Jump to content

சீன தூதருடனான சந்திப்பிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு: தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது.

கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.

எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.

இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்பான சில எதிர்மறையான முடிவுகளை இலங்கை அரசு அண்மையில் எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்துள்ள சீனா, ஒரு அரசியல் நகர்வாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சு நடத்த விரும்பவதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தது.

முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பிற்கு செல்வதை இந்தியா இரசிக்காது என்பதால், இரா.சம்பந்தன் மாத்திரம் சந்தித்து பேசுவதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனினும், இந்த சந்திப்பை இந்தியா விரும்பவில்லை.

தமது அதிருப்தியை, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்திய தூதரை சந்திப்பதற்கு முன்பாக சீன தூதரை சந்திக்க கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், இந்தியாவின் அதிருப்தியையடுத்து, சீன தூதரை சந்திப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பமான நிலைமை தோன்றியுள்ளது.

https://pagetamil.com/2021/11/11/சீன-தூதருடனான-சந்திப்பிற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.

 யாராயிருக்கும்? ஹீ...... ஹீ....... தமிழர் மீதான அக்கறையல்ல, அவர்களை பகடைக்காய்களாக பந்தாடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சு நடத்த விரும்பவதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தது.

எதோ சுத்து மாத்து  அரசியல் நடக்கபோகுது பணத்தை கண்டால் பல்லிளிக்கும் எமது முக்கிய அரசியல்வாதி தமிழரை விக்க இப்போ ரெடியாகி இருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் அதன் RAW வும் அவருக்கு எதிராக களமிறங்கி வேலை செய்யும் போது இவருக்கு ஏன் இந்த கோள் சொல்லுற வேலை?

2 minutes ago, பெருமாள் said:

எதோ சுத்து மாத்து  அரசியல் நடக்கபோகுது பணத்தை கண்டால் பல்லிளிக்கும் எமது முக்கிய அரசியல்வாதி தமிழரை விக்க இப்போ ரெடியாகி இருப்பார் .

ஆட்டுப்பட்டிக்குள் ஓநாயையும் அடைத்து விட்டு ஐயோ ஆடுகளை காணவில்லை என்று ஒப்பாரி வைப்பதால் பயனென்ன? இவரை நாம் ஒதுக்கினாலும் சிங்களத்தின், சம்பந்தரின் ஆசீரோடு இன்னும் பல சுமந்திரன்கள் உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 06:58, satan said:

இந்தியாவும் அதன் RAW வும் அவருக்கு எதிராக களமிறங்கி வேலை செய்யும் போது இவருக்கு ஏன் இந்த கோள் சொல்லுற வேலை?

ஆட்டுப்பட்டிக்குள் ஓநாயையும் அடைத்து விட்டு ஐயோ ஆடுகளை காணவில்லை என்று ஒப்பாரி வைப்பதால் பயனென்ன? இவரை நாம் ஒதுக்கினாலும் சிங்களத்தின், சம்பந்தரின் ஆசீரோடு இன்னும் பல சுமந்திரன்கள் உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 கருணா பிள்ளையான் டக்ளஸ் தேவானந்தா அவர்களை விட சுமந்திரன் பரவாயில்லை தானே சார்😉😉😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன நாயக நாட்டில் யார் யாரையும் சந்திக்க உரிமை உள்ளது.

அவயளிடம் கையூட்டு, கொடுப்பனவு பெறாமல் இருந்தால் பயம் ஏன்.? 

IMG-20211115-122300.jpg

முக்காடு போட்டாவது என்னதான் கதைக்கினம் கேட்டு வாங்கப்பா.👍

டிஸ்கி

மீம் மட்டும் அல்ல அதோடு கருத்தும் எழுதி உள்ளேன்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீனாவை அணுகும் ஒரு நகர்வை தமிழர் தரப்பு செய்ய வேண்டும் என யாழில் பல உறவுகள் எழுதி வந்துள்ளனர்.

அப்படி ஒரு வாய்ப்பை இதுவரை சீனா தரவில்லை என நான் பதில் எழுதி வந்துள்ளேன்.

இப்போ தந்துள்ளதாக தெரிகிறது (செய்தி உண்மையானால்).

இந்தியாவை பகைக்காமல் அதே வேளை சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ளும் வேலையை செய்யும் திறன் கூட்டமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இந்திய/மேற்கு சார்பு நிலையை கூட்டமைப்பும், சீனா சார்பு நிலையை முண்ணனியும் எடுக்கலாம். அப்படி எடுத்தால், இந்தியா ஒரு அளவுக்கு மேல் கூட்டமைப்பை மிரட்ட முடியாது போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இந்தியா கூட்டமைப்பை மிரட்டாது மாறாக 13ஐ ஆதரிக்கிறோம் வடகிழக்கை இணைகிறோம் என மீண்டும் ஒரு பழைய சோத்து கோப்பையை சுமந்திரரிடமும் சம்பந்தரிடம் போட்டுக் கொடுக்கும் போது கூட்டமைப்பு இந்தியா பக்கம் செக்கை இழுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியா கூட்டமைப்பை மிரட்டாது மாறாக 13ஐ ஆதரிக்கிறோம் வடகிழக்கை இணைகிறோம் என மீண்டும் ஒரு பழைய சோத்து கோப்பையை சுமந்திரரிடமும் சம்பந்தரிடம் போட்டுக் கொடுக்கும் போது கூட்டமைப்பு இந்தியா பக்கம் செக்கை இழுக்கும்.

அப்படியே நடந்தாலும்.

அந்த நேரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி அரசை தருவது பற்றி சீனாவுடன் பேசி கொண்டிருந்தால் - கூட்டமைபுக்கு கொடுக்க வேண்டியதை கூட்ட வேண்டிய தேவை இந்தியாவுக்கு வரும் இல்லையா?

இல்லாவிடில் மக்கள் இந்தியாவையும், கூட்டமைப்பையும் உதறி விட்டு முண்ணனி/சீனா பக்கம் போய் விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

ஆனால் சம்மந்தனும், சுமந்திரனும், சாணக்கியனும் கோமாளித்தனமாயாவது ஏதோ செய்கிறார்கள், எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

கூட்டமைப்பை கேள்வி கேட்கும் நாமும் முண்ணனியின் செயலற்றதன்மை பற்றி ஒரு கேள்வியும் கேட்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கும் எதிர்கடை இருந்தால் தான் பயனர்களுக்கு நல்லது.

வல்லரசுகள் ஆட்டத்தில் சிக்கி, சின்னாபின்னமாகாமல்..... லாவகமா வெட்டி ஆடும் திறமை, அனுபவத்தில் வந்திருக்க வேண்டும்... என்று எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி உண்மையோ தெரியவில்லை?

ஆமாம்  எனக்கும் அந்த சந்தேகம் உண்டு இருந்தாலும் இலவசமாக பல விடயங்களை கற்றுக்கொள்கிறோம்  மேலும் எவருடன்  கதைத்தாலும்....

ஆயுதப்போராட்ட வழியோ அல்லது அகிம்சைப்போர் வழியோ   எவ்வளவு ஆற்றலுடன். போராடினாலும்  இலங்கையில் தமிழினம் இருக்கும்போது தீர்வு கிடைக்கப்போவதில்லை   இலங்கையில் தமிழருக்கு தீர்வு வேண்டுமாயின் ஒரேயொருவழி. பெருன்பான்மை இனமாக மாறுவதே  அப்படி மாறினால் போராடவேண்டிய அவசியமில்லை இந்தியா போன்ற. நாடுகளின். உதவியும்  தேவையில்லை ...மாறுவார்களா....?.மாறமுடியுமா.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால், சீன தூதுவரை சந்திப்பது நல்லது. எமக்குரிய புதிய பாதை திறக்க வாய்ப்புள்ளது.கடைசியாக எப்போது இந்திய கூட்டமைப்பை டெல்லிக்கு கூப்பிட்டு கதைத்தவை என்று யாருக்கும் ஞாபகம் இருக்கிறதா? வெளியாரின் அரசியல் பொருளாதார  பூகோள நலனில்தான் எமக்கான தீர்வு தங்கி உள்ளது, இது மறுக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்படியே நடந்தாலும்.

அந்த நேரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி அரசை தருவது பற்றி சீனாவுடன் பேசி கொண்டிருந்தால் - கூட்டமைபுக்கு கொடுக்க வேண்டியதை கூட்ட வேண்டிய தேவை இந்தியாவுக்கு வரும் இல்லையா?

இல்லாவிடில் மக்கள் இந்தியாவையும், கூட்டமைப்பையும் உதறி விட்டு முண்ணனி/சீனா பக்கம் போய் விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

ஆனால் சம்மந்தனும், சுமந்திரனும், சாணக்கியனும் கோமாளித்தனமாயாவது ஏதோ செய்கிறார்கள், எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

கூட்டமைப்பை கேள்வி கேட்கும் நாமும் முண்ணனியின் செயலற்றதன்மை பற்றி ஒரு கேள்வியும் கேட்பதில்லை.

எமக்குள்  அரசியல் கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து இன ரீதியான ஒற்றுமை அவசியம்.

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமக்குள்  அரசியல் கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து இன ரீதியான ஒற்றுமை அவசியம்.

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட, கூட்டமைப்பு, இந்தியா, மேற்கு எண்டு பூந்து வெளாட வேணும்....

Link to comment
Share on other sites

இச்செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. சீனா இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை.
கூட்டமைப்பை ஒரு காலத்தில் தட்டிக்கழித்த இந்தியா இப்போ சீனாவிடன் பேச வேண்டாம் என்பது……
ஆனால் சீனாவுடன் பேசினால் இந்தியாவின் கொட்டம் சிறிதளவாவது அடங்கும்.
 பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???

இதை சொன்னால் பலருக்கு கோபம் வந்து குதிக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா உண்மையில் இப்படி ஒரு அழைப்பை விடுத்திருப்பின் சீனாவோடு பேசுவதற்கு தயங்கக் கூடாது. அதை தமிழர்கள் பூகோள கேந்திர சக்திகளை தம் வசப்படுத்த பாவிக்க முடியும். 

வெறுமனவே ஹிந்தியாவை நம்பி விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய சம் கும்பல்.. அதன் பிராச்சித்தமாக இதனை செய்யலாம். ஏனெனில்.. புலிகளை அழித்தால் 13+ வாங்கித் தருவோம் என்ற ஹிந்தியா.. உப்புச் சப்பற்ற ஒரு மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த சொறீலங்காவுக்கு அழுத்தம்  கொடுக்கக் கூட வக்கற்ற நிலையில் இருக்கும் நிலையில்..

தமிழர்கள் தொடர்ந்தும்.. ஹிந்தியாவின் வாயை பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

தமிழர்கள் சீனாவை நெருங்குவது.. ஹிந்தியா.. மேற்குலகு தமிழர்களுக்கு ஏதாவது செய்தால் தான் அவர்களை தம் பக்கம் தக்க வைக்க முடியும் என்று சிந்திக்க செய்ய வேண்டும். மாறாக தமிழர்களை தட்டிக்கழிச்சு செல்லும் தற்போதைய இவர்களின் அணுகுமுறைக்கு முடிவு கட்ட சீன - தமிழர்கள் உறவை பாவிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 12:59, Nathamuni said:

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட, கூட்டமைப்பு, இந்தியா, மேற்கு எண்டு பூந்து வெளாட வேணும்....

என்னதான் இவர்கள் குத்தி முறிஞ்சாலும் உலக அரசியல் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத்தெரிகின்றது.

Link to comment
Share on other sites

On 15/11/2021 at 03:59, Nathamuni said:

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட,

On 15/11/2021 at 00:50, goshan_che said:

, எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

On 15/11/2021 at 02:47, குமாரசாமி said:

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

நீங்க பிரம்பு தந்தால் நான் சட்டாம்பி வேலை செய்யத்தயார் 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 19:37, Kandiah57 said:

  இலங்கையில் தமிழருக்கு தீர்வு வேண்டுமாயின் ஒரேயொருவழி. பெருன்பான்மை இனமாக மாறுவதே  அப்படி மாறினால் போராடவேண்டிய அவசியமில்லை இந்தியா போன்ற. நாடுகளின். உதவியும்  தேவையில்லை ...மாறுவார்களா....?.மாறமுடியுமா.....?

இரு கோடுகள் கான்செப்ட்டைச் சொல்கிறீர்களா  ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதையெல்லாம் வாசிக்கும்போது சிரித்து சிரித்து  புரையேறி மேலேயே போய்விடுவோம் போல கிடக்கு. O/L பாஸ் பண்ணவே வக்கில்லாதவனை Harvard fullbright scholar ஆக்க முக்குவது போல் முக்குறினம் நமது உறவுகள். முதலில் பானையில் இருக்கவேண்டும் அகப்பையில் வருவதற்கு, வாத்தியார் பய மக்கு என்பதை போல இன்டர்நஷனல் பாலிடிக்ஸ் அடிநாதம் வரை துருவிப்போய் தூர் வாரி அலசோ அலசு என்று அலசுவதாலோ என்னவோ சொந்த அரசியல்வாதிகள் பூரா மக்குபிளாஸ்திரிகளும் proxy போக்கிரிகளுமாக வாய்த்திருக்கிறது ஈழ தமிழர்களுக்கு    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சாமானியன் said:

இரு கோடுகள் கான்செப்ட்டைச் சொல்கிறீர்களா  ...??

தமிழ் மக்களை விட சிங்கள மக்கள் எண்ணிக்கையில் கூட இதனால் தான் அவர்கள் ஆள்கிறார்கள் நாங்களும் எண்ணிக்கையில் கூடும் போது ஆட்சி புரியும் சந்தர்ப்பம் எமக்கும் கிடைக்கலாம் இதுவரை நடந்த பேச்சுவார்த்தை....போராட்டங்கள்....இருந்து நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்  இலங்கையில் தமிழர்களுக்குத் பூரண சுயாட்சி கிடைப்பதை   இந்தியா விரும்பாது. நாங்கள் பாராளுமன்றத்தில் எங்கள் பலத்தை அதிகரித்து  செல்லும் போது   சிங்களவரே   வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தரும் வாய்ப்பு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

தமிழ் மக்களை விட சிங்கள மக்கள் எண்ணிக்கையில் கூட இதனால் தான் அவர்கள் ஆள்கிறார்கள் நாங்களும் எண்ணிக்கையில் கூடும் போது ஆட்சி புரியும் சந்தர்ப்பம் எமக்கும் கிடைக்கலாம்  நாங்கள் பாராளுமன்றத்தில் எங்கள் பலத்தை அதிகரித்து  செல்லும் போது   சிங்களவரே   வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தரும் வாய்ப்பு உண்டு 

நாங்கள் பத்து மடங்கு பாய்ந்தால், ஏற்கெனவே நூறு மடங்கில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? தவிரவும் இருக்கிற எமது விகிதாசாரத்தை மாற்றியமைக்க நாளும் பொழுதும் சட்டங்களும், திட்டங்களும் போட்டு இ எமது தொகையையே விழுங்கிக்கொண்டு இருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 11:20, satan said:

நாங்கள் பத்து மடங்கு பாய்ந்தால், ஏற்கெனவே நூறு மடங்கில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? தவிரவும் இருக்கிற எமது விகிதாசாரத்தை மாற்றியமைக்க நாளும் பொழுதும் சட்டங்களும், திட்டங்களும் போட்டு இ எமது தொகையையே விழுங்கிக்கொண்டு இருக்கிறான்.

நீங்கள் சொல்லும் தீர்வு என்ன....?அதை தமிழ் மக்கள் எப்படி அடைய முடியும்   ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.