Jump to content

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய...

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda is the same Gnanasara Thera) தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார(Professor Dayananda Bandara), பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க(Prof. Chandinandana Wijesinghe), பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன(Prof. Sumedha Siriwardena), சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன(Attorney Iresh Seneviratne), சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே(Attorney Sanjaya Marambe), எரந்த நவரத்ன(Erantha Navaratne), பாணி வேவல(bani vevela), மௌலவி மொஹொமட்(Moulavi Mohammad), விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப்(Lecturer Mohamed Indikap), கலீல் ரஹுமான்(Khalil Rahman), அஸீஸ் நிசார்தீன்(Aziz Nisardin) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ibc tamil

Gallery

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம் குழுவில் ஒரு தமிழர் நியமனம் பெற்றால் பிறகு அவரை பதவி விலக சொல்லுவீங்க. துரோகி என்பீர்கள். கோத்தபாயாவுக்கு முண்டு கொடுப்பதாய் சொல்லுவீங்க. சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போவதாய் சொல்லுவீங்க. அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு சாணி அடிப்பீர்கள். இதைவிட ஒரு தமிழரும் செயலணியில் அங்கம் வகிக்காதது நல்லது தானே பெரியோரே!

Link to comment
Share on other sites

இலங்கையின் நீதித்துறையை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் உள்ளே போனவர் ஒரு சட்டம் உருவாக்கும் குழுவின் தலைவர்!

இப்படி ஒரு நாடு இவ் உலகில் எங்கும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு இஸ்லாமியர்கள்....இவர்களுக்கு வகுப்பெடுத்து, தேரர் நேரம் போகப்போகுது.... நல்ல காலம் தமிழர் இதில் இல்லை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமிழீழத்துக்கு சொந்தமானவர்கள்.. அதற்குரிய சட்டத்தால் தானே ஆளப்பட முடியும். கோத்தா அதை முடிவு செய்ய முடியாது என்பதாலாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிபதியை குழுவின் தலைவராக நியமித்து தமிழர்களை அங்கத்தவர்களாக சேர்த்திருந்தால் கூட அந்த தமிழர்களை நியாயத்தை கதைப்போம் சொன்னது போல் துரோகிகள்  சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோனவர்கள் எலும்பு துண்டை சாப்பிடுகிறவர்கள் என்று எல்லாம் திட்டு அந்த தமிழர்களுக்கு நடப்பது உறுதி.அந்த தமிழர்கள் இப்போது தப்பி பிழைத்தார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா தமிழரால் தெரிவு செய்யப்பட்டவரல்லர், அவரால் பதவியிலோ, செயலணியிலோ தெரிவு செய்யும் தமிழர் தாமாகவோ, தமிழருக்காகவோ ஒரு புள்ளியைத்தானும் இட முடியாது. சிங்களத்தால் நடைபெறும் அனிஞாயங்களை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ முடியாது. ஏன் தானாக ஒரு கேள்வி பதில் சொல்ல முடியாது.  ஒரு சிங்களவர் செய்யும் அடாவடியை விட கூடுதலாக நியமிக்கப்படும் தமிழர் தமிழருக்கெதிராக செய்து முடிக்க வேண்டும், அவரே சிங்களத்தின் ஊழியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு நீதிபதியை குழுவின் தலைவராக நியமித்து

இலங்கையின் சட்டமா அதிபரே தமிழர்தான், அவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் வேலையே
அரச படைகளுக்கெதிரான வழக்குகளை மீளப்பெறுவதும், கைவிட ஆவன செய்வதும் 
இந்த சீத்துவத்தில் செயலணியில் தமிழர்கள் இருந்தால் என்ன இல்லாமல் இருந்தால் தான் என்ன,
அதை விடப்பாவம் செயலணியிலுள்ள முஸ்லிம்கள் தேரையிடம் மாட்டி திக்குத்தெரியாமல் ஓடப்போயினம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யாரும் நியமிக்கபடாதது நல்லதுதான். அப்படி தமிழர் எவரும் நியமிக்கப்பட்டிருந்தால் பெயரில் மட்டுமே தமிழை கொண்டிருக்கும் சிங்கள எஜமான விசுவாசம் கொண்ட ஒரு கதிர்காமர், டக்ளஸ் போன்றவர்களை நியமித்துவிட்டு சர்வதேசத்திற்கு தமிழருக்கும் உரிய அந்தஸ்து கொடுக்கிறோம் என்று காண்பித்திருப்பார்கள்.

எந்த வகையிலெல்லாம் இன்றும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உலகிற்கு தேவை வாய் பேச்சுகளல்ல, ஆதாரங்கள்!, அந்த ஆதாரங்களை சிங்களவர்களே கொடுப்பது ஆரோக்கியமான விசயம்தான்.

ஒரேநாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரே நாட்டில் ஒரே நீதி இல்லையென்பதை உலக அரங்கு கண்காணிக்க இதுவும் ஒரு நல்ல வாய்ப்புத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணி, முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சித்துள்ளார்.

நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1247011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரதேரர் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் கடும் கண்டனம்

(நா.தனுஜா)

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கும் அந்தச் செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படாமைக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தானதும் நகைப்பிற்குரியதுமான விடயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் தற்போது பலதரப்பட்டவர்களாலும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கேசரியிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த செயலணியின் தலைவராக ஞானசாரதேரர் நியமிக்கப்பட்டமை கடும் கண்டத்திற்குரியது என்று சுட்டிக்காட்டினார். 

அதேவேளை தமிழ் பிரதிநிதிகளின்றி இந்த செயலணி உருவாக்கப்பட்டிருப்பதிலிருந்து ஜனாதிபதி இன்னமும் திருந்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்தின் பல்வேறு அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஞானசாரரின் தலைமையில், தமிழ் உறுப்பினர்கள் எவருமின்றி 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். இது வெறுமனே நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான கண்துடைப்பு நடவடிக்கையே தவிர, இந்தச் செயலணியினால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

குறிப்பாக தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும் என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. இது இனங்களுக்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவிப்பதற்கு வழிவகுக்குமே தவிர, ஒருபோதும் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயத்தை வழங்காது.

இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக எந்தவொரு விடயத்தையும் சாதித்துவிடலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக உண்மையான பிரச்சினைகளை மறக்கடித்துவிடலாம் என்றும் அதன்மூலம் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வென்றுவிடலாம் என்றும் அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய உத்திகள் சிங்களவர்கள் மத்தியில் எடுபடாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இதுகுறித்துக் கேசரிக்குக் கருத்துத்தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், 'ஞானசாரதேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணியானது வெளிப்படையாக அரங்கேற்றப்படுகின்றதொரு கண்துடைப்பு நாடகம் மாத்திரமேயாகும். 

பெரும்பான்மையின சிங்களவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு அனைத்து இனமக்களுக்கும் பொதுவானதாக அமையமுடியும்? குறிப்பாக தமிழர்களுக்குரிய தேசவழமைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு முக்கிய விடயங்கள் படிப்படியாக இல்லாமல்செய்யப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக மாகாணசபைத்தேர்தல்களும் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்றன. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் பிளவுகளைத் தோற்றுவித்து, இலங்கையைத் தனிச்சிங்கள - பௌத்த நாடாக மாற்றியமைப்பதற்கான பிரகடனமாகவே இந்த 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியைக் கருதவேண்டியிருக்கின்றது' என்று கூறினார்.

மேலும் தமிழர்களின் பிரதிநிதித்துவமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணி தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வினவியபோது அவர் கூறியதாவது:

'தற்போது நாட்டிலுள்ள 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கலகொட அத்தே ஞானசாரதேரர் தலைமையில் இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டிருப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்ற சட்டங்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதே போதுமானதாக இருக்கும். 

அதாவது ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை அனைவருக்கும் சமத்துவமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய செயலணியை உருவாக்கி, அதற்குத் தலைவராக இலங்கையின் சட்டங்களை மதிக்காத ஒருவரை நியமித்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது எதிர்வருங்காலங்களில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஏற்கனவே உரப்பற்றாக்குறை உள்ளடங்கலாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சூழ்நிலையில், அவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது' என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 'சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் கண்டனத்திற்குரியது என்பதுடன் மறுபுறம் நகைப்பிற்குரியதுமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேசரியிடம் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையைப் பொறுத்தமட்டில் நாட்டிலுள்ள சட்டங்கள் அனைவருக்கும் சமத்துவமான வகையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவம் மற்றும் பாரம்பரியத்தை இல்லாமல்செய்து பெரும்பான்மையினத்தவரின் விருப்பத்திற்கு அமைவாகவே அனைவரும் செயற்படவேண்டும் என்பதை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவரின் அபிலாஷைகளை நிராகரிப்பதாகவே இந்தப் புதிய செயலணியின் செயற்பாடுகள் அமையும். ஏனெனில் இத்தகைய செயலணிகள் உருவாக்கப்படும்போது அவை இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டும். 

ஆனால் இந்தப் புதிய செயலணியின் உறுப்பினர்களில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் சிங்களவர்களும் பெயருக்கு சில முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் தமிழர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

எனவே இது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் உண்மையான தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய செயலணி என்பதுடன் இதன்மூலம் அரசாங்கத்தின் இனவாதப்போக்கையும் தௌ;ளத்தெளிவாக விளங்கிக்கொள்ளமுடிகின்றது என்று குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/116142

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 13:49, குமாரசாமி said:

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய...

இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்குபெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் விச அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம்என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களைஇரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும்  ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர்தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும்காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்டகொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . எப்படி தாங்கள்ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய்மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள்ஏமாற்றப்படுவார்களா காலம் பதில் சொல்லட்டும்.

 

அன்று கொல்வின் ஆர் டீ சில்வா சொன்னார்

இரண்டு மொழிகள் ஒரு தேசம் - 

ஒரு மொழி இரண்டு தேசங்கள் என்று

இன்று கோத்தபய ராஜபக்ச சொல்கிறார் 

ஒரு நாடு ஒரு சட்டம் என்று.

 

பா.உதயன் 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.