Jump to content

ஒரு நாடு ஒரு சட்டம்-பா.உதயன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரு மொழி ஒரு நாடு 
ஒரு மொழி இரண்டு தேசம் 

-கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா 

இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும்  ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய  இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி. இந்த சிங்கள பௌத்த சித்தாந்தக் கொள்கையானது( Buddhist ideology ) இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் மனங்களை வெல்லுவதை விட இவர்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்குவதாகவே அமைவதோடு மாத்திரம் இன்றி இந்த நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு(Authoritarian rule ) வழி சமைப்பதாகவும் அமைந்து விடும் ஒரு அச்ச நிலைமையே இன்று காணப்படுகிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று இலங்கையில் எல்லா மக்களுக்கும் சமத்துவமான சட்டத்தை வழங்க அந்த நாட்டின் தலைவர் நல்ல சிந்தனை கொண்டு அமுல் நடத்துவதாக இருந்தால் இன்று அவர் ஏன் பெரும் குற்றம் செய்த பெரும் பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மட்டும் மன்னிப்பு வழங்கி அப்பாவி அரசியல் தமிழ்க் கைதிகளுக்கு இன்னும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் இருக்கிறார்.இப்படி மனப்பான்மை கொண்ட ஒரு தலைவரால் எப்படி எல்லோருக்கும் ஒரே சமத்துவமான சட்டத்தை அமுல் படுத்த முடியும்.

பௌத்த பேரினவாத தேசிய சித்தாந்தக் கொள்கையைக் பின் பற்றி ஏனைய  மத மக்கள் மீது இனவாதத்தை விதைக்கும் ஒரு துறவி தலைமையில் கூடும் குழுவால் எல்லா இனங்களுக்கும் சமத்துவமான சட்டம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர் பார்க முடியுமா. இந்த நாட்டில் வாழும் ஏனைய சிறு பான்பை தேசிய இனங்களின் கருத்துக்களை உள்வாங்காமல் நடை முறைப்படுத்தப்படும் எந்தச் சட்டமும் ஒரு வகையில் தனி மனித சர்வாதிகாரம் தான்.நாட்டின் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்வதாகவே அமையும். 

மதத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்ந்து கொண்டே போகிறது மதமும் அரசியலும் சட்டமும் பிரிந்து பயணிக்காத வரையில் இந்த நாட்டின் எதிர் காலம் மாற்றத்துக்கு வருவது கடினமே. சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும் காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . இதனால் தான் இன்று பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர் அமைப்புகளுடன் தாங்கள் பேசத் தயார் இல்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். இது பலருக்கு ஆச்சரிக்கமாக இல்லாத போதும் இலங்கை அரசோடு பேசத் தயாராக இருந்தவர்களும் அபிவிருத்தி பொருளாதாரம் என்று கதைத்தவர்களுக்கும் இது கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கும். 

சட்டவாளர்களும் சட்ட அறிஞர்களும் இருக்கும் போது சட்டம் நீதியை மதிக்காதவர்களும் குற்றவாளிகளும் நாட்டின் சட்டங்களை அமுலாக்கும் பொறுப்பில் அமர்த்துவது இலங்கையைப் பெறுத்த வரையில் ஆச்சரியம் அளிப்பதாகவில்லை ஏனெலில் இங்கு சரியான நீதி இருப்பதாகவில்லை. இங்கு நீதி வழங்கிய தீர்ப்புகளில் இருந்து பலர் தப்பிப் கொள்கின்றனர். பல்லின சமுகங்கள் வாழும் இந்த நாட்டிலே இந்த சமூகங்களை புறக்கணித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்பது மேலும் மேலும் இந்த நாட்டில் பெரும் குழப்பங்களை உண்டு பண்ணி வளமை போலவே அமைதியும் சமாதானம் இன்றி தொடர்ந்து வாழ வேண்டிய நிலை தான் ஏற்படும். 

காலம் காலமாக இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த பல தேசவழமைச் சட்டங்களை எல்லாம் இல்லாமல் செய்து சிங்கள பௌத்த பெரும் பான்மை இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இந்த நாட்டை அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக்கி பௌத்த சிந்தாந்தங்களோடும் பேரினவாத சிந்தனையோடும் மட்டும் பயணிக்க விரும்புகிறது. எப்படி தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய் மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள் ஏமாற்றப்படு வார்களா இன்னும் இந்த நாட்டை சூழ்ந்திருக்கும் இருள் விலகுமா காலம் பதில் சொல்லட்டும்.
 
பா.உதயன் ✍️
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

நல்லதொரு ஆய்வு பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2021 at 08:45, uthayakumar said:

இரு மொழி ஒரு நாடு 
ஒரு மொழி இரண்டு தேசம் 

-கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா

இவ்வாறு கூறி, அனைத்து இனமக்களுக்கும் சம உரிமையை சிங்கள இன மக்கள் மத்தியில் வலியுறுத்திய, திரு கொல்வின் ஆர் டி சில்வா போன்ற வர்களுடன் இணைந்து வேலை செய்து, எமக்கான உரிமையை உரிய காலத்தில் பெற்று அதை பலப்படுத்த கிடைத்த வாய்பபை  தமது சுயநலத்துக்காக புறம் தள்ளி  இடது சாரிகளை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து பலவீனப்படுத்தியதன் மூலம் அவர்களையும் இனவாத சேற்றுக்குள் விழ செய்தவர்கள் எமது தமிழ்த் தலைவர்கள்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 03:40, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆய்வு பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

On 31/10/2021 at 09:25, tulpen said:

இவ்வாறு கூறி, அனைத்து இனமக்களுக்கும் சம உரிமையை சிங்கள இன மக்கள் மத்தியில் வலியுறுத்திய, திரு கொல்வின் ஆர் டி சில்வா போன்ற வர்களுடன் இணைந்து வேலை செய்து, எமக்கான உரிமையை உரிய காலத்தில் பெற்று அதை பலப்படுத்த கிடைத்த வாய்பபை  தமது சுயநலத்துக்காக புறம் தள்ளி  இடது சாரிகளை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து பலவீனப்படுத்தியதன் மூலம் அவர்களையும் இனவாத சேற்றுக்குள் விழ செய்தவர்கள் எமது தமிழ்த் தலைவர்கள்.  

தமிழ்த்தேசியன் துல்பின் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.துல்பின் உங்கள் கருத்துக்களில் பல உண்மைகள் இருகின்றன நம் தலைவர்கள் கொடுத்த அமைச்சு பதவிகளோடு அன்றும் தான் இன்றும் தான் அடங்கி விட்டனர்.சர்வதேச போக்குக்கு இணங்க சரியான சர்வதேச அணுகு முறையையோ இல்லை உள் நாட்டு இராஜதந்திர காய் நகர்த்தல்களையோ சரியாக நகர்த்தவில்லை.இது ஒரு புறம் இருக்க சிங்கள பெரும் தேசிய இன வாதமும் தமிழருக்கான உரிமையையும் கொடுத்து இந்த நாட்டை சமாதான பாதையில் நகர்த்தத் தவறியமையும் தான் இந்த பெரும் அழிவுகளுக்கே காரணமாகியது.அதன் பலனை இந்த தேசம் இன்று அனுபவிக்கின்றது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.