருத்தனர்‌. கண்டி வீதி கடப்பதற்காய் அங்குலம்‌ அங்குலமாக் நகர்ந்து தடைக்கம்பி வெட்டி, மண்ணணை ஏறி ஒவ்வொருவராக சமிக்கை கொடுத்து கிட்ட அழைத்து, அவர்களை நிலையெடுக்கச் செய்து இப்படி ஒவ்வொன்றும்‌ அங்கே நிதானமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. 

கண்டி வீதியால்‌ கிடுகிடுத்தபபடி மிதிவண்டியில் சுற்றுக்காவலுக்கு படையினர் போய்வரும் நடமாட்டம் தெரிந்தது. அடுந்தடுத்து சில படையினர் மின்சூழ்களுடன் போவதும்‌ வருவதுமாக இருந்தனர்‌. அவர்கள்‌ போகும்‌ போது சிங்களப் பாடல்களையோ அல்லது வேறு எதனையோ கத்திக்கொண்டே சென்று வந்தார்‌கள்‌. அவர்கள்‌ கதைக்கும்‌ சிங்களச்‌ சொற்களிற்குள்‌ கலந்துவந்து ஆங்கிலச்‌ சொற்கள்‌ அவர்கள்‌ காவல்கடைமையை மாற்றுகின்றார்‌கனள் என்று உணரக்கூடியதாக இருந்தது. அதற்குப்‌ பின்‌ எல்லாம்‌ மௌனம்.

பழைய வடிவமைப்பிலான ஒரு சகடம்(car) போன்ற ஊர்தி பளையில்‌ இருந்து முகமாலைப்‌ பக்கமாய்‌ விரைந்தது. அணி வீதிக்கரையை வந்ததும்‌ வேகமாக கடக்க முயன்‌றார்கள்‌. முன்னேசென்ற ஒருவன்‌ வேகமாகக் நடந்து கண்டிவீதியை கடந்தான்‌. அடுத்தவன்‌ தனது நிலையிலிருந்து எழுந்தான்‌. கடப்பதற்காக விரைவாக நடந்தான். சாவகச்சேரிப்‌ பக்கமிருந்து உறுமலோடு ஏதோ ஒரு ஊர்தி வந்தது. அதன்‌ ஒளிர்மையான வெளிச்சம்‌ அவனை முழுமையாக காட்டியது. கண்ணைப் பறிக்கும் வெளிச்சம். விரைவாய் திரும்பி வந்த இடத்திற்குச் சென்றான். பின்வந்தவர்களை மறைவெடுக்கச்‌ சொன்னான். எல்லாம் ஒரு கணத்திற்குள் நடந்து முடிந்தது. தண்ணீருக்குள்‌ வந்து கொண்டிருந்தவர்கள்‌ அப்படியே அதற்குள்ளே அமிழ்ந்தார்கள்‌. மரங்களிற்குள்‌, பற்றைகளிற்குள்‌, மண்‌திட்டுகளிற்குள்‌ என்று கெதி கெதியாக தங்களை மறைத்‌துக் கொண்டார்கள்‌. அது படைய 'பாரவூர்தி'. அந்தவண்டி நிறைய எறிகணைகளை ஏற்றிச்‌ செல்வது அந்த பெட்டிகள்‌ மூலம்‌ அறியமுடிந்தது. அதைக் கண்ட போது அவர்களிற்கு மெய்‌சிலிர்த்தது. எங்கோ ஓர்‌ நடவடிக்‌கைக்கு படைத்துறை தன்னை தயார்‌ செய்கின்றது என்று. மனதிற்குள்‌ நினைத்துக்‌ கொண்டார்‌கள்.

தெறோச்சிகளின் அதிர்வு மிக கிட்டவாகவும்‌ எத்தனை என்று அறியக்கூடியதாகவும்‌ இருந்தது. அந்த ஊர்தியின் புகையும்‌, அது கிளப்பிச் சென்ற காற்றும்‌ அடங்கமுன்‌ அணி வேகமாக கடந்தது. கண்டி வீதியைக்‌ கடந்ததும்‌ மனதில் நம்பிக்கை பளிச்சிட்டது. இனி எப்படியும்‌ அந்த இலக்குகள்‌ அழிக்கப்பட்டுவிடும்‌ என்று தென்னந்தோப்புகள், பற்றைகாடுகள், வடலிகள்‌ என்று ஒவ்வொரு இடத்தையும்‌ வேகமாகக்‌ கடந்து தளத்திலிருந்து சற்றுத்‌ தொலைவிற்குள் தங்கிக்கொண்டனர்‌. அவர்‌கள்‌ ஒவ்வொருவரும்‌ சிரித்து, கதைத்து தங்களின்‌ இறுதிநேர ஓய்வையும்‌ உணவையும்‌ பகிர்ந்து கொண்டார்கள்‌. நித்திரை கொள்‌பவர்களை தட்டியெழுப்பி,

 "ஏன்‌ இப்ப அவசரப்படுறியள், இனி ஒரேயடியா தூங்கலாம்‌ தானே."

என்று சொல்லிவிட்டுச்‌ சிரித்தாள் சுதாஜினி. வழமையான அவளது குறும்புப்‌ பார்வை சிரிப்பு எல்லாமே அப்பொழுதும்‌ அப்படியே இருந்தன. முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்துப்போயிருந்தது. இயல்பாகவே அவளிற்கு முகம் கைகாலெல்லாம்‌ வியர்த்துப்போய்‌தான்‌ இருக்கும்‌. எப்போதும் சிரிக்காமல்‌ கதைத்து அவளிற்கு பழக்கம்‌ இல்லை. இன்றும்‌ சிரித்‌தபடியே. 

அவளின்‌ உடற்தோற்றத்திற்கு ஏற்றதுபோல அவனிற்கு 'லோ' வழங்கப்பட்டிருந்தது. அது அவளின் மடியில்‌ அவளைப்போலவே அடுத்தகட்ட பூகம்பத்தை நினைத்‌தபடி மெளமாய்க்‌ கிடந்தது. ஒவ்வொரு உணவுப்‌ பொதிகளையுமே எடுத்து உண்டபடி தங்களிற்குள்‌ பேசிக்கொண்டிருத்தார்கள்.

"எப்படி வெளிநாட்டுச்‌ சாப்பாடு, கதிர மேசைதான்‌ இல்லை. பத்தையெண்டாலும்‌ சந்தோசமான சாப்பாடு."

சொல்லி முடித்து மூச்சு விட்டான்‌ தனுசன்‌. அவர்கள்‌ ஓய்வை முடித்த அங்கிருந்து புறப்படத்‌ தயாரானார்கள். தலைகோதிவிட்டு, கசங்கிய உடுப்பை சரிசெய்து, வியர்த்து உருமாறிய முகங்களை துடைத்து ஏதோ கொண்டாட்டத்திற்குப் போவதுபோல அவர்கள் தயாரானார்கள்.

இலக்கை அண்மிக்க, அண்மிக்க அணிக்கு உணர்வின்‌ வேகம்‌ அதிகமானது. சண்டைக்கான தயார்‌ நிலையில்‌ அவர்கள்‌ நகர்ந்தார்கள்‌. கொண்டுபோன தண்ணீர்க் 'கலன்'கள் அவர்களைப்‌ பேலவே தண்ணிருக்காய் தவித்தது. ஒரு மோட்டை! அந்த பரப்பின்‌ ஓர்‌ மூலையில் கொஞ்சம்‌ தண்ணீர்‌! அது எப்படி என்னமாதிரியென்று தெரியாது. என்றாலும்‌ அதைக் குடித்தார்கள்‌. பனை மரங்களோடு ஒட்டி வளர்ந்திருக்கும்‌ சிறுபற்றைகளும்‌, மணற்பகுதியில்முளைத்த புற்களையும்‌ கவசமாக்கி அங்குலம்‌ அங்குலமாய்‌ நகர்ந்தார்கள்‌. அவர்களின்‌ கண்‌களிற்குள்‌ அத்த தளதத்தின்‌ பேருருவம்‌ தெரிந்தது.

மண்ணணை இடையிடையே காவலரண்‌, முட்கம்பித்‌தடை என்று அதன்‌ வலத்தை உறுதி செய்யும்‌ ஏற்பாடுகளும், அவர்கள்‌ முன்‌ விரிந்துகிடந்தது. எதிரி ஒரே நேரத்தில்‌ அடுத்தடுத்து எட்டு தெறோச்சிகளை இயக்குவது தெரிந்‌தது. அது இயக்குவதற்காகவும்‌ வேறுபக்கம்‌ திருப்புவதற்காகவும்‌ அவன்‌ கொடுக்கும்‌ கட்டளைகள்‌ காது மடல்களில்‌ அறைந்தன. அந்த எறிகணைகள்‌ பெரும்‌ ஓசையோடு பிளம்பை கிளப்பி வெடிக்கின்றபோது அதன் பிளம்பு அவர்களில்‌ வியர்வையை உலர்த்துவதாய்‌ முகத்தில்‌ சுட்டது. அவை இன்னும்சில நொடிகளிற்குள்‌ நொருங்கப்‌ போகிறது என்று எண்ணியபோது ஒவ்வொருவரது பற்களும்‌ ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன.

பளை புகையிரத நிலைய கட்‌டடத்தின்‌ கூரை இல்லாத தோற்‌றம்‌ முகம்‌ இழந்த ஒருவனைப்‌ போலிருந்தது. அந்த இருளையும்‌ ஊடுருவி அவன்‌ அமைத்திருந்த தடைகளிற்கு வெடிமருந்துகளைப்‌ பொருத்‌திவிட்டு அணிகளுக்கு தாக்குதலை ஆரம்பிக்கும்‌ சமிக்‌கையை கொடுக்கவென நினைத்‌தபோது திறந்த காவலரண்‌ ஒன்றிலிருந்து படைவீரன் ஒருவன்‌ வெளியே வந்தான்‌. அவன்‌ கைககளில்‌ சுடுகலன் இல்லை. ஒளிர்மையான மின்சூழ் ஒன்றை வைத்து எல்லா இடமும்‌ சுற்றியடித்தான்‌. அவனின்‌ பருத்த உருவமும்‌ முரட்டுத்தனமான தோற்றமும்‌ தெளிவான வானவிளிம்பில்‌ தெரிந்தது. முன்னே சென்றவர்களின்‌ முகத்திற்கு நேரே அவன்‌ ஒளிபாச்சியபோது திடுக்குற்று "கவ்த" என்றான்‌ தடுக்கத்துடன்‌. கரும்புலி வீரர்கள்‌ மனதிற்குள்‌ சிரிப்போடும்‌ கூடிய நிதானத்தோடும்‌ நிலையாக நின்‌றார்கள்‌. மறுமுறையும்‌ தனது ஒளியை வேறுதிசை ஒன்றில்‌ பாச்‌சியும்‌ ஓசையோடு ''கவ்த'' என்‌றான்‌. நிதானம்‌ .... சிரிப்பு. மூன்றாம்முறை முகத்திற்கு நேரே ஒளிபாச்சி அதட்டலாகக்‌ "கவ்த" என்‌றதுதான் தெரியும்; அந்த படைவீரன் அதிலேயே செத்துக்கிடந்தான்.

அணி மிக வேகமாக உள்நுழைந்தது.

“ஓடுங்கோ. வேகமாக முன்‌னேறுங்கோ”

என்ற ஓசையோடு எல்லோரும்‌ மண்ணணை ஏறி உள்நுழைந்தார்‌கள்‌. காவலரணில்‌ இருந்து சூடுகள்‌ வந்துகொண்டே இருந்தன.

“நான்‌ 'லோ' அடிக்கிறென்‌, முன்‌னேறுங்கோ"

என்று சுதாஜினி கத்தியது ஓசைகளுக்குள் அடக்‌கமாய்‌ கேட்டது. அடுத்து என்ன நடந்தது என்று நிதானிப்பதற்குள்‌ வெடியோசைகள்‌.... சுதாஜினி நின்ற இடமே தெரியவில்லை. உறுதியாக எதிரியின்‌ குறி அவளாகத்தான்‌ இருந்திருக்கும்‌. 

சுதாஜினியின்‌ வெடியதிர்வைப்‌போலவே ஒவ்வொருவரும்‌ வேகமாக இலக்குகளை நெருங்கினார்‌கள்‌. தெறோச்சிவிகள், அதற்கான எறிகணைக்‌ களஞ்சியங்கள்‌ எல்‌லாம்‌ தெளிவாகத்‌ தெரிந்தன. நிலவு வருவதற்கு முன்னதாக வானம்‌ வெளுத்திருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில்‌ அந்த தெறோச்சிகளின் உருவங்கள்‌ கருமையாகத்‌ தெரிந்தன. மிகவேகமான தாக்குதலில்‌ அந்த பெரியதளமும்‌ அத்தனை தெறோச்சிகளும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள்‌ வந்தன. ஆயுதக் களஞ்சியங்கள்‌ ஆங்காங்கே பெரும்‌ ஓசையுடன் வெடித்து சின்னச்சின்ன எரிமலையாய்‌ எரிந்துகொண்டிருந்தன.

நிலைமைகள்‌ வெளியில்‌ அறிவிக்‌கப்பட்டது. உதவிக்குச்‌ செல்லவென இருந்த அணி அங்கே குறித்த நேரத்திற்குள்‌ போய்ச்‌சேருமா என்பதில்‌ சந்தேகம்‌ எழுந்‌தது. கரும்புலி வீரர்களிற்கு செம்‌பியன்பற்று கடலில்‌ சண்டை நடக்‌கும்‌ ஓசைகளை தெளிவாகக்‌ கேட்க முடிந்தது. உதவியணி வந்து சேராது என்ற முடிவிற்கு வந்தாலும்‌ இயன்றளவு அத்தனை தெறோச்சிகளையும் பாதுகாத்தனர்‌. தனுசன்‌ எல்லா தெறோச்சிகளுக்கும் ஓடி ஓடி வெடிமருந்துப்‌ பொதிகளை கட்டி வெடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துகொண்டிருந்தான்‌. வேறு வேறு முகாங்களில்‌ இருந்து அந்த தளத்தை இலக்குவைத்து எறிகணைகளை எதிரி ஏவிக்‌ கொண்டிருந்தான்‌. தனுசன்‌ தன்‌ பணிகளை நிறைவேற்றி முடித்தபோது சேணேவிக்கு கட்டிய 'சார்ச்' ஒன்று தவறுதலாக வெடித்தது. அதற்குப்‌ பின்‌ தனுசனின்‌ தொடர்பு இல்லை. பொழுது வெழுக்கத்‌ தொடங்கியது. 

அத்தனை தெறோச்சிகளையும் தகர்த்து விட்டு பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. தெறோச்சிகளையும் ஆயுதக்‌ களஞ்சியங்களையும்‌ தகர்த்துவிட்டு வெற்றியோடு பின்வாங்கினார்கள்‌. அவர்கள்‌ ஒவ்வொருவரது மனதிற்குள்ளும்‌ அவர்களோடு வந்து பிரிந்துசென்ற மலா்விழியின்‌ அணியும்‌ உறுதியாக தனது இலக்குகளை அழித்திருக்‌கும்‌ என்ற நம்பிக்கை நிறைந்திருந்‌தது. அறிய ஆவலாயும்‌ இருந்தது.

அவர்களோடு வந்தவர்களில்‌ இரண்டு தோழர்கள்‌ இல்லை. ஆனால்‌ அவர்களின்‌ இலக்கை வெற்றிகொண்டுவிட்டார்கள்‌. தீர்மானித்தபடியே வந்த வழியிலே கண்டி வீதியில்‌ நிலைகொண்ட எமது அணிகளோடு கைகுலுக்கியபோது சொன்னான்‌ ஒரு கரும்புலி வீரன்‌,

"எத்தனைபேர்‌ எத்தனை இரவுகளாய்‌ தேடி அலைந்த ஆட்டிலறிகள்‌..... அத்தனை பேற்றை கனவையும்‌ நிறைவேற்றிப்‌ போட்டம்‌."

சமரிற்கு அடித்தளமிட்டுவிட்ட நிறைவு அவர்களிடம்‌ இருந்தது.

photo176.jpg

photo180.jpg

 

அவர்கள்‌ அறிய அவலாய்‌ இருந்த மற்றைய மலர்விழியின்‌ அணி தனக்குத்‌ தரப்பட்ட நான்கு தெறோச்சிகள் கொண்ட இயக்கச்சி-தாமரைக்குளத்திலிருந்த சேணேவித்தளத்தை அழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் கரும்புலி வீரர்களில் மலர்விழியும்‌, ஆந்திராவும்‌, சத்தியாவும்‌ திரும்பவில்லை.

photo182.jpg

photo181.jpg

photo183.jpg

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பின்னிணைப்பு-2

கரும்புலிகளின் படிமங்கள்

 

 

 

மேஜர் தனுசன் 

 

maj. Thanusan.jpg

 

major_thanushan2.webp

 

 

 

 

============X============

 

 

 

மேஜர் சுதாஜினியின் படிமங்கள் எதுவும் இதுவரை  கிடைக்கப்பெறவில்லை.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 ☁☁☁☁☁     ☁☁ ☁🌤     ☁☁☁☁☁    ☁☁☁☁☁☁
            ☁☁☁☁        ☁☁☁☁☁☁    ☁☁

  

                                               ||🟥🟥🟥🟥🟥
                                               ||🟥🟥🐯🟥🟥
                                               ||🟥🟥🟥🟥🟥
                                               ||
                                               ||
                                               ||
                                               ||
                                               ||
                                               ||
...🐅🌳..🌳...🏃‍♂️........../\...🌳.....🏃‍♀️...🐅.....🌳..🌳

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 இது போன்று மேலும் பல ஆவணங்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.