Jump to content

சுமந்திரனுக்கு எதிராக போராட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

திண்ட சோறும், அடிச்ச பியரும் சமிபாடு அடைய  வேண்டும் அல்லவா 🤣

ஓகோ.....

மூண்டு நேரமும் வாய்க்கு வக்கணையாய் வடிச்சுக்கொண்டித் தந்தவர் சொல்லுறார் கேளுங்கோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

ஓகோ.....

மூண்டு நேரமும் வாய்க்கு வக்கணையாய் வடிச்சுக்கொண்டித் தந்தவர் சொல்லுறார் கேளுங்கோ :cool:

அநேகமான எம்மவர்கள் இப்படி தான் வெளிநாட்டில் பணம் மரத்தில் இருந்து கொட்டுது அல்லது பனிபோல் வானத்தில் இருந்து பறந்து வருகுது பொறுக்கி எடுத்து வாழ்கின்றனர் என்று நினைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

குருக்கள் சமூகமா..?! சில குருக்கள்மார்.. அவங்க இந்துக்கலாசார அமைச்சிடம் இருந்து காசு வாங்க அப்படி ஆமாப் போடுறாங்க. ஏன் கம்பன் கழக ஜெயராஜ் பொன்னாடை போர்க்கல்ல.. காசோலை வாங்க.

அப்படித்தான் குருநகரிலும் ஒரு கூட்டம் இருக்குது. அதனால்.. மொத்தக் குருநகர் மக்களும் என்றாகாது. 

யாழ் நகர கட்டமைப்பு தொடர்பாக நெடுக்ஸ்க்கு பெரிதாக எதுவுமே தெரியாது என்பது என் கணிப்பு.

அதே போன்று ஈபிடிபி நின்று பிடிப்பதற்கான அடிப்படை சமூக உளவியல் காரணங்கள் எதும் உங்களுக்கு புரியவில்லை/தெரியவில்லை  என நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

80,90 களில் புலம் பெயர்ந்த baby boomer அங்கிள்மார்களின்  சிந்தனை முறையில் மாற்றமில்லை,இப்பவும்  புலம் பெயர்ந்த தேசங்களின் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் தாயாக நிலைமைகளை பாவிப்பது சல்( அரட்டை) அடிப்பதற்காகவே. இருந்து, இருந்து விட்டு சில டாலர்களை தாயகம் நோக்கி வீசிவிடுவார்கள். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

தெரியாது என்றே வைச்சுக் கொள்ளுவம். நீங்கள் மேற்குறிப்பிட்ட இரண்டையும் விபரியுங்கள். அதற்கு பின் யாருக்கு எது தெரியவில்லை என்பதை இனங்காணலாம். வாசகர்களுக்கும் பயனளிக்கும். அதைவிடுத்து.. இப்படி மொட்டையா சூட்சுமமா கருத்துச் சொல்லி பயனில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

தெரியாது என்றே வைச்சுக் கொள்ளுவம். நீங்கள் மேற்குறிப்பிட்ட இரண்டையும் விபரியுங்கள். அதற்கு பின் யாருக்கு எது தெரியவில்லை என்பதை இனங்காணலாம். வாசகர்களுக்கும் பயனளிக்கும். அதைவிடுத்து.. இப்படி மொட்டையா சூட்சுமமா கருத்துச் சொல்லி பயனில்லை. 

சூட்சுமமாகச் சொல்லவில்லை. 

நீங்கள் தெளிவான தகவலோ அல்லது நேரடி அனுபவமோ இன்றி செவிவழிச் செய்தியின்பால் ஒரு மேலோட்டமாக கருத்துரைக்கிறீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். 

எனது கருத்து பிழை என்றால் குருநகர் மக்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை கூறுங்கள். சரியென்றால் சரியென்று கூறுகிறேன. இல்லாவிட்டால் உங்கள் முதல் கருத்தைத் திருத்தி விடுங்கள். 

EPDPயின் கோட்டை என்று அம்மக்களை பொத்தாம்பொதுவாக  கூறி இழிவுபடுத்தாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

EPDPயின் கோட்டை என்று அம்மக்களை பொத்தாம்பொதுவாக  கூறி இழிவுபடுத்தாதீர்கள். 

தீவகமும் பொதுவாக ஈபிடிபியின் கோட்டை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு.. ஏனெனில்.. ஈபிடிபிக்கு பொதுவாக அங்கு விழும் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்ததால்.

யாழ் நகரை அண்டி.. பார்த்தால்.. குருநகர்.. பாசையூர் சார்ந்து ஈபிடிபிக்கு விழும் வாக்கு சதவீதம் அதிகம். இதே நல்லூர் உட்பட்ட இதர பகுதிகளில் விழும் வாக்கு வெகு குறைவாகும்.

இந்த அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி குருநகர் மக்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லவில்லை. அப்படி கருத்துப் புரியப்பட்டிருந்தால்.. எங்கள் கருத்துக்காக அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரலாம். அதில் எந்த இடர்ப்பாடும் இல்லை. 

விடுதலைப்புலிகள் காலத்தில்.. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில்.. குருநகரின் சில பகுதிகள் அஞ்சலி நிகழ்வுகளை செய்வதில் பின்னடித்ததையும்.. குறிப்பாக சோக கீதம் ஒலிக்க விடுவதை தவிர்த்ததும்.. புலிகளும் அறிந்த செய்தியே. யாழ் நகர வாசி என்ற வகையில் இந்த வேறுபாட்டை.. அனுபவித்ததுண்டு.

அதேபோல்.. புலிகள் 2009 இல் தோற்கடிக்கப்பட்ட போது.. இங்கிருந்து தான் டக்கிளஸ் சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு வெற்றிக் கொண்டாட்டம் போட்டவர். அதற்காக முழு குருநகர் மக்களும் பின்னால் போனார்கள் என்றில்லை. அப்படி ஒரு நிகழ்வை நல்லூரையோ.. யாழ் நகர் மத்தியையோ வைச்சு செய்ய முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலஸின் கட்டளையில் நடந்த கொலைகளில்  குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களை பார்த்தாலே புரியும், வேறொரு ஆதாரமும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

டக்கிலஸின் கட்டளையில் நடந்த கொலைகளில்  குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களை பார்த்தாலே புரியும், வேறொரு ஆதாரமும் தேவையில்லை.

நீங்கள் என்னதான் போர்த்தி மூடினாலும் கொண்டையை மறைக்க மறந்தீட்டீங்களே சாத்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

1) தீவகமும் பொதுவாக ஈபிடிபியின் கோட்டை என்று சொல்லப்பட்ட காலம் உண்டு..

1A) ஏனெனில்.. ஈபிடிபிக்கு பொதுவாக அங்கு விழும் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்ததால்.

2) யாழ் நகரை அண்டி.. பார்த்தால்.. குருநகர்.. பாசையூர் சார்ந்து ஈபிடிபிக்கு விழும் வாக்கு சதவீதம் அதிகம். இதே நல்லூர் உட்பட்ட இதர பகுதிகளில் விழும் வாக்கு வெகு குறைவாகும்.

3) இந்த அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி குருநகர் மக்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லவில்லை. அப்படி கருத்துப் புரியப்பட்டிருந்தால்..

4) எங்கள் கருத்துக்காக அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரலாம். அதில் எந்த இடர்ப்பாடும் இல்லை. 

5) விடுதலைப்புலிகள் காலத்தில்.. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விடயத்தில்.. குருநகரின் சில பகுதிகள் அஞ்சலி நிகழ்வுகளை செய்வதில் பின்னடித்ததையும்.. குறிப்பாக சோக கீதம் ஒலிக்க விடுவதை தவிர்த்ததும்.. புலிகளும் அறிந்த செய்தியே. யாழ் நகர வாசி என்ற வகையில் இந்த வேறுபாட்டை.. அனுபவித்ததுண்டு.

6) அதேபோல்.. புலிகள் 2009 இல் தோற்கடிக்கப்பட்ட போது.. இங்கிருந்து தான் டக்கிளஸ் சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு வெற்றிக் கொண்டாட்டம் போட்டவர். அதற்காக முழு குருநகர் மக்களும் பின்னால் போனார்கள் என்றில்லை. அப்படி ஒரு நிகழ்வை நல்லூரையோ.. யாழ் நகர் மத்தியையோ வைச்சு செய்ய முடியவில்லை. 

1) தீவகம் EPDPயின் கோட்டை என கூறப்பட்ட காலம் எது?

அப்போ அங்கே இருந்த மக்கள் கூட்டம் எது ? அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவினுள் அடங்குவர் ? பிற மக்கள் கூட்டத்திற்கு என்ன நடந்து? அவர்கள் அப்போது எங்கே இருந்தனர்? ஏன் அவர்கள் தீவகத்தில் இருக்கவில்லை?

1A) அங்கே EPDPக்கு வாக்களித்த மக்கள் யார்? ஏனைய மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை / வாக்களிக்க முடியவில்லை 

2) பாசையூர், குருநகர் மக்களில் எத்தனை சதவிகிதம் EPDPக்கு வாக்களித்தனர் ? இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? 

3) " குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான்" இது இந்தத் திரியில்  நீங்கள் எழுதியது நெடுக்ஸ். 

4) கேட்கலாம்.  ஆனால் கேட்க மாட்டீர்கள்.🤪 மீசையில் மண் ஒட்டவில்ல. ஆனாலும்  எதற்கும் ஒருக்கால் மீசையைத் தட்டி விடுங்கள் 

5) இந்த அண்டப் புழுகையும் ஆகாசப் புழுகையும் வேறு எங்காவது கூறுங்கள் நெடுக்ஸ். இந்த  மக்கள் கூட்டம் கொஞ்சம் முரண்டு பிடிப்பவர்கள்தான. ஆனால் நீங்கள் கூறு அளவுக்கெல்லாம் அப்படி எதுவும் அங்கே நடைபெற்றது கிடையாது. 

6) டக்கி அங்கிருந்து கொடி பிடித்தார் என்பதிலிருந்து அந்த மக்களை எப்படி தீர்ப்பிடுவீர்கள் ? 

உங்கள் கருத்துகள் முதிர்ச்சியற்றவை என்று கூறுவதா அல்லது சாயம் கரைந்தோடுகிறது என்று கூறுவதா..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2022 at 12:20, zuma said:

80,90 களில் புலம் பெயர்ந்த baby boomer அங்கிள்மார்களின்  சிந்தனை முறையில் மாற்றமில்லை,இப்பவும்  புலம் பெயர்ந்த தேசங்களின் இருந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் தாயாக நிலைமைகளை பாவிப்பது சல்( அரட்டை) அடிப்பதற்காகவே. இருந்து, இருந்து விட்டு சில டாலர்களை தாயகம் நோக்கி வீசிவிடுவார்கள். 🤔

ஓகே.... மோட்டு அங்கிள்மார் பிழை விட்டுட்டினம். இப்ப நீங்கள், சுமந்திரன் போல புத்திசாலி இளந்தாரியளின்ரை காலம். செய்து காட்டுங்கோவன் பாப்பம்.அதையாவது கண்ணை மூடுறதுக்குள்ளை பாத்துட்டு சாவம் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) தீவகம் EPDPயின் கோட்டை என கூறப்பட்ட காலம் எது?

அப்போ அங்கே இருந்த மக்கள் கூட்டம் எது ? அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவினுள் அடங்குவர் ? பிற மக்கள் கூட்டத்திற்கு என்ன நடந்து? அவர்கள் அப்போது எங்கே இருந்தனர்? ஏன் அவர்கள் தீவகத்தில் இருக்கவில்லை?

1A) அங்கே EPDPக்கு வாக்களித்த மக்கள் யார்? ஏனைய மக்கள் ஏன் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை / வாக்களிக்க முடியவில்லை 

2) பாசையூர், குருநகர் மக்களில் எத்தனை சதவிகிதம் EPDPக்கு வாக்களித்தனர் ? இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன? 

3) " குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான்" இது இந்தத் திரியில்  நீங்கள் எழுதியது நெடுக்ஸ். 

4) கேட்கலாம்.  ஆனால் கேட்க மாட்டீர்கள்.🤪 மீசையில் மண் ஒட்டவில்ல. ஆனாலும்  எதற்கும் ஒருக்கால் மீசையைத் தட்டி விடுங்கள் 

5) இந்த அண்டப் புழுகையும் ஆகாசப் புழுகையும் வேறு எங்காவது கூறுங்கள் நெடுக்ஸ். இந்த  மக்கள் கூட்டம் கொஞ்சம் முரண்டு பிடிப்பவர்கள்தான. ஆனால் நீங்கள் கூறு அளவுக்கெல்லாம் அப்படி எதுவும் அங்கே நடைபெற்றது கிடையாது. 

6) டக்கி அங்கிருந்து கொடி பிடித்தார் என்பதிலிருந்து அந்த மக்களை எப்படி தீர்ப்பிடுவீர்கள் ? 

உங்கள் கருத்துகள் முதிர்ச்சியற்றவை என்று கூறுவதா அல்லது சாயம் கரைந்தோடுகிறது என்று கூறுவதா..? 

இன்னொரு பிரிவினையை கிளப்ப முயற்சி, ம்.......  நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

இன்னொரு பிரிவினையை கிளப்ப முயற்சி, ம்.......  நடக்கட்டும்.

நெடுக்ஸ் யாழ்நகரின் ஒரு பகுதி மக்களை தீர்ப்பிடும்போது உங்கள் கண்களுக்குத் தெரியாத பிரிவினை, அவரைக் கேள்வி கேட்கும்போது என்னில்  தெரிகிறதாக்கும்.

கொண்டையை  தெரியுது  சாத். அதை மறைக்க மறந்துவிட்டீர்களே..🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2022 at 05:13, nedukkalapoovan said:

யாழ் நகரை அண்டி.. பார்த்தால்.. குருநகர்.. பாசையூர் சார்ந்து ஈபிடிபிக்கு விழும் வாக்கு சதவீதம் அதிகம்

On 25/1/2022 at 05:13, nedukkalapoovan said:

இந்த அடிப்படையில் தான் சொல்லப்பட்டுள்ளதே அன்றி குருநகர் மக்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லவில்லை

ஐயா! நான் யாரையும் தீர்ப்பிடவில்லை. நடந்ததை சொல்கிறேன் டக்கிலஸினால் நடாத்தப்பட்ட சொந்த இன, கூலி படுகொலைகளின் குற்றவாளிகளின் பட்டியலை முடிந்தால் பாருங்கள், அவர்கள் யார்? அவருக்கும் டக்கிளசுக்கும் உள்ள நெருக்கம் புரியும். அதை விட நெடுக்கர் ஒரு விளக்கம் தந்துள்ளார் தாங்கள் அதை கவனிக்க வில்லையோ? எட்டப்பன் காட்டிக்கொடுத்தான் என்பதற்காக அரசவையில் இருந்த எல்லோரும் எட்டப்பன்கள் என்பதில்லை. இந்த பிரதேசத்தில் இருந்து விடுதலைக்காய் இறந்த வீரர்களும் உண்டு. சொல்லாததை வைத்து கதை திரிக்காதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

குருநகர், பாசையூர் என்று பெயர் சொல்லி விழித்துவிட்டு, பின்னர் நான் எல்லோரையும் சொல்லவில்லை என்று கூறுவீர்களோ..? Pathetic 🤦🏼‍♂️

முட்டாள்தனத்திற்கும் எல்லையுண்டு 😏

முதலில் எனது கேள்விக்குரிய பதிலை நெடுக்ஸ் தரட்டும். அதன் பின்னர் நான் சொல்ல விரும்பியதை விலாவாரியாக கூறுகிறேன். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை உருவாக்குவது என்கிற உருவெடுத்து வந்து ஆடுகிறீர்கள், அதற்கு கோல் போட நான் விரும்பவில்லை இருந்தாலும் ஒன்று; மீண்டும் மீண்டும் அவர் எழுதியதை வாசித்தால் அவர் சொல்ல வந்தது என்னவென்று புரியும். இல்லையென்றால் தனிய நின்று ஆடுங்கோ, நான் தடுக்கப்போவதில்லை!

Link to comment
Share on other sites

சிங்களவனும் உந்த லாஜிக்கை  தான் சொல்லுகின்றான். பயங்கரவாதிகள் எல்லாம் தமிழர்கள் ஆனால் தமிழர்கள் எல்லோரும்  பயங்கரவாதிகள் அல்ல. இங்கேயும் சில பேர்வழிகள் சொல்லுகின்றார்கள் சமூகவிரோதிகள் எல்லாம் குருநகர், பாசையூர் மக்கள்( கிறிஸ்தவர்கள்)  ஆனால் கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமூகவிரோதிகள் அல்ல என்றும்  நல்லூர் உயர்குடி மக்களெல்லாம் தேசியவாதிகள் என்றும்.

நிற்க, அண்மையில் மஹிந்த  நாவலரை உயர்த்தி பிடித்ததுக்கு உந்த நல்லூர் உயர்குடி மக்கள் மஹிந்தவுக்கு ஆலவட்டம் பிடித்ததை காணவில்லை போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2021 at 14:56, nedukkalapoovan said:

குருநகர் ஈபிடிபி ஒட்டுக்குழுவின் கோட்டை. புலிகள் காலத்திலே அவை ஒரு மாதிரித்தான். 

இப்படியெல்லாம் சும்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களை கொச்சை படுத்தக்கூடாது.
குருநகர் மக்களும் விடுதலை புலிகளோடு நல்ல முறையில் உறவோடு இருந்தவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் வளங்களை அழிவை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

பயங்கரவாதிகள் எல்லாம் தமிழர்கள் ஆனால் தமிழர்கள் எல்லோரும்  பயங்கரவாதிகள் அல்ல

போராட்டத்தை அழிக்க கைகொடுத்த தமிழர், தமது அட்டூழியங்களை ஒத்தூதும் தமிழர் பயங்கரவாதிகள் அல்லர்,  அவர்கள் பார்வையில் அவர்களது தேவை நிறைவேறும்வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

பிரச்சனை உருவாக்குவது என்கிற உருவெடுத்து வந்து ஆடுகிறீர்கள், அதற்கு கோல் போட நான் விரும்பவில்லை இருந்தாலும் ஒன்று; மீண்டும் மீண்டும் அவர் எழுதியதை வாசித்தால் அவர் சொல்ல வந்தது என்னவென்று புரியும். இல்லையென்றால் தனிய நின்று ஆடுங்கோ, நான் தடுக்கப்போவதில்லை!

 தவறுகளை இனங்காணுவதும், இனங்காணப்பட்டவற்றை ஏற்றுக்கொள்வதும்தான் முதிர்ச்சியடைவதற்கான/பக்குவப்படுவதற்கான ஒரே வழி. 

தவறுகளை சடைவது முதிர்ச்சியைத் தராது.

நேர்மையும் துணிவும் உள்ள மனிதன் தனது தவறுகளை எப்போதும் ஏற்றுக்கொள்வான். 

(நெடுக்ஸ் சபைக்கு வந்து எனது கேள்விகளுக்கு பதிலைத் தரவும் 😉)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.