Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

“தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டைவிட்டு செல்லும் அளவிற்கு பலவீனமானவனல்ல” - மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

“தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டைவிட்டு செல்லும் அளவிற்கு பலவீனமானவனல்ல” -மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறித்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இருப்பினும் சேதன பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.

https://athavannews.com/2021/1246965

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்

எல்லாவற்றையும் திட்டமிட்டு, செயற்படுத்த ஆணையும் கொடுத்துவிட்டு, தான் தப்புவதற்காக வெளியேறியவர், நல்லபிள்ளை நாடகமாடுகிறார். கூட்டுக் களவாளிகளையும் சேர்த்து பொறுப்பெடுக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

மைத்திரிக்கு தெரியாமல் தாக்குதல் நடக்க சந்தர்ப்பமில்லை’

அதே,,,,,,,! இவ்வளவு காலமும் மவுனமாய் இருந்துவிட்டு இப்போ ஏன் இந்த அறிக்கை? மற்றவர்களை வறுத்தெடுக்கும் விசாரணை குழு இவரை மட்டும் தவிற்பதேன்? இந்த கோமாளியை வைத்தே ஐ தே கட்சி உடைக்கப்பட்டது, நாட்டை நாசமாக்கியதும் இருந்தாலும் எது நடக்க வேண்டுமோ அது நலமே நடந்தது. இனவாதம் பேசும் கட்சிகளுக்கு இடமில்லை என்று சிங்களமக்கள் சாட்டை அடி கொடுத்து வீட்டுக்கு விரட்டுகிறார்களோ அன்று நாடு உருப்படும். பிக்குகளை விகாரைக்குள் அடக்குகிறார்களோ அன்று இனவாதம் மறைந்து சமத்துவம் மலரும்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.