Jump to content

உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும் 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும் 
================================

கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன் தூதுவராக (Ambassador) ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒருவருக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படுவதும் இறப்பதுவும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 2,269 ஆண்களும் 136 பெண்களும் உடற்பயிற்சி செய்யும்போது இதய அடைப்பு (Cardiac Arrest) இனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் உரியநேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைக்காது இறந்தும் போகிறார்கள். ஆனால் பிரபலங்கள் பாதிக்கப்படும்போது மட்டும் ஊடகங்களும் நாமும் பேசிவிட்டு அதனை மறந்து விடுகிறோம். 

அண்மைக் காலங்களில் தெற்காசிய ஆண்களில் சிலர் பாட்மிண்டன், கால்ப்பந்து போன்ற விளையாட்டுகளின்போதும் கடும் உடற் பயிற்சியின்போதும் இதய அடைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் துரதிஸ்டவசமாக இறந்தும் போயிருக்கிறார்கள். 

இவ்வாறு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படும் நிலையில் எங்களில் பலருக்கு  உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உயிரோடாவது இருக்கலாமோ என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது ஏன் மாரடைப்பு வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டால் எதை நாம் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்ற தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். 

மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
+++++++++++++++++++++++
இப்போதெல்லாம் இள வயதிலிருந்தே பலரும் தமது உடல் ஆரோக்கியம் பேணுவதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே எமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும், இதயநோய் எதுவுமே எம்மை அண்டாது என்று நாங்கள் நினைத்துவிடக் கூடாது.

எங்கள் பரம்பரையில் (தந்தை, தாய் வழியில்) இளவயது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், எங்களுக்கும் மாரடைப்பு வருவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற நீரிழிவு நோய், உடற்பருமன், மனவழுத்தம் என்பனவும் எமக்கு இதயநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றன.

இவை ஒருபுறம் இருக்க, வயது ஏறும்போது எமது நாடிக் குழாய்கள் படிப்படியாக தடிப்படைகின்றன. இதைவிட, எமது குருதியில் HDL எனப்படும் நல்ல கொழுப்பு குறைந்து LHL எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதும் நாடிக் குழாயில் விரைவாக அடைப்பு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும். இவ்வாறு இதயத்திற்கு செல்லும் முடியுரு நாடிக் குழாயின் உட்சுவர் தடிப்படைந்து பின்னர் இதயத்திற்கான இரத்த ஓட்டம் தடைப்படும்போது எங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

உடற்பயிற்சியும் இதயமும் 
+++++++++++++++++++++
அடுத்து நாம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம். காதலின் சின்னமாக இதயத்தை நாங்கள் கருதினாலும் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இரத்தத்தை தேவைக்கேற்ப அனுப்புவதுதான் இதயத்தின் பிரதான தொழில் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இவ்வாறு இதயம் உடலுறுப்புகளுக்கு குருதியைச் செலுத்த இதயத் தசைகள் தொடர்ச்சியாக சுருங்கி விரிய வேண்டும். அப்போதுதான் இதயம் தொடர்ச்சியாக குருதியை நாடிக் குழாய்களூடாக தொடர்ந்து செலுத்த முடியும். அதற்கு இதயத் தசைகளுக்கு போதுமான குருதியும் ஒட்சிசனும் வழங்கப்பட வேண்டும். இந்த வேலையச் செய்பவைதான் Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய்களாகும். 

நாம் விளையாடும்போது அல்லது கடும் உடற்பயிற்சி செய்யும்போது எமது கை, கால்களுக்கு அதிக இரத்தம், ஒட்சிசன் விநியோகம் தேவைப்படும். இதனால் இதயமும் வேகமாக விரிந்து சுருங்கி அதிக குருதியை உடலுறுப்புகளுக்கு அனுப்ப முற்படும். இங்கு நாங்கள் இதயம் தொழிற்படும் முறையில் ஒரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும். 

இதயம் குருதி வழங்கும் வேலையைச் செய்யும்போது அதிகமாக இயங்கும் உடலுறுப்புக்கு அதிக குருதியை செலுத்துவதற்கு இதயத் தசைகளுக்கு தேவைப்படும் குருதியானது ஒப்பீட்டளவில் குறைவாகவே கிடைக்கும். இதயவறைகள் சுருங்கி விரியும் நேரம் ஒப்பீட்டளவில் குறைய, முடியுரு நாடிக் குருதி ஓட்டம் இதய விரிதலின்போது மட்டுமே நடைபெறுவதால் சில நேரங்களில் இதயத் தசைகளுக்கு தேவையான அளவு குருதி தற்காலிகமாக கிடைக்காமல் போகலாம். 

நெஞ்சுவலி (Angina)
++++++++++++++++
நாம் முன்பு குறிப்பிட்டது போல இதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிக் குழாய்களின் உட்சுவர் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை கணிசமான அளவு சுருங்கி இருக்குமானால் (குழாயின் விட்டத்தின் அளவில் 50 -70% க்கும் அதிகமான அளவு அடைபட்டுப் போதல்) அதனூடாக வழமையைவிட குறைவான அளவு குருதியே செலுத்தப்படும். இதனால் வேகமாக இயங்க முற்படும் இதயச் தசைகளுக்கு குறிப்பிட்ட உடற்பயிற்சி நேரத்தில் போதிய ஒட்சிசனும் குருதியும் கிடைக்காமல் போய்விடும். அப்போது எமது இதயப்பகுதியில் தற்காலிக வலியேற்படும். இதனை Angina என்று மருத்துவர்கள் சொல்வார்கள். 

சிலவேளைகளில் சுருக்கென்று ஏற்படும் இந்த வலி இதயத்தில் இருந்து தோள்பட்டை வரை செல்லலாம். இது (Angina) இதயவறைக்குரிய முடியுரு நாடியூடான குருதி ஓட்டக் குறைவால் ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்பு. ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். இது உண்மையில் எமது Coronary Artery எனப்படும் முடியுரு நாடிக் குழாய் சுவர்கள் தடிப்படைந்து இருப்பதைக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு மார்பில் வலி வந்தால் அதை உதாசீனம் செய்யாது உடனடியாக மருத்துவரிடம் காட்டி அதற்குரிய சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு (Heart Attack)
++++++++++++++++++++
மேலே கூறியதுபோல எங்கள் உடல் அபாய எச்சரிக்கை செய்தும் நாங்கள் வலி சரியாகி விட்டதுதானே என்று உதாசீனம் செய்தால், சில மாதங்கள் செல்லும்போது இதயத் தசைகளுக்கான நாடிக் குழாயில் உட்புறம் மேலும் தடிப்படைந்து குருதி செல்லும் பாதை முற்றாகத் தடைப்படலாம். 

இவ்வாறு குருதி ஓட்டம் முடியுரு நாடியின் கிளைகளில் ஒன்றில் அடைப்படுமானால் அதனால் இதயவறையின் ஒருபகுதித் தசைநார்கள் இறந்து போவதுதான் மாரடைப்பு எனப்படுகிறது. இது உடற்பயிற்சியின்போது அல்லது ஏனைய நேரங்களில்கூட ஏற்படலாம். 

இதன்போது எமது நெஞ்சுப் பகுதியில் தாங்க முடியாத அளவும் வலியேற்படலாம். சிலநேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். இந்த வலி நடுநெஞ்சில் ஏற்பட்டு பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோள்பட்டை, மற்றும் முதுகுப் பகுதியிலும் பரவலாம். 

இதயச் செயலிழப்பு (Cardiac Arrest)
+++++++++++++++++++++++++++
அதேபோல விளையாட்டில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கு  மாரடைப்பினால் இதய மின்னியக்கத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது பாரிய மாரடைப்பினால் குருதிச் சுற்றோட்டம் சடுதியாக முற்றாகத் தடைப்படலாம். இதையே மருத்துவர்கள் இதயச் செயலிழப்பு (Cardiac Arrest) என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு Cardiac Arrest ஏற்படுபவர்களுக்கு பொதுவாக ஒரு மாதத்திற்கு முன்னரே சில அறிகுறிகள் வ(Angina pain) தெரிய வாய்ப்பிருக்கிறது என்று வைத்திய நிபுணர்கள் சொல்கிறார்கள். நெஞ்சு வலி, மயங்கி விழுதல், இதயம் வேகமாகத் துடித்தல் போன்ற அறிகுறிகள் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை.

இவ்வாறு ஒருவருக்கு மாரடைப்போ இதயச் செயலிழப்போ ஏற்பட்டால் அவருக்கு உடனடியாக முதலுதவி (CPR) செய்வதுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றி விடமுடியும். இதயச் செயலிழப்பு ஏற்பட்டவருக்கு செயற்கை சுவாசத்தோடு Automated External Defibrillator (AED) யை பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

பாதுகாப்பான உடற்பயிற்சி/ விளையாட்டுச் செயற்பாடுகள் 
================================
உடல் உழைப்புக் குறைவடைந்தது மட்டுமில்லாமல் எமது வீட்டு வேலைகளையும் இலகுவாக செய்யப் பல உபகரணங்கள் வந்துவிட்ட சூழலில் எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர்ச்சியான உடற்பயிற்சி அவசியமானது என்பதற்கு மறுபேச்சு இல்லை. அதேநேரம் உடற்பயிற்சியை எப்படிச் செய்வது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். எங்களில் சிலர் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்புவோம். எங்களில் சிலர் பாட்மிண்டன், வேறுசிலர் கால்பந்து, மற்றும் சிலர் நீண்ட தூரம் வேகமாக நடத்தல், நீண்டதூரம் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓடுதல் என்று வேறு வேறு விடயங்களை தமது உடற்பயிற்சித் தெரிவாகத் தெரிவு செய்வார்கள். 

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த விளையாட்டை அல்லது உடற்பயிற்சி முறை தெரிவு செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது. 

தொடர்ச்சியான உடற்பயிற்சி
+++++++++++++++++++++++
நாம் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதிக தசை அசைவுகள் தேவைப்படும் விளையாட்டுகளை தொடர்ச்சியின்றி எப்போதாவது செய்வது, (உதாரணம்: மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும்) அதுவும் நீண்ட நேரம் செய்வது உங்கள் இதயத்திற்கு ஆபத்தாகலாம். மாறாக உங்களுக்கு பொருத்தமான நேர அட்டவணைப்படி தொடர்ச்சியான முறையில் செய்தல் வேண்டும். உதாரணமாக திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் ஒரு மணிநேரம் பாட்மிண்டன் விளையாடுதல்.

உடற்பயிற்சியின்போது போதுமான நீராகாரம் அருந்துதல்
+++++++++++++++++++++++++++++++
நாம் தொடர்ந்து கடும் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது விளையாடும்போது எமது உடலிலிருந்து அதிக நீர் இழக்கப்படும். அதை நாங்கள் மீள சரி செய்யாவிட்டால் எமது இரத்தம் செறிவு அதிகமானதாக மாறும். இதனால் உயர் குருதி அழுத்தப் பிரச்சனை ஏற்படுவதுடன் நாளடைவில் நாடிக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து குருதிச் சுற்றோட்டம் தடைப்படலாம். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படலாம். அதனால் உடற் பயிற்சியின்போது போதுமான அளவு நீர் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துங்கள். உடற்பயிற்சி முடிந்தபின்னரும் நிறைய நீர் அருந்துவது நல்லது.

குறுகிய நேர ஓய்வுகள் 
+++++++++++++++++++
உடற்பயிற்சி செய்யும்போது இடைக்கிடையே போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் இதயத் துடிப்பு மிகவும் அதிகரிக்குமாக இருந்தால் உடனடியாக ஓய்வு நிலைக்குச் சென்று இதயத்திற்கு ஓய்வு கொடுத்து இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் தொடருங்கள். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 

Warm up and Cool Down
+++++++++++++++++++
பாட்மிண்டன், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அதிக சக்தி விரயமாகும் விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடுபவர்களாக இருந்தால் கட்டாயம் முதல் பத்து நிமிடங்கள் உடலைத் தயாராக்கும் (Warm-up) பயிற்சிகளைச் செய்துவிட்டே விளையாடத் தொடங்குங்கள். அதேபோல விளையாடி முடியும்போதும் மீண்டும் பத்து நிமிடங்கள் உடலைத் தளர்வாக்கும் (Cooling Down) பயிற்சிகளைச் செய்யுங்கள். 

நீண்ட இடைவேளையின் பின்னர் மீள ஆரம்பித்தல்
+++++++++++++++++++++++++++++++
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்த சிலர் மருத்துவ காரணங்களுக்காகவோ கடும் குளிர்காலம் போன்ற வேறு காரணங்களுக்காகவோ நீண்ட நாட்கள் உடற்பயிற்சியை  இடைநிறுத்தி இருக்கலாம் (உதாரணம் சைக்கிள் ஓடுதல்). அப்படியானவர்கள் உடற்பயிற்சியை மீள ஆரம்பிக்கும்போது கொஞ்சம் அவதானம் தேவை. எடுத்த எடுப்பிலேயே நீண்டநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடாது படிப்படியாக நேரத்தையும் பயிற்சியின் வேகத்தையும் மீள அதிகரியுங்கள். 

முதலுதவி பயிற்சியும் வசதிகளும்
+++++++++++++++++++++++++++
நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராக இருப்பவர் என்றால் அங்கு முறையாக முதலுதவிப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது தொண்டர்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அந்த உடற் பயிற்சிக் கூடத்தில் Automated External Defibrillator (AED) தொழிற்படு நிலையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்திருங்கள். நீங்கள் ஒரு குழுவாக இயங்குபவர் என்றால் உங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள சில உறுப்பினர்கள் முதலுதவிப் பயிற்சி (CPR) பெற்றிருப்பதும் நல்லது. எனக்குத் தெரிந்த சிலர் வேறு வேறு நாடுகளில் பாட்மிண்டன் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர்களின் நண்பர்களால் உரிய நேரத்தில் முதலுதவி கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

உடற்பயிற்சி செய்வதன்மூலம் நாம் எமது இதயத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதேநேரம் உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடற்பயிற்சி செய்வதன்மூலம் எமது இதயத்தையும் பாதுகாத்து எமது நீண்ட ஆயுளையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

விசேட நன்றி: மருத்துவ துறைசார் தகவல்களைத் தந்துதவிய நண்பர் Dr. தெய்வகுமார்

https://m.facebook.com/story.php?story_fbid=442587123915712&id=101881847986243&m_entstream_source=timeline&__tn__=*s*s-R

 

https://www.facebook.com/101881847986243/posts/442587123915712/?d=n

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

அதனால் உடற் பயிற்சியின்போது போதுமான அளவு நீர் அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் அருந்துங்கள்.

இங்கே sports drinks என்பது energy drinks என்பதையா இந்த கட்டுரை குறிக்கிறது?

இவற்றை விட சாதாரன தண்ணீர் பிரச்சனையில்லாதது இல்லையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே sports drinks என்பது energy drinks என்பதையா இந்த கட்டுரை குறிக்கிறது?

இவற்றை விட சாதாரன தண்ணீர் பிரச்சனையில்லாதது இல்லையா?

பதிவை எழுதிய எனது நண்பரிடமிருந்து வந்த விளக்கம்

👇🏾

Sports drink என்று குறிப்பிட்டது Electrolytes drinks. Example: Gatorade

Red bull போன்ற Energy drinks குடித்துவிட்டு விளையாடுவது நல்லதல்ல.

தண்ணீர் OKதான்.  ஆனால் உடலில் இருந்து இழக்கப்படும்  உப்பினை பிரதியீடு செய்யாமையால் விரைவில் களைத்துவிடுவோம்.

Diabetes உள்ளவர்கள் விளையாடும் போது Sugar/ Carbohydrates உள்ள பானம் எடுப்பது நல்லது.

பொதுவாக விளையாடி முடிந்து அரை மணிநேரத்தின் பின்னர் Protein drink (animal based or plant based) அருந்துவது எமது தசைகள் வலுவிழக்காமல் இருக்க உதவும்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உப்பு போட்ட தேசிக்காய் தண்ணி நல்லது போல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி யார் யாரெல்லாம்செய்ய வேண்டும். உடற்பயிற்சி எதற்காக செய்ய வேண்டும். என்ன எப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என சொல்லிவிட்டு இந்த ஆலோசனை கட்டுரையை ஆரம்பித்திருக்கலாம்.

இரண்டு மைல் தொலைவில் இருக்கும்  உடற்பயிற்சி நிலையத்திற்கு காரில் சென்று முட்டி முக்கி முனகி உடற்பயிற்சி செய்வதை விட அந்த இரண்டு மைல் தூரத்தை வேகநடை செய்து சரிப்படுத்திக்கொள்ளலாம்.

அளவோடு உண்டு வளமாக வாழ்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உடற்பயிற்சி யார் யாரெல்லாம்செய்ய வேண்டும். உடற்பயிற்சி எதற்காக செய்ய வேண்டும். என்ன எப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என சொல்லிவிட்டு இந்த ஆலோசனை கட்டுரையை ஆரம்பித்திருக்கலாம்.

ஒரு புத்தகம் எழுதுகின்ற வேலையாக வந்துவிடும்!

Link to comment
Share on other sites

தண்ணீர் போதுமானது. இளநீர் குடிக்கலாம்.
இதய துடிப்பு வயதுக்கு ஏற்ப மாறுபடும் . இதனை உடற்பயிற்சியின் போது கவனித்து செய்யலாம்.
உடற்பயிற்சியை  அளவுக்கு அதிகமாக செய்யாமல் உடலின் சக்திக்கு ஏற்ப செய்யலாம்.  45 நிமிடத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் வரை செய்யலாம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தண்ணீர் போதுமானது.

தெளிவான பதில் 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

தண்ணீர் போதுமானது. இளநீர் குடிக்கலாம்.
இதய துடிப்பு வயதுக்கு ஏற்ப மாறுபடும் . இதனை உடற்பயிற்சியின் போது கவனித்து செய்யலாம்.
உடற்பயிற்சியை  அளவுக்கு அதிகமாக செய்யாமல் உடலின் சக்திக்கு ஏற்ப செய்யலாம்.  45 நிமிடத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் வரை செய்யலாம். 

இப்போதெல்லாம் எதற்கு உடற்பயிற்சி என்று தெரியாமலே செய்கின்றார்கள். ஏதோ இதுவும் மொடேர்ண் என்ற நினைப்பில்......

Link to comment
Share on other sites

On 9/11/2021 at 18:08, குமாரசாமி said:

இப்போதெல்லாம் எதற்கு உடற்பயிற்சி என்று தெரியாமலே செய்கின்றார்கள். ஏதோ இதுவும் மொடேர்ண் என்ற நினைப்பில்......

உணவு, வேலை, உடற்பயிற்சி, நித்திரை என உடற்பயிற்சியும் வாழ்க்கையில் இன்றியமையாதது .

Link to comment
Share on other sites

On 9/11/2021 at 17:35, விளங்க நினைப்பவன் said:

தெளிவான பதில் 😎

ஏனைய பதார்த்தங்கள் சீனி(sugar), கவ்வீன்(caffeine), இன்னும் பல இரசாயன பொருட்களை உடலில் சேர்க்கிறது. இவை உடற்பயிற்சியின் பலாபலன் களை அழிக்கிறது. உடற்பயிற்சியின் போது  வேளியேறும் சோடியம் போன்ற தாதுப்பொருட்கள்  அடுத்தடுத்த உணவுகள் எடுக்கும் போது உடல் எடுத்து சமப்படுத்தும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

உணவு, வேலை, உடற்பயிற்சி, நித்திரை என உடற்பயிற்சியும் வாழ்க்கையில் இன்றியமையாதது .

ஒம் தம்பி நுணாவில்! மனிசருக்கு உடற்பயிற்சி வேணும் தான்.....அதுக்காக அதையே காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி செய்துகொண்டிருக்கிறதும் நல்லாய் இல்லை எல்லோ? :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மொடேர்ண் என்று நினைத்து ஒருவர் சிகரெட் புகைத்தால் அவர் தனது உடல் நலத்தை நாசம் செய்கிறார். மொடேர்ண் என்று நினைத்து உடற்பயிற்சி செய்தால் அவர் தன்னையும் அறியாமல் தனது உடலுக்கு நன்மையே செய்கிறார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மொடேர்ண் என்று நினைத்து ஒருவர் சிகரெட் புகைத்தால் அவர் தனது உடல் நலத்தை நாசம் செய்கிறார். மொடேர்ண் என்று நினைத்து உடற்பயிற்சி செய்தால் அவர் தன்னையும் அறியாமல் தனது உடலுக்கு நன்மையே செய்கிறார்.

12 வயது பொடியன் ஜிம்முக்கு போறானாம். அவன் போகவேண்டிய அவசியமென்ன´?
அதைத்தான் மொடேர்ண் எண்டு சொன்னன்.

 • Like 1
Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

12 வயது பொடியன் ஜிம்முக்கு போறானாம். அவன் போகவேண்டிய அவசியமென்ன´?
அதைத்தான் மொடேர்ண் எண்டு சொன்னன்.

இப்ப எல்லாம் சின்ன பிள்ளைகளுக்கு தான் பெரியவர்களை விட உடம்பு கூட ,நிறையும் அதிகம் ...வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ...24 மணி நேரமும் இருந்த இடத்தில் இருந்த படி சாப்பிட்டு ,  கணனி, தொலைபேசிகளில் குந்தி இருந்தால் இது தான் பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இப்ப எல்லாம் சின்ன பிள்ளைகளுக்கு தான் பெரியவர்களை விட உடம்பு கூட ,நிறையும் அதிகம் ...வெளி விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ...24 மணி நேரமும் இருந்த இடத்தில் இருந்த படி சாப்பிட்டு ,  கணனி, தொலைபேசிகளில் குந்தி இருந்தால் இது தான் பிரச்சனை.

 

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

On 8/11/2021 at 23:00, குமாரசாமி said:

அளவோடு உண்டு வளமாக வாழ்.

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • இவ்வளவுக்கும் இவர் தலைமை ஆசிரியராம். உந்த அடி வாங்கிப் போட்டு, பெடியளை… எப்பிடி, மேய்க்கப் போறார் எண்டு தெரியவில்லை
  • யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன்  85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை. அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள். வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட. ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது.. ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும். இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே எங்கள் உயிர் மூச்சு!. யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. – குறியீடு (kuriyeedu.com)  
  • இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்... இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭
  • பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player   பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39   06:0
  • இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு  புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி. அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார். உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.