Jump to content

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனை குறிவைப்பதா? சீமான் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரை குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டது என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன
 
 
ஆர்யன் கானை பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, போதை விருந்து நடந்ததாக சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு சந்தேகங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. பா.ஜ.க. அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைக் குறிவைப்பதில் தப்பேதும் இல்லை என நினைக்கிறேன். அவர் செய்த செயல்கள் அப்படி.. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

இவரைக் குறிவைப்பதில் தப்பேதும் இல்லை என நினைக்கிறேன். அவர் செய்த செயல்கள் அப்படி.. ☹️

கொஞ்சம் பட்டியலிடுங்க நாங்களும் அறியலாமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்திய சர்ச்சைகளுக்கான பதிலளிக்கும் சீமானின் விகடன் பேட்டி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பட்டியலிடுங்க நாங்களும் அறியலாமில்ல.

போதைப்பொருள், பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் வன்முறைகள். தகப்பனின் Toronto(Brampton) வீட்டையும் சோதனையிட்டதாகத் தகவல். 

கிந்தி முன்ணணி, மூத்த நடிகரின் (இந்தியாவின் அடையாளமாகக் கருதப்படுபவர்) பேத்தியுடன் உறவுகொண்டதை படம்பிடித்து அதை வெளியிட்டு பிரச்சினையில் மாட்டினார். அந்த காணொளியைப் தற்செயலாகப்  பார்த்த பின்னர் இவனை சிறையிலிருந்து வெளியே விடும்போது மனநோயாளியாகத்தான் வரவேண்டும் என விரும்பினேன். விரும்புகிறேன். 

(நீங்கள் யூகிக்கும் அவரின் பேத்திதான் அந்தப் பெண் பிள்ளை. அவரின் பெற்றோர் இருவரும் திரைத்துறையினர்)

 

Link to comment
Share on other sites

முஸ்லிம் என்பதால் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்ய கூடாது என்கிறாரா விசேட சலுகை தான் கொடுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

பா ஜா காபின் பி ரீம் சீமான்.🙃

நான் அடிக்கிற மாரி நடிப்பனாம்….

நீ அழுவுற மாரி நடிப்பியாம்……

நம்ம நாடகத்தை பார்த்து “தாய் மதம்” திரும்ப சொன்ன எனது ஆ எஸ் எஸ் முகத்திரை விலகியதை எல்லாரும் மறந்துடுவாங்களாம்….

ஒகே பிஜேபிமா….. பேபி…..புஜ்ஜிமா….செல்லம்….

🙃🙃🙃

பிகு 1

கீழே உள்ளது நாம் தமிழர் 2012 ஆட்சி வரைபில் இருக்கா இல்லையா?

இதுதான் பிஜேபியின் கொள்கைகளை தமிழ் தேசிய வேடமிட்டு பரப்பும் நரித்தனம். பி டீம் வேலை.

large.76B27503-A58A-49D2-80A8-7277F7C2158E.jpeg.3cc8a1a1e3c38de3ea0c5b142dc3487c.jpeg

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/20117-2012-06-15-13-21-03 

 

மேலே உள்ள கீற்று கட்டுரையில் ஒரு பந்தி கீழே👇.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான பாசிசம்

நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் அசீவகம், உலகாய்தம், வள்ளுவம், வள்ளலாரியம் ஆகியவற்றை இணைத்து 'தமிழியம்' என்று தமிழர்களின் நெறியாக குறிப்பிடுகிறது. அதில் 3 வது முரண்பாடாக,

“தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு” (நாம் தமிழர் கட்சி ஆவணம், பக்கம் 37)

அடையாளப்படுத்துகிறது. மேற்கொண்டு அதன் விளக்கமான பகுதியில்,

“3ம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (நாம் தமிழர் கட்சி ஆவணம்: பக்கம் 39)

ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளின் கொள்கை ஆவணத்தைப் படிப்பது போன்ற பதட்டத்தை இது உருவாக்குகிறது. பார்ப்பனீய இந்துத்துவ அரசியலும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இணையும் புள்ளியும் இது. சாவர்க்கர், கோல்வால்கரின் இந்துத்துவ கோட்பாட்டிலிருந்து சற்றும் பிசகாமல் பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழுகிற இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரிக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி ஒடுக்குமுறை மற்றும் தனிப்பட்ட விருப்பின் காரணமாக தனது மதத்தை தேர்வு செய்த உரிமையை எதிர் நிறுத்துகிறது. அவர்களை "எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்" என்று சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான கண்காணிப்பையும், சந்தேகத்தையும் தமிழக மக்களிடையே விதைத்து, பிளவை உருவாக்க முனைகிறது.

 

பிகு 2

நேற்று வரை யாழ்களத்யின் தம்பிகள் எல்லாரும் ஓடுபட்டு வீடியோக்கள் பகிர்ந்து திரிந்த அமீருக்கு இப்போதான் உண்மை விளங்கியுள்ளது. ஆனால் இப்போ அமீர் பேசும் வீடியோக்கள் எதையும் தம்பிமார் பகிர மாட்டார்கள் 🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்மையில் கூறிய கருத்துக்களில் மிகவும் அபத்தமானது இதுதான்.

மூம்பை நகரிலிருந்து கோவாவுக்குக் கப்பலில் பயணப்படும்போது உலகச்சந்தையில் மிகவும் அதி உயர்ந்த மதிப்புடனான போதைப்பொருள்களை வைத்திருந்தது பாவித்தது என்பதற்காகக் கைதுசெய்யப்பட்ட ஒரு கிரிமினல் குற்றவாளி சாருக்கானின் மகனாகும். இவனுக்குப்போய் எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஊழல் லஞ்சம் குற்றங்கள் மற்றும் போதை இல்லாத மாநிலமாக மாத்தப்போகிறேன் எனக்கு வாக்களியுங்கள் எனக்கூவும் சீமான் வக்காலத்து வாங்குவது மிகக்கேவலம் இவர்கள் எல்லாம் அரசியலுக்குவந்து ஜெயலலிதா கருணாநிதி போன்றோர்போல் ஊழல் செய்யத்தான் லாயக்கு, இதில் புலம்பெயர் தேசங்களின் தமிழர்கள் அவரை ஆதரித்துக் காசும் மாதம்மாதம் அனுப்புறார்கள். 

சாருக்கான் இஸ்லாமிய மதத்தினைச் சேர்ந்தவர் ஒருக்கால் சவூதிப்பக்கம் போய் ஒரு பொட்டலம் கஞ்சாவை அவரது மகனுக்குக்கொடுத்து ஒரு ஒழு இழுக்கச்சொல்லுங்கோ பார்க்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.