Jump to content

வாழ்வு - இந்த வினாடியை அனுபவித்து வாழுங்கள்


Recommended Posts

 புனித் =====

புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

நேற்று முன் தினம் இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். நேற்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.

எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது. massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கபபடல்லை என்றே தெரிகிறது. சும்மா நம் ஆறுதலுக்காக 'unhealthy lifestyle' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இறுதி நிமிடம் வரை புனித் 'fit as fiddle' ஆகத் தான் இருந்திருக்கிறார்.

வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள். உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை. 'Interval' கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'The End' கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!

இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் positive ஆகச் சிந்திக்கவும் சில விஷயங்கள் உள்ளன. ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.

*பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள்*. எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்து கூடப் பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.

*நிகழ்காலத்தில் வாழ்வது*.

மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத் திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம்.

*தொலையாத கவலைகள்*.

உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள். 'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். reality என்ன வென்றால் 'they will be just fine!'. நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம். 'அழவா இங்கே வந்தோம்? ஆடு பாடு ஆனந்தமா!'

*பற்றின்மை😘

பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.

*நன்றி உணர்ச்சி😘

நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.

*பகிர்ந்து கொள்ளுதல்*,

உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக் கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு.

*கடவுள் நம்பிக்கை.*

இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. 'காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்' என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. 'அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்' என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு 'This is but a scratch'!!!

*மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம். அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு 'feel-good movie' யாக இருக்க வேண்டாமா?* யோசிப்போம்! வாழ்க வளமுடன்.

-----

WhatsApp இல் வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நேர்மறையை எம்மை சுற்றி உருவாக்குவோம். நாமும் அதில் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். 

ஒவ்வொரு மரணமும் எமக்கும் மரணமுண்டு என்று காட்டிச்சென்றாலும், குறுகிய காலத்தில் மறந்துவிட்டு போட்டி பொறாமை ஆசை காமம் என்று அலைவதும் மனித மனம் தான். மரணம் எங்களுடன் பயணிக்கும் நிழல் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு உறவும் எமக்குத்தேவை என்று வாழுவோம். 

பகிர்வுக்கு நன்றி நிழலி.

வாழ்கை வாழ்வதற்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

பகிர்வுக்கு நன்றி நிழலி ..........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து ஒரு விழாவில் சொல்லியிருப்பார், எந்த மனிதனுடனும் பழகும்போது இன்றுதான் இவரை சந்திக்கபோகும் கடைசிநாள் என்று எப்போதும் நினைத்து வாழ்ந்தால் எவருடனும் அன்பாய் பழகலாம் எந்த காலத்திலும் எமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள்’ என்று.

பின்னர் இதை சொன்ன அவரே பல எதிரிகளை சேர்த்துக்கொண்டார் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் சொன்னதில் ஓரளவு உண்மையிருக்கிறது.

திடீரென இறந்தவர்களை நினைக்கும்போது இப்படி போவார் என்று தெரிந்திருந்தால் எந்த சச்சரவுமின்றி அன்பாக பழகியிருக்கலாமோ என்று தோன்றும்,

அதேநேரம் மறு கோணத்தில் நாம் எதிர் கொண்ட பாதிப்புக்கள் அதனை மறக்கவும் தூண்டும் அந்த வகையில் ....

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து அங்குள்ள விவசாயிகளை எலிகறி தின்ன வைத்து, வாடிய நெற்பயிர்களை மாடு மேய வைத்து பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் தூக்கிட்டும் விஷமருந்தியும் தற்கொலை செய்ய வைதது அப்பப்போ கர்நாடகாவிலிருந்து தமிழர்களை தமிழகத்திற்கு அடித்து விரட்டி கன்னடர்கள் ஆடும் கொடூர  தாண்டவத்துக்கு நேரடி மறைமுக ஆதரவு என்று  கன்னட திரையுலகிற்கு பெரும் பங்குண்டு.

மனதளவில் சிங்களவர்கள் எனக்கு எப்படியோ அதே கோணத்தில்தான் கன்னடர்களும் , எல்லைதாண்டும் ஒரு சில தமிழக குற்றவாளிகளை  தவிர சராசரி தமிழக மக்களுக்கும் எங்களுக்கும் எந்த எல்லைகளும் இல்லை. அவர்கள் துயரமும் எங்கள் துயரமும் ஒன்றானவை.

அதனால் கன்னடர்களை அடியோடு வெறுக்கிறேன், இருந்தாலும் ஒரு  மாநில மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு புகழ்பூத்த சக மனிதனின் இறப்பு  மிகவும் துயரமானதுதான்.

திடீரென மறைந்த நடிகர் புனித்துக்கு ரசிகனாய் அல்ல,  சக மனிதனாய் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை//

உயிர்… அப்படி எதுவுமே இல்லை… அண்மையில் ஒரு அமெரிக்க பிரபலம் 32 வருடங்கள் கோமாவில் இருந்து அப்படியே இறந்துவிட்டார்… கண் காது மூக்கு மூளை என்று எந்தபுலன்களும் வேலை செய்யாத ஒருவரின் உடம்பில் ஒரு மாதம் ஒருவாருடம் இல்லை 32 வருடங்கள் உயிர் என்பது இருந்தால் மீண்டும் எழாமல் இறக்கபோகும் ஒரு உடம்பில் எதை சாதிக்க இருக்கப்போகிறது? செயற்கை இறைச்சியை சிங்கப்பூரில் செய்கிறார்கள்.. செயற்கையாக இறைச்சி துண்டை லப்பில் வளர்க்கிறார்கள்.. இரத்தத்தின் மூலம் போகும் எல்லா உயிர்சத்துக்களும் போகிறது.. சதையும் வளருது.. அதுக்கு மூளைய பொருத்தினா அது ஒரு உசிரு.. இல்லை என்றால் இறச்சி துண்டு.: கோமாவில் அதே நிலமைதான்… மூளை இல்லை ஆனா இரத்தத்தின் மூலம் சத்துபோகுது உடம்பென்னும் இறைச்சி துண்டு சிங்கப்பூர் லப்பில் வளருவதுபோல் அழுகாமல் வளருது..உசிரும் இல்ல மசிரும் இல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நிழலி.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென மறைந்த நடிகர் புனித்துக்கு ரசிககையாய் அல்ல,  சக மனிதனாய் அஞ்சலிகள்...

ஸ்காபிறோவில் பராமடிக்கின் கவலையீனமான கால தாமத்தால்  தமிழ் மகன் ஒருவர் இறந்துள்ளார்..யாராவது அறிந்தீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பண்ணிருந்தா புனித்தை காப்பாத்தியிருக்கலாம் : Dr Arunachalam About Puneeth Rajkumar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 ல் நண்பனின் அகால மரணம், 2011 ல் தம்பி icu ல் 38 நாள் இருந்து மீண்டது, 2016 ல் அத்தானின் மகள் 19 வயதில் எதிர்பாராத மருத்துவரின் தவறால் இழந்தது இவற்றால் மரணம் பற்றிய அச்சமில்லை. வாழும்போது சக உயிர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயனுற வாழ்ந்தால் போதும்.

இதயம் நின்று 5/6 நிமிடங்களில் இயங்க வைத்தால் உயிர் தப்ப வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி பலரும் அறிந்து வைத்திருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...அவர்  உடம்புக்கு ரெஸ்ட் கொடுக்காமல் வேலை செய்திருக்கிறார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிற விளையாட்டு,ஜிம் அது இதெல்லாம் பொய் வேலை. அளவோடை வேலை செய்து அளவோடை உடற்பயிற்சி அதுவே போதும். முந்தியெல்லாம் ஜிம் மண்ணாங்கட்டியெல்லாம் இல்லை. ஜிம்முக்கான புரோட்டின் கோதாரியளும் இல்லை. ரெட்புஃல் பானமும் இல்லை. 

மயிரில்லா மசிலுக்காக ஆசைப்பட்டு ஜிம்முக்கு போனால் மரணம் கதவை தட்டும்.

Best Fitness Guinnessworldrecord Boxjump Onejump Onehealthclu GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி மட்டும் காரணமாக இருக்காது. ஸ்ரிறோயிட் போன்றவை காரணமாக இருக்கலாம். இத்தகைய இரசாயனங்களின் நீண்ட கால பாவனை உடலை அதிகம் பாதிக்கும்..!

அஞ்சலிகள்…! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.