Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம்  எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அப்பா, அயலட்டை எண்டு பார்ப்பது என் விசர்த்தனம்.

இன்றே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திடவேணும் என்று எண்ணியபடி கட்டிலை விட்டு எழுந்தாள் ஜீவா. 

தாயார் சமையலறையில் சம்பல் செய்துகொண்டிருப்பது சம்பல் வாசத்திலேயே தெரிந்தது. தானும் வெள்ளண எழுந்து தாய்க்கு உதவி செய்யாததை இட்டு மனதிலொரு குற்ற உணர்வும் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அவளின் பிரச்சனை அதைவிடப் பெரிதே என்றும் திரும்பக் கேள்வி கேட்டது. அம்மாவிடம் விஷயத்தைக் கதைத்துப் பார்ப்போமா என்று எண்ணினாலும் ஒரு தயக்கமும் இருந்துகொண்டேதான் இருந்தது. எதற்கும் வாகீசனிடம் கதைத்துவிட்டே பெற்றோருடன் கதைக்கலாம் என்று எண்ணியபடி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவா. வாகீசன் இவளிடம் அக்கறை கொண்ட ஒரு நல்ல நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாகப் படித்ததில் உரிமையுடன் அவள் வீடுவரை வந்து கதைக்கும் உரிமையும் பெற்றவன்.

 

முன்னர் பொதுக் கிணற்றடியில் இவர்கள் வளவுக்குள் கட்டியிருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு நீர் நிரப்பிக் குளிப்பது. அறையுடன் சேர்ந்த இந்த பாத்ரூம் ரொய்லற் கட்டி எட்டு ஆண்டுகள் தான். அதுவும் இவள் திருமணம் நிட்சயமானதும் வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளைக்கு வசதியாக இருக்கட்டும் என்று தந்தைதான் கட்டுவித்தது. அப்பவே 75 ஆயிரம் ரூபா முடிந்தது. அப்பாவுக்கு காசுப்  பிரச்சனை இருக்கேக்குள்ள இது தேவைதானா என இவளும் ஆரம்பத்தில் வேண்டாம் அப்பா என்று சொல்லிப் பார்த்தாள் தான். ஆனாலும் அது வெளிநாட்டில பிறந்த பிள்ளையாம். வந்து மூன்று மாதங்கள் நிக்கேக்குள்ள நின்மதியா மலசலம் கழிக்க வேணுமெல்லோ என்றவுடன் இவளுக்கும் சரி என்று பட பேசாமல் இருந்துவிட்டாள். இன்றுவரை அவள் அறையுடன் சேர்த்துக் காட்டியதை இவளைத் வேறு யாரும் பயன்படுத்தவில்லை.

நினைவுகளைக் கலைத்துவிட்டு குளித்து முழுகி வேலைக்குப் போவதற்கான சேலையையும் கட்டிக்கொண்டு குசினிக்குள் எட்டிப்  பார்த்தாள். இவளின் குரல் கேட்குமுன்னரே இவள் வருகையை உணர்ந்த தாய் இடியப்பம் போட்ட தட்டை இவளுக்கு நீட்ட, இவள் வாங்கிக்கொண்டு மேசையில் போய் அமர்ந்து உண்ணவாரம்பித்தாள்.

பின்னாலேயே இவளின் சாப்பாட்டுப் பெட்டியைக் கொண்டு வந்து இவளருகில் வைத்தபடி “உருளைக்கிழங்குப் பிரட்டலும் முட்டையும் பொரிச்சு வச்சிருக்கிறன்” என்கிறார். 

“நீங்கள் கஷ்டப்படாதேங்கோ எண்டு எத்தனை தரம் சொல்லிப்போட்டன். பாங்குக்குப் பக்கத்தில எத்தினை சாப்பாட்டுக்கடை இருக்கம்மா. அங்க வாங்கிச் சாப்பிடுவன் தானே” என அலுத்துக்கொண்டாள். 

இவள் வேலை செய்வது வங்கி ஒன்றில். ஒரு மணிநேர பிரேக்கில் அருணுடன் வெளியே சென்று உண்பது இப்போதெல்லாம் அவளுக்கு மனத்துக்குப் பிடித்ததொன்றாகி இருந்தது. அதற்குள் அம்மா சாப்பாடு தந்து அதை வீணாகக் கொட்டிவிட்டு சாப்பிட்டதாக அம்மாவுக்கு நடிக்கவேணும் என்று எண்ண உணவு விரயமாகிறதே என்பதுடன் அம்மாவை ஏமாற்றுகிறோம் என்னும் குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, தயவுசெய்து இனிமேல் எனக்குச் சாப்பாடு கட்ட வேண்டாம். கட்டினாலும் நான் கொண்டுபோக மாட்டன். ஆறின சாப்பாட்டைச் சாப்பிட ஏலாதம்மா என்று கூறுபவளை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு தாய் அகன்றாள். 

தந்தை தோட்டத்து மரக்கறிகளைச் சந்தைக்கு கொண்டுபோய் விற்றுவிட்டு வீட்டுக்கு வரப் பத்துமணி ஆகும். தான் வெளிநாடு சென்றாலாவது அப்பாவைத்த தோட்டம் செய்யாதேங்கோ என்று சொல்லலாம் என்று இவள் எண்ணியிருந்ததெல்லாம் கனவாகவே போய்விட்டதே என எண்ணியவுடன் துக்கமும் வந்து நெஞ்சை அடைப்பதுபோல் இருக்க என்ன அக்கா கிளம்பீடியே” என்றபடி வந்த தங்கைக்கு “ஓம்” என்று மட்டும்சொல்லிக்கொண்டு தன் ஸ்கூட்டியை வெளியே எடுத்து அதைக் கிளப்பிவிட்டு ஏறி அமர்ந்தாள்.

 

தொடரும் ..

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 12
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வந்து கருத்துக்களைப் பகிர்ந்த புங்கையூரன், யாயினி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி 

7 hours ago, யாயினி said:

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

அதனால் என்ன. இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

தோட்டம் வெளியே முடிந்துவிட்டது. conservertry தொடர்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

முக்கியமான விசயம் போல இருக்கு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

உங்களைப் போல உற்சாகம் தருபவர்கள் இருக்கும் போது ..

8 hours ago, கிருபன் said:

முக்கியமான விசயம் போல இருக்கு!

அதில்லை. கன நாட்களாக எழுதவே இல்லை. எனது நூலும் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது என்றதும் மீண்டும் எழுதவேண்டும் என்ற ஒரு வேகம் அவ்வளவே. 

1 hour ago, ரதி said:

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

விடமாட்டேன் ரதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கை மிச்சத்தை இன்னும் கானோம்.தொடருங்கள் ஆவலுடன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகுதியையும் எழுதுங்கள்  ஆவலுடன் காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தினேசின் படத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜீவா. பார்க்கப் பார்க்க உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓடின. இன்னும் பத்தே பத்து நாட்களில் அவளுக்கும் தினேசுக்கும் திருமணம். இரண்டு நாட்களில் தினேசின் குடும்பத்தவர் வெளிநாட்டிலிருந்து வருகின்றனர். இவள் பெற்றோருக்கு அளவில்லாத மகிழ்சிதான். வெளிநாட்டில் பிறந்த பெடியன். பொருத்தம் பாக்கிற விநாசித்தம்பியர் தான் இவரைக் கோவிலில் கண்டபோது கேட்டது. கொக்குவில் மாப்பிளை ஒண்டு வந்திருக்கு. தாய் தகப்பன் வெளிநாட்டில. ஒரேயொரு தங்கச்சி. அதுவும் கலியாணம் கட்டீட்டுதாம். நல்ல ஆக்கள். பெடிக்கு முப்பது வயது. சோலி சுரட்டில்லை என்றதும் கணபதிப்பிள்ளைக்கும் ஆசை எட்டிப்பார்த்ததுதான்.

என்ர மகளுக்கு  23 தான் அண்ணை. வயது கொஞ்சம் கூடிப்போச்சுப் போல என்று  இழுக்க, நல்ல சம்பந்தம் எண்டதாலைதான் உனக்குச் சொன்னனான். வெளிநாட்டு மாப்பிளைக்கு உங்க கியூவில் நிக்கிது சனம். எனக்கும் மனிசிக்கும் 12  வயது வித்தியாசம். நாங்கள் சந்தோசமா வாழேல்லையே? ஏழு வயதெல்லாம் ஒரு பிரச்சனையே என்றார்.  விநாசித்தம்பியரின் முகத்தை முறிக்காமல் எதுக்கும் பிள்ளை ஓம் எண்டால் எனக்குப் பிரச்சனை இல்லை. நான் பிள்ளையிட்டையும் மனிசியிட்டையும் கதைச்சிட்டு நாளைக்கு முடிவைச் சொல்லட்டோ  என்று கேட்க, நாளைக்குச் சொல்லிப்போடு. தவறினால் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது சொல்லிப்போட்டன் என்றபடி விநாசித் தம்பியர் செல்செல்கிறார்.

எதுக்கும் இதை விடக்கூடாது என்று மனதில் எண்ணியபடி வீட்டுக்கு வந்த கணபதி, மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறார். வெளிநாட்டுச் சம்மந்தம் எண்டால் ஏன் விடுவானப்பா? சாதகத்தை உடன கொண்டுபோய் சாத்திரியிட்டைக் குடுங்கோ என்றவுடன், எனக்கும் உனக்கும் எட்டு வயது வித்தியாசம். உன்ர கொப்பர் ஏமாத்திக் கட்டி வச்சிட்டார் என்று நீ அப்பப்ப எனக்குச் சொல்லுறணியெல்லோ. அதுதான் இது ஏழு வயது வித்தியாசம். எதுக்கும் பிள்ளையிட்டைக் கேட்டிட்டு சாதகத்தைக் குடுப்பம்” என்கிறார். 

எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டில்லை. முதல்ல சாதகத்தைக் குடுங்கோ. பொருத்தம் எண்டால் பெடியின்ர படத்தைக் கேளுங்கோ. ஜீவான்ர படத்தையும் குடுப்பம். பெடியனும் ஓமெண்டால் பிறகு இவளிட்டைக் கதைச்சு சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு என்று கோமதி கூறியவுடன் எல்லாம் கடகடவென்று நடந்து முடிந்து, போனிலும் ஒரு மாதமாக இருவரும் பேசி, இன்னும் இரண்டுநாளில் தினேசை நேரில் பார்க்கலாம் என்றவரை வந்துநிற்க, எப்ப அந்த நாள் வரும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறாள் ஜீவா.

இரண்டு நாட்களில் தினேசின் பெற்றோரும் தங்கையும் காரில் வந்திறங்க, இவள் கதவோரத்தில் நின்று துடிப்புடன் பார்க்கிறாள். அவனின் கண்களும் இவளைத் தேடிக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி மனதை நிறைக்க, அவர்களை உள்ளே வரும்படி பெற்றோர் அழைத்துவர, அவர்களின் இயல்பு எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அதன்பின் திருமணம் வரையும் அவன் போனில் இவளுடன் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் தன்னை வந்து பார்க்க ஆசை கொள்ள மாட்டானா என இவள் மனம் ஏங்குகிறது. மீண்டும் இவள் அவனைப் பார்த்தது திருமணத்தன்றுதான். இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

அந்த மூன்று மாதங்கள் இருவரும் சினிமா, கசோரினாக் கடற்கரை, காங்கேசன்துறைக் கடற்கரை, பூங்கா என்று போனதும் குளித்ததும், வீட்டுக்கு தொலைக்காட்சி, குளிரூட்டி எல்லாம் வாங்கிக்கொடுத்து இவளை மகிழ்வித்ததும் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 03:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

கதையின்  மிச்ச சொச்சம் எங்க

 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா, கண்மணி அக்கா, சுவி அண்ணா

22 hours ago, suvy said:

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

நானும் மறந்ததாலதான் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.

😀🤣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.