Jump to content

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது.

சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத்திய தட்டுப்பாடால் மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த டீசல் தட்டுப்பாடு, நீண்டதூர வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு வெளியில் உள்ள சந்தைகளுக்கு செல்லும் வர்த்தகத்தை இது கடுமையாக பாதிக்கிறது என பொருளாதார புலனாய்வு பிரிவின் சீன இயக்குநர் மேட்டி பெங்கிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் முடங்கியிருந்த பல வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதால் சர்வதேச அளவில் விநியோக சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது.

சீனாவில் தற்போது டிரக்குகள் வெறும் 100 லிட்டர் டீசல்களை மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும். அது அவர்களின் மொத்த அளவில் வெறும் 10 சதவீதமே ஆகும்.

சில பகுதிகளில் ஓட்டுநர்கள் வெறும் 25 லிட்டர்கள் மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சில பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு டீசல் இல்லை. விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெரிய ட்ரக்குகளுக்கு எரிபொருள் கிடைப்பது சிரமம்" என்று வெய்போ பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் விலையேற்றம் மற்றும் டெலிவரி பணிகள் பாதிப்பு குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர். பல உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் நிலக்கரி பற்றாக்குறை

ஆசிய பொருளாதார நிபுணரான எய்டன் யோ, சீனாவின் நிலக்கரி தட்டுப்பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் டீசல் பிரச்னை புதியது என பிபிசியிடம் தெரிவித்தார்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அனைத்து புதை படிம எரிப்பொருட்களின் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. சமீப காலமாக இந்த எரிபொருட்களில் குறைந்த மூதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இதற்கான விநியோகம் குறைந்துபோனது அதுவும் தேவை அதிகமாக இருந்த சூழலில்." என்கிறார் ஏய்டன்.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என எல்லாவற்றின் விலையும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு சமீப வாரங்களில் எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சீனா மற்றும் இந்தியாவில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் தடுப்பாடு ஏற்பட்டுள்ளதே காரணம். இதனால் மக்கள் எரிபொருளை அதிகம் நாடுகின்றனர்.

இந்த அளவிற்கான தேவை நாள் ஒன்றிற்கு கச்சா எண்ணெயின் கொள்முதல் அளவை ஐந்து லட்சம் பேரல்களை வரை அதிகரிக்கும்.

சீனாவில் உள்ள தட்டுப்பாட்டை இது மேலும் மோசமாக மாற்றும். நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டை குறைக்க பல தொழிற்சாலைகள் டீசலில் இயங்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டீசல் தட்டுப்பாடு அவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த மின்சார தட்டுப்பாடு மற்றும் டீசல் தட்டுப்பாடு இரண்டுமே நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு எத்தனை விரைவில் மாற வேண்டும் என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு – என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

சீனாவின் பொருளாதாரத்தில் சில நீண்டகால பலவீங்கள் இப்போ தலையிடியை கொடுக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

சீனா போன்ற ஒரு பொருளாதார வலுவுள்ள நாட்டுக்கு வாங்க முடியாதவாறு டீசலின் விலை கூடவில்லை. 2012 இல் பரல் 110 க்கு போனபோது கூட சீனாவின் வளர்சி நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் அவர்களது உள்ளூர் கட்டுமானத்துறை, வங்கி துறை தள்ளாடுவதாக படுகிறது. தொடர்ந்து அதிக வளர்சியை கண்டபின் stagnation எனப்படும் தேக்க நிலையாக இருக்க கூடும். 

90களில் ஜப்பானில் நடந்தது போல.

அதே நேரம் நல்லா போய் கொண்டிருக்கும் சீனா நிறுவனங்களின் மீது அமெரிக்காவின் delisting நெருக்குவாரம், அதில் இருந்து மீளமுதல் சீனாவே சில கம்பெனிகளின் மீது கடும் regulatory அளுத்தம் கொடுத்தது, எல்லாவற்றிற்க்கும் அதிகமாக மேற்குடனான முறுகல் அதனால் ஏற்பட்ட்டுள்ள cold trade war, அடுத்து கொவிட் ஏற்றுமதியை பாதித்த்து இப்படி பல விடயங்கள் சீனாவை பாதிப்பதாக தெரிகிறது.

ஆனால் அங்கே இருக்கும் அரசு இவ்வாறாக தாம் பொருளாதாரத்தை கையாள்வதில் தவறு விட்டு விட்டோம் என்பதை மறைக்க - எரிபொருள் விலையேறத்தை காரணமாக காட்டுகிறது என்றே நான் நினைகிறேன். 

யூகேயிலும் டிரைவர் தட்டுப்பாட்டால் (பிரெக்சிற்றால்) ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டை திசை திருப்ப உலக எண்ணை விலை கூடியதே காரணம் என்று சொல்லபட்டது.

ஆனால் மேலதிக இராணுவ டிரைவர்கள் வந்ததும் தட்டுப்பாடு போய்விட்டது.

யூகேயில் தட்டுப்பாடு வந்த போது எண்ணை விலை பரலுக்கு 60. இப்போ 80. ஆனால் இப்போ தட்டுப்பாடு இல்லை (விலை 10-20) பென்சால் கூடியுள்ளது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

சீனாவின் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம், சீனா அவுஸ்திரேலியாவுடனான முறுகல் காரணமாக அங்கிருந்து நிலக்கரி இறக்குமதியைத் தடை செய்ததுவே பிரதான காரணம். தற்போது சீனா ரஸ்யாவிலிருந்து தனது நிலக்கரி இறக்குமதியை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது . அங்கிருந்து எரிவாயு இறக்குமதியையும் அதிகரித்துள்ளது. ஆனால் இவையெல்லாம் நிரந்திரமான தீர்வாகுமா என்பது கேள்விக்குறியே. 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே... ???????????

 

🥺

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 
  • (எம்.மனோசித்ரா) இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர்.  மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்ற போது , 'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்து அது குறித்து தெரியப்படுத்துவோம்.  இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார். சேதனப் பசளையில் சீன அரிசி உற்பத்தி செய்யப்பட்டதா ? என்ற கேள்விக்கு தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள் ! | Virakesari.lk
  • (நா.தனுஜா)   இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதுடன் அங்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டியது அவசியமாகும்.    இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததாக பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் ஜனவரிமாதம் 'தமிழ் மரபுரிமை மாதமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினையும் கொண்டாடும் வகையிலேயே இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டர் நகரிலுள்ள மத்திய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். நிகழ்வை ஆரம்பித்துவைத்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான எலியற் கொல்பர், கடந்தகால மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார். அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் டாவே, ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தான் சமர்ப்பித்தமை குறித்து சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதுடன் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டும்.  இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். இந்தத் தைப்பொங்கல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவணிகங்கள் தொடர்பான அமைச்சருமான போல் ஸ்கல்லி பிரிட்டனின் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் மிகையான பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள். அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதே தைப்பொங்கல் பண்டிகையின் தாற்பரியமாகும்.  இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதுடன் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டார். அதேவேளை இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவை நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்திய பிரசாரம் மேலும் வலுவான முறையில் நடைபெறுவதைக் காணவிரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்தார்.  அத்தோடு 'இதுவிடயத்தில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கப்படவேண்டும்.  எமது அரசாங்கத்தின்கீழ் மனித உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது' என்று சுட்டிக்காட்டிய அவர், என்றேனும் ஒருநாள் இராணுவமயமற்ற சுயநிர்ணய உரிமையுடனான தமிழர் தாயகத்தைக் காண்போம் என்றும் கூறினார். இலங்கையில் ராஜபக்ஷாக்களின் மீள்வருகை அனைவருக்குமான தீவின் எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ரீட்டிங் சுட்டிக்காட்டிய அதேவேளை, தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறுகோரி நான் போராடினேன்.  இப்போது இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் லெமி குறிப்பிட்டார். அதன்படி அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நீங்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் டேவிட் லெமி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் - பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் | Virakesari.lk
  • கரும்பு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரும்பு......!  💐
  • சிறப்பான பொங்கல் கவிதை மனதில் இனிக்கின்றது.......!  👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.