Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இன்று ஆடிப்பிறப்பு


Recommended Posts

இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்

பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரில் சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்

எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்/விழாக்கள் புலத்தில் குறைந்து வெள்ளைக்காரர்களினைப் பார்த்து காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் (ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், தாயார் தினம் கொண்டாடப்பட வேண்டும்),இன்னும் பல தினங்கள்(21 வயது வந்தவுடன் நடக்கும் களியாட்டங்கள்) தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரக்கலையான பறைமேளம், நாதஸ்வரம், மேளம் போன்றவற்றினை சாதி என்ற பெயரில் ஒதுக்கிவிட்டு, மிருதங்கம் கற்பதற்கும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் , தெழுங்கு கீர்த்தனை, நாட்டியங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டாமல், வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக தமிழ் அல்லாத பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது ஆடிக்கூழ் காய்ச்சுவது எப்படி என்று சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

http://www.arusuvai.com/tiffin/village/aadikkool.html

இவ்விணைப்பில் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்வையிடலாம். மேலதிகமான உணவு தயாரிப்புக்களும் உள்ளன.

கந்தப்பு

தமிழ் அழிகின்றது என்று கவலைப்படுவதால் ஒன்றுமே ஆகப் போவதில்லை. தமிழைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றியே நாங்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் சொல்லுகின்ற கலைகள் அழிகின்றது என்றால் அதைக் காப்பாற்ற நாங்கள் ஒரு வழி முறை கண்டு பிடிக்க வேண்டும்.

கவலைப்படுவதோ, கண்ணீர் விடுவதோ மற்றவர்களுக்கு புரிவதற்கான வழியல்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.arusuvai.com/tiffin/village/aadikkool.html

இவ்விணைப்பில் ஆடிக்கூழ் செய்முறையைப் பார்வையிடலாம். மேலதிகமான உணவு தயாரிப்புக்களும் உள்ளன.

இணைப்புக்கு நன்றி தூயவன் :)

Link to comment
Share on other sites

கந்தப்பு என்ன குஞ்சாச்சி கூழ் காய்ச்சுறது என்று சொன்னவ வருவோ அந்த பக்கம்.........எல்லாற்றையும் நீங்களே குடிக்காம எனக்கும் கொஞ்ச வையுங்கோ.............. :P

Link to comment
Share on other sites

கந்தப்பு என்ன குஞ்சாச்சி கூழ் காய்ச்சுறது என்று சொன்னவ வருவோ அந்த பக்கம்.........எல்லாற்றையும் நீங்களே குடிக்காம எனக்கும் கொஞ்ச வையுங்கோ.............. :P

உங்கட வீட்டிலையும் கூழ் காட்சுவதாகக் கேள்விப்பட்டேன். புத்தன் சொல்ல வில்லையா?.

Link to comment
Share on other sites

உங்கட வீட்டிலையும் கூழ் காட்சுவதாகக் கேள்விப்பட்டேன். புத்தன் சொல்ல வில்லையா?.

நாம எப்பவும் சஸ்பென்சா தானே என்னவும் செய்வோமல தெரியாதோ................ஓ ஒ கூழ் காய்ச்சுற விசயம் அந்த ச் அப்பேர்ப் வரை பரவிட்டோ..........சரி சரி வாங்கொ அப்படியே குஞ்சாச்சி கூட்டி கொண்டு வாங்கோ............ ;)

மு.செ - பரவைமுனியம்மாவும் வரலாம்...........யார் என்று விளங்குதோ........... :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியம் மேலெழுந்து செல்லும் இக்காலட்டத்தில், தமிழ்த்தேசியத்திற்காகப் பாடுபடும் ஊடகங்களின் பணி மிக முக்கியமானதாகும். இந்த வகையில் தமிழர் வாழ்வில் முக்கியமாக அமையப் பெறும் ஆடிப்பிறப்பு நாள் தொடர்பான தகவல்களை மக்கள் மயப்படுத்தப் படல் அவசியம்.

- புலம்பெயர் தேசங்களில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாக்கள் இதனை ஒட்டியே நடைபெறுவதாகக் கருதமுடியும்.

- நம்மவர்களது ஊடகங்கள் தமிழர்களின் முக்கியமான நிகழ்வு நாட்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு நாளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.

- நமது புலம்பெயர்வு வாழ்வில் சில நிகழ்வுகளை அதற்குரிய அந்த நாளிலேயே நடத்த முடியாது. ஆனால் இதையொட்டிய வாரத்தில் பரந்துபட்ட பிரச்சாரங்களுக்கூடாக பொதுமைப்படுத்தப்பட்டு வார இறுதி நாட்களில் நிகழ்வுகளாக்கலாம். அதேவேளை, ஊடகங்கள் அதே நாளில் அதன் சிறப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைக்கலாம்.

Link to comment
Share on other sites

நன்றி இந்தநாளை இன்று ஞாபகமூட்டியதற்கு.

ஏன் ஆடிப்பிறப்பை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்?

அதிலும் பால்கஞ்சி காய்ச்சி எல்லாரும் பகிர்ந்து உண்ணும் காலை உணவு அற்புதம்.

Link to comment
Share on other sites

ஞாபகப் படுத்தியமைக்க நன்றி.

ஆடிக்கூழ் எவ்வாறு நம் பண்பாடு ஆனது. ஆடிக்கூழின் தனித்துவம் (அதற்குள் இடப்படும் மாவுருண்டைகள் முதலிய தனித்துவங்கள்) எதனைச் சித்தரிக்கின்றது முதலிய தகவல்கள் அறிந்தவர்கள் அறியத்தரமுடியுமா? (பதிவாகவோ தனிமடலாகவோ)

நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எங்கள் வீட்டிலும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் கட்டாயம் அம்மா செய்து வைப்பா!

தூயவன்,

அந்த இணைப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஈழத்தமிழர்களாகிய எங்களது செய்முறை வேறு அல்லவா?!

தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு

கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது

ஒரு பேணி - பச்சரிசி மா

அரைமூடித்தேங்காய்ப்பால்

பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு

மிளகுத்தூள் தேவையான அளவு

சீரகத்தூள் தேவையான அளவு

ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...

கலவை 1

இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.

பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

நம்ம ஆடிக்கூழ் தயார்...பலாஇலைக்கெல்லாம் எங்க போறது, வாயை வைச்சு உறிஞ்சிக்குடியுங்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

கந்தப்பு/ ஜமுனா யாராவது ஒருவர் எனக்கும் ஆடிக்கூழ் அனுப்பிவிடுங்கோ. மறந்துபோய் இருந்த எங்களுக்கு ஞாபகம் ஊட்டி இருக்கிறீங்கள். கூழ் அனுப்பாவிட்டால் உங்க ஒருவருக்கும் சமிபாடு அடையாது.

கவி அக்கா..............கூழ் சூப்பர் அந்த மாதிரி இருந்தது..............நீங்க மிஸ் பண்ணி போட்டீங்க.சரி சரி என்ட கூழில கண் வைக்காம கந்தப்புவின்ட கூழில கண்ணை வையுங்கோ பாவம் நான் பேபி ஆக்கும்.......அவுஸ்ரெலியா பக்கம் வந்தா அடுத்த கூழை போடலாம் என்ன தான் கூழ் குடித்தாலும் ஒன்று இந்த முறை குறந்து போயிட்டு அது தான் வழமையா கூட்டமா சேர்ந்தா அடிக்கிற கார்ட்ஸ் தான் (3.0.4) மற்றபடி சூப்பரா இருந்தது................... :P :P

Link to comment
Share on other sites

தூயவன்,

அந்த இணைப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஈழத்தமிழர்களாகிய எங்களது செய்முறை வேறு அல்லவா?!

ஓ. ஆடிக்கூழ் என்று தேடிப்பார்த்தேன். அம்முறை தான் கிடைத்தது. எம் முறையில் பயறு கொஞ்சம் அதிகமாக இருக்கும் போல.

Link to comment
Share on other sites

ஆடிக் கூழைக் காட்டிலும் ஒடியற்கூழ் உடம்புக்கு நல்லது. இப்போதெல்லாம் ஒடியற்கூழ் காய்ச்சும் பழக்கம் புலம்பெயர்ந்தோர் மத்தியில் பிரபலமாகி வருகிறது. காரத்தைக் கொஞ்சம் குறைத்தால் EELAM SOUP என்று வெள்ளைக்காரர் மத்தியில் அதனை ஒரு ஸ்பெசல் சூப்பாக அறிமுகம் செய்யலாம். விரும்பிக் குடிப்பார்கள்.

Edited by karu
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் நல்லா இருக்குது. அதுதானப்பா குடித்துக்கொண்டே எழுதுகிறேன். :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழுடன் கொழுக்கட்டையும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லையப்பா :rolleyes: இருந்தாலும் கந்தப்பு அவர்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் மறந்து விட்ட அருமையான இந்தப் பாடலை இணைத்த கந்தப்பு மாமாவிற்கு நன்றி. நன்றி நன்றி.

புலத்திலை கூழோ????

கூழ் கிடைக்கும் எண்டு தெரிஞ்ச வீட்டுக்குப் போனன். cool soda தான் கிடைச்சுது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பலரும் மறந்து விட்ட அருமையான இந்தப் பாடலை இணைத்த கந்தப்பு மாமாவிற்கு நன்றி. நன்றி நன்றி.

புலத்திலை கூழோ????

கூழ் கிடைக்கும் எண்டு தெரிஞ்ச வீட்டுக்குப் போனன். cool soda தான் கிடைச்சுது.

தலைவிதியை யாராலைதான் மாத்தேலும் கொடியேறிட்டுதெல்லே இனித்தான் படிப்படியாய் ஒவ்வொருதிருவிழாக்காட்சியும

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன்

ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு

1 பேணி வறுத்த அரிசி மா

4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்)

சீனி

1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால்

கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள்

செய்முறை

11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்)

சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஆடிக்கூல் ரெடி :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன்

ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு

1 பேணி வறுத்த அரிசி மா

4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்)

சீனி

1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால்

கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள்

செய்முறை

11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்)

சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஆடிக்கூல் ரெடி :P

இந்த முறை பார்க்க நல்லா இருக்கே. அடுத்த முறை செய்வோம்

Link to comment
Share on other sites

ஆடிக்கூழுடன் கொழுக்கட்டையும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லையப்பா :huh: இருந்தாலும் கந்தப்பு அவர்களுக்கு நன்றிகள்.

என்ன கு.சா

ஆடிப்பிறப்பு எண்ட உடன வலும் சந்தோசம் போல. பழைய ஞாபகங்கள் வருகுதோ ?????? :lol::(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) இங்கு கருப்பனி கிடைக்காததால்

பனங்கட்டியில் எல்லோ கூழ் செய்கிறார்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கூழுக்கு கருப்பணி பாவிக்கிறதா? கருப்பட்டி அலயஸ் பனங்கட்டிதான் சாதாரனமாக பாவிப்பது வழக்கம். :mellow::)

கருப்பணி கள்ளின் அக்காவல்லவா? ஆகா என்ன வொரு இனிமை! பிஞ்சு மாங்காயும் இருந்தால் சொல்லி வேலையில்லை. :P :P

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By தமிழ் சிறி
   .

   யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

   கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

   கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

   ஒடியல் மா - 100 கிராம்

   கழுவின இறால் - 100 கிராம்

   கழுவின பாதி நண்டு - 8

   மீன்தலை - 1

   புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

   பயிற்றங்காய் - 10

   புளி - ஒரு சின்ன உருண்டை

   பாலாக்கொட்டை - 100 கிராம்

   சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

   தண்ணீர் - தேவையான அளவு

   உப்பு - தேவையான அளவு

   மஞ்சள் - சிறிதளவு

   மிளகு - சிறிதளவு

   நற்சீரகம் - சிறிதளவு

   செத்தல் மிளகாய் - சிறிதளவு

   செய்முறை:

   1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

   2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

   3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

   4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

   5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

   6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

   7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

   கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

   நன்றி யாழ் மண்.

   .
  • By நவீனன்
   ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-
    
     ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது.   சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.   தமிழகத்தில், இந் நாளில்  விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.   ஆடி விதை தேடி விதை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி ஆவணி ஆன புரட்டாதி காடி தோய்த்த கனபனங் காயத்தைத் தேடித் தேடித் தினமும் புசிப்பவர் ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்   இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.   ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடசாலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.   ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலைஎன்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!   பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,   வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.   வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!   பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே   குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே   வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே   வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே   ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! – நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்   இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டது.   ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும்.   பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு – கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும்.   குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் http://globaltamilnews.net/archives/33152
  • By akootha
   [size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size]
   [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size]
   [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.[/size][/size]
   [size=2][size=4]"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க முடியுமா?'' என்று அறைத்தோழன் அரவிந்தனிடம் கேட்டேன். ஒழுங்காய் சோறு, கறி, பிட்டு, இடியப்பத்தையே செய்ய மாட்டாங்கள். இந்தப் பனங்கட்டிக் கூழைப் பற்றி இஞ்சை உள்ளவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இப்பவெல்லாம் சனம் கூழை மறந்து; ஏன் சோமசுந்தரப் புலவரையே மறந்து போய்ச்சு எங்கட அடிப்படைப் உணவுப் பழக்கங்களை எல்லாம் சனம் மறந்து போய்ச்சு'' [/size][size=4] என்று பெரிய ஒரு லெக்சரே அடித்தான் அரவிந்தன். எனக்குக் கூழ் ஆசையை விடமுடியவில்லை. இனி இதற்காக ஊருக்கா போக முடியும்?[/size][/size]
   [size=2][size=4]நாங்கள் எதிர்பார்த்த ஆடிப்பிறப்பு வந்தது. அன்று காலையில் இருந்தே எனக்கு ஊரின் ஞாபகம்தான் ஊரிலே அன்றைய தினம் அங்குள்ள கிணற்றடி வைரவர் கோயில்களுக்கெல்லாம் பொங்கல் செய்து படைப்பார்கள். பால்றொட்டி, வடை, முறுக்கு, அரியதரம் போன்ற பலகாரங்களை எல்லாம் சுட்டு அயலவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். [/size][/size]
   [size=2][size=4]இந்தப் பலகாரங்கள் கூட இப்போ பலருக்கு மறந்திருக்கும். இதுதவிர பனங்கட்டிக் கூழ் காய்ச்சுவார்கள். கொழுக்கட்டை அவிப்பார்கள். இது ஆடி மாதம் பூராகவும் தொடர்ந்தபடிதான் இருக்கும். எங்களுக்கெல்லாம் ஒரே வேட்டைதான். அதெல்லாம் ஒரு காலம்?[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் பின்னேரம் வேலை முடிஞ்சு வந்த உடனே ரெடியாய் இரு. நாங்கள் வெள்ளவத்தையில் இருக்கிற என்னுடைய சித்தப்பா முறையான ஒருவரின் வீட்டை போவம்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]
   [size=2][size=4]"இல்லை மச்சான் சுகுமார், என்று எனக்கு தெரிந்தவர் பம்பலப்பிட்டியில் இருக்கிறார் அங்கை போவம்'' என்று நான் கூறினேன். "இல்லை மச்சான் சித்தப்பா வீட்டை போவம்'' என்று மீண்டும் அரவிந்தன் கூறினான். எனக்கு கோபம் வந்தது.[/size][/size]
   [size=2][size=4]"உங்கட சித்தப்பா வீட்டிலை கட்டாயம் கூழ் காய்ச்சுவினமோ'' என்று ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தேன். அரவிந்தன் யோசித்தான். பின்பு அதே கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்டான்.[/size][/size]
   [size=2][size=4]"உன்ரை சுகுமார் வீட்டிலை கட்டாயம் கூழ் காய்ச்சுவினமோ?'' எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. "போன வருசம் சித்தப்பா வீட்டிலை கூழ் காய்ச்சினவை. நான் தற்செயலாகப் போன போது எனக்கு கூழ் கிடைத்தது'' என்றான் அரவிந்தன். சரி என்று அவனது விருப்பப்படியே சித்தப்பா வீட்டுக்குப் போவதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.[/size][/size]
   [size=2][size=4]அன்று மாலை நானும் அரவிந்தனும் சீவிச்சிங்காரித்துக் கொண்டு சித்தப்பா வீடு நோக்கிப் புறப்பட்டோம். "போகும் போது வெறுங்கையுடன் போகக்கூடாது'' என்றான் அரவிந்தன். நான் உடனே கடையில் ஒரு பிஸ்கட் பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டேன். அதாவது பண்டமாற்று முறை. நாங்கள் பிஸ்கட்டைக் கொடுத்து கூழ் குடிக்கப்போகின்றோம். குசேலர் கூட கிருஸ்ணனைக் காணப் போகும் போது அவலுடன்தான் போனாராம்.[/size][/size]
   [size=2][size=4]அங்கே போய்ச் சேர்ந்த போது எங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பலதரப்பட்ட விடயங்களையும் பேசிக்கொண்டோம். எனது கண்கள் எப்போது கூழ் வரும் என்று அடுக்களைப் பக்கம் நோக்கியபடியே இருந்தது. பிஸ்கட் தந்தார்கள், கேக் தந்தார்கள், தேநீர் தந்தார்கள். கூழ் மட்டும் வரவே இல்லை. [/size][/size]
   [size=2][size=4]"ஒருவேளை ஆடிப்பிறப்பை கேக் வெட்டித்தான் கொண்டாடினார்களோ?'' இருந்தே இருந்து பார்த்தோம் கடைசியில் பொறுமை இழந்த அரவிந்தன். "இன்றைக்கு மாதப்பிறப்பெல்லோ'' என்று கேட்டான் அவர்கள் கலண்டரைப் பார்த்துவிட்டு "இன்றைக்கு பதினாறாம் திகதிதானே'' என்றார்கள்.[/size][/size]
   [size=2][size=4]"அடியடா பிறப்படலையிலை எண்டானாம்'' போய்ச்சு.. கூழ் ஆசை போய்ச்சு. அப்போது சித்தப்பாதான் சுதாகரித்துக் கொண்டு. "இண்டைக்கு ஆடிப்பிறப்பு அது எனக்கு தெரியும். இஞ்சை என்னத்தைத்தான் செய்யிறது?'' என்று சலித்துக் கொண்டார். துணைக்கு அவரது மனைவியும்.[/size][/size]
   [size=2][size=4]"போன வருசம் கூழ் காய்ச்சி ஒருத்தருமே குடிக்கேல்லைத் தம்பி. இந்தப் பிள்ளைகளுக்குக் கூழ், கஞ்சி ஒத்துக்கொள்ளாது. எந்த நேரமும் ஐஸ்கிறீமை, யோக்கடை வாங்கி வைச்சு சாப்பிட்டுப் பழகிவிட்டுதுகள்'' என்று கூறிய போது நான் அரவிந்தனைப் பார்த்தேன். அவனைப் பிடித்துச் சாப்பிடவேண்டும் போல இருந்தது. இருவருமாக விடைபெற்றுக் கொண்டாம். வெளியே வீதிக்கு வந்த பின்னர்...[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் நீ சொன்ன சுகுமார் வீட்டுக்குப் போய்ப் பார்த்தார் என்ன? என்று என்னைப் பார்த்துக் கேட்டான் அரவிந்தன்'' இப்போ நான் விட்டாலும் அவன் விடவில்லை. "சரி'' என்றேன். இருவருமாக மீண்டும் ஒரு பிஸ்கற் பெட்டியை வாங்கிக் கொண்டு சுகுமார் வீடு நோக்கிப் புறப்பட்டோம்.[/size][/size]
   [size=2][size=4]சுகுமாரும் மனைவியும் எங்களை முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். அவராகவே இன்றைக்கு "ஆடிப்பிறப்பு'' என்றும் அதன் சிறப்புக்களையும், அதை எப்படி எல்லாம் கொண்டாடுவோம் என்று சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. [/size][/size]
   [size=2][size=4]இவர் எப்போது கூழ்பற்றிக் கூறுவார்? என்று காத்திருந்தேன். பயன் இல்லை. இறுதியாக நானே சுகுமாரின் மனைவியிடம்[/size][/size]
   [size=2][size=4]"நீங்கள் ஆடிப்பிறப்புக்கு கூழ் ஒன்று காய்ச்சுவதில்லையா?'' என்று கேட்டேன்.[/size][/size]
   [size=2][size=4]""ஆ.... கூழ்'' ""இந்த மரவள்ளிக்கிழங்கு, நண்டு, இறால் எல்லாம் போட்டுக் காய்ச்சு வாங்களே அதுவா?'' என்று கேட்ட போது நான் மயங்கி விழாத குறைதான்.[/size][/size]
   [size=2][size=4]"அ அதுவும் கூழ்தான்........ இ..இது வேறை கூழ்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]
   [size=2][size=4]""எட தம்பி என்ரை மனிசிக்கு கொழும்பு வந்த பிறகு தான் சமைக்கவே தெரியும் அதுகும் நான் சொல்லிக் கொடுத்துத்தான். நந்தினிக்கு கூழ் மட்டுமில்லை கொழுக்கட்டையும் செய்யத் தெரியாது'' என்னறார் சுகுமார்.[/size][/size]
   [size=2][size=4]"சரி சரி அடுத்த தடவை ஊருக்குப் போட்டு வரும் போது கூழ் காய்ச்சுவது எப்படி? என்று அறிஞ்சுகொண்டு வாங்கோ'' என்று கூறியபடி நாங்கள் எழுந்த போது.....[/size][/size]
   [size=2][size=4]"இல்லை இல்லை கட்டாயம் இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும்'' என்று கூறி பிட்டு அவித்துத் தந்தார்கள். நாங்களும் கூழுக்குப் போய்... பிட்டை நிரப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் நாங்கள் கல்யாணம் முடிக்கும் போது நல்லாய் சமைக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் கட்டவேணும்'' என்று கூறினான் அரவிந்தன். எனக்குச் சிரிப்பாக இருந்தது. ஏதோ கூழ் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சொல்லுகிறான். நாளைக்கு எல்லாம் சரியாப் போகும் என்று நினைத்துக் கொண்டேன்.[/size][/size]
   [size=2][size=4]கூழ் ஆசையை தற்காலிகமாக ஒத்திவைத்துக் கொண்டோம். ஆடி மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது. கூடவே எங்கள் கூழ் ஆசையும் தான்.[/size][/size]
   [size=2][size=4]அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அவசரமாக என்னை எழுப்பினான் அரவிந்தன்.[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் இண்டைக்கு நாங்கள் கூழ்குடிக்கப் போகின்றோம்'' என்றான். இரவு முழுவதும் கூழைப்பற்றியே கனவு கண்டு இருப்பான் போலட இருக்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் நல்ல ஒரு ஐடியா!! கூழுக்குத் தேவையான சாமான்களை கடையிலை வாங்குவம். அதைப் பக்கத்து வீட்டு அன்ரியிட்டை கொடுத்தால் கூழ் காய்ச்சித் தருவா'' என்றான்.[/size][/size]
   [size=2][size=4]"அன்ரிக்கு கூழ் காய்ச்சத் தெரிந்திருக்குமா?'' என்று கேட்டேன். "ஓம் மச்சான் அதுகள் நவாலி, சங்கரத்தையைச் சேர்ந்த சனம். கட்டாயம் தெரிஞ்சிருக்கும்'' என்றான். [/size][/size]
   [size=2][size=4]"நவாலி'' என்றவுடன் எனக்கு நம்பிக்கை வந்தது. "சோமசுந்தரப்புலவர் பிறந்த ஊர் அல்லவா?[/size][/size]
   [size=2][size=4]அவர்களுக்கு கட்டாயம் ஆடிக் கூழைப் பற்றித் தெரிந்திருக்கும். அன்று மாலை அதற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு அன்ரி வீட்டுக்குச் சென்றோம். அன்ரிக்கு ஏதோ விளங்கியிருக்க வேண்டும்.[/size][/size]
   [size=2][size=4]"தம்பிமாருக்கு என்ன செய்துதர வேணும்?... ஐசிங் கேக்கா? புருட்கேக்கா? பலூடாவா? மஸ்கெற்றா? பால்க் கோவாவா? சூசியமா? அல்லது சில்லிப் பராட்டவா? பூரியா, சப்பாத்தியா? சொல்லுங்கோ தம்பிமார் என்ன செய்து தரவேணும்?....'' ""ஆ இதுகள் எல்லாம் தின்பண்டங்களா? இதுகளைப் பற்றி எல்லாம் எங்களுக்கு எதுகுமே தெரியாது?'' என்று சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை. [/size][/size]
   [size=2][size=4]அரவிந்தன் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. உண்மையாகவே அன்ரி ஒரு சமையல் புயல்தான், நிச்சயமாக இன்று கூழ் குடிக்கலாம். என்று நினைத்துக் கொண்டேன். நான் சுதாகரித்துக் கொண்டு.. "அன்ரி அவ்வளவிற்குச் சிரமப்பட வேண்டாம். எங்களுக்கு ஆடிக்கூழ் காய்ச்சித் தரமுடியுமா? என்று கேட்டேன்.[/size][/size]
   [size=2][size=4]"ஆடிக்கூழா......?''[/size][/size]   [size=2][size=4]"ஓம் அதுதான் சோமசுந்தரப் புலவர் பாடினாரே பனங்கட்டிக்கூழ்'' என்றேன்.[/size][/size]
   [size=2][size=4]"யார் சோமசுந்தரப் புலவர்?'' என்று கேட்டாள் அன்ரி.[/size][/size]
   [size=2][size=4]எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.... அதன் பிறகு அரவிந்தன்தான் பேசினான்.[/size][/size]
   [size=2][size=4]"இது பயறு, பனங்கட்டி தேங்காய் எல்லாம் போட்டுக் காய்ச்சுவாங்களே அது தான்'' என்றான்.[/size][/size]
   [size=2][size=4]"....அ... அது ஊரிலை சின்னனிலை ஒருக்கால் குடிச்சிருக்கிறன். ஆனால் அது எப்படி செய்கிறது எண்டு எனக்குத் தெரியாது'' என்று கையைப் பிசைந்து கொண்டாள். பேசத் தெரியாதவன் ஆங்கிலம் பேசின மாதிரித்தான் என்று நினைத்துக் கொண்டு,[/size][/size]
   [size=2][size=4]"சரி போகட்டும் எங்களுக்கு பால்க்கோவா தேவைப்படும் போது வாறம் அன்ரி'' என்று கூறியபடி விடைபெற்றுக் கொண்டோம்.[/size][/size]
   [size=2][size=4]வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பலர் தங்கள் பெற்றோருக்கு இப்படி ""ஒடியற்கூழ், பனங்கூழ் எல்லாம் குடிக்க ஆசையாக இருக்கிறது என்று கடிதம் எழுதியதை எல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.[/size][/size]
   [size=2][size=4]ஆனால் இந்த இரண்டுங்கெட்டான் கொழும்புவாழ் பெருங்குடி மக்கள் மட்டும் எங்கள் வாழ்க்கை முறையையே மறந்துட்டார்கள் என்று நான் ஆதங்கப் பட்டேன். அப்போது "உனக்கு ஒருத்தரும் கூழ்காய்ச்சித் தரவில்லை என்ற கோவம் மச்சான்'' என்றான் அரவிந்தன்.[/size][/size]
   [size=2][size=4]நாங்கள் மீண்டும் அறைக்கு வந்த கையோடு அரவிந்தன் மண்ணெண்ணைக் குக்கரை எடுத்து அடுப்பை மூட்டினான். சருவத்தை வைத்துத் தண்ணீர் ஊற்றினான்.[/size][/size]
   [size=2][size=4]"எடேய் என்ன செய்யப் போறாய்?'' என்றேன்.[/size][/size]
   [size=2][size=4]"நீயே பார்... கூழ் பெரிய கூழ்? எனக்கு கொஞ்சம் சமையல் தெரியும். இண்டைக்கு எப்படியும் கூழ்குடிக்கிறது தான்'' என்றான்.[/size][/size]
   [size=2][size=4]சருவத்து நீர் கொதித்ததும் பயறை அதற்குள் போட்டு அவித்தான். பயறு அவிந்து வந்த போது, தேங்காய்ப்பாலையும் விட்டு அரிசிமாவையும் போட்டுக் கலக்கினான். நான் பனங்கட்டியை வெட்டிக் கொடுத்தேன். அதனையும் உள்ளே போட்டுக் கொதிக்க விட்டான். [/size][/size]
   [size=2][size=4]அப்போது தான் ஞாபகம் வந்தது. தேங்காய் ஒன்றை உடைத்து, சொட்டாக்கி அதை நறுக்கி உள்ளே போட்டுக் கலக்கினோம். கூழின் வாசனை மூக்கைத் துளைத்தது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.[/size][/size]
   [size=2][size=4]"மச்சான் ஆடிக்கூழ் லேசாய் உறைக்கிறது தானே? அதற்கு என்ன போட வேண்டும். என்று கேட்டேன். ""வேறை என்ன செத்தல் மிளகாயை இடித்துப் போடவேண்டும்'' என்றான்.[/size][/size]
   [size=2][size=4]அந்தப் பதிலினால் அன்றைய அந்த ஆடிக்கூழில் பெரிய ஒரு திருப்பமே ஏற்படப் போகின்றது என்பதை [/size][/size]
   [size=2][size=4]அப்போது நான் அறிந்திருக்கவில்லை. [/size][/size]
   [size=2][size=4]மிளகாய் இடித்துப் போட்டு கூழைக்காய்ச்சி இறக்கி வைத்தான் அரவிந்தன். அந்தக் கூழைக் குடித்தது முதல் குடல் எல்லாம் எரிந்து இரண்டு நாள்களாய் ஒரே வயிற்றுப் போக்கு. கூழாசை குடலைக் கொண்டு போகப் பார்த்தது. நல்லகாலம் தப்பித்தோம்.[/size][/size]
   [size=2][size=4]பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம், "கூழுக்கு மிளகு, சீரகம், ஏலக்காய் இடித்துப் போட வேண்டும். அது எங்களைப் போன்ற "அவசரக் குடுக்கைகளுக்கு' சரிப்பட்டு வராது தான்.[/size][/size]
   [size=2][size=4]"ஆடிக்கூழைத் தேடிக்குடி என்று ஆச்சி அடிக்கடி கூறுவாள். அங்கெல்லாம் தேடாமலே கூழ் கிடைக்கும். இங்கு தேடினாலும் கூழ் கிடைக்கவில்லை. அவரவர்க்கு அளந்தளவுதான் எல்லாமே. ஒருவாறு ஆடிமாதமும் நிறைவு பெற்றிருந்தது. கூடவே கூழ் ஆசையும் தான். மீண்டும் அடுத்த வருடம் ஆடிமாதம் வரும் ஊருக்குப் போய், சந்தோசமாக ""கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்'' என்று நினைத்துக் கொண்டோம்....!'' [/size][/size]
   [size=2]
   http://onlineuthayan...220731621490547[/size]
  • By குமாரசாமி
   ஆடிக்கூழ் செய்வது எப்படி?
   16ம் திகதி ஆடிப்பிறப்பாம்......
   ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
   ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
   கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
   கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
   பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
   பச்சையரிசி இடித்துத் தெள்ளி
   வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
   மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
   வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
   வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
   தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
   சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
   வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
   வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
   பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
   பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
   பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
   போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
   மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
   மணக்க மணக்கவா யூறிடுமே
   குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
   குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
   அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
   ஆடிப் படைப்பும் படைப்போமே
   வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
   வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
   அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
   ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
   வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
   மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
   கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
   கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
   ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
   ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
   கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
   கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
   – நவாலியூர் சோமசுந்தரப்புலவர்-
  • By நவீனன்
   ஆடிக்கூழ் செய்முறை
    


   5- 6 பேருக்கு போதுமானது

   தேவையான பொருட்கள் :
     அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர்
   செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .   ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .   பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .   பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .   பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க    கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் . http://yarlsamayal.blogspot.com/2013/03/blog-post_1.html
 • Topics

 • Posts

  • குட்மோனிங் - நல்ல நாளாக அமையட்டும் என்று ஒருவரை வாழ்த்துவதும் ஒருவரை வணங்குவதும் ஒன்றா வில் வளைவது தீமை செய்வதற்காக  வணங்கம் தெரிவிப்போரும் அது மாதிரியே அதனால் கவனம்  என்று திருக்குறள் தெரிவிக்கின்றது. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் இலங்கைக்கு நான் போன போது இந்த வணங்குதல் வணக்கம் ஒன்றும் இல்லாமல் எவ்வளவு அன்பாக வரவேற்றார்கள்.
  • மலட்டுத்தன்மை இயற்கை விதிகளுக்குள் வராது. மலட்டுத்தன்மையோ அல்லது ஆண்மையின்மையோ அது ஒருவித குறைபாடு.  மலட்டுத்தன்மையும் ஆண்மையின்மையும் ஓரளவு மருத்துவத்தால் நிவர்த்தி செய்யக்கூடிய குறைபாடு. ஓரின சேர்க்கை அப்படியல்லவே
  • உலகில் எதுவுமே இயற்கைக்கு மாறானது இல்லை என நான் நினைகிறேன். ஒரு பொதுவியையும், அதன் விலக்கையும் கொண்டிருப்பதுதான் இயற்கை. எல்லாவறையும் உள்ளடக்கியதே இயற்கை. எல்லா ஆடுகளும் வெள்ளையாக இருக்கும் போது ஒரு கறுத்த ஆடு அதே மந்தையில் இருக்கும். அந்த கறுத்த ஆடு இயற்கைக்கு மாறானது அல்ல. வழமைக்கு மாறானது என்று சொல்லாம்.  இனப்பெருக்கம் செய்யும் உறவுதான் இயற்கையானது என்றால் மலட்டுதன்மை உள்ள, விரும்பி பிள்ளை பெறாது இருக்கும் தம்பதிகளையும் இயற்கைக்கு மாறானவர்கள் என்றல்லவா அழைக்க வேண்டும்? நிச்சயம் தன்பாலின ஈர்ப்பு ஒரு பாணி அல்ல. அது ஒரு நோயுமல்ல ஒரு அங்கவீனமும் அல்ல. பாலின ஈர்ப்பு என்பது ஒரு spectrum என்கிறார்கள். ஒரு extreme இல் எதிர் பாலினத்தவரால் மட்டும் ஈர்க்கப்படும் நம் போன்றோர். எதிர் extreme இல் தன்பாலின கவர்சி மட்டும் உடையோர். இந்த இரெண்டுக்கும் இடையில் bisexual, pansexual இவ்வாறு பலர். மனித பாலின அடையாளம் சூரிய ஒளி போன்றது. பார்க்க வெளிச்சம் மாரி இருந்தாலும் அதற்குள் வயலட் முதல் சிவப்பு வரை நிறங்கள் உள்ளன. இதை குறிக்கவே ரெயின்போ கொடி.
  • பேசாமல்  குடிவரவு கொள்கையில திருத்தம் செய்து போட்டு யூனியனோடை சேர்ந்தே போயிருக்கலாம். இரண்டு பக்கத்துக்கும் சோலியில்லாமல் போயிருக்கும்.😁 கடலுக்கடியிலை ரயில் சுரங்கப்பாதை கட்டினதுதான் மிச்சம்.கடைசியிலை தீவார் வேலையை காட்டிட்டாங்கள். நான் தீவார் எண்டு சொன்னது பெரிய பிரித்தானியவை மட்டும்.🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.