Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே எம்மவர்கள் பலருழைத்து  ஏற்றுவித்த  வல்லாண்மை மங்குதிங்கே  மதியற்றோர் கொண்ட மடத்தாலே!

நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும் நாடிங்கு எழுவதெந்நாள் நாணுதிங்கே நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!

நாம் நாடுகின்ற  நாடாள்வார் நாட்டிலெங்கே நாடிய மக்கள் நலமெங்கே நாம் நாடுகின்ற நாடொன்று நாளாகத் தேய்வதிங்கே நாடற்றோர் நாம் கொண்ட  சாபத்தாலே!

தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே தடையை உடைத்தாலே மனித்த பிறவி பயனறிந்த மனிதநேய தமிழரங்கே மடையை உடைத்தாலே தனித்த நாடொன்று தனியாயங்கே அமைந்திடுமே தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!

நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே சீரான உணர்வுகளை சீர்மிகுந்த நற்செயலையிங்கே நேரான வழிகளிலே ஊரறிய உலகறிய  ஊர் மக்கள் உலக மக்கள் உளமறிய செய்வதிங்கே நேரான வழி கொண்ட நேர் கொண்ட விழி கொண்ட கூரறிவுடையோர் கொண்ட கடமையதிலே!

-தமிழ்நிலா.

Edited by தமிழ்நிலா
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 17:03, தமிழ்நிலா said:

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள்.💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள்.💐

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.