Jump to content

தமிழ் இனமா? மொழியா?


Recommended Posts

1 hour ago, குமாரசாமி said:

ஒரு சில கதையள்  சர்வதேச ரீதியிலை வராது.வரவும் கூடாது இருந்தாலும் நான் பொய் சொல்லுறவன் இல்லை. அவையள் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லாயினம் ஏனெண்டால் இதுகள் அரசியல் சமாச்சாரம்.

ஆனால் என்னட்டை ஜேர்மன் மொழியிலை ஆதாரம் இருக்கு

ஜேர்மன்காரரிட்ட அடிவாங்காம இருக்க சொல்ஙியிருப்பார் - நான் இங்க யாழ் களத்தில எனது பழந்தமிழ் மரபுரிமை கோருர மாதிரி 😁

அமெரிக்காவிலும் மற்ற உலகெங்கும் ரம் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் - ஜேர்மன் இல்லை.

ஒபாமாவும் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் தான் - கென்யாவில ஏதோ குக்கிராமத்தில இவர் எங்க வீட்டுப்பிள்ளை என்று பள்ளிக்கூட பிள்ளைகள் ஆடி பாடினதுக்காக ஒபாமாவை உலகம் கென்யன் என்று ஏற்றுக்கொள்ளாது - ஒபாமாவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

தமிழ்நாட்டில ஏதோ ஒரு குக்கிராமத்தில பால் காய்ச்சி ஊத்தி பலகாரம் கொடுத்தாப்போல கமலா ஹரிஸ் மீண்டும் தமிழராக மாட்டார். அவரும் இங்கிலிசு பேசும் அமெரிக்கர் தான்.

குமாரசாமியாரை எங்க கொண்டுபோய் விட்டாலும் அவர் ஊர் பனங்கொட்டை தமிழர் தான் - அதிலும் சந்தேகம் இல்லை 😜

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
4 hours ago, goshan_che said:

ரொம்ப சிம்பிளான விசயத்தை ரொம்ப போட்டு குழப்புறீங்களே மக்காள்.

எனது புரிதல் கீழே 

1. நாடுகளின் எல்லைகள், பேரினம் (race), இனம் (ethnicity), தேசிய அடையாளம் (nationality) இவை எல்லாமே social constructs எனப்படும் சமூக கற்பிதங்கள்.

சமூக கற்பிதம் என்றால் an idea that has been created and accepted by the people in a society. ஒரு சமூகத்த்தில் உள்ளோரால் ஏற்று கொள்ளபட்ட நடைமுறையில் உள்ள ஒரு கருத்தியல் என்கிறது மரியம் வெப்ஸ்டர்.

அதாவது ஒரு சமூக கற்பிதம் விஞ்ஞான ரீதியில் அமைய வேண்டியதில்லை. அது ஒரு சமூகத்தின் பார்வை மட்டுமே. மனிதனால் உருவாக்கபட்டது.

யூகேயின் class system உம் இந்தியாவின் caste system உம் சமூக கற்பிதத்துக்கு இலகுவில் புரிந்து கொள்ள கூடிய உதாரணங்கள்.

இதை போன்ற ஆனால் இலகுவில் விளங்க முடியாத ஒரு சமூக கற்பிதமே race உம் ethnicity யும் (கீழே கட்டுரைகளை காண்க).

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் நாம் எல்லோரும் Homo sapiens sapiens எனும் species (இதையும் தமிழில் இனம் என்கிறார்கள் குழப்பத்துக்கு பிறந்தவர்கள்🤦‍♂️) மட்டுமே. அதற்கு கீழே நம்மை தெளிவாக பிரிக்கும் உயிரியல் தரவுகள் இல்லை.

https://api.nationalgeographic.com/distribution/public/amp/culture/article/race-ethnicity

https://www.livescience.com/amp/difference-between-race-ethnicity.html

2. இரெண்டாவது குழப்பம். தமிழில் race, ethnicity, species மூன்றையும் இனம் என்கிறோம். மேலதிகமாக இந்தியாவில் சாதியையும் இனம் என்கிறார்கள். குழப்பத்தை தவிர்க்க, பேரினம் (race), இனம் (ethnicity), என்ற பதங்களை பாவிப்போம்.

3. சரி உலகின் பேரினங்கள் எவை? இது காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. இடத்துக்கு இடமும் (ஏனென்றால் இது ஒரு சமூக கற்பிதம்). ஒரு காலத்தில் European race, Asian race,  African race, Chinese race என்றும், இடையே Arab race என்றும், அண்மை காலத்தில் கோக்கசோயிட், மொங்கலோயிட், நீக்ரோயிட், அஸ்டிரலோயிட் என்றும் பிரிக்கிறார்கள்.

ஆனாலும் இது தெளிவான பிரிப்பல்ல. ஏனேன்றால் மனித வரலாறு ஒரு எல்லை பிரிப்பில் வளரவில்லை, அதில் எல்லா சோயிடும் கலந்துள்ளது. குறித்த அளவில் நியந்தாதால் கலப்பும் கூட. ஆனால் பேரினம் என்பது விஞ்ஞான பகுப்பு அல்லவே? ஆகவே காரியமில்லை.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் - இந்தியர்கள் கோக்கசோயிட், மொகலோயிட், நீக்கிரோயிட், அஸ்டிரலோயிட் எல்லாவற்ரின் கலவை என்கிறார்கள் பலர்.

சரி பேரினம் என்பதே ஒரு கற்பிதம்தானே? நாம் எம்மை தென்னாசிய பேரினம் (திராவிட என்ற தகாத வார்த்தையை தவிர்த்து 🤣) என அழைப்போம். இல்லை ஆசிய பேரினம், அல்லது ஆசியோ-அஸ்டிரலோயிட் என அழைத்தாலும் ஓகே.

சரி பேரினம் ஓகே. அப்போ எமது இனம் என்ன?

தமிழ்.

ஆனால் இதுவும் ஒரு கற்பிதம்தான். ஒரு தமிழனையும், சிங்களவனையும் கொலை செய்து விட்டு பிரேதங்களை கொடுத்து, விஞ்ஞான ரீதியாக யார் என்ன இனம் என காட்ட முடியாது.

ஆனால் பேரினம் (race) என்பது போல் உருவ தோற்றம், தோல் நிறத்தை போல மிகவும் பரந்த அடையாளங்களை அல்லாமல் இன அடையாளம் என்பது பெரும்பாலும் மொழியை சுற்றி, அந்த மொழிக்குரிய பண்பாட்டை சுற்றி உருவாகிறது. 

ஆனால் எப்போதும் ஒரு மொழியை பேசுவோர் எல்லாரும் ஒரு இனத்தை சேர வேண்டியதில்லை. 

அதேபோல் ஒரு இனம் என்பது கட்டாயம் மொழி அடிப்படையில்தான் அமையும் என்ற நியதியும் இல்லை. 

ஏன்? ஏனென்றால் - இனம் என்பதே ஒரு சமூகத்தின் பார்வை, கற்பிதம் -  ஆகவே ஒரு இனத்தை இணைக்கும் ஒற்றை புள்ளியாக மொழியோ, கலாச்சார ஒற்றுமையோ, மதமோ, வேறு எதுவுமோ இருக்கலாம். எல்லாம் அந்த சமூகத்யின் பார்வையில்தான் தங்கியுள்ளது.

ஆகவே மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இனம் என்பது ஒரு சமூக கற்பிதம். 

தமிழர் என்ற இனத்தில் யார் யார் சேர்வார்கள் என்பதை - விஞ்ஞானமோ, கடவுளோ தீர்மானிப்பதில்லை. அந்த சமூகமே தீர்மானிக்கிறது.

இங்கே மரபு வழி தாயகத்தை போட்டு குழப்ப தேவையில்லை. ஒரு இனமாக நாம் இருக்க மரபு வழிதாயகம் தேவை இல்லை.

ஒரு இனம், தேசிய இனமாக (nation) ஏனையவர்களால் அங்கீகரிக்க படவே மரபு வழி தாயகம் தேவை. 

ஆகவே நாம் இப்போதைக்கு நமது race ஆக, தெற்காசியர் அல்லது சகல சோயிட் கூட்டு என்பதையும் இனமாக தமிழையும் கொள்கிறோம்.

3. சரி அப்போ யார் தமிழர் ? இது காலத்துக்கு காலம் மாறுபடும். ஏனென்றால் இந்த கேள்வியே ஒரு சமூக கற்பிதம் பற்றியது.

துல்பென் சொன்னது போல் ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழர். அவர்கள் தனி இனமானது ஒரு நாளில் நடக்கவில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்கள் தமிழர் என்ற நிலையில் இருந்து தமிழர் அல்லாதோர் என மாறியுள்ளதாக, எமது சமுகமும், அவர்களது சமூகமும் கருதி, மலையாள இனம் என்ற ஒரு புதிய சமூக கற்பிதத்தை உருவாக்கி, ஏற்று கொண்டுள்ளன. இந்த புதிய கற்பிதம் உருவாக பிராமணிய சதி, சமச்கிருத ஆளுமை, மேற்கு தொடர்ச்சி மலை என்பன உதவின. 

அதே போல் இலங்கை முஸ்லீம்களும். தம்மை சோனகர் என்ற இனமாக கற்பித்து கொண்டுள்ளார்கள். அதை அந்த நாட்டு சட்டமும் ஏற்பதால். அவர்கள் தனி இனமாகிறார்கள். நாம் என்னதான் குத்திமுறிந்தாலும் சோனகர் இனம் என்பது அவர்கள் உணரும், அந்த நாட்டு சட்டம் ஏற்று கொள்ளும் ஒரு சமூக கற்பிதம்.

ஆகவே இலங்கை தமிழர் என்ற இன அடையாளத்துக்கும், சோனகர் என்ற இன அடையாளத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. ஒரு மொழியை பேசும், இரு வேறு இனங்கள். 

தமிழ்நாட்டு முஸ்லீம்க்கள் மத்தியில் இன்னும் தாம் ஒரு தனி இனம் என்ற கற்பிதம் எழவில்லை.

அதை எழவைக்கவே ஜெய்னுலாப்தீன் பலகாலமாக முயல்கிறார்.

ஆகவே இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டு சமூகத்த்தின் கற்பிதத்தின் படி, அங்கு வாழும் முஸ்லிம்களும் இனத்தால் தமிழர்களே.

ஆனால் இது காலப்போக்கில் மாறலாம்.

தமிழ்நாட்டில் அரங்கேறும் பலமுனை சதிகளின் பயனாக, எதிர்காலத்தில் சோனகர்கள் போல், மலையாளிகள் போல் அவர்களும் தம்மை ஒரு வேற்றினமாக கற்பிதம் செய்ய முனையலாம். 

முடிவாக,

இனம் என்பதற்கு ஒரு விஞ்ஞான வரைவிலக்கணமும் இல்லை, மானிடவியல் வரைவிலக்கணமும் இல்லை. அது ஒரு சமூக கற்பிதம்.

அதன் எல்லைகள் அந்த சமூகம், அதனை சூழ உள்ள சமூகத்யின் புரிதலின் அடிப்படையில் காலத்துக்கு காலமும், இடத்துக்கு இடமும் வேறுபடும்.

இதை புரிந்து கொண்டால் தமிழ், சோனகர், ஜேர்மன், அமெரிக்கன், டிரம்ப், ஒபாமா எல்லாரும் என்ன இனம், ஏன் அவ்வாறு கருதபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். 

விரிவான விளக்கத்துக்கு நன்றி கோஷான். 👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

இருக்கலாம் ஆனால் ரம்ப்...க்கு  ஜேர்மன் உணரவு  1%கூட இலலை எங்கள் நாட்டின்     அதாவது ஜேர்மனியின் தலைவியை. பலர் மததியில். பகிங்கரமாக அவமானப்படுத்தியுவன். மேலும் ஜேர்மன்காரர் கள்வரெனறும்.  மெச்சிக்கோவில. கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செயவதாய் குற்றம் சாட்டினார் அதனை தடைசெய்ய. நடவடிக்கையும் எடுத்தார் மெர்க்கலுக்கு. கையே கொடுக்கவில்லை......இவரை சந்தித்த பின்னர் மெர்க்கல் சொன்னார் நான் இருதரப்பாரும் பயன் அடையும் கொளகையுடையவள்  இவரது ஒரு தரப்பு பயனடையும் கொள்கையை  எற்க்கமாட்டேனென்று  அந்த நிகழவைப் பார்த்த எனக்கே கவலை வந்து விட்டது  உங்களுககு எப்படி இருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என்று பலமுறை முழங்க வேண்டும் என்பது இவரது ஆசை.  தனது ஆசையை கனவாக காண்கின்றார்.

 

7 hours ago, கற்பகதரு said:

நான் இங்க யாழ் களத்தில எனது பழந்தமிழ் மரபுரிமை கோருர மாதிரி 😁

🤣

Link to comment
Share on other sites

Angela Merkel Snorts as Donald Trump Says He Has 'German in My Blood'

 

President Donald Trump has been mocked after remarking that he has German in his blood while expressing excitement over a proposed future trip to Germany.

Trump made the comments during a meeting with German Chancellor Angela Merkel, prompting the veteran leader to raise her eyebrows and seemingly laugh at the president's reference to his German ancestry.

Though the pair have never enjoyed a particularly warm relationship, Trump lavished the chancellor with praise during their meeting at the G7 conference being held in Biarritz, France this weekend, Deutsche Welle reported.

Trump said Merkel—who is no longer the leader of her party and plans to step away from political life when her fourth term ends in 2021—is a "brilliant woman" and "understands exactly where everything is, she knows it before most people."

Though Merkel has publicly ruled out remaining in politics after what will have been more than 15 years in office, Trump suggested the chancellor may surprise observers and be around "for a long time."

A reporter asked Merkel whether she had invited Trump for a bilateral visit to Germany, to which the chancellor said she had done so "on previous occasions."

Though the president has made brief stopovers in Germany to attend a G20 summit and on his way back from Iraq, Trump is yet to have made a full diplomatic visit to Europe's largest economic power. He has, however, visited both the U.K. and neighboring France twice.

Trump added, "We'll be there...we're very honored by the invitation—and that's true—and we will be there. Maybe soon." He then declared: "I have German in my blood," eliciting raised eyebrows and a snort of laughter from the chancellor.

Merkel is clearly very excited about the prospect of Trump visiting Germanypic.twitter.com/fXHa1YlnnN

— Marcel Dirsus (@marceldirsus) August 26, 2019

The president has often touted his European heritage in the past, though until the 1980s claimed his grandfather came from Sweden rather than Germany. According to The Telegraph, this may have been driven by a desire to hide the family's German links following World War II and the Holocaust.

 

He has since warmed to the idea of his European heritage, even falsely claiming that his father, Fred, was born in "a very wonderful place" in Germany. He was, in fact, born in the Bronx.

The president's ancestors were from the village of Kallstadt in the west of Germany. His grandfather Friedrich—later Frederick—came to the U.S. in 1885 and made his fortune during the Yukon gold rush in Alaska. He became rich by establishing a series of hotels that also served as brothels.

Though Friedrich tried to return to Germany as a rich man, he was denied residency because he failed to complete military service. He subsequently returned to the U.S. and settled in New York.

Reporters pressed the president on a possible timeline, suggesting he could visit Germany before his scheduled trip to Poland at the end of this week. Trump, however, said it may be too difficult to arrange a visit at such short notice.

But hints that Trump may soon visit Germany were met with opposition on Twitter, with the hashtag #TrumpNotWelcome trending just hours after his comments were broadcast, Deutsche Welle reported.

The president is not popular in Germany, and a 2018 Pew Research Center survey found that only around one in every 10 Germans had confidence in him between 2016 and 2018.

 

Angela Merkel, Donald Trump, G7, France, GermanGerman Chancellor Angela Merkel and President Donald Trump speak during a bilateral meeting at the G7 summit in Biarritz, France on August 26.NICHOLAS KAMM/AFP/GETTY IMAGES/GETTY

 

https://www.newsweek.com/angela-merkel-snorts-donald-trump-german-blood-visit-g7-ancestry-family-1456256

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

Angela Merkel Snorts as Donald Trump Says He Has 'German in My Blood'

President Donald Trump has been mocked after remarking that he has German in his blood while expressing excitement over a proposed future trip to Germany.

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.👍🏽

இஞ்சை கொஞ்சப்பேருக்கு தாங்கள் தான் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவை எண்ட  கெப்பர் நினைப்பு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

இருக்கலாம் ஆனால் ரம்ப்...க்கு  ஜேர்மன் உணரவு  1%கூட இலலை எங்கள் நாட்டின்     அதாவது ஜேர்மனியின் தலைவியை. பலர் மததியில். பகிங்கரமாக அவமானப்படுத்தியுவன். மேலும் ஜேர்மன்காரர் கள்வரெனறும்.  மெச்சிக்கோவில. கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செயவதாய் குற்றம் சாட்டினார் அதனை தடைசெய்ய. நடவடிக்கையும் எடுத்தார் மெர்க்கலுக்கு. கையே கொடுக்கவில்லை......இவரை சந்தித்த பின்னர் மெர்க்கல் சொன்னார் நான் இருதரப்பாரும் பயன் அடையும் கொளகையுடையவள்  இவரது ஒரு தரப்பு பயனடையும் கொள்கையை  எற்க்கமாட்டேனென்று  அந்த நிகழவைப் பார்த்த எனக்கே கவலை வந்து விட்டது  உங்களுககு எப்படி இருந்தது?

ஜேர்மனிய  டொனால்ட் ட்ரம்பின் சந்ததியும் வம்சங்களும் ஹிட்லர் காலத்துக்கு முந்தியவை. அன்றைய ஜேர்மனி இன்றைய காலத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. எனவே ட்ரம்பிடமிருந்து மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

இது எனக்கு தெரியும்  ட்ரம்பில் ஜேர்மன் இரத்தம் கலந்திருப்பது உண்மை தான் ஆனால் ஜேர்மன் உணர்வு இல்லை இவரின் ஆட்சியில் தான் ஜேர்மனிக்கும். அமெரிக்காவுக்கும் தொடரபு  முறுகல் நிலையில் இருந்தது  இவரை ஜேர்மனியன் என நீங்கள் எடுத்து கொளளலாம். அது உங்கள் பிரச்சனை ஆனால் உண்மையில் அவர் அமெரிக்கர் தான் 

 

நான் என்னை அப்படி நினைப்பதில்லை மாறாக இன்னும் அதிகம் படிக்க இருக்குது என்று நினைக்கிறேன் 

நீங்கள் என்னதான் மறுவழமாக சம்பாஷணைகள் செய்தாலும் எங்கேயாவது ஒரு கோணத்தில் மனிதனின் ஆதி மூலம் ஆராயப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

அமெரிக்காவில் ஒரு சிறிய இனப்பிரச்சனை வந்தாலும் அவ்ரோ அமெரிக்கர் என கறுப்பினத்தவர் அழைக்கப்படுவர்.

ஜேர்மனியில் கூட ஒரு பிரச்சனை என வரும்போது சம்பந்தப்பட்டவர் ஜேர்மன் பிரஜை ஆகினும் அவர் எந்த நாட்டு வழித்தோன்றல் என நிச்சயம் கூறுவார்கள்.

இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலரை இந்திய வழித்தோன்றல்கள் என குறியிட்டு சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 02:57, கற்பகதரு said:

அமெரிக்காவிலும் மற்ற உலகெங்கும் ரம் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் - ஜேர்மன் இல்லை.

உண்மை   ட்ரம் தனது  அப்பாப்பா ஜேர்மன்  என்று சொல்லியுள்ளார் நான் ஜேர்மனி யன் என்று ஒருபோதும் சொன்னது இல்லை அதவாது ட்ரம் இன் தகப்பனின  தகப்பன்  ஜேர்மனியன் பல தடவைகள் நான் அமெரிக்கன் என்று ட்ரம் சொல்லியுள்ளார் இப்படிப்பட்டவனை நாங்கள் ஏன ஜேர்மனியன் என்று விழிக்க வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

 இங்கிலிசு தெரியாதெண்டது இண்டைக்கு உலகறிஞ்ச சங்கதியானது உண்மையோ இல்லையோ? 💃🤸‍♀️

யூட்டர்,

ஆங்கிலம் ஒரு மொழி..... அறிவல்ல.... நீங்கள் அப்படித்தான் நிணைக்கிறீர்கள் போலுள்ளது.

அப்படி நிணைப்பது சரியாக இருந்தால், பிரட்டனில், வெளிநாட்டவர் தேவையில்லை.... பள்ளிக்கூடம், பல்கலைகழகம் தேவையில்லை.....

ஆங்கிலம் தெரிந்தால், பேசினால் போதும்..... அறிவு கொட்டும்..... கரை புரண்டோடுமே....

அட நம்ம வீட்டு குப்பைதொட்டியை திங்கள் காலை, சேகரித்து செல்ல வரும்..... வெள்ளையர்.

ஆள் பேசும் ஆங்கிலம்....... நீங்கள் கேட்கணுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

உண்மை   ட்ரம் தனது  அப்பாப்பா ஜேர்மன்  என்று சொல்லியுள்ளார் நான் ஜேர்மனி யன் என்று ஒருபோதும் சொன்னது இல்லை அதவாது ட்ரம் இன் தகப்பனின  தகப்பன்  ஜேர்மனியன் பல தடவைகள் நான் அமெரிக்கன் என்று ட்ரம் சொல்லியுள்ளார் இப்படிப்பட்டவனை நாங்கள் ஏன ஜேர்மனியன் என்று விழிக்க வேண்டும் ?

அமெரிக்கா, ஒரு குடியேறிகள் நாடு..... ஆகவே அங்கே குடியேறிய அணைவருமே, தம்மை அமேரிக்கர்கள் என்பர். அதே நிலையே.... கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து....

அங்கே இருந்த குறைந்தளவான சுதேசிகளை ஒடுக்கி..... அந்த நாடுகளை பிடித்தார்கள்.

அமெரிக்க ஜம்பது மாநிலங்களில், பதின்மூன்று மட்டுமே பிரித்தானிய ஆளுமையில் இருந்தது. மிகுதி, ஸபானிய, பிரஞ்சு ஆதிகத்தின் கீழ் இருந்தது. ஆயினும் சுதந்திர போராட்டத்தை, பிரிட்டிஸ் காலணிகள் ஆரம்பித்ததாலும், அதன் வெற்றியின் காரணமாக பலமுடன் இருந்ததால், ஏணைய மாநிலங்கள் ஜக்கியத்தில் இணைய, ஆங்கிலம் முக்கிய மொழியாகியது....

அங்கே இருந்த வேறு இனக்குழுக்கள் எதிர்ப்பை தவிர்க்க, அமெரிக்கர் என்ற பொது அடையாளம் தேவைப்படுகிறது.

அங்கே, டிரம்ப் தனது பூர்வீகம் ஜேர்மன் என்றோ, ஓபாமா தனது பூர்வீகம் கென்யா + அயர்லாந்து என்றோ, கென்னடி, கிளிங்டன், பைடன் அணைவருமே பூர்வீகம் அயர்லாந்து என்றோ ஜோர்ஜ் வாசிங்டன் இங்கிலாந்து என்றோ சொல்ல வேண்டிய தேவை இருக்கிவில்லை..... அணைவருமே அமெரிக்கர்கள்....

ஆனால் (வாசிங்டன் தவிர்ந்த) ஏணையோர் அந்தந்த நாடுகள் போகும் போது, தமது பூர்வீகத் தொடர்பு குறித்து சொல்ல தவறவில்லை. அதில் பெருமையும் அடைகிறார்கள்.

பிரிட்டிஸ் பிரதமர்.... அரை யூதர்.... அரை துருக்கியர்.... இஸ்லாமிய பெண்கள் முக்காடு குறித்து ஏதோ சொல்ல, அதை விவகாராமாக்க சிலர் முயன்ற போது, நான் இஸ்லாமிய பூர்வீகம் கொண்டவனாயிற்றே என்று சொல்லிவிட்டு கடந்து போனார்.

கனடாவில் பிரஞ்சு மாநிலம் உண்டு.

அவர்களுக்கு பிரிட்டிஸ் ராணியம்மா ....அரசு தலைவர் ஆக இருப்பதில் விருப்பம் இல்லை .... அதே வேளை.... இந்த பிரஞ்சு, ஆங்கில மொழி  வேறுபாடுகளைத் தவிர்க்க கனேடியர்... பொது அடையாளம்.... தேவைப்படுகிறது

அதே வேளை, பிரித்தானியா , நான்கு வேறு மொழி பேசும் நாடுகளின் கூட்டமைப்பு. அதுக்கும் பொதுவான பிரிட்டிஸ் எனும் பொது அடையாளம் தேவைப்படுகிறது.

ஆனால், பிரிட்டனில், ஜேர்மனியில்.... சுதேசிகள்.... நாடு அவர்களது..... நாம் வாழ வந்திருகிறோம்.... புகுந்த வீடு..... புகலிடம்....

இங்கே.... நாம் அந்நியர்..... எப்போதுமே....

Nationality, Citizenship கோசன் மேலே விளக்கி உள்ளார்.

பல மொழிகள் கொண்ட, தமக்குள் மோதிக்கொண்டிருந்த பல சிறு நாடுகளை பிடித்து, இந்தியர் என்ற அடையாளத்துக்குள் அடக்கி, ஆங்கிலம் என்னும் மொழியால் தையல் போட்டு ஆண்டு கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள். இன்று, இந்தி திணிப்பு..... இந்தியா என்னும் அடையாளத்தினை பதம் பார்க்கும் நிலை.

இலங்கையில்.... சிக்கலுக்கு காரணம் இந்த பொது அடையாளம் இன்மை..... சிங்களவர், முழு நாடும் தமதே, நாம் மட்டுமே இலங்கையர் என்று நிணைப்பதால், நீஙகள் ஜேர்மனியிலும், நான் பிரித்தானியாவிலும் உள்ளோம்.

ஆக, அமெரிக்கர், கனேடியர், பிரிட்டிஷ், இந்தியர் இலங்கையர் என்ற பதங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண உருவாகி இருக்க வேண்டும்.

இதில் முதலில் பிழைத்தது, இலங்கை.... இப்போது இந்தியாவும் அந்த பாதையில்.... 

****

நான், ஆங்கிலம் பேசினாலும், கடவுச்சீட்டு வைத்திருந்ததாலும் பிரிட்டிஸ் காரரோ, ஆங்கிலேயனோ அல்ல.

அதே போல, நீங்கள், ஜேர்மன் பேசினாலும், கடவுச்சீட்டு வைத்திருந்ததாலும் ஜேர்மன் காரரோ, ஜேர்மனியரோ அல்ல.

கடவுச்சீட்டை தந்தது, அவர்கள் மாண்பு.

மத்தியகிழக்கில் அந்த மாண்பு இல்லை. ஆகவே..... நீங்கள், அரபி பேசினாலும், இலங்கையர் தான்.

ஜரோப்பாவில்..... என்னையும், உங்களையும்.... எமது அடுத்த தலைமுறையையும் இணைக்கப்போவதும், பெருமையுடன் வைத்திருக்கப் போவதும், தமிழர் என்னும் இன அடையாளம்...

அந்த அடையாளம் இல்லாவிடில், பூர்வீகத்தை தொலைத்த, தமிழக நரிக்குறவர் போல.... ஜரோப்பாவிலுள்ள ரொமேனிய ஜிப்சி இன மக்கள் போலாவோம்.

எம்மைப் போலவே...... நாடு, நாடாக ஏதிலிகளாக திரிந்த யூதர்கள் தமது இன அடையாளத்தை காத்ததால்,இன்று அசைக்க முடியாத பெரும் சக்தி கொண்டேராக உள்ளனர்.

விக்டோரியா மகாராணி காலத்தில், அகதி, தாய், தந்தைக்கு பிறந்த முதல் யூத பிரிட்டிஸ் பிரதமர் பென்சமின் டிசரேலி....

ஆகவே.... தமிழர் இன அடையாளம் மிக முக்கியமானது. இல்லாவிடில்..... தகப்பன் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவமானமடையும் ஒருவர் நிலையில் இருப்போம்.

***
சரி.... உங்கள் கேள்விக்கு பதில் இப்போது..... யூத பூர்வீகதை கொண்ட பெஞ்சமின் டிசரேலியை, போரிஸ் ஜோன்சனை..... யூத இனம் பெருமையாக கொண்டாடுவது போல.... டிரம்ப் குறித்து ஜேர்மனியரும், ஓபாமா குறித்து கென்யரும்..... கொண்டாடுவது போல..... பிரபாகரன், ராஜராஜன், ஏ ஆர் ரகுமான், சி வி ராமன் குறித்து தமிழர்கள் பெருமையுடன் கொண்டாட, பூர்வீக (இன) அடையாளம் மிக முக்கியமானது.

 

Link to comment
Share on other sites

@Nathamuni மிக சுருக்கமான விளக்கம். நீங்கள. கூறிய தமிழர் என்ற இன அடையாளத்தை பேண வேண்டுமானால் எமக்கு பின்னால் வரும் அனைத்து சந்ததியும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அவ்வாறு கற்காமல் அந்தந்த நாட்டு மொழியை  தாய் மொழியாக கொண்டால் தமிழர் என்ற இன அடையாளம் மறைந்து இலங்கை அல்லது தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட ஐரோப்பிய மக்கள் என்ற வரையறைக்குள்ளேயே வருவார்கள். அதாவது தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

யூட்டர்,

ஆங்கிலம் ஒரு மொழி..... அறிவல்ல.... நீங்கள் அப்படித்தான் நிணைக்கிறீர்கள் போலுள்ளது.

அந்த “போலுள்ளது” - தவறானது … ஆங்கிலத்தில் உள்ளதை முற்றிலும் எதிர்மறையாக விளங்கிக்கொண்டு பதில் எழுதியவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெழுதினேன் - அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

@Nathamuni மிக சுருக்கமான விளக்கம். நீங்கள. கூறிய தமிழர் என்ற இன அடையாளத்தை பேண வேண்டுமானால் எமக்கு பின்னால் வரும் அனைத்து சந்ததியும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அவ்வாறு கற்காமல் அந்தந்த நாட்டு மொழியை  தாய் மொழியாக கொண்டால் தமிழர் என்ற இன அடையாளம் மறைந்து இலங்கை அல்லது தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட ஐரோப்பிய மக்கள் என்ற வரையறைக்குள்ளேயே வருவார்கள். அதாவது தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

யூதர்களின் ஹீப்ரூ மொழி பேச்சு மொழி இல்லையே. அது இன்றளவும் எழுத்தில் மட்டுமே உள்ளது.

ஆனால் யூத இனம் உலகெங்கும் உள்ளது.... பிரிட்டிஷ் பிரதமர், நியூசீலாந்து பிரதமர்... யூதர்கள்...

இலங்கையின் 26வது பிரதம நீதியரசர் Sidney Abrahams ஒரு யூதர். 

இன்று நேற்று அல்ல. ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர்... அகதிகளாக ஓடியவர்கள் அவர்கள்.

நாடு அமைந்த பின்னர், இஸ்ரேவேலின் உத்தியோக மொழி ஹீப்ரு. உலகெங்கும், அகதிகளாக ஓடியவர்களின் வம்சாவளியை தேடி, இஸ்ரேலுக்கு குடிபெயர செய்கிறார்கள். இந்தியா, பங்களாதேஷ், இலங்கை என்று பலர் அங்கே போயுள்ளனர்.

ஆரிய பிராமணர்களின் சமஸ்கிருதமும் அவ்வாறே.... ஆனாலும் பிராத்தனை மொழியாக கோவில்களில் உள்ளது.

மொழி இல்லாத நிலையில், இனம் எப்படி காக்கப்பட்டது என்று யூத இன உதாரணத்துடன், விளங்கப்படுத்த முடியுமா?

****

மொழி இல்லாவிடினும், நாம் பெரும் வரலாற்றுப் பூர்விகம் மிக்க தமிழர்கள் என்று அடுத்த தலைமுறைக்கு, ஏதாவது மொழியில் சொல்லி, என்ன காரணத்துக்காக இங்கே வந்தோம் என்று சொல்லவிடில், நாம் ஒரு பூர்வீகம் இல்லா நாடோடிகள் ஆவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

மறுக்க முடியா உண்மை.

கோஷான் சே  இங்கே ஒரு சமூகத்தில் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நடைமுறையில் உள்ள இனம் ,தேசிய அடையாளம் பற்றி விளக்கமாக சொல்லியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஜரோப்பாவிலுள்ள ரொமேனிய ஜிப்சி இன மக்கள் போலாவோம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான் இந்த சிக்கோயினார்கள்.அவர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப அந்த கலாச்சாரங்களோடு ஒட்டியே வாழ்கின்றார்கள். இருந்தாலும் தங்களின் பூர்வீகம் இந்தியா என்றே கூறுவார்கள்.அவர்கள் எப்படித்தான் நாகரீகமாக வாழ்ந்தாலும் அவர்களை சிக்கோயினார் இனம் என்றுதான் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.