Jump to content

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் நடபடிக்கைகளை குறிப்பாக புகைத்தல் மது மாது இவைகளை இனம்கண்டு தேசியச் செயல்பாடுகளை அழிப்பதற்காக இவர்களிற்கு பெரும் தொகைப்பணம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது-
AVvXsEilhzspKaTWOO_KvhWUdsUzUtXVATiujjvd
 
Edited by நிழலி
தலைப்பு திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த படம்  புலம் பெயர் தமிழ் தேசியவாதி ஒருவரின் 50 வது பிறந்த தின கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதாக முக நூல் பதிவு கூறுகிறது. 

நேர்மறையான  தேசியவாதம் என்பது காலப்போக்கில் மாற்றமடைந்து   ஒரு கட்டத்திற்கு மேல் தீவிர போதை நிலையை அடையும் போது அது அந்த சொந்த தேசிய மக்களுக்கே தீங்கிழைக்கிறது. 

கோட்டா- மகிந்த கோஷ்டி இதையே தனது மக்களுக்கு செய்கிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, colomban said:
 
AVvXsEilhzspKaTWOO_KvhWUdsUzUtXVATiujjvd
 
எதுக்கு இந்த போராளியோட மூஞ்சிய மறைச்சு இருக்கு..? ஓ கரும்புலியா..? 

Edited by பாலபத்ர ஓணாண்டி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ கரும்புலியா..? 

இல்லை கடும் புலி 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நந்தன் said:

4raHZonClRaQnqTiOia6S0VUB-1ji_8tBdTOcg3f

இவர பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறிவருது.. இவரு போட்டிருக்கிற பவுனையும் அடிக்கிற காஸ்ட்லியான சரக்கையும் வாழுற வாழ்க்கையையும் பாக்குரப்போ நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் இவர போல ஒரு பெரிய போராளியா ஆவனும்னு ஒரு வெறி… நானும் இவரப்போல போராளியாக என்னய வாழ்த்துங்க ப்ரண்ட்ஸ்....

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காட்டி கொடுப்பவர்கள், துரோகிகள், சோரம் போபவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் யார் என்று பார்த்தால் தம்மை அதிக பிரயத்தனம் செய்து  ___ ___ ___ ஆக அடையாளம் செய்பவர்கள் தான். சேம் சைட் கோல் போடுவது இவர்களே.

நிறைகுடம் தழும்பாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

இவர் உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக இருந்தவர். கனடா தமிழ் மக்களவையின் நெருங்கிய சகா. இந்த நிகழ்வில் இவருடன் கலந்து கொண்ட சிலர் இறுதி யுத்தத காலத்தில் நிதி திரட்டியவர்கள் 

இவரது நெஞ்சில் தொங்கும் 5 பவுணுக்கும் மேற்பட்ட தங்கத்தில் இழைக்கப்பட்ட Pendent இல் தமிழ் ஈழ வரைபடமும் புலிகளின் சின்னமும் உள்ளன

அத்துடன் Regino Pizza எனும் Franchise இன் உரிமையாளரும். தமிழ் தேசியவாதி என்று நன்கு அறியப்பட்ட பச்சைத் தமிழர்

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

 • நிழலி changed the title to ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

:103_point_down:நீங்கள் ஏன் கண்ணுக்கு முன்னால் தெரியும் சான்றுகளைக் கோணலாகவே நின்று பார்க்கிறீர்கள்?😄

1 hour ago, பிழம்பு said:

இவர் உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக இருந்தவர். கனடா தமிழ் மக்களவையின் நெருங்கிய சகா. இந்த நிகழ்வில் இவருடன் கலந்து கொண்ட சிலர் இறுதி யுத்தத காலத்தில் நிதி திரட்டியவர்கள் 

இவரது நெஞ்சில் தொங்கும் 5 பவுணுக்கும் மேற்பட்ட தங்கத்தில் இழைக்கப்பட்ட Pendent இல் தமிழ் ஈழ வரைபடமும் புலிகளின் சின்னமும் உள்ளன

அத்துடன் Regino Pizza எனும் Franchise இன் உரிமையாளரும். தமிழ் தேசியவாதி என்று நன்கு அறியப்பட்ட பச்சைத் தமிழர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

:103_point_down:நீங்கள் ஏன் கண்ணுக்கு முன்னால் தெரியும் சான்றுகளைக் கோணலாகவே நின்று பார்க்கிறீர்கள்?😄

வழமையாக தமது தரப்பில் செய்யும் அனைத்து  தவறுகளையும் அடுத்தவன் மீது போட்டு தப்பிப்பதே பச்சை தமிழ் தேசியர்களின் வழமை. ஆனால் இங்கு பிழைத்துவிட்டது.😂 

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஆர்வக்கோளாற்றினால் இருக்கிற காசை எப்பிடி செலவளிக்கிறதெண்டு தெரியாம செய்திட்டாப்பில  மன்னிக்க மாட்டீங்களோ உங்கட மனமிரங்கி👀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎10‎-‎2021 at 01:17, வாலி said:

ஓர் ஆர்வக்கோளாற்றினால் இருக்கிற காசை எப்பிடி செலவளிக்கிறதெண்டு தெரியாம செய்திட்டாப்பில  மன்னிக்க மாட்டீங்களோ உங்கட மனமிரங்கி👀

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 
அந்தக் கோணத்திலும் சிந்தித்து இருந்திருக்கலாம்தான். சிலர் சிந்திந்தும் இருந்திருக்கிறார்கள். ஆனால் விதியை யாரைச்சொல்லி நோவுறது. லைட்டா வால் கொஞ்சம் தெரிஞ்சிடுச்சே. வெட்டவும் முடியல மறைக்கவும் முடியல் என்னேய்றது!👀

அன்பரின் பேர் P. Siva எண்டெல்லோ போட்டிருக்கிறார்🤪

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
On 29/10/2021 at 23:03, ரதி said:

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 
ஓமா ஓமா

எனக்கு என்னமோ இது சின்ன விஷயமா தான் இருக்கு ஆனா இதைவிட பெரிய விஷயங்கள் எவ்வளவோ நடந்து இருக்கு

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.