Jump to content

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

ஏனையா, 

கொஞ்சமும் positive ஆகச் சிந்திக்க  மாட்டீர்களா ? 

Bild

 எங்கடையளை நம்பி எப்பிடி positive வா சிந்திக்கிறதாம்??? 
இவ்வளவு காலமும் எங்கடை அரிசியல் தலைவர்மார் பொய்யும் பிரட்டும் தானே செய்திருக்கினம்.எங்கையும் போய் பேச்சுவார்த்தை பிழைச்சால் போர் வெடிக்கும் போராட்டம் பிரட்டியெடுக்கும் எண்டு விட்ட உருட்டுகள் கொஞ்சமா நஞ்சமா? அவ்வளவும் சுத்தமான உருட்டுக்கள் எல்லோ? 🤣

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அவை சந்திப்பு ஒருபக்கம் இருக்கட்டும் அந்த கணக்கு சரியானதா  இல்லையா ?

கேள்விக்கு பதில் இல்லை இதுவரை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இங்கை கக்கீமும் ..மனோவும்  ..அய்யாவுடன் வழியிறதைப் பார்த்தால் ...நாங்களும் தமிழ்தானே...எங்களையும் கூட்டிக்கொண்டு போகச்சொல்லிகேட்டபினம் மாதிரிக்கிடக்கு...அப்படி வழியினம்...புட்டும் தேங்காய்ப்பூவுமெல்லே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு அமெரிக்காவில் எப்படி நிலம் வாங்கி நெல் விதைப்பது என்பது பற்றி ஆராயவா. கலிபோனியா.. புளோரிடா நல்ல தெரிவாக இருக்கும். போய் பார்த்து வரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

கேள்விக்கு பதில் இல்லை இதுவரை .

சரி பெருமாள்,

சுமந்திரன் கணக்கு காட்டும்வரை அவர் ஊரிலேயே இருக்கட்டும. அவருக்குப் பதிலாக எங்கள் "பல்லில்லாத கிழட்டுச் சிங்கம்"  மாவையரை வோசிங்ரன் அனுப்பும்படி சம்பந்தரிடம் கூறுவோம். சரிதானே இப்போது ? 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சரி பெருமாள்,

சுமந்திரன் கணக்கு காட்டும்வரை அவர் ஊரிலேயே இருக்கட்டும. அவருக்குப் பதிலாக எங்கள் "பல்லில்லாத கிழட்டுச் சிங்கம்"  மாவையரை வோசிங்ரன் அனுப்பும்படி சம்பந்தரிடம் கூறுவோம். சரிதானே இப்போது ? 

😉

சிங்களவர்களுடன் வாழ்வதே மேன்மையானது என்று என்னும் நபரை விட்டு வேறு யாரும் போகட்டும் தமிழர்களின்  உரிமைகளை கதைப்பதுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக வல்லரசு, பக்கத்தில இருக்கும் வல்லரசு, சொந்த நாட்டரசு, தமிழரசு யாரையும் நம்பிறதா இல்லை!🙃
நம்பகத்தன்மை வாற மாதிரி நடவுங்கோ, அப்ப சனம் கையெடுத்து கும்பிட்டு போற்றும்.🙏

Link to comment
Share on other sites

29 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்களுடன் வாழ்வதே மேன்மையானது என்று என்னும் நபரை விட்டு வேறு யாரும் போகட்டும் தமிழர்களின்  உரிமைகளை கதைப்பதுக்கு .

புலிகளுடன்  தனித்து வாழும்  தமிழர்களின் கனவு தகர்ந்து விட்டது.
இப்போ சிங்களவர்களுக்கு சமமான உரிமையுடன் தமிழர்கள் வாழும் தெரிவு தான் உள்ளது.

அதற்கான அனைத்து பாதைகளையும் திறக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்களுடன் வாழ்வதே மேன்மையானது என்று என்னும் நபரை விட்டு வேறு யாரும் போகட்டும் தமிழர்களின்  உரிமைகளை கதைப்பதுக்கு .

பானைக்குள் இருப்பதுதானே அகப்பையில் வரும் பெருமாள். 

TNA என்கிற பானைக்குள் சுமந்திரன் என்கிற பதார்த்தம் மட்டுமே இருந்தால் அதுதான் அகப்பையில் வரும். 

அது ஒரு புறம் இருக்கட்டும், சிங்களத்துடன் வாழ்வது மேலானது என்று கூறாமல், சிங்களத்துடனே வாழும் மற்றயவர்களை என்ன செய்வது?

உ+ம்; எங்கள் பிறேமானந்தா பக்தன் விக்கியரை அனுப்புவோமா ? அல்லது எங்கள் மற்றைய  TNA சிங்கங்களை அனுப்புவோமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சுமந்திரன் என்கிற பதார்த்தம்

அது பதார்த்தம் அல்ல விஷம் .

அருமையாக கிடைத்த வாய்ப்பை எப்படி சொதப்புகிறார் என்று லைவ் நியூஸா வரும் இருந்து பாருங்கள் .

சுமத்திரனின் மனைவி அல்லுலோயா அப்ப அல்லுலோயா சுமத்திரன் என்று அழைக்கலாமா ஒருத்தரின் நம்பிக்கை வேறு அரசியல் வேறு பிரம்மானந்த விக்கியர் என்று ஏன் அந்தாளை இழுக்கிறியள் அந்தாள் வடகிழக்கு தமிழருக்காக  கத்தியதில்  ஒருவீதம் தன்னும் சுமத்திரன் வாய் திறக்கவில்லை தனக்கு பாதுகாப்பு வேணும் என்பதுக்கு நாலு முன்னாள் போராளிகளை  கால் கைகளை இழந்தவர்களை தனக்கு கிளைமோர் வைக்க வந்தவர்கள் என்று பொய் குற்ற சாட்டில் ஜெயில் உள்ளே போட்ட இந்த சுயுநலவாதியால் தமிழர்க்கு விடிவு வரும் என்று  நம்புவது சுத்த மடமைத்தனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

எங்களுக்கு கடந்த காலங்களில்  கிடைத்த சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படித்தியிருக்கிறோம் பெருமாள்..? 

இது தானாகத் தேடிவரும் வாய்ப்பு. பார்ப்போம் எங்கே போய் முடியும் என்று.. 

பிரேமானந்தா என்று கூறியதற்குக் காரணம் அவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியாக இருந்தும் இந்திய பிரதமர் மோடியிடம் பிரேமானந்தாவை விடுதலை செய்யும்படி(இந்திய நீதித்துறையில் தலையிடும்படி) கேட்டார் பாருங்கள் ... 

அப்பப்பா.... தனிப்பட்ட  நம்பிக்கை புத்தியை மறைக்கும்  அறிவைச் சொன்னேன். ...உதாரணத்திற்கு

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எங்களுக்கு கடந்த காலங்களில்  கிடைத்த சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படித்தியிருக்கிறோம் பெருமாள்..? 

வந்த சந்தர்ப்பங்களை சுமத்திரன் எனும் அதி மேதாவி தனியே போய் என்ன கதைத்து என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும் .

1 hour ago, Kapithan said:

பிரேமானந்தா என்று கூறியதற்குக் காரணம் அவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியாக இருந்தும் இந்திய பிரதமர் மோடியிடம் பிரேமானந்தாவை விடுதலை செய்யும்படி(இந்திய நீதித்துறையில் தலையிடும்படி) கேட்டார் பாருங்கள் ... 

உங்கள் கருத்து இந்த திரிக்கு .................சுமத்திரனின் குரு  விக்கியர் அவர் தனது  மாணவன் சுமத்திரனிடம் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை ஏன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யார் எங்கு போய் என்ன பேசினாலும் ஒன்டும் நடக்க போவதில்லை என்பது யாவரும் அறிந்தது.இங்கு நடப்பது எல்லாம் தனிப்பட்ட அடி பாடுகள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்ப யார் எங்கு போய் என்ன பேசினாலும் ஒன்டும் நடக்க போவதில்லை என்பது யாவரும் அறிந்தது.இங்கு நடப்பது எல்லாம் தனிப்பட்ட அடி பாடுகள் மட்டுமே.

உங்களுக்கு புரிந்து இருக்கு சுமத்திரன் ஆதரவாளர்களுக்கு புரியவில்லையே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

"பல்லில்லாத கிழட்டுச் சிங்கம்"  மாவையரை வோசிங்ரன் அனுப்பும்படி சம்பந்தரிடம் கூறுவோம். சரிதானே இப்போது ? 

ரொம்பப் பண்பான வசனம் எல்லாம் பாவிக்கப்படாது தலைவா! ஒரு தவறுக்கு வக்காலத்து வாங்குவதற்கு மற்றவர்களை தவறானவர்கள் ஆக்க கூடாது.

9 hours ago, Kapithan said:

சிங்களத்துடனே வாழும் மற்றயவர்களை என்ன செய்வது?

என்னது? விக்கியர் சிங்களத்தியோடு வாழுறாரா? பிள்ளைகள் தான் சிங்களத்திகளை வாழ்க்கைதுணையாக கொண்டவர்கள். தெரிந்துதானே அவரை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள்.  இருந்தும் கூட சிங்களவரோடு வாழ்வதில் பெருமை என்று அவர்கூறவில்லை, நடந்தது இனச்சுத்திகரிப்பு அல்ல  என்று சொல்லவுமில்லை, வரலாற்றை மறைக்கவுமில்லை, இராணுவ பாதுகாப்பு அவருக்கு விஷேசமாக வழங்கப்படவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2021 at 14:37, Justin said:

பெருமாளுக்கு திரும்பவும் சஞ்சய் ராமசாமி சின்ட்றோம்?🤔 நக்கீரரும் அம்மணியும் நேராக சந்தித்த சி.எம்.ஆர் இணைப்பு வந்து ஒரு வருடம்  தாண்டி விட்டதே? பார்க்காமல் இருக்கிறீர்களா?

கேள்வி கேட்டால் சுமத்திரனுக்கு பிடிக்காதமே உங்களுக்குமா ?

நான் கேட்ட கேள்விக்கு விடை இல்லையாகும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது விஷயத்தில் சர்வதேசம் உள்நோக்கின்றி உண்மையாக உளபூர்வமாக தலையிடுமானால் கண்டிப்பாக இலங்கை அரசு பாரிய நெருக்கடியை சந்திக்கும் என்பதில்  உறுதியான நம்பிக்கையுண்டு.

அதேநேரம், என்றைக்கு அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் சிங்கள அரசுகளை நேரடியாக அழைத்து தமிழர் விடயம் தொடர்பில் விவாதிக்கிறதோ அன்றைக்குத்தான் ஏதாச்சும் ஒரு தீர்வு நெருங்கி வருகிறதென்று முழு நம்பிக்கை கொள்ளலாம்.

அடித்தது & அடிக்கிறது அவர்கள்,  அடிவாங்கியது,& அடி வாங்கிகொண்டிருப்பது  நாங்கள், அடிவாங்கிய எங்களை கூப்பிட்டு பேசி என்ன பிரயோசனம்?  அடிப்பவனை அழைத்து அழுத்தம் கொடுத்தால்தான் அதில் ஒரு அர்த்தமிருக்கும்.

மற்றும்படி இதெல்லாம் சீனாவை மிக நெருங்கி செல்லும் இலங்கை அரசுக்கு சின்னதாய் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க மேற்குலகம் செய்யும் சித்து விளையாட்டுக்களாகவே பார்க்கப்படும் வாய்ப்பு உண்டு.

கற்பனாவோட்டத்தில் அதையும்மீறி  ஏதாவது ஒரு தீர்வு எட்டுமானால் இந்தியா சிங்களவன் பக்கம் நின்று முட்டுக்கட்டை கொடுக்கும், இந்திய பிராந்திய சுயநலன்கருதி இலங்கையில் தன்னைமீறி ஒரு தீர்வை மேற்குலகம் அமுல்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

வேண்டுமென்றே மூக்கை நீட்டி கால இழுத்தடிப்பு செய்யும்.இந்த விஷயத்தில் மட்டும் சிங்களவனுக்கு ஆதரவு என்ற கொள்கையில்  சீனாவுக்கு இந்தியா நண்பனாகும்.

மேற்குலகம் தமிழர்பக்கம் மிக உறுதியாக நின்று ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர தமிழரின் பக்கம் அரசியல் பொருளாதார ஆயுத பலம் என்று எதுவுமே கிடையாது, ஆதாயம் உள்ள பகுதிகளில் மட்டுமே மேற்குலகம் பிரவேசித்து உறுதியாக நின்று ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்பது காலம் காலமாக கண்டு வந்த வரலாறு.

இது நம்பிக்கையின்றி ஒரு தீர்வை நோக்குவதாய் அர்த்தமல்ல, காலம் காலமாக கண்டுவந்துவிட்ட ஏமாற்றங்களின் அனுபவ தொகுப்பு அவ்வளவுதான்.

நல்லது நடந்தால் மகிழ்ச்சி, நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழருக்கு எஞ்சியுள்ள ஒரேயொரு ஆயுதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

ரொம்பப் பண்பான வசனம் எல்லாம் பாவிக்கப்படாது தலைவா! ஒரு தவறுக்கு வக்காலத்து வாங்குவதற்கு மற்றவர்களை தவறானவர்கள் ஆக்க கூடாது.

என்னது? விக்கியர் சிங்களத்தியோடு வாழுறாரா? பிள்ளைகள் தான் சிங்களத்திகளை வாழ்க்கைதுணையாக கொண்டவர்கள். தெரிந்துதானே அவரை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள்.  இருந்தும் கூட சிங்களவரோடு வாழ்வதில் பெருமை என்று அவர்கூறவில்லை, நடந்தது இனச்சுத்திகரிப்பு அல்ல  என்று சொல்லவுமில்லை, வரலாற்றை மறைக்கவுமில்லை, இராணுவ பாதுகாப்பு அவருக்கு விஷேசமாக வழங்கப்படவுமில்லை.

பண்பான வசனம் இல்லையென்பது உங்கள் கருத்து என்றால் எனக்குக் கவலைதான் சாத். 

அதனை மாற்றுவதற்கு விரும்பினேன், அவர்களால் இனத்திற்கேற்பட்ட பேரழிவை எண்ணிணேன். மாற்ற மனம் வரவில்லை. 

மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

பண்பான வசனம் இல்லையென்பது உங்கள் கருத்து என்றால் எனக்குக் கவலைதான் சாத். 

அதனை மாற்றுவதற்கு விரும்பினேன், அவர்களால் இனத்திற்கேற்பட்ட பேரழிவை எண்ணிணேன். மாற்ற மனம் வரவில்லை. 

மன்னிக்கவும். 

அந்த சகதிக்குள்தான் சுமந்திரன் படகோட்டுகிறார் என்பதை மறுக்கமாட்டீர்கள் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

அந்த சகதிக்குள்தான் சுமந்திரன் படகோட்டுகிறார் என்பதை மறுக்கமாட்டீர்கள் தானே!

கரையேறினால் புண்ணியம். 

சாத், தண்ணீரில் மூழ்குபவனுக்கு ஒவ்வொரு குச்சியும் நம்பிக்கை தரும். 

நாங்கள் சுழிக்குள் மாட்டுப்பட்டுள்ளோம். 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் முடி போனால் (ஹைகோர்ட்) 
விடுங்கப்பா .....போய் எப்பிடியும் உருட்டி பிரட்டி திரும்பி இங்க வந்து உளருவினம், எதற்கு உதவாவிட்டாலும் கூத்தமைப்பையும் அதன் வால்களையும் வச்சு செய்வதற்காவது உதவும். ஆகவே நமக்கு இழப்பு என்று எதுவுமில்லை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2021 at 14:10, தமிழ் சிறி said:

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அண்ணெய்  🤣இவிங்களை 🤣 அமெரிக்கா கூப்பிட்டதே பொய்க்கதையாமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அண்ணெய்  🤣இவிங்களை 🤣 அமெரிக்கா கூப்பிட்டதே பொய்க்கதையாமே .

அப்ப இந்தச் செய்தி பொய்யா? நாங்கள் இங்கிலீஷில் வந்தால்தான் நம்புவம்😛

TNA team invited by US Govt. to discuss political issues

View(s):  1741

A Tamil National Alliance (TNA) delegation is to visit the United States later this month to drum up support for the party’s stand on political issues.

The three-member delegation has been invited by the US Government. It will comprise K. Kanag-isvaran PC, Dr. Nirmala Chandrahasan and M.A. Sumanthiran PC.

Party spokesperson Sumanthiran told the Sunday Times the TNA would brief US officials on their proposal for a federal solution on power devolution in view of a new constitution being drafted by the Government.

“We will explain what our political aspirations are and how we intend to reach a solution to the conflict by exploring federal structures which are similar to what the US has in nature and in other countries,” Mr. Sumanthiran said.

In 2011, a TNA delegation led by R. Sampanthan visited the US and met senior officials at the US State Department and the office of the Secretary General of the United Nations (UN) to garner support for its political demands.

https://www.sundaytimes.lk/211107/news/tna-team-invited-by-us-govt-to-discuss-political-issues-461345.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் என்னவென்றால் அமெரிக்கா அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி சொல்லுதோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

Party spokesperson Sumanthiran told the Sunday Times the TNA would brief US officials on their proposal for a federal solution on power devolution in view of a new constitution being drafted by the Government.

 தமிழ் ஊடகங்களுக்கு அமெரிக்க கூப்பிடுது என்று சுமத்திரன் தான் சொல்றார் .ஆனால் இங்கு சண்டே டைம்க்கு  கதை வேறை மாதிரி சொல்றார் .

51 minutes ago, கிருபன் said:

drum up support for the party’s stand on political issues.

தங்களுடைய கட்சி முடிவை சொல்லி ஆதரவை பெறுவதுக்கு .

மற்றபடி எந்த அமெரிக்க அறிக்கைகளிலோ அல்லது செய்தி தொடர்பாளரின் மூலமோ கூப்பிடவில்லை இவையா போகினம்  2011ல் போனது  போல் எங்களுக்கு அப்ப வெடிபோட்டவை  கடசியிலை காது கிழிந்தது தான் மிச்சம் .

51 minutes ago, கிருபன் said:

In 2011, a TNA delegation led by R. Sampanthan visited the US and met senior officials at the US State Department and the office of the Secretary General of the United Nations (UN) to garner support for its political demands.

இவையா தங்கடை  அரசியலை ரிக்கெட் போட்டு போய்  விளக்கினவை  இப்பவும் அதே என்று சொல்லுகினம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.