Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது.

சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத்திய தட்டுப்பாடால் மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த டீசல் தட்டுப்பாடு, நீண்டதூர வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக சீனாவுக்கு வெளியில் உள்ள சந்தைகளுக்கு செல்லும் வர்த்தகத்தை இது கடுமையாக பாதிக்கிறது என பொருளாதார புலனாய்வு பிரிவின் சீன இயக்குநர் மேட்டி பெங்கிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் முடங்கியிருந்த பல வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதால் சர்வதேச அளவில் விநியோக சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது.

சீனாவில் தற்போது டிரக்குகள் வெறும் 100 லிட்டர் டீசல்களை மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும். அது அவர்களின் மொத்த அளவில் வெறும் 10 சதவீதமே ஆகும்.

சில பகுதிகளில் ஓட்டுநர்கள் வெறும் 25 லிட்டர்கள் மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சில பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு டீசல் இல்லை. விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெரிய ட்ரக்குகளுக்கு எரிபொருள் கிடைப்பது சிரமம்" என்று வெய்போ பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் விலையேற்றம் மற்றும் டெலிவரி பணிகள் பாதிப்பு குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர். பல உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் நிலக்கரி பற்றாக்குறை

ஆசிய பொருளாதார நிபுணரான எய்டன் யோ, சீனாவின் நிலக்கரி தட்டுப்பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் டீசல் பிரச்னை புதியது என பிபிசியிடம் தெரிவித்தார்.

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"அனைத்து புதை படிம எரிப்பொருட்களின் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. சமீப காலமாக இந்த எரிபொருட்களில் குறைந்த மூதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இதற்கான விநியோகம் குறைந்துபோனது அதுவும் தேவை அதிகமாக இருந்த சூழலில்." என்கிறார் ஏய்டன்.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என எல்லாவற்றின் விலையும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்துள்ளது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு சமீப வாரங்களில் எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சீனா மற்றும் இந்தியாவில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் தடுப்பாடு ஏற்பட்டுள்ளதே காரணம். இதனால் மக்கள் எரிபொருளை அதிகம் நாடுகின்றனர்.

இந்த அளவிற்கான தேவை நாள் ஒன்றிற்கு கச்சா எண்ணெயின் கொள்முதல் அளவை ஐந்து லட்சம் பேரல்களை வரை அதிகரிக்கும்.

சீனாவில் உள்ள தட்டுப்பாட்டை இது மேலும் மோசமாக மாற்றும். நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டை குறைக்க பல தொழிற்சாலைகள் டீசலில் இயங்கு ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டீசல் தட்டுப்பாடு அவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த மின்சார தட்டுப்பாடு மற்றும் டீசல் தட்டுப்பாடு இரண்டுமே நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு எத்தனை விரைவில் மாற வேண்டும் என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு – என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

சீனாவின் பொருளாதாரத்தில் சில நீண்டகால பலவீங்கள் இப்போ தலையிடியை கொடுக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

சீனா போன்ற ஒரு பொருளாதார வலுவுள்ள நாட்டுக்கு வாங்க முடியாதவாறு டீசலின் விலை கூடவில்லை. 2012 இல் பரல் 110 க்கு போனபோது கூட சீனாவின் வளர்சி நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் அவர்களது உள்ளூர் கட்டுமானத்துறை, வங்கி துறை தள்ளாடுவதாக படுகிறது. தொடர்ந்து அதிக வளர்சியை கண்டபின் stagnation எனப்படும் தேக்க நிலையாக இருக்க கூடும். 

90களில் ஜப்பானில் நடந்தது போல.

அதே நேரம் நல்லா போய் கொண்டிருக்கும் சீனா நிறுவனங்களின் மீது அமெரிக்காவின் delisting நெருக்குவாரம், அதில் இருந்து மீளமுதல் சீனாவே சில கம்பெனிகளின் மீது கடும் regulatory அளுத்தம் கொடுத்தது, எல்லாவற்றிற்க்கும் அதிகமாக மேற்குடனான முறுகல் அதனால் ஏற்பட்ட்டுள்ள cold trade war, அடுத்து கொவிட் ஏற்றுமதியை பாதித்த்து இப்படி பல விடயங்கள் சீனாவை பாதிப்பதாக தெரிகிறது.

ஆனால் அங்கே இருக்கும் அரசு இவ்வாறாக தாம் பொருளாதாரத்தை கையாள்வதில் தவறு விட்டு விட்டோம் என்பதை மறைக்க - எரிபொருள் விலையேறத்தை காரணமாக காட்டுகிறது என்றே நான் நினைகிறேன். 

யூகேயிலும் டிரைவர் தட்டுப்பாட்டால் (பிரெக்சிற்றால்) ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டை திசை திருப்ப உலக எண்ணை விலை கூடியதே காரணம் என்று சொல்லபட்டது.

ஆனால் மேலதிக இராணுவ டிரைவர்கள் வந்ததும் தட்டுப்பாடு போய்விட்டது.

யூகேயில் தட்டுப்பாடு வந்த போது எண்ணை விலை பரலுக்கு 60. இப்போ 80. ஆனால் இப்போ தட்டுப்பாடு இல்லை (விலை 10-20) பென்சால் கூடியுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உண்மையாவே தட்டுப்பாடா? இதுக்குப் பின்னாலயும் ஏதும் நிகழ்ச்சி நிரல் இருக்குமா?!

சீனாவின் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம், சீனா அவுஸ்திரேலியாவுடனான முறுகல் காரணமாக அங்கிருந்து நிலக்கரி இறக்குமதியைத் தடை செய்ததுவே பிரதான காரணம். தற்போது சீனா ரஸ்யாவிலிருந்து தனது நிலக்கரி இறக்குமதியை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது . அங்கிருந்து எரிவாயு இறக்குமதியையும் அதிகரித்துள்ளது. ஆனால் இவையெல்லாம் நிரந்திரமான தீர்வாகுமா என்பது கேள்விக்குறியே. 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே... ???????????

 

🥺

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ( திங்கட்க்கிழமை ) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டஅது. இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரச உத்தியோகத்தர்களால் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும், அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தை பத்தாயிரத்தால் உயர்த்த வேண்டும், அரச ஊழியர்களின் வயதெல்லையை 65 வயதாக உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச ஊழிர்களின் கருத்து சுதந்திரத்தை மறுக்காதே ஆகிய நான்கு விடயங்களை முன்வைத்து  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மதியம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே கலந்துகொண்டிருந்தனர். வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்! – Athavan News
    • தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்- மாவை   தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு, அனைவருடனும் நட்பாக பழகக் கூடிய சித்தார்த்தனே தலைமை தாங்கி, அதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.ஆகவே, அதற்கான பொறுப்புகளை தானும் ஏற்க வேண்டி இருப்பதுடன், நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் நீண்ட காலமாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இருப்பினும், அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும்போதே, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.   Thinakkural.lk
    • வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம்     வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்தார். அத்துடன் வடக்கில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம் – Athavan News
    • பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு   வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே, எதிர்வரும் 01.12.2021 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசியல் கைதிக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக,  எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு 12 ஆம்  மாதம் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு கெப்பிட்டல் கட்டடம் நாரயன்பிட்ட முகவரியில், 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு – Athavan News
    • தோல்வியை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் அடுத்தடுத்த நகர்வுகள் தொடர்பில் மனம் திறப்பு | அக்கினி பார்வை நன்றி - யூரூப்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.