Jump to content

எலோன் மஸ்க் ட்விட்டர் வாக்கெடுப்பு: ரூ. 1.5 லட்சம் கோடி டெஸ்லா பங்குகளை விற்க எலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எலோன் மஸ்க் ட்விட்டர் வாக்கெடுப்பு: ரூ. 1.5 லட்சம் கோடி டெஸ்லா பங்குகளை விற்க எலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு

38 நிமிடங்களுக்கு முன்னர்
மஸ்க்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

கோடீஸ்வரர்கள் வரி மசோதாவை கடுமையாக எதிர்க்கிறார் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்க வேண்டுமா என்று ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்.

அவரை ட்விட்டரில் 6.26 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் வாக்கெடுப்பைத் தொடந்து தன்னிடம் இருக்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அவர் விற்பாரா என்பது தெரியவரும்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட "பில்லியனர்கள் வரி"க்கு பதில் கூறும் வகையில், ட்விட்டர்வாக்கெடுப்பின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க் இந்த வரித் திட்டத்தால் பெரிய தொகையை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

வாக்கெடுப்பு முடிவடைவதற்கு சில மணி நேரம் இருந்த நிலையில் பதிலளித்த 32 லட்சம் பேரில் 57.2% பேர் "ஆம்" என்று வாக்களித்துள்ளனர்.

டெஸ்லா தலைமை நிர்வாகியான மஸ்க் சுமார் 15 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட பங்குகளை வைத்திருக்கிறார். ஜனநாயகக் கட்சியினரின் மசோதாவால் அவரது பங்குகளின் மதிப்பு மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் அவர் மிகப்பெரிய தொகையை வரியாகக் கட்ட வேண்டிய நிலையும் ஏற்படும்.

இந்த மசோதாவின் படி பணக்காரர்கள் தங்களது பங்குகளின் விலை உயரும்போது, அதை அவர்கள் விற்காவிட்டாலும்கூட அதற்காக அவர்கள் வரி கட்ட வேண்டியிருக்கும்.

" நான் எங்கிருந்தும் ரொக்கமாகச் சம்பளம் அல்லது போனஸ் வாங்கவில்லை. என்னிடம் பங்குகள் மட்டுமே உள்ளன. எனவே நான் தனிப்பட்ட முறையில் வரி செலுத்துவதற்கான ஒரே வழி பங்குகளை விற்பதுதான்" என்று மற்றொரு ட்வீட்டில் எலன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

சொத்துக்கள் விற்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், மூலதன ஆதாயங்கள் மீதான முன்மொழியப்பட்ட வரி, அமெரிக்காவில் உள்ள சுமார் 700 பில்லியனர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

டெஸ்லா பங்குகளில் 6 பில்லியன் டாலர்களை விற்று அதை உலக உணவு திட்டத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

மஸ்க்கின் ட்விட்டர் வாக்கெடுப்பு நிதி உலகில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-59199894

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.