Jump to content

விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு.

November 1, 2021

spacer.png

ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் விடுதியில் இருந்து வெளியேறி மாநாட்டு மண்டபத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதியில் காவற்துறை பிரசன்னம் காணப்படுகிறது.

இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த இன அழிப்புகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுவரும் கோட்டாபயவின் வருகைக்கு பல் வேறு வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற முயற்சிகளில் ஸ்கொட்லாந்தில்வசிக்கும் ஈழத் தமிழர்கள் கடந்த சிலநாட்களாக ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கை அதிபரை ஓர் “இன அழிப்புக் குற்றவாளி” எனக் குறிப்பிடும் பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் பல அங்கு வெளியாகியுள்ளன.

பருவநிலை மாநாட்டை ஒட்டி நடைபெறுகின்ற பக்க நிகழ்வுகளில் ஒன்றில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இலங்கை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசியஅவர், சுற்றுச் சூழலைச் சீரழிக்காமல்விவசாயத்தில் புரட்சி செய்வது குறித்துவலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தாமல் விவசாய உற்பத்தியை மேம்படுத்த நவீன விஞ்ஞான நுட்பங்களையும் நடைமுறைகளையும் பயன் படுத்துவதே இப்போது நாம் எதிர்கொள்ளும் சவாலாகும். பல தசாப்தங்களாக, நீண்டகால சிறுநீரக நோய் இலங்கையின் விவசாய மையப்பகுதியில் ஒரு தீவிர பிரச்சினையாக உள்ளது. இரசாயன உர வகைகளின் அதிகப்படியான பாவனையானது இந்தப் பிரச்சினைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் பின்னணியில், இரசாயன உர இறக்குமதியைக் குறைப்பதற்கும், மாற்று வளங்களை வலுவாக ஊக்குவிப்பதற்கும் தமது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2021/167985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Other groups, like these Tamil activists, gathered to highlight political issues other than climate change

https://www.bbc.co.uk/news/live/world-59103425

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கிளம்பிய வாகனம் இடையில்மக்கர் பண்ணி மூன்றுமணியளவில் அங்கு சென்று இறங்கினோம்  .

நீதி -பழைய வாகனம்களில் நீண்ட தூர  பிரயாணம் கள்  மேற்கொள்ள வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நாங்கள் கிளம்பிய வாகனம் இடையில்மக்கர் பண்ணி மூன்றுமணியளவில் அங்கு சென்று இறங்கினோம்  .

நீதி -பழைய வாகனம்களில் நீண்ட தூர  பிரயாணம் கள்  மேற்கொள்ள வேண்டாம் .

ஆக மொத்தத்தில் உங்களை நம்பி ஒரு வாகனத்திலும் ஏற முடியாது?

7 hours ago, nedukkalapoovan said:

spacer.png

Other groups, like these Tamil activists, gathered to highlight political issues other than climate change

https://www.bbc.co.uk/news/live/world-59103425

 

இலங்கை ஜனாதிபதியின் உரையை யூரியூப்பில் பார்த்தேன். நன்றாகதான் பேசி உள்ளார். அவரது Sales pitch மோசம் இல்லை.. உரை நல்ல preparation.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆக மொத்தத்தில் உங்களை நம்பி ஒரு வாகனத்திலும் ஏற முடியாது?

உங்களை கூட்டிக்கொண்டு யார் போவார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உங்களை கூட்டிக்கொண்டு யார் போவார்கள் ?

செம சிரிப்பு. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சியை  சரியாக திட்டமிட்டு ஒழுங்கு செய்தவர்களுக்கும்.
கடும் மழையிலும்,  குளிரிலும்  கலந்து கொண்டவர்களுக்கும்  பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2021 at 04:36, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை ஜனாதிபதியின் உரையை யூரியூப்பில் பார்த்தேன். நன்றாகதான் பேசி உள்ளார். அவரது Sales pitch மோசம் இல்லை.. உரை நல்ல preparation.

பேச்சு எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.

நாடு காடழிப்பு.. மண் அகழ்வு.. கனிம விற்பனை.. கனிம அகழ்வு.. காபன் வெளியீடு குறித்த அறிவின்மை.. சூழல் மாசு கட்டுப்பாடு குறித்த அறிவின்மை.. சேதனப் பசளை என்றுகிட்டு.. அங்கு மீதேன் வெளியேற்றம் பற்றிய அக்கறை இன்மை.. என்று முழு முட்டாளாத்தான் இருக்கார் உங்க சனாதிபதி.

உலகம்.. மீதேன் வெளியேற்றம் (அதுவும் ஒரு பச்சைவீட்டு விளைவு வாயு) குறித்து பேசிக்கிட்டு இருக்கு.. காடழிப்பை தவிர் என்றுது.. இவை புலிகள் வைச்சிட்டு போன காட்டையும் அழிச்சு நாசம் பண்ணுதுங்க. 

அதிலும்.. எத்தனையோ தொன் குண்டுகளை கொட்டி யுத்தத்தை வென்றேன் என்று தம்பட்டம் வேற. அவ்வளவு குண்டுகளின் வெடிப்பு விளைவுகளால்.. பூமியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதகத்திற்கு என்ன பரிகாரம்... மனித இனத்துக்கு செய்ததை சிலர் மறப்போம்.. மன்னிப்போம் என்றிட்டினம். ஆனால்.. இயற்கை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாது. தண்டிக்கும்,.. எல்லாரையும் ஒன்றா வைச்சு தண்டிக்கும். 

அதையும் உங்க பேச்சில விண்ணன்.. செயலில பூச்சியம் சனாதிபதியிடம் சொல்லிப் புரிய வைச்சிங்கண்ணா நல்லமுங்கோ. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.