Jump to content

உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 "

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

யுத்தம் என்றல் விளைவுகள் இருக்கும் தான் அதைப் பெரிசுபடுத்த தேவையில்லை என்று முன்பு ஒரு முறை கோத்தபாய சொன்னதை இப்போது குமாரசாமி. ஆமோதித்திருப்பதல் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்போல உள்ளது. 😂

யதார்த்தம் என்பதை விடுத்து உங்களையும்  உங்கள் கருத்துக்களையும் நியாயப்படுத்த முனைபவர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். அதே போல் உங்களை நியாயப்படுத்த கோத்தபாயவை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றீர்கள்.

உலகில் அழிவில்லாத போராட்டங்கள் எங்கேயாவது  நடந்திருந்தால் அறியத்தாருங்கள். மேற்கொண்டு உரையாடலாம்.

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

உலகில் அழிவில்லாத போராட்டங்கள் எங்கேயாவது  நடந்திருந்தால் அறியத்தாருங்கள். மேற்கொண்டு உரையாடலாம்

உலகின் முன்மாதிரியான விடுதலைப் போராட்டங்கள் அனைத்துமே இழப்புக்களை இயன்றளவு குறைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின் அடிப்படையில் சர்வதேசத்துடன் சத்தியமான அளவுக்கு அனுசரித்தும் நட்புசக்திகளை வளர்ததும் பல நெகிழ்சசித்தனையின் பின்னரே படிப்படியாக தமது இலக்கை அடைந்திருக்கின்றன. 

எவர் சொல்லையும் கேட்காமல் உலகில் எல்லா நாடுகளையும் பகைத்து  பயங்கரவாத போராட்டம் என்ற எதிரியின் பரப்புரைக்கு வலுச்சேர்ககும் செயல்களை தாமே செய்து  மக்களின் இழப்புகளை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்ற ஒரு போராட்டத்தை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 13:30, tulpen said:

உலகின் முன்மாதிரியான விடுதலைப் போராட்டங்கள் அனைத்துமே இழப்புக்களை இயன்றளவு குறைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின் அடிப்படையில் சர்வதேசத்துடன் சத்தியமான அளவுக்கு அனுசரித்தும் நட்புசக்திகளை வளர்ததும் பல நெகிழ்சசித்தனையின் பின்னரே படிப்படியாக தமது இலக்கை அடைந்திருக்கின்றன. 

எவர் சொல்லையும் கேட்காமல் உலகில் எல்லா நாடுகளையும் பகைத்து  பயங்கரவாத போராட்டம் என்ற எதிரியின் பரப்புரைக்கு வலுச்சேர்ககும் செயல்களை தாமே செய்து  மக்களின் இழப்புகளை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்ற ஒரு போராட்டத்தை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா?.

விடுதலைப்புலிகள் எந்த நாட்டை பகைத்தார்கள்?
அதே போல் சம்பந்தனும் சுமந்திரனும் எந்த நாட்டை பகைத்தார்கள்?

புலிகளை பகைத்த நாடுகள் ஏன் இன்று வரைக்கும் ஈழத்தமிழர்  பிரச்சனையை தீர்க்கவில்லை?
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் இருக்கும் தடைக்கல் என்ன?

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் எந்த நாட்டை பகைத்தார்கள்?
அதே போல் சம்பந்தனும் சுமந்திரனும் எந்த நாட்டை பகைத்தார்கள்?

புலிகளை பகைத்த நாடுகள் ஏன் இன்று வரைக்கும் ஈழத்தமிழர்  பிரச்சனையை தீர்க்கவில்லை?
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழர் பிரச்சனையில் இருக்கும் தடைக்கல் என்ன?

உங்களுக்கான பதிலை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவு பொறுப்பாளரின் தனது  சுயவிமர்சனத்தில் கூறியுள்ளார. அதனை அப்படியே தருகிறேன்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தபோது, அந்த விடயத்தைப் புலிகளின் தலைமை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இயக்கம் தடைசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டபோது என்னைப் போலப் பல போராளிகளுக்கும் கவலையும் குழப்பமும் ஏற்பட்டது. அரசியல்துறைப் பொறுப்பாளரால் எமக்கு நடத்தப் பட்ட கூட்டத்தில் அவர் சிரித்தபடி கூறிய விடயம் எமக்கு மலைப்பை ஏற்படுத்தியது. "உங்களைப் போலத்தான் நாங்களும் கொஞ்சப் பேர் சரியான மனக் குழப்பத்தோட அண்ணையைச் சந்திக்கப் போனனாங்கள், அண்ணை சிம்பிளா சிரிச்சுக்கொண்டு சொன்னார் 'இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாங்கள் வளந்திருக்கிறம் எண்டு நினைச்சு சந்தோசப் படுங்கோ' எண்டு, அப்பிடிப்பட்ட தலைவர் எங்களுக்கு இருக்கேக்க நாங்கள் ஏன் குழம்ப வேணும்" எனக் கூறினார் தமிழ்ச்செல்வன். கதிர்காமர் மீதான பழிதீர்ப்புத் தாக்குதல் எமது போராட்டத்தில் ஏற்படுத்தியிருந்த அரசியல் பின்னடைவை அலட்சியமாகக் கடந்துபோய்விடலாம் என விடுதலைப் புலிகளின் தலைமை கருதியது. உலகத்தையே பகைத்துக்கொண்டு ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றியடைதல் என்பது எப்படிச் சாத்தியமாகும் என்ற அளவிற்கேனும் சிந்திக்கத் தோன்றாதவாறு புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீதான நம்பிக்கை அனைவரது கண்களையும் கட்டிப்போட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இதே அமெரிக்கா பயங்கரவாதிகளாக கருதப்பட்ட தலபானிடம் இரகசியமாகவும் பரகசியமாகவும் பேச்சுவார்த்தை நடாத்தியது உலகின் இரட்டை வேடத்தை உங்களுக்கு காட்டவில்லையா?
புலிகள் யாரிடமும் தங்கி இருக்காமல் தமது மக்களையே நம்பி இருந்ததால் இப்படியான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. அவர்களின் பலத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு சிங்களம் வந்தது.
புலிகளை பயங்கரவாதிகள் ஆக்குவதில் சந்திரிக்கா கதிர்காமரை பயன்படுத்திய நயவஞ்சகம் உங்களால் ஏன் புரியப்படவில்லை?
நேர்மையாக போராட்டம் நடாத்தி தமது மக்களின் உரிமைக்காக போராடிய புலிகள்  மேற்கு, இந்தியா  போன்ற நாடுகளுக்கு போடுதடியாக விரும்பவில்லை என்பது சாதாரண பொதுமக்களே புரியக்கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை – கவிஞர் தாமரை

November 26, 2021
 
'மேதகு' படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை

தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைக் காட்சிப்படுத்தும் ‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை கொள்கிறேன் என கவிஞர் தாமரைதெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் போராட்டமே படத்தின் கருப்பொருள். எனினும் மேதகு என்று தலைவரின் பெயரில் தவணைகளாக வெளிவருவதன் காரணம் என்ன ??
 
தன் நாட்டின் விடுதலைப் போராட்டம் வேறு, தன் வாழ்க்கை வேறு என்று வாழ்ந்தவனல்லன் அவன். இரண்டுமே ஒன்றுதான் என வாழ்ந்தவன். இரண்டில் எந்த ஒன்றைச் சொல்லப் புகுந்தாலும் அது மற்றொன்றாகி நிற்கும் என்பதே உள்ளடக்கம் !

நான் கண்ட ஈடுயிணையற்ற பெருந்தலைவன், இவன் வாழ்காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்னும் பெருமை கொண்டேன். உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்களின் உள்ளத்தில் ஓயாது எரியும் விடுதலைப் பெருந்தீயை ஒரு சுடராகப் பற்ற வைத்துத் தொடங்கி, தானே அந்த நெருப்பாகி, பின்னம் தன்னையே அந்த நெருப்பின் அவிப்பாகமாக அர்ப்பணித்துக் கொண்டவன். அதனால்தான் அந்தத் தீ இன்னும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் குறைந்ததல்ல ஈழத்தமிழரின் இந்தப் போராட்டம்!. அண்ணன்பின் அணிவகுத்து நின்ற ஆயிரமாயிரம் போராளிகளின் வீரக்கதை, சதைகள் அல்ல விதைகள்  என உலகுக்கு எடுத்துக்காட்டும் தீர வரலாறு…

இளைய தலைமுறையினருக்கு தங்கள் வரலாறு சொல்லப்பட வேண்டும் எனும் நோக்கில் முறையாகப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, தொப்புள்கொடித் தமிழர்க்குமானதுதான் !

வாழிய தமிழர் ! வாழ்க வெல்க தமிழினம் !”  என்றார்.

https://www.ilakku.org/immeasurable-releasing-second-part-of-film-methagu/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.