Jump to content

“திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது!

AdminOctober 26, 2021
IMG-20211026-WA0004.jpg?resize=640%2C853

தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும்,

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாநோன்பின் போது, ‘திலீபன் அழைப்பது சாவையா, இந்த சின்ன வயதில் இது தேவையா?’ என்ற பாடலையும் பாடியிருந்த பெண் கவிஞரும் பாடகியுமாகியன திருமதி மரியதாஸ் மேரி நாயகி (நவாலியூர் நாயகி) அவர்கள் 26.10.21 இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தி எங்கள் மனங்களை உருக வைக்கின்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

http://www.errimalai.com/?p=68481

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனில ஊரில இருக்கேக்க ஒவ்வொரு வருடமும் திலீபன் நினைவு மாதத்தின்போது வீட்டுவாசலில் பந்தல் போட்டு படம்வச்சு பொக்ஸ் கட்டி பாட்டுபோடுவன்.. அந்த பொக்சில் பாடும் பாடுகளின் லிஸ்ட்டில் இந்த பாட்டும் கண்டிப்பா இருக்கும்.. எவ்வளவு ஞாபகங்களை கிளறிவிடுகின்றது ஒரு பாடல்… இளமைக்கால போரியலுக்குள் வாழ்ந்த எம்போன்ற தலைமுறையின் ஞாபகங்களை கிளறிவிடும் ஞாபகக்கிளறிகள் இதுபோன்ற போராட்ட கால பாடல்கள்.. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்… 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 05:21, கிருபன் said:

“திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது!

IMG-20211026-WA0004.jpg?resize=640%2C853

மனதில் நிலைக்கும், உள்ளத்தை உருக்கிய பாடல் இது. பாடலாசிரியர், பாடகி அம்மா மேரிநாயகி மரியதாஸ் அவர்கட்டு அஞ்சலிகள்! 💐

Link to comment
Share on other sites

அவன். பிறந்த மூன்றே மாதத்தில் தன் தாய்மடி இழந்தவன், 23 வயதில் தன் தாயகத்தின் மடியில் உயிர் துறந்தவன். ஆனாலும் இன்று தமிழர் உள்ளமெங்கும் இறந்தபின்பும் நிறைந்து வாழ்வதால், நிச்சயம் தமிழீழம் மலர்வதைக் காணும் பாக்கியம் அவனுக்குண்டு.🙏  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.