Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம்  எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அப்பா, அயலட்டை எண்டு பார்ப்பது என் விசர்த்தனம்.

இன்றே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திடவேணும் என்று எண்ணியபடி கட்டிலை விட்டு எழுந்தாள் ஜீவா. 

தாயார் சமையலறையில் சம்பல் செய்துகொண்டிருப்பது சம்பல் வாசத்திலேயே தெரிந்தது. தானும் வெள்ளண எழுந்து தாய்க்கு உதவி செய்யாததை இட்டு மனதிலொரு குற்ற உணர்வும் எட்டிப்பார்த்தது. ஆனாலும் அவளின் பிரச்சனை அதைவிடப் பெரிதே என்றும் திரும்பக் கேள்வி கேட்டது. அம்மாவிடம் விஷயத்தைக் கதைத்துப் பார்ப்போமா என்று எண்ணினாலும் ஒரு தயக்கமும் இருந்துகொண்டேதான் இருந்தது. எதற்கும் வாகீசனிடம் கதைத்துவிட்டே பெற்றோருடன் கதைக்கலாம் என்று எண்ணியபடி குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ஜீவா. வாகீசன் இவளிடம் அக்கறை கொண்ட ஒரு நல்ல நண்பன். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாகப் படித்ததில் உரிமையுடன் அவள் வீடுவரை வந்து கதைக்கும் உரிமையும் பெற்றவன்.

 

முன்னர் பொதுக் கிணற்றடியில் இவர்கள் வளவுக்குள் கட்டியிருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு நீர் நிரப்பிக் குளிப்பது. அறையுடன் சேர்ந்த இந்த பாத்ரூம் ரொய்லற் கட்டி எட்டு ஆண்டுகள் தான். அதுவும் இவள் திருமணம் நிட்சயமானதும் வெளிநாட்டிலிருந்து வரும் மாப்பிள்ளைக்கு வசதியாக இருக்கட்டும் என்று தந்தைதான் கட்டுவித்தது. அப்பவே 75 ஆயிரம் ரூபா முடிந்தது. அப்பாவுக்கு காசுப்  பிரச்சனை இருக்கேக்குள்ள இது தேவைதானா என இவளும் ஆரம்பத்தில் வேண்டாம் அப்பா என்று சொல்லிப் பார்த்தாள் தான். ஆனாலும் அது வெளிநாட்டில பிறந்த பிள்ளையாம். வந்து மூன்று மாதங்கள் நிக்கேக்குள்ள நின்மதியா மலசலம் கழிக்க வேணுமெல்லோ என்றவுடன் இவளுக்கும் சரி என்று பட பேசாமல் இருந்துவிட்டாள். இன்றுவரை அவள் அறையுடன் சேர்த்துக் காட்டியதை இவளைத் வேறு யாரும் பயன்படுத்தவில்லை.

நினைவுகளைக் கலைத்துவிட்டு குளித்து முழுகி வேலைக்குப் போவதற்கான சேலையையும் கட்டிக்கொண்டு குசினிக்குள் எட்டிப்  பார்த்தாள். இவளின் குரல் கேட்குமுன்னரே இவள் வருகையை உணர்ந்த தாய் இடியப்பம் போட்ட தட்டை இவளுக்கு நீட்ட, இவள் வாங்கிக்கொண்டு மேசையில் போய் அமர்ந்து உண்ணவாரம்பித்தாள்.

பின்னாலேயே இவளின் சாப்பாட்டுப் பெட்டியைக் கொண்டு வந்து இவளருகில் வைத்தபடி “உருளைக்கிழங்குப் பிரட்டலும் முட்டையும் பொரிச்சு வச்சிருக்கிறன்” என்கிறார். 

“நீங்கள் கஷ்டப்படாதேங்கோ எண்டு எத்தனை தரம் சொல்லிப்போட்டன். பாங்குக்குப் பக்கத்தில எத்தினை சாப்பாட்டுக்கடை இருக்கம்மா. அங்க வாங்கிச் சாப்பிடுவன் தானே” என அலுத்துக்கொண்டாள். 

இவள் வேலை செய்வது வங்கி ஒன்றில். ஒரு மணிநேர பிரேக்கில் அருணுடன் வெளியே சென்று உண்பது இப்போதெல்லாம் அவளுக்கு மனத்துக்குப் பிடித்ததொன்றாகி இருந்தது. அதற்குள் அம்மா சாப்பாடு தந்து அதை வீணாகக் கொட்டிவிட்டு சாப்பிட்டதாக அம்மாவுக்கு நடிக்கவேணும் என்று எண்ண உணவு விரயமாகிறதே என்பதுடன் அம்மாவை ஏமாற்றுகிறோம் என்னும் குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, தயவுசெய்து இனிமேல் எனக்குச் சாப்பாடு கட்ட வேண்டாம். கட்டினாலும் நான் கொண்டுபோக மாட்டன். ஆறின சாப்பாட்டைச் சாப்பிட ஏலாதம்மா என்று கூறுபவளை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு தாய் அகன்றாள். 

தந்தை தோட்டத்து மரக்கறிகளைச் சந்தைக்கு கொண்டுபோய் விற்றுவிட்டு வீட்டுக்கு வரப் பத்துமணி ஆகும். தான் வெளிநாடு சென்றாலாவது அப்பாவைத்த தோட்டம் செய்யாதேங்கோ என்று சொல்லலாம் என்று இவள் எண்ணியிருந்ததெல்லாம் கனவாகவே போய்விட்டதே என எண்ணியவுடன் துக்கமும் வந்து நெஞ்சை அடைப்பதுபோல் இருக்க என்ன அக்கா கிளம்பீடியே” என்றபடி வந்த தங்கைக்கு “ஓம்” என்று மட்டும்சொல்லிக்கொண்டு தன் ஸ்கூட்டியை வெளியே எடுத்து அதைக் கிளப்பிவிட்டு ஏறி அமர்ந்தாள்.

 

தொடரும் ..

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 12
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வந்து கருத்துக்களைப் பகிர்ந்த புங்கையூரன், யாயினி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி 

7 hours ago, யாயினி said:

கொஞ்சம் நீண்ட காலத்திற்கு பிறகு தொடருறீங்கள்.தொடருங்கள்..✍️👋

அதனால் என்ன. இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சுமே தோட்டம் எல்லாம் முடிந்துவிட்டது  போல.

தொடருங்கள்.

தோட்டம் வெளியே முடிந்துவிட்டது. conservertry தொடர்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை காலம் எழுத மனமே வரவில்லை. சரி எழுதுவோம் என்று வலுக்காட்டாயமாக எழுதியது.

முக்கியமான விசயம் போல இருக்கு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் அசத்துங்கோ.......!  👍

உங்களைப் போல உற்சாகம் தருபவர்கள் இருக்கும் போது ..

8 hours ago, கிருபன் said:

முக்கியமான விசயம் போல இருக்கு!

அதில்லை. கன நாட்களாக எழுதவே இல்லை. எனது நூலும் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டது என்றதும் மீண்டும் எழுதவேண்டும் என்ற ஒரு வேகம் அவ்வளவே. 

1 hour ago, ரதி said:

 

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கோ 

 

விடமாட்டேன் ரதி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கை மிச்சத்தை இன்னும் கானோம்.தொடருங்கள் ஆவலுடன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகுதியையும் எழுதுங்கள்  ஆவலுடன் காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தினேசின் படத்தை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜீவா. பார்க்கப் பார்க்க உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓடின. இன்னும் பத்தே பத்து நாட்களில் அவளுக்கும் தினேசுக்கும் திருமணம். இரண்டு நாட்களில் தினேசின் குடும்பத்தவர் வெளிநாட்டிலிருந்து வருகின்றனர். இவள் பெற்றோருக்கு அளவில்லாத மகிழ்சிதான். வெளிநாட்டில் பிறந்த பெடியன். பொருத்தம் பாக்கிற விநாசித்தம்பியர் தான் இவரைக் கோவிலில் கண்டபோது கேட்டது. கொக்குவில் மாப்பிளை ஒண்டு வந்திருக்கு. தாய் தகப்பன் வெளிநாட்டில. ஒரேயொரு தங்கச்சி. அதுவும் கலியாணம் கட்டீட்டுதாம். நல்ல ஆக்கள். பெடிக்கு முப்பது வயது. சோலி சுரட்டில்லை என்றதும் கணபதிப்பிள்ளைக்கும் ஆசை எட்டிப்பார்த்ததுதான்.

என்ர மகளுக்கு  23 தான் அண்ணை. வயது கொஞ்சம் கூடிப்போச்சுப் போல என்று  இழுக்க, நல்ல சம்பந்தம் எண்டதாலைதான் உனக்குச் சொன்னனான். வெளிநாட்டு மாப்பிளைக்கு உங்க கியூவில் நிக்கிது சனம். எனக்கும் மனிசிக்கும் 12  வயது வித்தியாசம். நாங்கள் சந்தோசமா வாழேல்லையே? ஏழு வயதெல்லாம் ஒரு பிரச்சனையே என்றார்.  விநாசித்தம்பியரின் முகத்தை முறிக்காமல் எதுக்கும் பிள்ளை ஓம் எண்டால் எனக்குப் பிரச்சனை இல்லை. நான் பிள்ளையிட்டையும் மனிசியிட்டையும் கதைச்சிட்டு நாளைக்கு முடிவைச் சொல்லட்டோ  என்று கேட்க, நாளைக்குச் சொல்லிப்போடு. தவறினால் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது சொல்லிப்போட்டன் என்றபடி விநாசித் தம்பியர் செல்செல்கிறார்.

எதுக்கும் இதை விடக்கூடாது என்று மனதில் எண்ணியபடி வீட்டுக்கு வந்த கணபதி, மனைவியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறார். வெளிநாட்டுச் சம்மந்தம் எண்டால் ஏன் விடுவானப்பா? சாதகத்தை உடன கொண்டுபோய் சாத்திரியிட்டைக் குடுங்கோ என்றவுடன், எனக்கும் உனக்கும் எட்டு வயது வித்தியாசம். உன்ர கொப்பர் ஏமாத்திக் கட்டி வச்சிட்டார் என்று நீ அப்பப்ப எனக்குச் சொல்லுறணியெல்லோ. அதுதான் இது ஏழு வயது வித்தியாசம். எதுக்கும் பிள்ளையிட்டைக் கேட்டிட்டு சாதகத்தைக் குடுப்பம்” என்கிறார். 

எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டில்லை. முதல்ல சாதகத்தைக் குடுங்கோ. பொருத்தம் எண்டால் பெடியின்ர படத்தைக் கேளுங்கோ. ஜீவான்ர படத்தையும் குடுப்பம். பெடியனும் ஓமெண்டால் பிறகு இவளிட்டைக் கதைச்சு சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு என்று கோமதி கூறியவுடன் எல்லாம் கடகடவென்று நடந்து முடிந்து, போனிலும் ஒரு மாதமாக இருவரும் பேசி, இன்னும் இரண்டுநாளில் தினேசை நேரில் பார்க்கலாம் என்றவரை வந்துநிற்க, எப்ப அந்த நாள் வரும் என்ற ஆசையுடன் காத்திருக்கிறாள் ஜீவா.

இரண்டு நாட்களில் தினேசின் பெற்றோரும் தங்கையும் காரில் வந்திறங்க, இவள் கதவோரத்தில் நின்று துடிப்புடன் பார்க்கிறாள். அவனின் கண்களும் இவளைத் தேடிக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி மனதை நிறைக்க, அவர்களை உள்ளே வரும்படி பெற்றோர் அழைத்துவர, அவர்களின் இயல்பு எல்லோருக்கும் பிடித்துப் போகிறது. அதன்பின் திருமணம் வரையும் அவன் போனில் இவளுடன் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் தன்னை வந்து பார்க்க ஆசை கொள்ள மாட்டானா என இவள் மனம் ஏங்குகிறது. மீண்டும் இவள் அவனைப் பார்த்தது திருமணத்தன்றுதான். இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

அந்த மூன்று மாதங்கள் இருவரும் சினிமா, கசோரினாக் கடற்கரை, காங்கேசன்துறைக் கடற்கரை, பூங்கா என்று போனதும் குளித்ததும், வீட்டுக்கு தொலைக்காட்சி, குளிரூட்டி எல்லாம் வாங்கிக்கொடுத்து இவளை மகிழ்வித்ததும் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 03:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவைப்பிரியன், நிலாமதி அக்கா

கதையின்  மிச்ச சொச்சம் எங்க

 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா, கண்மணி அக்கா, சுவி அண்ணா

22 hours ago, suvy said:

நானும் கதையில ஜீவா ஆணா பெண்ணா என்பதையே மறந்துட்டன்..... பின் முதலில் இருந்து.....அடுத்த பகுதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு தரம் படிக்க வேணுமோ தெரியாது......!  😴 

நானும் மறந்ததாலதான் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்.

😀🤣

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின. அவன் நேரம் தவறாதவன். ஒருநாள் கூடப் பிந்தி வந்ததில்லை. இன்று அவள் தன் முடிவைக் கூறுவதாகவும் சொல்லியிருந்தாள். ஆனால் அவன் ஏன் இன்னும் வரவில்லை என்னும் கேள்வி மனதைப் பிசைய வைத்தது. அவனுக்குப் போன் செய்தபோது போன் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஏதேதோ எண்ணி மனம் பரபரப்பும் பயமும் கொண்டது. ஏதும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ? அவனின் நண்பன் ரவியைக்கூடக் காணவில்லை. இருவரும் எங்காவது போய்விட்டார்களோ என்று மனம் எண்ண, சரி பார்ப்போம் என்று எண்ணியபடி வேலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். ஆனாலும் ஒவ்வொரு நிமிடமும் அருணின்  வருகையின்மை மனதுள் எத்தனையோ சந்தேகங்களை எழுப்பியபடியேதான் இருக்க வலிந்து மனதைத் திடப்படுத்தி வேலையைச் செய்துகொண்டிருந்தாள்.

மதிய உணவு வேளையில் அருண் இல்லாமல் அம்மாவின் உணவும் இல்லாமல் தனியாக வெளியே சென்று கடையில் உண்பதற்கு மனமின்றி மீண்டும் ஒருமுறை அருணுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாள். இம்முறை அவனின் தொலைபேசி ஒலித்தது. ஆனால் அவன் எடுக்கவில்லை.

என்ன நடந்தது இவனுக்கு? என் அழைப்புக்குக் கூடப் பதில் இல்லை என்று எண்ணியவளாய் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாலும் மனம் ஒத்துழைக்க மறுத்தது. இத்தனை ஆசையாக என்  முடிவை அருணுக்குச் சொல்லுவோம் என்று வந்தால் அவன் ஏமாற்றி விட்டானே என்று அவனில் கோபமும் ஏற்பட வேறு வழியே இன்றித் தன் வேலையில் மனதைத் திருப்ப முனைந்தாள்.

உணவு இடைவேளையின் பின்னரே அருணின் நண்பன் ரவி வந்து சேர்ந்தான். இவளைக் கண்டவுடன் மகிழ்வாய் வணக்கம் சொல்பவன் இன்று இவளைக் காணாததுபோல் அப்பால் செல்ல இவளுக்கு ஏன் இவனும் என்னைக் கடுப்பேற்றுகிறான் என்று எண்ணியபடி

 “முரளி! ஏன் இன்று காலை உங்களைக் காணவில்லை. உங்கள் நண்பரையும் காணவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல் செல்கிறீர்கள்” என்றாள்  ஆதங்கத்துடன்.

“ஏதோ யோசனையில் உன்னைக் கவனிக்கவில்லை ஜீவா” என்றவன் கதிரையில் அமர “ஏன்அருண் இன்று வேலைக்கு வரவில்லை” என்கிறாள்.

“ அவன் உன்னிடம் கூறவில்லையா? இன்று மாலை அவனுக்கு கலியாணம் நிட்சயம் செய்யப் போகிறார்கள். அதுதான் பெண்ணுக்குச் சேலையும் ஒரு சங்கிலியும் வாங்கவேணும் என்று என்னையும் வரச் சொன்னவன். அங்க போட்டு இப்பத்தான் வாறன்” என்று அவன் கூற, “ ஓ “ என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட்டு தான் இருக்கைக்கு வந்தவளின்  கண்களில் அவளை அறியாது கண்ணீர் முட்டியது.

மற்றவர் பார்க்காதிருக்க தான் லேஞ்சியினால் கண்களைத் துடைத்துக் கொண்டவளுக்கு எப்படித் தன்னை அடக்கிக்கொள்வது என்று இருந்தது. மனம் எங்கும் வெறுமை சூழந்து நெஞ்சக் கூட்டில் எதுவுமே இல்லாததுபோல் தோன்ற ரொயிலற்றுக்குள் போய் அழுதுவிட்டு வரவேண்டும் போல இருந்த எண்ணத்தையும் அடக்கிக்கொண்டு முன்னாலிருந்த கணனியைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

எலியைப் பற்றியிருந்த கைகள் தொய்ந்துவிட்டதாகத் தோன்ற இரு கைகளையும் சேர்த்துப் பிசைந்து வலுவேற்றிக்கொண்டாள். ஆனாலும் தொய்ந்துபோயுள்ள மனதையும் கால்களையும் எப்படித் தேற்றுவது என்று ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் என்னிடம் சும்மாதான் பழகினானா அருண்? நான் தான் தேவையில்லாமல் அவன் என்னிடம் காதலாய் இருக்கிறான் என்று எண்ணிவிட்டேனா? இல்லையே என்னைப் பார்த்ததும் அவன் கண்களில் ஏற்படும் மலர்வு பொய்யில்லையே.

“உப்பிடியே எத்தனை நாளைக்கு தினேஷ் வருவான் வருவான் என்று பார்த்துக்கொண்டே இருக்கப்போறீர்? ஓம் எண்டு ஒரு வார்த்தை சொல்லும் கலியாணத்துக்கு நாள் பார்த்திடுவன்இப்பிடி எல்லாம் கதைச்சதுகூடப் பகிடிக்குத் தானோ? நான் தான் அதை எனக்கு சாதாகமாய் எண்ணிட்டனோ என என்னும்போதே அவளுக்கு அவமானமாக இருந்தது.

மூன்றே மாதங்கள் தான் இன்னொருத்தனோட வாழ்ந்திருந்தாலும் ஏற்கனவே திருமணமான ஒருத்தியை திருமணம் செய்ய எந்த ஆம்பிளைதான் ஆசைப்படுவான். அதை நான் எல்லோ யோசிச்சிருக்க வேணும். அருண் விழுந்துவிழுந்து என்னோட கதைச்சதைக் கண்டு என மனம் தான் தப்புக்கணக்குப் போட்டிட்டிது. அவன் ஆசை கொண்டாலுமே அவனின் தாயார் சம்மதிப்பாவோ எண்டு யோசிச்சுப்போடு என்ர ஆசையை வளர்த்திருக்க வேணும். பெண்கள்தானே பெண்களுக்கு எதிரி இந்த சமூகத்தில என எண்ணியவளுக்கு இப்போது மனம் கொஞ்சம் சமப்பட்டிருந்தது. இருந்தாலும் அருண் தன்னைக் காதலிக்கவில்லை என்பதும் தன் வாழ்வு கடைசிவரை இப்பிடியே தானா என எண்ணப் பெரும் சலிப்பொன்றும் மனதில் எழ, இன்று இனி என்னால் இதைப்பற்றி எண்ணியபடி வேலையில் கவனம் செலுத்த முடியாது என எண்ணியவள், பொறுப்பாளரின் அறைக்குச் சென்று தனக்கு முடியாமல் இருப்பதாகக் கூறி அரை நாள் விடுப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

வீட்டுக்கு இப்ப செல்ல முடியாது. என்ன என்று அம்மா தூலாவும் தூலாவலில் நான் அம்மா முன் அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என எண்ணியபடி கால் போனபோக்கில் நடக்கத் தொடங்கினாள்.

யாழ்ப்பாணம் சனநெரிசலில் சிக்கித் தவித்தபடி இருக்க ஆஸ்பத்திரி வீதியில் ஊரிப்பட்ட ஓட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களும் வரிசையாய் அடுக்கி நிறுத்தப்பட்டிருந்தது. அருண் கூட தன் மோட்டார் சைக்கிளில் மிக அழகாக இருந்து ஓட்டிவருவான். தானும் அவன் தோளைப் பிடித்தபடியோ அல்லது முதுகோடு அணைத்தபடி போகவேண்டும் என எண்ணியது மனதில் எழ, ஒருவித ஏக்கமும் கூச்சமும் ஏற்பட பெருமூச்சை நன்றாக விட்டு தன்னை அசுவாசப் படுத்திக் கொண்டாள்.

தான் ஸ்கூட்டியை வேலை செய்யுமிடத்திலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வர, தன்னை எண்ணி நொந்தபடி மீண்டும் வேலைத் தலத்துக்கு வந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சோர்வுடன் வீடு நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

வீதியால் வரும்போது பலவற்றையும் பார்த்து இரசித்தபடி வருபவளுக்கு இன்று ஸ்கூட்டியே பெரும் பாரமாக இருந்தது. அம்மாவுக்கு என்ன சொல்லிச் சமாளிப்பது என்றுகூடப் புரியவில்லை. எப்படித்தான் வீட்டுக்குவந்து சேர்ந்தாள் என்று கூடப் புரியவில்லை. எப்போதும் பூட்டிக் கிடக்கும் கேற் திறந்தே கிடக்க அம்மா பூட்ட மறந்துபோனா போல என்று எண்ணியவளாய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வர டோனி பாய்ந்து வந்து இவள் மேல் தாவியது.

நான் வெள்ளன வந்தது உனக்குச் சந்தோசமே என்றபடி அதை வருடிக் கொடுத்தபடி உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அருண் வடிவில்.

வா ஜீவா. இவர் உன்னோட வேலை செய்யிறவராம். இவ அவற்றை தாய். இவருக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். தன்ர மகனுக்கு உன்னை செய்து தரச் சம்மதமோ எண்டு கேக்கிறா. உன்னைக் கேட்டுத்தான் சொல்லவேணும் எண்டு சொன்னனான். ஜீவா வருமட்டும் தாங்கள் இருந்து கேட்டுவிட்டே போறம் எண்டிட்டுக் கதைச்சுக்கொண்டு இருக்கிறம் என்று வாயெல்லாம் பல்லாகத் தாய் கூற, மனதில் பொங்கி எழுந்த அடங்கமாட்டாத மகிழ்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கியபடி ..

“ அம்மா எனக்கு யாரையுமே இன்னொருதடவை கலியாணம் கட்ட விருப்பமில்லை” என்கிறாள்.

கதிரையில் இருந்த அருண் பாதைப்புடன் எழுந்து

“ ஜீவா அவசரப்படாதையும். நான் அம்மாட்டை எல்லா விடயமும் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்தனான். அவவுக்கு முழுக்க சம்மதம். உமக்கு சப்றைசா இருக்கவேணும் எண்டுதான் நீர் போன் செய்ததுக்கும் எடுக்கேல்லை”

“அப்ப உங்கள் அம்மா வேண்டாம் என்றால் வந்திருக்கவே மாட்டியள். அப்பிடித்தானே அருண்”

“பிள்ளை ஜீவா! அருண் எனக்கு ஒரே பிள்ளை. அடிக்கடி உம்மைப்பற்றிக் கதைக்கிறவன். இப்ப காலம் மாறிப் போச்சு. பிள்ளையளின்ர சந்தோசத்துக்கு நாங்கள் மறுப்புத் தெரிவிச்சு என்னத்தைக் காணப்போறம். எனக்கு உம்மைப் பார்க்க முதலே அருண் சொல்லுறதைக் கேட்டு உம்மைப் பிடிச்சுப்போச்சு. இனி உம்மடை விருப்பம்”.  

“அத்தை எனக்கும் அருணைச் செய்ய விருப்பம் தான். ஆனால் விடியத் தொடக்கம் போனை நிப்பாட்டி வச்சு என்னை டென்சன் ஆக்கினதுக்கு பதிலுக்கு நானும் அப்பிடிக் கதைச்சனான்” என்றபடி மகிழ்வுடன் நிமிர்ந்து அருணைப் பார்க்கிறாள்.  

 

                           நிறைவுற்றது

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தினேசுக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.......!

கதை நல்லாயிருக்கு சகோதரி......!

இந்த அழகான கதையை இனி முதலில் இருந்து வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.......!  😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2021 at 13:12, suvy said:

தினேசுக்கும் ஜீவாவுக்கும் வாழ்த்துக்கள்.......!

கதை நல்லாயிருக்கு சகோதரி......!

இந்த அழகான கதையை இனி முதலில் இருந்து வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.......!  😂

தினேசா ஆ ஆ .. .. .. வாசிச்சு முடிச்சதுக்கு நன்றி அண்ணா 😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி முடிஞ்சுது.ஜிவா மாதிரி எமக்கும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

தினேஷ் என்ன ஆனார் .....????

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின.

இடையில் கொஞ்சம் விடுபட்டது போல் இருக்கிறது . முடிவு நன்று . 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

அப்பாடா ஒரு மாதிரி முடிஞ்சுது.ஜிவா மாதிரி எமக்கும் மகிழ்ச்சி.

😂😀

4 hours ago, நிலாமதி said:

இவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அவனின் பெற்றோர் திரும்ப வெளிநாடு போனபின்னர்தான் இவளால் இயல்பாக இருக்க முடிந்தது. அவனின் பெற்றோர் போனபின்னர் தான் இவனும் அவளுடன் கொஞ்சம் ஆசையாக இருந்தது.

தினேஷ் என்ன ஆனார் .....????

இவள் இன்று வங்கிக்கு வந்ததும் ஆர்வமாக கண்கள் அருணைத் தேடின.

இடையில் கொஞ்சம் விடுபட்டது போல் இருக்கிறது . முடிவு நன்று . 

நீங்கள் தான் கவனித்திருக்கிறீர்கள். தினேஷ் மீண்டும் வரவே இல்லை. தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Posts

  • வணக்கம் வாத்தியார்.........! பெண் : செந்தாழம் பூவை கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா… சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ…. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்…. பெண் : தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு, தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூமஞ்சமும் ….தேன்கின்னமும் நீ தேடி வா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா…..! --- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்---
  • அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் சீனாவின் உளவு பலூன் : பின் தொடர்கிறது பெண்டகன் By SETHU 03 FEB, 2023 | 09:41 AM   அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையின் பேரில், இந்த பலூனை சுட்டுவீழ்த்துவது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.  ஆனால், இவ்வாறு  செய்தால் தரையிலுள்ள பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகின்றனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   பல படைத்தளங்கள் மற்றும் அணுவாயுத ஏவுகணைகள் உள்ள அமெரிக்காவின் வடமேற்குப் பிராந்தியத்தில் இந்த பலூன் பறந்துள்ளது. https://www.virakesari.lk/article/147306
  • தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை By SETHU 03 FEB, 2023 | 02:45 PM தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ குக்கு  இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சோ குக், 2019 செப்டெம்பர் முதல் 2019 ஒக்டோபர் வரை நீதியமைச்சராக பதவி வகித்தார்.  எதிர்காலத்தில், தென் கொரியாவின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.  இந்நிலையில், தனது மகனும், மகளும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவதற்காக போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் சோ குக் குற்றவாளியாக காணப்பட்டார்.  இதனால் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும்,  60 லட்சம் வொன் (5000 டொலர்) அபராதமும் விதித்து சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. https://www.virakesari.lk/article/147364
  • இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில் ரணிலினால் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியுமா? பட மூலாதாரம்,PMD SRILANKA 55 நிமிடங்களுக்கு முன்னர் சுதந்திர இலங்கையின் 75 வருட காலமாக தமிழர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலக்கேடு இன்றைய தினமாகும். நாட்டின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி உறுதி வழங்கியிருந்தார்.   தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதிமொழியை அன்றைய தினம் வழங்கியிருந்தார். 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி இவ்வாறு உறுதி வழங்கிய நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன?2 பிப்ரவரி 2023 ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?2 மணி நேரங்களுக்கு முன்னர் வட மாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூரே இயங்க முடியாதா? - பிபிசி கள நிலவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறான நிலையில், வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலான இறுதி சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட பலர், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராகவே இருந்தனர். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பல கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணித்திருந்தனர். பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த டொலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகள் மாநாட்டை புறக்கணித்தனர். முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான மஹிந்த ராஜபக்ஸவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட போதிலும், கட்சி சார்பில் பங்குப்பற்றியவர்கள் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமது எதிர்ப்புக்களை முன்வைத்தனர். பட மூலாதாரம்,PMD SRILANKA மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில், 13வது திருத்தத்திற்கு அப்பாற் சென்று, 13 பிளஸ் அதிகாரங்களை வழங்குவதாக உறுதி வழங்கிய போதிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டை பிளவுப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறுகின்றார். ''13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தக்கூடாது என நான் கூறினேன். இது நாட்டை பிளவுப்படுத்தும் என்பதற்காகவே இதுவரை இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் இதனை நடைமுறைப்படுத்தினால், நிச்சயமாக நாடு பிளவுப்படும். அவரும் வரலாற்றில் இணைவார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளமையினால், அதனை அமல்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாக ஜனாதிபதி கூறினார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கக்கூடாது என நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்" என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ''இந்த ஆண்டு பெப்ரவரி 4ம் தேதிக்கு முன்னர், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியிருந்தார். எனினும், இதுவரை அவர் எதையும் செய்யவில்லை. அது குறித்து எமது கவலையை வெளியிட்டோம். எனினும், இந்த விடயங்களை தான் நிச்சயமாக செய்வேன் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் இருக்கின்றமையினால், அதனை அமல்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட தனக்கு உள்ளதாக அவர் கூறுகின்றார். அதனால், அதனை தான் நிறைவேற்றுவேன் என கூறினார். காணி விடுவிப்பு தொடர்பிலும் விரிவாக தெளிவூட்டினார். இதனை ஒரு நாளில் நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என நான் கூறினேன். இதனை அமலுக்கு கொண்டு வருவதற்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றமையினால், ஒரு நாள் போதுமானது.:" என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,PMD SRILANKA சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீது நம்பிக்கை இல்லை என புளொட், டெலோ போன்ற கட்சிகள் கூறி வருகின்றன. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அவதானிப்பதை போன்று, மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவதானிக்க ஜனாதிபதி தவறியுள்ளதாக கூறி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர், மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கினார். அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்தத்தை தான் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இறுதியாக நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் உறுதியளித்துள்ளார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு, யாராவது 22வது திருத்தமொன்றை புதிதாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, 13வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் என கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, அவ்வாறன்றி தன்மீது கோபப்படுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறியுள்ளார். பட மூலாதாரம்,PMD SRILANKA ''நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,PMD SRILANKA மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை எந்த வகையிலும் அமல்படுத்தக்கூடாது என மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மகாநாயக்க தேரர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் சுயாதீனம், ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்து, நாட்டில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர் பட மூலாதாரம்,PMD SRILANKA போலீஸ் அதிகாரங்கள், காணி, புராதன வரலாற்று சின்னங்கள், மத அமைப்புக்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாக, நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எதிர்நோக்கும் பாதகமான நிலைமைகளை கருத்திற் கொண்டு, இதுவரை காலம் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த தவிர்த்துக்கொண்டதாகவும் மகாநாயக்க தேரர்கள் கூறுகின்றனர். மத்திய அரசாங்கத்தின் இறையான்மையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைடுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையானது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமையும் எனவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடுகின்றனர். பொருளாதார நெருக்கடியினால் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளுக்கு இணங்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத்தன்மையை இல்லாது செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கூறியுள்ளனர். சுதந்திர தினத்தில் 13வது திருத்தம் அமலாகுமா? அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாக மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,SIVARAJA ''இது நாட்டின் அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளது. அதனால் அமல்படுத்த முடியும் என கூறுவாரே தவிர, புதிதாக ஒன்றும் சொல்ல மாட்டார். 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என சொல்லமாட்டார். 13 தொடர்பில் புதிய அறிவிப்புக்கள் வராது. இப்போதுள்ளதை அமல்படுத்துவேன் என்பார். ஆனால், 13 இப்போது இருக்கின்றது. போலீஸ், காணி அதிகாரங்களை கொடுப்போம் என்ற அறிவிப்பு வராது என எதிர்பார்க்கின்றேன்; போலீஸ் காணி, அதிகாரங்களை வழங்குவேன் என்றே முன்பு சொல்ல திட்டமிட்டார். எனினும், மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், அதனை அவர் சொல்ல மாட்டார். மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அந்த அதிகாரங்கள் அமலாக்கப்படும். மகாநாயக்க தேரரை ஜனாதிபதி நேற்றைய தினம் சந்தித்தார். 13ஐ அமல்படுத்துவதன் ஊடாக எந்த பிரச்சினையும் இல்லை என மகாநாயக்க தேரர்களுக்கு அவர் தெளிவூட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பு, இறையான்மைக்கு நான் பொறுப்பு என கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள், 13வது திருத்தத்தை அமல்படுத்த ஆதரவு இல்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பத்தில் ஜனாதிபதி அக்ராசன உரையை நிகழ்த்துவார். அப்போது 13வது திருத்தத்தை அமல்படுத்தும் அறிவிப்பை அவர் வெளியிடலாம். அதனை கொள்கை அளவில் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்" என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cd1j8g2y25do
  • மாண்புமிகு புட்டின் ஐயா 😍🙏🏼 சொல்லியிருந்தாலும்  நாட்டுக்கு ஆபத்தான விசயத்தை உடனை சொல்லாமல்  இப்ப கம்பு சுத்தினால் என்ன அர்த்தம்????  ஜோஞ்சனுக்கு காசாம் கட்டுரையாம் நேரமில்லையாம்.....இளம் பெட்டையாய் தேடி கலியாணம் கட்ட நேரமிருக்கு..அவங்கள்  ஒரு தரம் கம்பு சுத்தினால் தம்பியர் நூறு தரம் கம்பு சுத்துவாராம்..... 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.