Jump to content

பண்டைய கால தெறுவேயத்தின்(பீரங்கி) பாகங்களுக்கான தமிழ்ச் சொற்களும் அவற்றின் பயன்பாடும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இவ்விடுகை அடிபாட்டியலில்(hopology) விருப்பம்/நாட்டம் உள்ளோரிற்கு நல்ல விருந்தாக அமையும். இங்கே தெறுவேயங்களில் இருக்கும் உறுப்புகளை பட்டியலிட்டு அவற்றின் செயல்களையும் விளக்கியுள்ளேன். குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினையும் கீழே உள்ள படிமத்தில் கண்டுகொள்ளவும்.

 


பீரங்கி என்பது தமிழல்ல. சரியான தமிழ்ச் சொல் தெறுவேயம் என்பதாகும்.

தெறுவேயம் - Cannon


 

எதிர்மறை வெளி(Negative space):-

  • துளை(Bore): மூட்டுப்படை(Ordance) (நொய்யகோ(wad), குளிகை(pellets) போன்றவை) நிரப்பப்படும் துளையின் தளம் அல்லது துளையின் அடி எனப்படும் துளைக்கு அருகிலுள்ள முடிவு உட்பட அனைத்தும் உள்ளீடற்ற உருளை போன்று தெறுவேயத்தின் மையத்தின் கீழ் வரை துளைக்கப்பட்டுள்ளது. இதில் தெரியும் துளை விட்டமானது தெறுவேயத்தின் குழல்விட்டத்தைக்(கலிபர்) குறிக்கிறது.
  • புழை(Vent): தெறுவேயத்தின் முடிவிற்கு அருகில் உள்ள மெல்லிய குழாயானது, வெடிக்கும் பொருளை உள்ளே ஒரு பற்றவைப்பு மூலத்துடன் இணைப்பதோடு பெரும்பாலும் உருகி(fuse) அளவு நீளம் கொண்ட திரியால் நிரப்பப்படுகிறது; எப்போதும் வெநின்(breech) அருகேதான் அமைந்திருக்கும். இது, சில சமயங்களில் 'உருகி துளை(fuse bore)' அல்லது 'தொடு துளை' என்றும் அழைக்கப்படுகிறது. தெறுவேயத்தின் வெளிப்புறத்தில் உள்ள புழையின் மேற்புறத்தில் 'புழை புலம்' என்று அழைக்கப்படும் ஒரு தட்டையான வட்ட இடம் உள்ளது, அங்கு அந்த வெடிக்கும் பொருளானது தீக்கோலால் பற்றவைக்கப்படும். தெறுவேயம் வெண்கலமாக இருந்தால், பெரும்பாலும் செம்பால் செய்யப்பட்ட புழையின் நீளத்திற்கு திருகப்பட்ட 'புழை துண்டு' இருக்கும்.
  • குவியறை(Chamber): வெடிமருந்து/கரிமருந்து நிரப்பப்படும் துளையின் அடிப்பகுதிக்கு மிக அருகில் உள்ள உருளை, கூம்பு அல்லது கோள ஒடுக்கிடம்(recess).

 


parts of the cannon in tamil.jpg

'படிமப்புரவு: விக்கிப்பீடியா | தமிழில்: நன்னிச் சோழன் '

திண்ம வெளி(Solid space):-

ஒரு தெறுவேயத்தின் முக்கிய உடல் மூன்று அடிப்படை நீட்டிப்புகளைக் கொண்டுள்ளது:

→முன்னணி மற்றும் நீளமானது பொளிவாய் என்றும்,

→நடுத்தர பகுதி கெட்டி என்றும்,

→மற்றும், மிக நெருக்கமான மற்றும் சுருக்கமான பகுதி கொண்டை என்றும் அழைக்கப்படுகிறது

  • பொளிவாய்(Chase): இது கெட்டிக்கு(reinforce) முன்னால் உள்ள தெறுவேயத்தின் முழு கூம்பு பகுதியையும் குறிக்கும் சொல். தெறுவேயத்தின் மிக நீளமான பகுதியான இது, பின்வரும் கூறுகளையும் உள்ளடக்கியது:
    • கழுத்து(Neck): பொளிவாயின் குறுகலான பகுதியான இது தெறுவேயத்தின் முன்னணி முனைக்கு அருகில் அமைந்துள்ளது.
    • முகவாய்(Muzzle): கழுத்தின் முன்னோக்கி உள்ள பொளிவாயின் பகுதி. இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
      • முகவாய் வீக்கம்(Swell of Muzzle ) என்பது பொளிவாயின் முன் முடிவில் உள்ள துண்டு விட்டத்தின் இலேசான வீக்கத்தைக் குறிக்கிறது. தெறுவேய தாணிப்பை(load) எளிதாக்குவதற்காக, இது பெரும்பாலும் உட்புறத்தில் முனைமழுக்கப்படுகிறது (chamfered ). சில சுடுகலங்களில், இந்த கூறு ஒரு பரந்த வளையத்தால் மாற்றப்பட்டு 'முகவாய் பட்டை' (Muzzle band) என்று அழைக்கப்படுகிறது.
      • முகம்(face) என்பது முகவாய் (மற்றும் முழு துண்டின்) முன்னணியில் இருக்கும் தட்டையான செங்குத்து சமதளம் ஆகும்.
      • முகவாய் வர்ப்புகள்(Muzzle mouldings) என்பவை அடுக்கிய(tiered) வளையங்கள் ஆகும், அவை முகத்தை மீதமுள்ள முகவாய்களுடன் இணைக்கின்றன, அவற்றில் முதலாவது 'உதடு'(lip) என்றும் இரண்டாவது 'கக்கப்பட்டி'(fillet) என்றும் அழைக்கப்படுகிறது.
      • முகவாய் கவோதம்(Chase astragal) மற்றும் கக்கப்பட்டிகள் என்பவை கழுத்தின் பின்னால் பொளிவாய்க்கு வெளிப்புறத்தில் சுற்றியுள்ள மூன்று குறுகிய வளையங்களின் வரிசையாகும். இவை, சில நேரங்களில் கூட்டாக 'பொளிவாய் வளையம்'(chase ring) என்றும் அழைக்கப்படுகிறது.
    • பொளிவாய் கவோதம்(chase astragal) மற்றும் கக்கப்பட்டிகள்: பொளிவாயின் அருகில் அமைந்துள்ள அத்தகைய வளையங்களின் இரண்டாவது தொடர் இவையாகும்.
    • பொளிவாய் கச்சு(Chase girdle😞 இது பொளிவாய் கவோதம், கக்கப்பட்டிகள் மற்றும் கெட்டி ஆகியவற்றிற்கு இடையிலான பொளிவாயின் சுருக்கமான நீளமாகும்.
  • கெட்டி(reinforce): துண்டின் இந்த பகுதி அடிக்கடி முதல் கெட்டி & இரண்டாம் கெட்டி எனப் பிரிக்கப்படுகிறது, ஆனால் எந்தவொரு சமயத்திலும் அதன் முன்னணி முடிவில் ஒரு குறுகிய வட்ட கெட்டி வளையம் அல்லது பட்டை இருப்பதால் பொளிவாயில் இருந்து தனித்தனியாக குறிக்கப்படுகிறது. கெட்டியின் சாணானது(span) பின்வருவனவற்றையும் உள்ளடக்கியது.
    • தாங்குருளையானது(trinnion) கெட்டி-வளையத்தின் பின்னால் உள்ள கெட்டியின் முன்னணி முடிவில் அமைந்துள்ளது. அவை துளைக்கு செங்குத்தாக, அதற்குக் கீழே, இரண்டு உருளைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த உருளைகள் தெறுவேயத்தை அதன் வண்டியில் மூட்ட(mount) பயன்படுகின்றன.
    • விளிம்புத்தளம்(rim base) என்பது தாங்குருளையின் ஒன்றியத்தில் அமைந்துள்ள குறுகிய அகல வளையங்கள் ஆகும். இது தெறுவேயத்தின் வண்டி பற்றுயத்திற்கு(attachment) ஆதரவை வழங்குகிறது.
    • தெறுவேயத்திற்கு இரண்டு கெட்டிகள் இருந்தால் மட்டுமே 'கெட்டி பட்டை' (reinforce band) என்பது இருக்கும். மேலும், இது முதல் கெட்டியை இரண்டாவதிலிருந்து பிரிக்கிறது.
    • வெந்(breech) என்பது துளைகளின் அடிப்பகுதிக்கு பின்னால் உள்ள திட உலோகத்தின் திணிவை குறிக்கிறது. இது பொதுவாக முகவாய்க்கு நேரெதிரே உள்ள தெறுவேயத்தின் முடிவைக் குறித்து, அடி வளையம் உட்பட வெநின் அடிப்பகுதி வரை நீள்கிறது. அதாவது, வெடிமருந்தின் வெடிப்புத் தொடங்கும் இடத்திலிருந்து அதற்கு மாறாக உள்ள அழுத்தப்பட்ட வளி தப்பிக்கும் திறவு(opening) வரை. (வெந் என்றால் தமிழில் முதுகு(பின்பக்கம்) என்று பொருள்)
    • அடி வளையமானது(base ring) கெட்டிக்கு அருகில் உள்ள முடிவில் கொண்டைக்கு சற்று முன்னர் முழுத் தெறுவேயத்தின் பரந்த பகுதியில் ஒரு வளையத்தை உருவாக்குகிறது
  • கொண்டை(cascable): இது தெறுவேயத்தின் ஒரு பகுதி கெட்டி(கள்) மற்றும் அடி வளையத்தின் பின்னால் உள்ளது. இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
    • துண்டின் சிறிய கோள முனையமாக இருக்கும் குமிழ்(knob);
    • கழுத்து(neck) என்பது குமிழியை வெளியே வைத்திருக்கும் ஒரு குறுகிய, ஒடுங்கிய உலோகத் துண்டு ஆகும்
    • கக்கப்பட்டி என்பது கொண்டையின் கழுத்தை வெநின் அடித்தளத்துடன் இணைக்கும் அடுக்கு வட்டு ஆகும்
    • வெநின் அடியானது(base of the breech) உலோக வட்டு ஆகும், இது கொண்டையின் மிக முன்னோக்கிய பகுதியை உருவாக்கி, அடி வளையத்திற்கு அடுத்ததாக உள்ள வெநினிற்கு எதிராக நிற்கிறது.

 


புதிய சொற்களிற்கான விளக்கம்:-

  • பொளிவாய் - பொளியப்பட்டதன் வாயினை உள்ளடக்கிய பகுதியாதலால் இதற்க்கு இவ்வாறு பெயர் சூட்டலாயினேன்.
  • கெட்டி - இதற்கான ஆங்கிலச்சொல்லான என்பதை ஆங்கிலேயர் குண்டினை தாணித்தல்(load) என்னும் மேற்பொருள் வரும்படியாக என்று வழங்கியிருக்கின்றனர். ஆகவே அதே பொருளில் எம்தமிழிலும் வழங்கும் கெட்டி என்னும் சொல்லினை இங்கு கையாண்டிருக்கிறேன்.
  • கக்கபட்டி - ஈழத் தமிழ்
  • கவோதம் - கிட்டிப்பு: இராமகி ஐயா
  • கச்சு - girdle(இடையில் இருக்கும் கச்சுப்பட்டை போன்று இங்கும் இருக்கிறது. )
  • வெந் என்றால் தமிழில் பின்பக்க முதுகு என்று பொருள். . இங்கு இது பின்பக்கம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது
  • கொண்டை: இந்த கொண்டை என்னும் சொல்லினை இந்திய துணைக்கண்ட தெறுவேயங்களை(cannon) அடிப்படையாக வைத்தே உருவாக்கினேன். வெள்ளையர்களினது அன்று.

 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • கட்டட அமைப்புக்கலை சொற்றொகுதி

https://en.wikipedia.org/wiki/Cannon

தமிழாக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.