Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு... அனுமதி வழங்குமாறு, பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் கோரிக்கை!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Pfizer-720x375.jpg

மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு... அனுமதி வழங்குமாறு, பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் கோரிக்கை!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்றாவது தடுப்பூசி 95.6 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவசர கால பயன்பாட்டுக்காக மூன்றாவது தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கும் அமெரிக்கா கடந்த செப்டம்பர் அங்கீகாரம் வழங்கியது.

16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்துவதற்கான முன்மொழிவும் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் பல நாடுகளில் மூன்றாவது தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1249099

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடமையைச் செய்ய.... மேனி ஒடுங்கி மெல்லிய நடையொடு ஒரு கையிலே துணிப் பையொன்று மறு கையிலே நெய்ப் பந்தமொன்று திருநகரிலிருந்து கனகபுரம் நோக்கி அன்னையவர்கள் நடந்துகொண்டிருந்தாள்! இது அவனுக்காய் விளக்கேற்றும் பன்னிரெண்டாவது ஆண்டு விடுமுறை கிடைத்தால் ஓடி வருவான் அவனுக்காகவே சமைக்கத் தோன்றும் சேர்ந்து உண்டு மகிழ்வான் அவன் வெளிநாட்டில் இருந்து பணம் தருவார்கள் மனம் தருவது அவன் மட்டுமே குடிசையைக் கூட கோவிலாக்குவான்! இரு குழைந்தைகளுக்கு அப்பா அவன் தாய்வீடு வந்தால் அவனே குழந்தை விடைபெறும் நேரம் விழிகொண்டு பாரான் தொடர்ந்து சென்று வாசலில் நின்றால் திரும்பிப் பார்த்து கவனம் என்பான்! அவன் உடலை தொட்டு அழவும் கொடுப்பனை இல்லை கொடுமையானது அன்னையர் வாழ்வு எத்தனை அன்னையர் துடிக்கின்றனரோ! விடுதலைக்காகச் சாவை அணைத்தோர் மீண்டும் வந்தா நீதியைக் கேட்பார் விட்டுச் சென்ற  ஈகத்தை வைத்து ஈழத்தை மீட்கும் கடமையைச் செய்ய ஏற்றும் சுடரிலே  சத்தியம் செய்வோம்! ஆகுதியானோரை அகமேந்தி நன்றியுடன் நொச்சி  
  • அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்... மிச்சம்... அதுவா... நடக்கும்.😎
  • நீங்கள் பரிகாசம் செய்யபடவில்லை. சீனாவிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராதவிடத்து எப்படி சீனாவிடம் பேச முடியும் என்றே கேட்கப்பட்டது. இப்போதும் என்னை மதிரயில கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக என்று கதைதான் வருகிறதே ஒழிய சீனா உண்மையிலேயே தமிழர் தரப்பை அணுகியதாக? என்பது தெளிவில்லை.   வா என்று அணைக்கவும் முடியாது…. போ என்று துரத்தவும் முடியாது…. எம்மை பொறுத்தவரை இந்தியா ஒரு நித்திய-கோவிட்.  அதன் எம்மீதான தாக்கத்தை manage பண்ணத்தான் முடியும், eradicate பண்ண முடியாது.
  • பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து ‘துழும்’ என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்ச் சண்டை யிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்றார். ஆனாலும் அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது அந் நாளில் பண்டார வன்னியனின்* படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன் தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்கு தலைத் திட்டமிட்டு புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினால் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் சந்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும் அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்னும் குளிக்கின்றார் எங்களது ஊர்ப் பெண்கள் ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது. பால்பத்திர ஓணாண்டி அவர்களுக்கு நன்றி மீண்டும் இக்கவிதையை நினைவூட்டியதற்கு. சில கவிஞர்களின் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது, ஜெயா இதை எழுதியது தனது இளமைப்பிராயத்தில் எதிர்காலத்தில் ஈகவிதை இன்னுமொரு வரலாற்றுடன் பொருந்திப்போகும் என அவர் எழுதும்போது கனவுகூடக் கண்டிருக்கமாட்டார். இதே போல புதுவையரும் ஒரு முக்கியமான பாடலில் ஒரு வரியைச் சேர்த்திருப்பார் அது எதுவெனில் "உருவாக்கி எம்மை வழிகாட்டும் தலவரின் வரலாறுமீதினில் உறுதி" என இன்றைய நாளில் இவ்விரு  கவிதை வரிகளையும் தொட்டுப்பொவது உகந்ததே. முதலாவது கண்களை நனைக்கும் இரண்டாவது புதுவையரின் வரிகள் எம்மை உறுதிகொள்ளவைக்கும்.  அறம்சார்ந்து நாம் எந்தவிடயத்தையும் தன்னலமில்லாது செய்யத்துணிந்தால் தலைவரது சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கலாம்.  அதுவே அந்தக் காலப்பெருநதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அண்ணர் நீங்கள் எப்போதும் என்னருகில் இருப்பதுபோல் உணருவதால் என்னால் அறத்துக்கு மாறாகச் சிந்திக்க முடியாதுள்ளது என்பதை எவர் உணருகிறாரோ அவரால், அண்ணர் விட்டுச்சென்ற செயல் முடிக்கப்படும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.