zuma Posted November 18, 2021 Share Posted November 18, 2021 1 hour ago, satan said: கிறிஸ்தவத்தில தொடக்கி விடுதலைப்புலிகள், பாதர்மார், சாதி, சமயம் என்று சுழன்று இப்போ சாத்தான், பெருமாள் தலையில வந்து நிக்குது. இன்னும் என்னென்ன, யார்யாரெல்லாம் சுழன்றடிக்கபோகினமோ? ஒருகாலத்தில் கதிர்காமரும் சூறாவளிபோல உலகெங்கும் சுற்றி சுற்றி வந்து பேசினவர்தான். கடைசியில் தகுதியிருந்தும், சிங்களத்தின் திட்டத்திற்கெல்லாம் ஒத்தோதியும் அவரை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டது சிங்களம். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டே செல்கிறார்கள், ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. கதிர்காமர் மட்டுமல்ல சு.ப தமிழ்ச்செல்வனும் உலகெல்லாம் சென்று பேசி வந்தார்கள், அதில் படுதோல்வியும் கண்டார்கள். தற்போது தமிழர் தரப்புக்கு இழப்பதற்கு ஏதும் இல்லை, யார் குத்தினாலும் நெல்லு அரிசியானால் சரி. 3 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 4 hours ago, Eppothum Thamizhan said: சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறது என்றதலைப்பில் அவரை விமர்சிக்காமல் யாரை விமர்சிப்பது? சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்கு தலைமையேற்றுவிடுவாரோ என்கின்ற பயமா.. ? அல்லது சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼♂️ Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Eppothum Thamizhan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 1 hour ago, Kapithan said: சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼♂️ சுமந்திரன் தானாக அமெரிக்கா போனாலென்ன அந்தாட்டிக்காவுக்குத்தான் போனால் எமக்கென்ன. தமிழரின் பிரதிநிதியென செல்லும்போது கூட்டமைப்பு சக பிரதிநிதிகளுடனும் கதைத்து முடிவெடுத்தல்லவா சென்றிருக்கவேண்டும்! இவர் தனியே போய் முன்பு விட்ட அறிக்கைகள் தெரியாதா?? 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 1 hour ago, Kapithan said: சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼♂️ அவர் இப்போது அங்குதான் நிற்கின்றார்! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 14 minutes ago, Eppothum Thamizhan said: சுமந்திரன் தானாக அமெரிக்கா போனாலென்ன அந்தாட்டிக்காவுக்குத்தான் போனால் எமக்கென்ன. தமிழரின் பிரதிநிதியென செல்லும்போது கூட்டமைப்பு சக பிரதிநிதிகளுடனும் கதைத்து முடிவெடுத்தல்லவா சென்றிருக்கவேண்டும்! இவர் தனியே போய் முன்பு விட்ட அறிக்கைகள் தெரியாதா?? அட இதுதானா உங்கள் பிரச்சனை...😂 இது எனக்குத் தெரியாமல் போச்ச.. சுமந்திரனின் கவனத்திற்கு யாராவது இதைக் கொண்டு செல்லுங்களேன்...புண்ணியமாகப் போகும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Eppothum Thamizhan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 20 minutes ago, Kapithan said: அட இதுதானா உங்கள் பிரச்சனை...😂 இது எனக்குத் தெரியாமல் போச்ச.. சுமந்திரனின் கவனத்திற்கு யாராவது இதைக் கொண்டு செல்லுங்களேன்...புண்ணியமாகப் போகும். நக்கல்!! அதுசரி சட்டியில இருந்தால்தானே அகப்பையில் வரும்! இங்கை சட்டியுமில்லை அகப்பையுமில்லை சும்மா வாயால வடைசுடவேண்டியதுதான்! ஏதாவது கேட்டால் வெண்ணெய் , தாழி என்று கதையளக்கவேண்டியது? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Justin Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 ஏதேதோ எல்லாம் சொல்வார்கள் சுமந்திரன் எதிர்ப்பாளர்கள். ஆனால் சுமந்திரன், தற்போது சாணக்கியன், இருவரையும் விட்டால் வெளிநாடுகளின் பிரதிநிதிகளோடு பேசக் கூடியவர்கள் எவரும் இப்போதில்லை! (சம்பந்தர் வயது மூப்பு - ஆனால் எமக்கு அவரது பிரசன்னம் வேறு வகைகளில் முக்கியம்!). இங்கே ரெலோ உட்பட ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோபம், கோட் சூட் போட்டுக் கொண்டு "அமேரிக்கா" சுத்திப் பார்க்க இயலாமல் போய் விட்டதால் என்று தான் நான் நினைக்கிறேன். பி.கு: ஏனைய தமிழ் அமைப்புகளோடு கூட பேச மாட்டேன் என்றிருக்கும் கஜேந்திரகுமாரையும், அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரும் விக்கி ஐயாவையும் மேற்கு நாடுகள் அணுகிப் பேச எந்தத் தேவையும் அந்த நாடுகளுக்கு இல்லை! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 சிங்களமும், மேற்கு நாடுகளும், வேறு எந்த நாடுகளும் தமது தேவைக்கு எம்மையும், எமது பிரச்சனைகளையும் பயன்படுத்துமேயொழிய நமக்கு எதுவுமே செய்யப்போவதில்லை. மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்படும்பொழுது திரும்பிப்பார்க்காத நாடுகள், கைகொடுக்காத நாடுகள், சேர்ந்து நின்று அழித்த நாடுகள், எங்களை இந்த திக்கற்ற நிலைக்கு கொண்டுவந்த நாடுகள், போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது திடீரன்று கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய தேவை வந்துவிட்டது என்பதே உண்மை! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 சுமந்திரன் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்து போகாத நாடுளா? பேசாத பேச்சுகளா? புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சேர்ந்து இதய சுத்தியோடு இவரின் நிகழ்ச்சி நிரலை விட்டு, தாம் வாழும் நாடுகளில் நமக்கு நடந்த அனிஞாயங்களை எடுத்துக்கூறி, சரியான தீர்வை வைத்து அடாத்தாக அபகரிக்கும் நமது நிலங்கள், தேவையற்று நமது பாரம்பரிய நிலங்களில் எழும் விகாரைகள், சிங்கள குடியேற்றங்கள், இவற்றை கட்டுப்படுத்தும் தீர்வு, பல தசாப்தங்களாக சிறையில் காரணமின்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் இளைஞர்களின் விடுதலை போன்றவற்றை முன்னிறுத்தி உறுதியாய் உழைத்தால் இவர் ஒன்றும் சுத்த முடியாது. தமிழருக்கு தீர்வு தேவையில்லை என்று சிங்களம் நினைக்கிறது, அதனிடம் எந்த தீர்வும் இல்லை. குறைந்தது போர்குற்றத்திற்க்கு பொறுப்புக்கூற வைக்கக்கூட முடியவில்லை இந்த நாடுகளால், பன்னிரண்டு வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. பதின்மூன்றாம் அரசியல் சட்டத்தை, அவர்களே ஒத்துக்கொண்டு கைச்சாத்திட்டதை நிறைவேற்ற பல ஆண்டுகளாய் இந்தியா படாத பாடு பட்டுக்கொண்டிருக்குது. நமது இறந்த உறவுகளை நினைவு கூர நீதிமன்றங்களே தடை விதிக்கிறது. இதற்கே தீர்வை சிங்களத்திடம் இருந்து எடுக்க முடியவில்லை ....... இதற்கு தீர்வு காணமுதல் வேறொரு பிரச்சனையை கொண்டுவந்து நமது குரல்வளையை நசுக்கும் சிங்களம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 6 hours ago, Eppothum Thamizhan said: நக்கல்!! அதுசரி சட்டியில இருந்தால்தானே அகப்பையில் வரும்! இங்கை சட்டியுமில்லை அகப்பையுமில்லை சும்மா வாயால வடைசுடவேண்டியதுதான்! ஏதாவது கேட்டால் வெண்ணெய் , தாழி என்று கதையளக்கவேண்டியது? நோ ரென்சன் எ தமிழா, இடைக்கிடை ஒன்றிரெண்டு கடி இல்லாவிட்டால் திரி பாலைவனம்போல் வறண்டுவிடும். உங்களைக் கடிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லைய..😂 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Justin Posted November 18, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 18, 2021 2 hours ago, satan said: சிங்களமும், மேற்கு நாடுகளும், வேறு எந்த நாடுகளும் தமது தேவைக்கு எம்மையும், எமது பிரச்சனைகளையும் பயன்படுத்துமேயொழிய நமக்கு எதுவுமே செய்யப்போவதில்லை. மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்படும்பொழுது திரும்பிப்பார்க்காத நாடுகள், கைகொடுக்காத நாடுகள், சேர்ந்து நின்று அழித்த நாடுகள், எங்களை இந்த திக்கற்ற நிலைக்கு கொண்டுவந்த நாடுகள், போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது திடீரன்று கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய தேவை வந்துவிட்டது என்பதே உண்மை! ஒபாமா, 2009 மே மாத ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் "பயங்கரவாதிகள் மக்களைத் தடுக்காமல் வெளியேற விட வேண்டும், அரசுப் படைகள் மக்கள் இருக்கும் இடங்களைத் தாக்காமல் விட வேண்டும்" என்றார். இதையே பல ஐரோப்பிய தலைவர்களும் வெவ்வேறு நேரங்களில் சொல்லியிருக்கின்றனர். இரு தரப்புமே கேட்கவில்லை -மக்கள் இறக்க இரு தரப்பும் சம அளவில் காரணங்கள்! பகிடி என்னவென்றால், வேண்டுகோள் விட்டவர்களை "சேர்ந்து அழித்தார்கள்" என்று திட்டுகிறீர்கள்! பிரச்சினை எங்கேயென்று அடையாளம் காணமுடியாமல் இருப்பது உங்களைப் போன்ற தமிழர்கள் - பின்னர் எப்படி தீர்வு பற்றிக் கனவு காண முடியும்? எனவே., சுமந்திரன் உட்பட எல்லாரையும் திட்டி விட்டு சுருண்டு படுத்துக் கொள்வதைத் தவிர எதுவும் எமக்கு நடக்காது! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 2 hours ago, Justin said: இதையே பல ஐரோப்பிய தலைவர்களும் வெவ்வேறு நேரங்களில் சொல்லியிருக்கின்றனர். அவர்களால் முடிந்தது அதுமட்டுந்தான். அதற்குமேல் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியையே காற்றில் பறக்கவிட்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்தி, வாக்கை நிறைவேற்ற வைக்கவே முடியவில்லை அவர்களால். அவர்கள் நம் பிரச்சனையை தீர்க்கப்போகிறார்கள் என்று யாம் எங்குமே சொல்லவில்லை பராபரமே! 2 hours ago, Justin said: போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது திடீரன்று கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய தேவை வந்துவிட்டது என்பதே உண்மை! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 20 hours ago, தமிழ் சிறி said: இந்தப் பேச்சுவார்த்தையை... இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்காதான் ஒழுங்கு செய்தது. அப்படியானால்..... நிச்சயமாக, இந்திய உளவுப் பிரிவின் "றோ" அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பார்கள் இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா? 21 hours ago, Kapithan said: ஆனால் சுமந்திரன் தலைமையில் USA செல்கின்றனர் என்பதற்காக திட்டித் தீர்க்கும் வன்மத்தை என்னவென்று சொல்வது ? அப்போ! இவ்வளவு நேரமும் சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்தான் விமர்சிக்கிறார்கள் என்று தாங்கள் வாதாடியதெல்லாம்.... உங்கள் பொழுது போக்குக்காகவா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 இங்க ஒருத்தரும் குத்தி முறியாதீங்கோ. கோத்தாவின் அரசை பலவீனப்படுத்தவே தமிழர் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள். அலுவல் முடிந்ததும் அடுத்த அரசு வந்ததும் தமிழர் அம்போ தான். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் இதையும் சொல்கிறார்கள் மிகவிரைவில் அம்பிகா அன்ரியும் இந்தப் Proxy குழுவில் இணைவார், எல்லோரும் வருடா வருடம் நாடுநாடாக சுற்றி தீர்வு ,தீர்வாக வாங்கி குமித்து தமிழ் மக்களை திக்கு முக்காட வைப்பார்கள், தமிழ் மக்களோ எந்தத்தீர்வை தெரிவு செய்வது என்று தெரியாமல் அவிஞ்சு போய் நிப்பினம். சுமந்திரன் எதிர்ப்பாளனாகிய நான் இப்போது சொல்கிறேன் தமிழ் மக்களுக்கான சாத்தியமான தீர்வு கிழக்கு, வடமாகாண பக்கம் நடக்கும் கட்டுப்பாடற்ற சிங்கள குடியேற்றங்களுடன்வாழப்பழகிக்கொள்ளுங்கள், மிகவிரைவில் உங்கள் ஊர்களை சிங்களப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநித்தித்துவம் செய்யும்போது அவர்கள் தங்கள் சிங்கள இனத்திற்காக கதைத்து அபிவிருத்திகளை செய்வார்கள் அப்போது நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசிவது போல நீங்களும் சில நன்மைகளை அடையலாம், proxy க்களை நம்பினீர்கள் என்றால் கோவணமும் இல்லாமல் போய் கூழுக்கும் வழியில்லாமல் இறுதியில் மேலே சொல்லியிருக்கும் நிலையை அடைவீர்கள், proxy க்களை தூக்கியெறிந்தீர்கள் என்றால் மேலே சொன்னது நடக்கும் வரை கௌரவமாக மூன்று வேளையும் வயிறாவது நிரம்பும். நீங்கள் இந்தியாவின் Pawn ஆக இருக்கும் வரை இதுவே உங்களுக்கு எழுதப்பட்ட விதி 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 1 hour ago, satan said: இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா? அப்போ! இவ்வளவு நேரமும் சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்தான் விமர்சிக்கிறார்கள் என்று தாங்கள் வாதாடியதெல்லாம்.... உங்கள் பொழுது போக்குக்காகவா? சுமந்திரனின் இடத்தில் சம்பந்தன் அல்லது வேறு யாரேனும் இருந்திருந்தால் இப்படிக் குத்தி முறிவீர்களா....😂 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 இதென்னடா வம்பாய்ப்போய்ச்சுது! நீங்கள் இங்கு களத்தில் பகிரங்கமாக பகிர்ந்ததை சொன்னால் ஏன் குதிக்கிறீர்கள்? Link to comment Share on other sites More sharing options...
zuma Posted November 19, 2021 Share Posted November 19, 2021 கோமணமே இல்லாதநிலையிலே Proxy, Pawn என்று சொல்லி பட்டு குஞ்சத்துக்கு ஆசைப்பட கூடாது. Btw, அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்குலகின் proxy என்று தான் சொன்னார்கள். Link to comment Share on other sites More sharing options...
narathar Posted November 19, 2021 Share Posted November 19, 2021 சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை. 2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர். 3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. 4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது. சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 46 minutes ago, narathar said: சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை. 2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர். 3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. 4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது. சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது. நன்றி நாரதர். சுமந்திரனின்... சுத்து மாத்துகள் பலவிதம். இது... புது ரகம். இவ்வளவு நாளும்... உள்ளூரில் உழுத, சுமந்து... சர்வதேச அளவில்... சுத்து மாத்து செய்ய, வெளிக்கிட்டார். அடுத்து.. கனடா, இங்கிலாந்து... எல்லாம், பேச்சு வார்த்தைக்கு.. அழைத்து இருக்கிறார்களாம். அங்கு... என்ன, "ஜில்மால்" விளையாட்டு நடக்கப் போகுதோ... சுமந்திரன், இப்படியான... நாறல் அரசியல் செய்து, மக்களிடம், திட்டு.. வாங்குவதிலும் பார்க்க, தனது.. வக்கீல் தொழிலை செய்வது, தான் நல்லது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 17 hours ago, satan said: இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா? சாத்தான்... சிலர் இங்கு, சும்மா.. "புலுடா" விடுவார்கள், நம்பாதீர்கள். இந்திய உளவுப் படையான... "றோ" வின், பீ (B)ரீமே... சம் / சும், கும்பல் தான். 🤣 இவர்களின்.. இந்த விளையாட்டு... வெற்றியளிக்காது. தமிழ் மக்கள், விழிப்படைந்து விட்டார்கள். இப்படியான செயல்களால்... அவர்களே, உலகம் முழுக்க.. நாறிக் கொண்டு இருக்கின்றார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Justin Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 (edited) 4 hours ago, narathar said: சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை. 2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர். 3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. 4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது. சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது. நாரதர், தகவல்களுக்கு நன்றி - ஆனால் கொஞ்சம் அவசரம் தெரிகிறதே உங்கள் கருத்துகளில்? அழையா விருந்தாளிப் பயணமென்றாலும் GCJ பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள் - வரும் திங்கட்கிழமை வரை பொறுத்திருந்திருந்தால் மேலதிகமாக இரண்டாம் நிலை அதிகாரிகளைச் சந்திக்கிறார்களா என்பதும் தெரிந்து விடுமல்லவா? ஏன் அவசரமான பிரச்சார முயற்சி? இந்த சந்தர்ப்பத்திலும் GTF, USPAC இடையேயான அடிபாடும்👇 சுமந்திரன் எதிர்ப்பும் மட்டும் தான் "கிளியின் கழுத்தாக" இருக்கிறது போலிருக்கிறதே?😎 Tweet See new Tweets Conversation State Department GCJ @StateDept_GCJ Nov 17@StateGCJ thanks@TNAmediaoffice&@GTFonlinefor productive discussion on political representation & reconciliation as part of a wholistic transitional justice agenda. Listening to perspectives & concerns of minority groups in Sri Lanka is essential to promoting reconciliation. Tamil Americans United PAC @Tamils_Action Replying to @StateDept_GCJ@StateDRLand 2 others#TamilAmerican Organizations in the US signed common principles that express the true aspiration of Tamils in our homeland and around the world. We are disappointed to see that @StateDept_GCJ decided to engage an organization that is a foreign entity and has lost credibility #GTF Edited November 19, 2021 by Justin கீழ் இணைப்பு சேர்க்கப் பட்டது Link to comment Share on other sites More sharing options...
tulpen Posted November 19, 2021 Share Posted November 19, 2021 சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டத்தன் படு தோல்விக்கு பிறகு அரசியலுக்கு வந்த ஒரு சாதாரண அரசியல்வாதி. அவரால், மற்றய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்வுக்கு முயற்சி செய்ய முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. போராட்டதை முழுவதுமாக தன்னப்படுத்தி மற்றயவர்களை முழுமையாக தடை செய்தவர்களுக்கு இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கோ அல்லது தற்போதுள்ள மற்றய அரசியல்வாதிகளுக்கோ தீர்வு விடயத்தில் இல்லை. ஆயுதப் போரட்ட காலத்தில் நடந்த அரசியல் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தவர்களுக்கும் இன்றும் அதை மறைப்பவர்களுக்கும் இனியும் அந்த அரசியலே தொடரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் தற்போதைய அரசியல்வாதிகளை திட்டும் தார்மீக உரிமை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை கடந்த கால தவறுகளாலேயே உருவானது. ஈழ அரசியலில் கடந்த 70 வருடங்களாக நடந்த தவறுகளை அனைவரும் சுயவிமர்சனம் செய்து, எமது அரசியல் தந்திரோபாயங்களை முழுமையாக மாற்றி, எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் எமது உரிமைகளை குறைந்தது எதிர் காலத்திலாவது பெற்றுக்கொள்ள முடியும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 55 minutes ago, tulpen said: சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டத்தன் படு தோல்விக்கு பிறகு அரசியலுக்கு வந்த ஒரு சாதாரண அரசியல்வாதி. அவரால், மற்றய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்வுக்கு முயற்சி செய்ய முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. போராட்டதை முழுவதுமாக தன்னப்படுத்தி மற்றயவர்களை முழுமையாக தடை செய்தவர்களுக்கு இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கோ அல்லது தற்போதுள்ள மற்றய அரசியல்வாதிகளுக்கோ தீர்வு விடயத்தில் இல்லை. ஆயுதப் போரட்ட காலத்தில் நடந்த அரசியல் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தவர்களுக்கும் இன்றும் அதை மறைப்பவர்களுக்கும் இனியும் அந்த அரசியலே தொடரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் தற்போதைய அரசியல்வாதிகளை திட்டும் தார்மீக உரிமை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை கடந்த கால தவறுகளாலேயே உருவானது. ஈழ அரசியலில் கடந்த 70 வருடங்களாக நடந்த தவறுகளை அனைவரும் சுயவிமர்சனம் செய்து, எமது அரசியல் தந்திரோபாயங்களை முழுமையாக மாற்றி, எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் எமது உரிமைகளை குறைந்தது எதிர் காலத்திலாவது பெற்றுக்கொள்ள முடியும். ஆ...... திரும்ப, முதல்ல இருந்தா... ? சுமந்திரனை... தமிழரசு கட்சிக்குள், வலிந்து.. இழுத்தது சம்பந்தன். அதற்கு... பக்க வாத்தியம், வாசித்தது.... மாவை சேனாதி ராசா. இதனைப் பற்றிய.... விரிவான பதிவுகள், யாழ். களத்தில் உள்ளது. தேடி வாசிக்கவும். கோத்தாவுக்கு... வெள்ளை அடித்த கூட்டம் தான்... 😂 சுமந்திரனுக்கும்... வெள்ளை அடிக்க நினைக்குது... 🤣 அப்பவே... இவங்கள், யார்.. என்று, தெரிந்து விட்டது. 😎 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 சம்பந்தனுக்கு... சொந்த புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை. இந்தியாவின், ஆலோசனையை கேட்டு... சும்மா.. இருந்து, வயிறு... வளர்த்தது தான், கண்ட மிச்சம். Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts