Jump to content

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1247255

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்படுவது சிறுபான்மையினருக்கு எதிரான செயலணியாகவே இருக்கும் அதில் தமிழர்  இணைந்து  என்ன மாற்றம் ஏற்படும்? வேண்டுமென்றால் தமிழரை தாக்க அவர்களுக்கு பொல்லு எடுத்துக்கொடுக்கலாம். அவர்கள் எள் என்றால் இவர்கள் எண்ணெயாய் கொதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணியில் தமிழ் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் - டக்ளஸ் தேவானந்தா

(இராஜதுரை ஹஷான்)

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் மூவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மூவரை விரைவாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் தலைமைகள் ஆக்கத்திற்கு எதிராகவும், அழிவிற்கு ஆதரவாகவும் செயற்படுவதொன்றும் புதிதல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் நியமிக்கப்பாடாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'ஒரே நாடு-ஒரே சட்டம்' என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் சட்ட வரைபை தயாரிக்க ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளமை வரவேற்றத்தக்கது. 

காலம்காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை குறுகிய நிலைப்பாட்டிற்குள் இருந்து ஆராயாமல் பரந்துப்பட்ட வகையில் ஆராய வேண்டும்.

இச்செயலணி தொடர்பில் தமிழ் தலைமைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றதை அவதானிக்க முடிந்துள்ளது. இவர்கள் ஆக்கத்திற்கு எதிராகவும், அழிவிற்கு ஆதரவாகவும் செயற்படுவது ஒன்றும் புதிதல்ல. அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவித்து இதுவரையில் ஒன்றையும் அவர்கள் சாதிக்கவில்லை.அதன் பயன் தமிழ் மக்களுக்கு கிடைக்கவுமில்லை.

தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சுய அரசியல் இலாபத்திற்காக அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக எதிர்க்க முடியாது.பொறுமையுடன் செயற்பட்டு முரண்பாடற்ற உரிமை மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

ஓரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் உள்ளடங்கப்படாமை அவதானத்திற்குரியது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று  இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று தமிழர்களை நியமிக்க ஜனாதிபதி உடனடியாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்று முதன்முறையாக கூடியது. 13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கடகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டு அதற்கான, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

செயலணி திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும். இலங்கையினுள் 'ஒரே நாடு-ஒரே சட்டம்' தொடர்பில் ஆராய்ந்து சட்ட வரைபை தயாரிக்கும் பொறுப்பு செயலணிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/116240

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழர்களை இணைக்கவேண்டும் தமிழர்கள் எப்போதும் தம்மை சிறீலங்காவைச்சேர்ந்தவர்கள் என உணர்வதில்லையே,

சில பிரகிருதைகள் கூறினால் ஏற்கவேண்டுமென்பதில்லை. டக்ளஸ்கூடச் சொல்லுகிறார் சிறீலங்காவின் அரசதலைவரும் தலைமை அமைச்சரும் எள் என்றால் எண்ணையாகி நிற்பேன் என. அவர் அப்படிச்செய்யாதுவிட்டால். மலையகத்திலிருந்து கூலிக்கு ஆள்பிடித்து தீவுப்பகுதியில் கொலைக்களம் நடத்தியபோது கூலியாள்கள் தப்பி ஒட்ட எத்தனிக்கையில் கொலை செய்து ரொறி ரயரைப்போட்டு எரித்து மிஞ்சியதிக் கடலில கொட்டினதுக்கு ஆதாரம் சிங்களவனுக்கு இருக்காதா பின்ன.

ஆனால் சுமந்திரனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு அடிக்கடி சிங்களவனிட்டை இருந்து அசைன்ட்மன்ட் கிடைத்துக்கொணேபோகுது. பாருங்க அண்ணாத்தை வெளிக்கிடப்போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

ஓரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் உள்ளடங்கப்படாமை அவதானத்திற்குரியது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று  இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று தமிழர்களை நியமிக்க ஜனாதிபதி உடனடியாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

mudhalvan-raguvaran.gif

இவுங்களே குண்டு வைப்பாங்களாம்.. 😊 அப்புறம் அவுங்களே எடுப்பாங்களாம்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணியில் தமிழ் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் - டக்ளஸ் தேவானந்தா

(இராஜதுரை ஹஷான்)

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் மூவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மூவரை விரைவாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் தலைமைகள் ஆக்கத்திற்கு எதிராகவும், அழிவிற்கு ஆதரவாகவும் செயற்படுவதொன்றும் புதிதல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் நியமிக்கப்பாடாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'ஒரே நாடு-ஒரே சட்டம்' என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் சட்ட வரைபை தயாரிக்க ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளமை வரவேற்றத்தக்கது. 

காலம்காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை குறுகிய நிலைப்பாட்டிற்குள் இருந்து ஆராயாமல் பரந்துப்பட்ட வகையில் ஆராய வேண்டும்.

இச்செயலணி தொடர்பில் தமிழ் தலைமைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றதை அவதானிக்க முடிந்துள்ளது. இவர்கள் ஆக்கத்திற்கு எதிராகவும், அழிவிற்கு ஆதரவாகவும் செயற்படுவது ஒன்றும் புதிதல்ல. அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவித்து இதுவரையில் ஒன்றையும் அவர்கள் சாதிக்கவில்லை.அதன் பயன் தமிழ் மக்களுக்கு கிடைக்கவுமில்லை.

தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி சுய அரசியல் இலாபத்திற்காக அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக எதிர்க்க முடியாது.பொறுமையுடன் செயற்பட்டு முரண்பாடற்ற உரிமை மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

ஓரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் உள்ளடங்கப்படாமை அவதானத்திற்குரியது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று  இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று தமிழர்களை நியமிக்க ஜனாதிபதி உடனடியாக இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்று முதன்முறையாக கூடியது. 13 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கடகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டு அதற்கான, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

செயலணி திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும். இலங்கையினுள் 'ஒரே நாடு-ஒரே சட்டம்' தொடர்பில் ஆராய்ந்து சட்ட வரைபை தயாரிக்கும் பொறுப்பு செயலணிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/116240

மிஸ்டர் டக்ளஸ்நீங்கள் முன்னமே பேசி வைச்சுத்தான் வாறனீங்களோ?ஒருதரையும் போடவேண்டாம் பிறகுநான் சொன்னாப்பிறகு போடுங்கோ அதைச்சொல்லிநான் வாக்கு வேண்டலாம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு செய்த துரோகத்துக்கு கிடைக்கும் பரிசு இவருக்கு அப்பப்போ போலி வாக்குறுதி வாக்குவங்கியை உயர்த்த.  அதிருக்கட்டும், தொல்பொருள் ஆராய்ச்சி பணிக்கு தமிழர் யாராவது முன்வந்தால் தான் ஜனாதிபதியுடன் கதைத்து நியமனம் செய்வதாக இவர் அடித்து விட்டார். தமிழர் ஒருவர் தான் பங்களிக்க தயார் என்றாரே, அவரை இணைத்துக்கொண்டார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கற்பகதரு said:

அண்ணை, கூப்பிட்டீங்களா? 😁

இதெப்ப இருந்து யூட் அண்ணா?

பாம்பு ஜூஸ், பல்லி பிரட்டல், நாய் ப்பிரை எல்லாம் பழகியாச்சோ🤣?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதெப்ப இருந்து யூட் அண்ணா?

பாம்பு ஜூஸ், பல்லி பிரட்டல், நாய் ப்பிரை எல்லாம் பழகியாச்சோ🤣?

எல்லாரும்  பழகினால் நாடு துப்பரவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மொத்தத்தில் நாடை சுடுகாடாக்குவது என்று  முடிவாகியாச்சு.

நாட்டை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 மொத்தத்தில் நாடை சுடுகாடாக்குவது என்று  முடிவாகியாச்சு.

நாட்டை

இப்ப என்ன அங்கை தேனாறும் பாலாறுமே ஓடுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன அங்கை தேனாறும் பாலாறுமே ஓடுது?

சிலர் நாம் இன்னும் அப்படித்தான் நினைக்கிறோம். பாம்பு, நாய், பல்லி, புள்ளினம்,  விலங்கினம் இன்னும் விலை போகவில்லை சுதந்திரமாய் சீவிக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று கவனிக்கத்தக்கது. உங்களின் இந்த கருத்தை ஏற்று,  விருப்புத் தெரிவித்த மனிதர். அப்போ நீங்கள் சொல்வது உண்மைதான்.  தேனாறும், பாலாறும் ஓடவில்லை. வறுமைதான் பரந்து எங்கும் ஓடுது. 

Link to comment
Share on other sites

14 hours ago, satan said:

ஆனால் ஒன்று கவனிக்கத்தக்கது. உங்களின் இந்த கருத்தை ஏற்று,  விருப்புத் தெரிவித்த மனிதர். அப்போ நீங்கள் சொல்வது உண்மைதான்.  தேனாறும், பாலாறும் ஓடவில்லை. வறுமைதான் பரந்து எங்கும் ஓடுது. 

சாத்தானே, எந்தன் ஆசை சாத்தானே, கேள்வியொன்று கேட்கலாமா, உனைத்தானே?

ஜேர்மனியில் பாலாறும் தேனாறுமா ஓடுது? பென்ஸ் காரும் பிஎம்டபிள்யுவும் தான் ஓடுது. அதுக்கு அர்த்தம் “ வறுமைதான் பரந்து எங்கும் ஓடுது“ என்றாகுமா? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கூப்பாடு.. பல்லின சமத்துவம்.. சம உரிமை வேண்டி நிற்கும் இலங்கை போன்ற தேசங்களுக்கு சரிப்பட்டு வராது என்று இந்தக் கூப்பாடு மகிந்த- கோத்தா கும்பலால் எழுப்பப்பட்ட போதே சொன்னோம்.

ஆனால்.. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. விக்கியர்.. தமிழ் தேசிய முன்னணியினர்.. தென்னிலங்கைக்கு ஒரு சட்டம்.. வடக்குக் கிழக்கிற்கு இன்னொரு இராணுவ சட்டம் என்பதைச் சொல்லாமல்.. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோத்தாவின் கூப்பாட்டை ஆதரிப்பது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை செய்தனர். அதாவது இப்படி சொல்லும் அரசு வடக்குக் கிழக்கில் வேறு சட்ட பேதத்தை காட்டுக்கிறது என்று.

உண்மையில்.. கோத்தாவின் அந்தக் கோசத்தின் பின்னணியை இவர்கள் ஆராயவில்லை அன்று. இப்போ.. கிடந்து கத்துகினம்.. ஆளுக்காள்.

கோத்தாவின் எல்லா நகர்வுகளுமே.. தமிழ் மக்கள் பூண்டோடு இன அழிப்புச் செய்வதை அதாவது இனப்படுகொலை மற்றும் இன மொழி பண்பாடு பிரதேச மத அடையாள அழிப்புச் செய்தன் மூலம் பூர்த்தி செய்வதையோ நோக்காகக் கொண்டுள்ளது.

இதுவே மகிந்த கும்பலின் ஒட்டுமொத்த நிலைப்பாடும் ஆகும். சிங்களப் பேரினவாதத்தின் தேவையும் அதே. 

இது புரியாமல்.. நம்மவர்கள் தான் தவறான புரிதல்களை காலத்துக்கு காலம் வெளியிட்டு மக்களைக் குழப்பி வருகின்றனர்.. தாமும் குழம்பி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

சாத்தானே, எந்தன் ஆசை சாத்தானே, கேள்வியொன்று கேட்கலாமா, உனைத்தானே?

ஜேர்மனியில் பாலாறும் தேனாறுமா ஓடுது? பென்ஸ் காரும் பிஎம்டபிள்யுவும் தான் ஓடுது. அதுக்கு அர்த்தம் “ வறுமைதான் பரந்து எங்கும் ஓடுது“ என்றாகுமா? 😇

ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து, (ஏன் புலம் பெயர்ந்தார்கள்? அங்கு என்ன ஓடுது?) அங்கு வாழ்பவர்கள்தான் காரணத்தை சொல்ல வேண்டும். அவருடைய கருத்தை தான் நீங்கள் ஆமோதித்துள்ளீர்கள். எப்போதும் இருவரின் சாட்சியமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே நான் எனது கருத்தை மாற்றிக்கொண்டேன்.  உங்கள் கேள்விக்கு சாமியார் பதில் சொல்வதே சிறந்தது என நினைக்கின்றேன், சொல்வார். பொறுத்திருங்கள். அல்லது ஜெர்மனியில் வாழும் வேறு யாராவது கூட பதில் தரலாம்  கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள தயாராய் இருங்கள்.

Link to comment
Share on other sites

ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள் என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால், "ஒரு நாடு" என்று சொல்லி விட்டு, அதில் கூட தமிழருக்கு இடம் கொடுக்க இந்த அரசுக்கு அக்கறை இல்லையே, அவ்வளவுக்கு வெறுப்பு மற்றும் அலட்சியமா என்றும் கேட்டு இருந்தேன்.
அதேபோல் முஸ்லிம் உறுப்பினர்களின் நியமனம் இஸ்லாமிய சகோதரர் மீது விசேட பாசம் என்பதால் அல்ல என்றும், “அவர்களை” பக்கத்தில் "வைச்சு செய்யத்தான் முஸ்தீபு" என்றும் கூறியிருந்தேன்.
ஞானசாரர் தலைமையில் குழு என்றால், யாரை நியமித்து என்ன பயன்?, "..பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என புரிகிறது.." எனவும் கூறியிருந்தேன்.
இதை ஏன் இப்போ மீண்டும் கூறுகிறேன் என்றால், இக்குழுவில் தமிழரை நியமிக்க ஜனாதிபதியை இணங்க செய்து விட்டோம், சாதித்து விட்டோம், என அரசுக்குள் இருக்கும் “செந்தமிழர்” சிலர் இப்போது சொல்லுவார்கள். அதான்.... 🤣 🤣
May be an image of 1 person and indoor
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

11 minutes ago, nunavilan said:

இக்குழுவில் தமிழரை நியமிக்க ஜனாதிபதியை இணங்க செய்து விட்டோம், சாதித்து விட்டோம், என அரசுக்குள் இருக்கும் “செந்தமிழர்” சிலர் இப்போது சொல்லுவார்கள். அதான்

இன்னொராளை விட்டிட்டியள் .......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.