Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என டெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆராய்கிறது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி.

இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியல் எம்மோடு இணைந்து மேலும் பல தகவல்களை வழங்குகிறார் சுரேன் குருசாமி அவர்கள்.

அவருடனான முழு நேர்காணல் இதோ,      

https://tamilwin.com/article/the-united-states-did-not-invite-the-confederacy-1636642424

 • Haha 2
Link to comment
Share on other sites

 • Replies 199
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

அட்றா சக்கை... அம்மன் கோயில், புக்கை எண்டானாம்.😂
சுமந்திரன்... பெரிய உருட்டுதான், உருட்டியிருக்கிறார். 🤣

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனின் வாயில் வருவதெல்லாம் பொய்யும் புளுகும்தான் இதைவிட பிச்சை எடுத்து பிழைக்கலாம் .

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சுமத்திரனின் வாயில் வருவதெல்லாம் பொய்யும் புளுகும்தான் இதைவிட பிச்சை எடுத்து பிழைக்கலாம் .

இப்படி எல்லாம்... மலிவான அரசியல் விளம்பரம் செய்து,
தன்னை... தமிழ் மக்களின் தலைவராக காட்ட  முயற்சிக்கின்றார்.

ஆனால்... அவர் செய்யும், விளம்பரங்கள்... எல்லாம்,
விரைவிலேயே... பிசு பிசுத்துப் போகுது. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமத்திரனின் வாயில் வருவதெல்லாம் பொய்யும் புளுகும்தான் இதைவிட பிச்சை எடுத்து பிழைக்கலாம் .

இனி என்ன புதுக்கதை விடுறார் எண்டு பாப்பம்...😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புலவர் said:

அப்ப இதுவும உழுத வயலை உழுது படம்பிடிச்ச மாதிரியோ????

சுமத்திறனுக்கு மண்டையில ஒண்டும் இல்லை என்பது உங்களுக்கு எனக்கு தெரியுது ஆனால் அவரின் விசுவாசிகளுக்கு விளங்குதில்லை யாழிலும் தகுதி தராதரம் உள்ளவர்கள் தான் அட்வைஸ் குடுக்கணும் என்ற விதி கடுமையாக்கப்படணும் .

27 minutes ago, குமாரசாமி said:

இனி என்ன புதுக்கதை விடுறார் எண்டு பாப்பம்...😂

அவர் ஒஞ்சாலும் அவரின் சந்தர்ப்பவாத அடிவருடிகள் விடாதுகள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சமயத்தை அடிப்படையாக  வைத்து சுமந்திரனுக்கு எதிராக  வெறுப்பை உமிழ்வது பலருக்கு  வாடிக்கையாகிவிட்டது.

🤣

Link to comment
Share on other sites

 11 November 2021
 
4f541340-c1c9-43fd-8dfe-2b327b69e79e.jfi

TNA members in conversation with a EU delegation last September

Members of the Tamil National Alliance (TNA) are scheduled to fly to the United States of America (USA) this week to engage in talks with the State Department regarding the proposed new constitution. 

It is expected that the TNA delegation would advocate for more expansive provisions for autonomy than the present constitution allows. 

Provincial elections have not taken place since 2017 supposedly because of the changes being considered in the electoral system. 

The 13th Amendment of the Sri Lankan constitution, underwritten by neighbouring India, was supposed to provide autonomy for the Tamil provinces. However, Colombo has repeatedly eroded the provisions for self-rule through a variety of means, most recently through the passing of the 20th Amendment which strengthens the hand of the executive branch of the government. 

President Gotabaya Rajapaksa, an accused war-criminal, recently announced that his administration is planning to introduce a new constitution by next year. 

As the island reels from an acute economic crisis, talk of a new constitution drew widespread opprobrium. One writer wrote, “The fixation to fiddle with the constitution amidst a raging economic crisis can only be explained in the egoistic fantasies that have already done so much damage to the country. That seems to be the new normal of Sri Lanka as of now.”

https://www.tamilguardian.com/content/tamil-national-alliance-hold-talks-us-state-department

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அட்றா சக்கை... அம்மன் கோயில், புக்கை எண்டானாம்.😂
சுமந்திரன்... பெரிய உருட்டுதான், உருட்டியிருக்கிறார். 🤣

   சிறியர் பாத்து கதையுங்கோ! சுமந்திரனின் மாமா, மச்சான் எல்லாம் அவரின் சாதி, சமயம், தொழில், வதிவிடம் என்கிற விபரக்கோவையோடு (பொல்லுகளோடு)வந்து தமிழரில் யாரிடமும் இல்லாத சாதி, சமயம் இன்னோரன்ன இவரிடம் மட்டுந்தான் இருக்கிறது. மற்றவை அவர் செய்வதை வாய்பொத்தி கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்று  தாக்குவதோடு மற்றவரை தேவையில்லாமல் இழுத்து இவரை மூடப்போகினம். சாதி, சமயம் மறைந்து தமிழர் என்று ஒன்று சேரும்போது, இத்துப்போன இதுகளை வைத்து வியாபாரம் செய்ய நினைக்கினம். 

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

சுமத்திறனுக்கு மண்டையில ஒண்டும் இல்லை என்பது உங்களுக்கு எனக்கு தெரியுது ஆனால் அவரின் விசுவாசிகளுக்கு விளங்குதில்லை யாழிலும் தகுதி தராதரம் உள்ளவர்கள் தான் அட்வைஸ் குடுக்கணும் என்ற விதி கடுமையாக்கப்படணும் .

அவர் ஒஞ்சாலும் அவரின் சந்தர்ப்பவாத அடிவருடிகள் விடாதுகள் .

என்னுடைய விருப்பம்  கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் என்பது தான். ஏன் எனில் அவர்களும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே. இல்லையேல் சந்தர்ப்பவசமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 

( you got to be kiss *** Indians or Americans)

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சுமத்திறனுக்கு மண்டையில ஒண்டும் இல்லை என்பது உங்களுக்கு எனக்கு தெரியுது ஆனால் அவரின் விசுவாசிகளுக்கு விளங்குதில்லை யாழிலும் தகுதி தராதரம் உள்ளவர்கள் தான் அட்வைஸ் குடுக்கணும் என்ற விதி கடுமையாக்கப்படணும் .

அவர் ஒஞ்சாலும் அவரின் சந்தர்ப்பவாத அடிவருடிகள் விடாதுகள் .

தகுதி தராதரம் பார்க்கின்ற அளவுக்கு தாங்கள்   வளர்ச்சி கண்டிருக்கிறீர்கள்  பெருமாள். 

A++

வாழ்த்துக்கள். ....👍👍👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

என்னுடைய விருப்பம்  கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் என்பது தான். ஏன் எனில் அவர்களும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே. இல்லையேல் சந்தர்ப்பவசமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 

( you got to be kiss *** Indians or Americans)

சரியான கருத்து  மனேகணேசனையும். சேர்க்கலாம். இனிமேல் இலங்கையில் தமிழர் ஒரு அணியாக இலங்கை முழுவதும் போட்டியிடுவது நல்லது  ஆனால் நடைமுறையில்  மிகவும் கஸ்ரம்

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்கிற மமதையில் சும்மா இருந்துகொண்டு சலுகைகளை அனுபவிக்கிறவர்கள் ஒன்று சேர விடுவார்களா? மாவையருக்கு போன் போட்டு மிரட்டுகிற மிரட்டில் அவர் பாவம் ஒன்றும் வேண்டாம் கட்சியில் வாயை பொத்திக்கொண்டு இருக்க விட்டால் போதும் என்று வாயைப்பொத்திக்கொண்டும், தலையை ஆட்டிக்கொண்டும் இருக்கிறார். இருந்தாலும் எவ்வளவு காலம் தாங்குவார் என்பது தெரியவில்லை. தங்களை தக்க வைப்பதற்காக மற்றவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வெளியேற்றுவது, அவர்களின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது அரைகுறைகளின் வேலை. சரியான திறமையில்லை, வேலை செய்ய சோம்பல், சும்மா இருந்து பணமும், புகழும் பெறவேண்டுமானால் மற்றவரின் நல்ல பெயரை கெடுக்க வேண்டும். சிந்திக்க தெரியாதவர்கள், பகுத்தறிவு அற்றவர்கள், இவர்களைப்போல் சோம்பேறிகள் இவர்களின் கதைகளை நம்பலாம் எல்லோருமல்ல.

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

சமயத்தை அடிப்படையாக  வைத்து சுமந்திரனுக்கு எதிராக  வெறுப்பை உமிழ்வது பலருக்கு  வாடிக்கையாகிவிட்டது.

🤣

 அவரின் உருட்டு, புரட்டல்களை சமயம் என்னும் போர்வையால் மூடுவது சிலருக்கு வழமையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 அவரின் உருட்டு, புரட்டல்களை சமயம் என்னும் போர்வையால் மூடுவது சிலருக்கு வழமையாகிவிட்டது.

தமிழ் அரசியல்வாதிகள் எல்லோருமே உருட்டு பிரட்டுக்களால்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். இதில் தாங்களும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். 

ஆனால், சுமந்திரனுக்கு எதிராக மட்டும் மல்லுக்கட்டுவதென்றால், அதற்குப்  பின்னால் நிச்சயம் வேறு காரணங்கள் இருக்க வேண்டுமே...

😔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:
11 hours ago, nunavilan said:

என்னுடைய விருப்பம்  கஜேந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் என்பது தான். ஏன் எனில் அவர்களும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களே. இல்லையேல் சந்தர்ப்பவசமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 

( you got to be kiss *** Indians or Americans)

சரியான கருத்து  மனேகணேசனையும். சேர்க்கலாம். இனிமேல் இலங்கையில் தமிழர் ஒரு அணியாக இலங்கை முழுவதும் போட்டியிடுவது நல்லது  ஆனால் நடைமுறையில்  மிகவும் கஸ்ரம்

இப்படி ஒன்று நடந்துவிடக் கூடாது என்று தான் இந்தியா யாழிலேயே முகாமடித்து நிரந்தரமாக தங்கியிருக்கிறது.

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் வரவுள்ளார்.. 

சுமந்திரன் மீது சேறு அடிக்காவிட்டால் இங்கு சிலருக்கு சோறு இறங்காது😂🤣

பிரித்தானியா, கனடா செல்லும் சுமந்திரன்: சாணக்கியனையும் உதவியாக அழைத்து செல்கிறார்!

by PagetamilNovember 12, 20210101
WhatsApp-Image-2021-11-12-at-09.20.09.jp

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இருவர் இன்று (12) இரவு அமெரிக்கா செல்கிறார்கள். அங்கு சில உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் ஈடுபட்ட பின்னர்,  நாடு திரும்புவார்கள்.

அமெரிக்கா செல்லும் குழுவினர், 20ஆம் திகதி அங்கிருந்து புறப்படுகிறார்கள். சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இலங்கை திரும்புகிறார்கள்.

சுமந்திரன் அங்கிருந்து பிரித்தானியா செல்கிறார். அங்கு சில தனிப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இந்த சந்திப்பிற்கு சுமந்திரன் தனியாக செல்வதாகவே முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், சாணக்கியனை முன்னிலைப்படுத்தும் அவரது முயற்சிக்கு உதவும் என்பதால், சாணக்கியனையும் உதவியாக அழைத்துச் செல்கிறார்.

சாணக்கியனிற்கும் விசா வழங்குமாறு அவர் கோரியதையடுத்து, பிரித்தானிய தூதரகம் நேற்று அந்த விசாவை வழங்கியது. நேற்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியன் பிரித்தானிய விசாவை பெற்றுக் கொண்டனர். இதன்போது பிரித்தானிய தூதருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து கனடா செல்லும் இருவரும், அங்கு தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினருடன் கலந்துரையாடல்களை நடத்தி விட்டு, 28ஆம் திகதி நாடு திரும்புவார்கள்.

இதேவேளை, சுமந்திரனின் அமெரிக்க பயணம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகை செய்திகள் வெளியான பின்னரே, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை அறிந்திருந்தனர். கட்சியின் முக்கிய எம்.பிக்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்களும் பத்திரிகையை படித்தே தகவலை அறிந்து கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியின் பல மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்த விவாதிக்க கட்சியின் மத்திய குழுவை கூட்டுமாறு கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி தலைவரை வலிறுத்தியுள்ளனர்.

https://pagetamil.com/2021/11/12/பிரித்தானியா-கனடா-செல்ல/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆனால், சுமந்திரனுக்கு எதிராக மட்டும் மல்லுக்கட்டுவதென்றால், அதற்குப்  பின்னால் நிச்சயம் வேறு காரணங்கள் இருக்க வேண்டுமே...

கூட்டமைப்புக்குள், நீங்கள் சுமந்திரனை மூட பயன்படுத்தும் தகுதிகள் உள்ள எத்தனையோ பேர் இருக்க அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, எல்லோருமே வெளிப்படையாக சுமந்திரனின் தான்தோன்றித்தனமான  முடிவுகளையும், வெளியிடும்  அறிக்கைகளையுமே விமர்சிக்கிறார்கள், யாரும் அவரின் சமயம் இன்னோரன்ன தகுதிகளை பற்றி இங்கு விவாதிக்காதவிடத்து நீங்கள் சில தற்போதைக்கு பொருந்தாத சில காரணங்களை வெளியிட்டு இதனாற்தான் சுமந்திரனை விமர்சிக்கிறார்கள் என்று விசமத்தனமான கருத்துக்களை வெளியிடுவதற்க்கும் காரணம் இருக்க வேண்டுமே? உங்கள் மேல்தட்டு காரணங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு அந்த தகுதிகள் இருப்பதால் மற்றவர்களை தகுதியற்றவர்கள் என்கிறீர்களா? அல்லது அந்த தகுதியின் பொருட்டு அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என கருதுகிறீர்களா? இல்லை இதை வைத்து இனத்தை கூறு போட்டு சுகம் காண நினைக்கிறீர்களா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த சந்திப்பிற்கு சுமந்திரன் தனியாக செல்வதாகவே முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், சாணக்கியனை முன்னிலைப்படுத்தும் அவரது முயற்சிக்கு உதவும் என்பதால், சாணக்கியனையும் உதவியாக அழைத்துச் செல்கிறார்

தான் செய்வது  சரியென்று ஆமா போட, நிரூபிக்க, தன்னை தனிமைப்படுத்தி விடாமலிருக்க, தன்னை சேர்ந்த, தற்போது இவரின் பேச்சால் மக்களால் கவரப்படுவார் எனத் தோன்றும்  ஒருவர் கூட  இருக்க வேண்டுந்தான். ஆனால் யாரை யார் முதல் விழுத்தி முன்னேறுகிறாரோ அவரே சாணக்கியன்! தற்போது  செயலை அல்ல பேச்சை மட்டும் நம்பி முதலிடுவோர், ஏமாற்றுவோர் பலர்.... பெருகி வருகின்றனர்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

கூட்டமைப்புக்குள், நீங்கள் சுமந்திரனை மூட பயன்படுத்தும் தகுதிகள் உள்ள எத்தனையோ பேர் இருக்க அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, எல்லோருமே வெளிப்படையாக சுமந்திரனின் தான்தோன்றித்தனமான  முடிவுகளையும், வெளியிடும்  அறிக்கைகளையுமே விமர்சிக்கிறார்கள், யாரும் அவரின் சமயம் இன்னோரன்ன தகுதிகளை பற்றி இங்கு விவாதிக்காதவிடத்து நீங்கள் சில தற்போதைக்கு பொருந்தாத சில காரணங்களை வெளியிட்டு இதனாற்தான் சுமந்திரனை விமர்சிக்கிறார்கள் என்று விசமத்தனமான கருத்துக்களை வெளியிடுவதற்க்கும் காரணம் இருக்க வேண்டுமே? உங்கள் மேல்தட்டு காரணங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு அந்த தகுதிகள் இருப்பதால் மற்றவர்களை தகுதியற்றவர்கள் என்கிறீர்களா? அல்லது அந்த தகுதியின் பொருட்டு அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என கருதுகிறீர்களா? இல்லை இதை வைத்து இனத்தை கூறு போட்டு சுகம் காண நினைக்கிறீர்களா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

1) சமயத்தை அடிப்படையாக வைத்து விமர்சனம் செய்தால் அதற்கு எனது எதிர்ப்பு  நிச்சயம் இருக்கும்.

2) போராடியவர்கள் / போராட்டம்  மீதான அவரின் பொறுப்பற்ற விமர்சனம் தொடர்பில் எனக்கு  உடன்பாடில்லை என்பது நீங்கள் எல்லோரும் மிக நன்றாக அறிவீர்கள். 

ஆனாலும் 

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுவதற்கு நான் ஒருவரினதும் தொங்குதசை அல்ல. 👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சமயத்தை அடிப்படையாக வைத்து விமர்சனம் செய்தால் அதற்கு எனது எதிர்ப்பு  நிச்சயம் இருக்கும்.

1 minute ago, Kapithan said:

எல்லோருமே வெளிப்படையாக சுமந்திரனின் தான்தோன்றித்தனமான  முடிவுகளையும், வெளியிடும்  அறிக்கைகளையுமே விமர்சிக்கிறார்கள், யாரும் அவரின் சமயம் இன்னோரன்ன தகுதிகளை பற்றி இங்கு விவாதிக்காதவிடத்து

ஏன் இல்லாத, யாருமே சொல்லாத  ஒன்றையே பற்றிப்பிடித்துக்கொண்டு அடம்பிடிக்கிறீர்கள்? இதை வைத்து இனத்தை கூறு போட்டு குளிர் காய்ந்த காலம் மலையேறிவிட்டது, யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஏன் இல்லாத, யாருமே சொல்லாத  ஒன்றையே பற்றிப்பிடித்துக்கொண்டு அடம்பிடிக்கிறீர்கள்? இதை வைத்து இனத்தை கூறு போட்டு குளிர் காய்ந்த காலம் மலையேறிவிட்டது, யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள்.

உங்களுக்கு புலப்படவில்லை என்பதால் அது இல்லாத ஒன்று அல்ல சாத்தான்.

தமிழ் சமுகவலை பரப்பிலும், இதே யாழ் களத்திலும், மதியாபரணம் சுமந்திரன், எம் ஏ சுமந்திரன் என எழுதி வந்தவர்கள் திடீரென அவரின் middle name ஐ பாவித்து, ஆபிரகாம் சுமந்திரன் என ஏன் எழுதினார்கள் என்பது உள்ளங்கை நெல்லிகனி.

ஒவ்வொரு தேர்தலிலும் அவர் கிறிஸ்தவர், மிஷனரி கையாள் என தமிழ் தேசிய தரப்புகள் உள்ளடி வேலை செய்வதும் உண்மை.

சுமந்திரன் மேல் எனக்கும் நல் அபிப்பிராயம் இல்லைதான், ஆனால் அவரை குறிவைப்பதில் ஒரு காரணம் அவர் கிறீஸ்தவர் என்பதும் உண்மை.

தந்தை செல்வாக்கே நடந்ததாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு தேர்தலிலும் அவர் கிறிஸ்தவர், மிஷனரி கையாள் என தமிழ் தேசிய தரப்புகள் உள்ளடி வேலை செய்வதும் உண்மை

த. தே. கூட்டமைப்பின் வீழிச்சிக்கு இவரும், இவரது மதமுமே காரணம் என்று சொல்லலாமா? அதில் பல கிறிஸ்தவர்கள் இருக்கும்போது இவரை மட்டும் குறி வைப்பது காரணம் மதம் அல்ல. ஏன் என்றால் இவரது உருட்டு புரட்டலே. அதையே விமர்சிக்கின்றனர்.  வீணாக மதத்தை திணித்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களே இவரை செயற்பாட்டை கண்டித்திருக்கின்றனரே.  யாழ் களத்தில் உள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடுகின்றனரா என்ன? சிலர் மதத்தையும், இனத்தையும் மாறி மாறி காவி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க நினைக்கின்றனர். களத்தில் சச்சியரும் ஒன்றுதான், சுமந்திரனும் ஒன்றுதான்.

29 minutes ago, goshan_che said:

தந்தை செல்வாக்கே நடந்ததாம்

அவர் தனது இயலுமான வரை (உடல்நிலை) கட்சியில் நிலைத்து நின்றிருக்கிறார். எப்படி சாத்தியமானது?

திரை மெல்ல விலகுவதுபோல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, satan said:

த. தே. கூட்டமைப்பின் வீழிச்சிக்கு இவரும், இவரது மதமுமே காரணம் என்று சொல்லலாமா? அதில் பல கிறிஸ்தவர்கள் இருக்கும்போது இவரை மட்டும் குறி வைப்பது காரணம் மதம் அல்ல. ஏன் என்றால் இவரது உருட்டு புரட்டலே. அதையே விமர்சிக்கின்றனர்.  வீணாக மதத்தை திணித்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களே இவரை செயற்பாட்டை கண்டித்திருக்கின்றனரே.  யாழ் களத்தில் உள்ளவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடுகின்றனரா என்ன? சிலர் மதத்தையும், இனத்தையும் மாறி மாறி காவி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்க நினைக்கின்றனர். களத்தில் சச்சியரும் ஒன்றுதான், சுமந்திரனும் ஒன்றுதான்.

1 hour ago, goshan_che said:

நான் முன்பே சொல்லி விட்டேன். சுமந்திரன் மிக மோசமான அரசியலை கைகொள்கிறார். 

நான் அவர் பற்றிய எனது நிலைப்பாட்டை, விடயங்களை ஆராய்ந்தே மாற்றி கொண்டேன்.  அவருக்காக தன்னார்வமாக வேலை செய்து, பின் வெறுத்து வெளியேறி, “அண்ணா இவன்(ர்) ஒரு விசப்பாம்பு நம்பாதீங்கோ” என சொல்லிய இனத்துக்கு உண்மையான இளஞர்களிடம் கேட்டறிந்து கொண்டேன். இவர் ஒரு சுயநலவாதி, தலைகனம் மிக்கவர், தேவையில்லமால் வாயை கொடுப்பவர் என பல குறைகளை இவரிடம் காண்கிறேன். அது மட்டும் இல்லை. கிறீஸ்தவர்கள் மத்தியில் - உடுவில் பாடசாலை முதல் கொண்டு தலையிட்டு - தன்னை ஒரு கிறீஸ்தவ நேசனாக (யாழ் மாவட்டத்தில் இவர் உயர்த்தபட்ட சாதி கிறீஸ்தவரின் செல்லப்பிள்ளை) காட்டும் religious card ஐ இவரும் play பண்ணுவதும் உண்மை.

ஆனால் யாழ்களம் என்பது ஒன்றும் காந்தி, புத்தர் எழுதும் இடமல்ல. திருகேதீஸ்வர வளைவு, பண்டதரிப்பு சுவிசேச கூட்டம், சுமனே தேரோ பாதிரியாருக்கு அறைந்தது, செம்மணி சுடலை ரோட் வளைவு, கொவிட் தொற்றில் நடவடிக்கை எடுத்த பி எச் ஐ கிறீஸ்தவர் என்பதால் அன்னதானத்தை நிறுத்தினார் என்பது வரை இங்கே எழுதபட்டுள்ளது.

இதில் சிலதில் நியாயத்தை சொல்ல போய், நீங்களும் வாங்கி கட்டியுள்ளீர்கள்.

ஆகவே யாழ் மண்ணிலும், யாழ் களத்திலும் சிலர் சுமந்திரன் மேல் பாய்ந்து பிராண்ட அவரின் மதமும் ஒரு காரணம் எனும் கைபுண்ணை காண, கண்ணாடி தேவையில்லை.

37 minutes ago, satan said:

அவர் தனது இயலுமான வரை (உடல்நிலை) கட்சியில் நிலைத்து நின்றிருக்கிறார். எப்படி சாத்தியமானது?

திரை மெல்ல விலகுவதுபோல் தெரிகிறது.

அவர் கட்சி தொடங்க முன்னம் காங்கிரசில் இருந்த போதும், தொடங்கிய பின்பும், மலேசியா வந்தேறி, கிறீஸ்தவன் என்ற பரப்புரையை ஜி.ஜி தரப்பினர் மேற்கொண்டதாக நான் அறிகிறேன். குறிப்பாக அவரின் 1952 தேர்தல் தோல்விக்கு இந்த வகை பிரச்சாரமும் கைகொடுத்ததாக சொல்வார்கள்.

அந்தகால விபரம் தெரிந்தவர்களை கேட்டு தெளிந்தால் (அறியாமை எனும்) திரை மேலும் விலகலாம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.