Jump to content

சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், "இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்தார். நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழைவரை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் கன மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஓரிடத்தில் மிக கன மழையும் 16 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. நவம்பர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மொத்தமாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், அந்த அளவுக்கான மழை இப்போதே பெய்து முடித்துவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை தற்போதுவரை 48 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 69 சதவீதம் அதிகம். கன்னியாகுமரியில் நவம்பர் 12 முதல் 15வரை சாதாரணமாக 3 செ.மீ. மழையே பதிவாகும். ஆனால், இப்போதுவரை 28 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 9 மடங்கு அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை - தமிழில் செய்திகள் (bbc.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட மேலும் ஒண்டா  ஏற்கனவே நடந்த அசம்பாவிதம்கள் ஊடகர்களுக்கு நல்ல கவனிப்பு போட்டு அமுக்கினவையள் இனி பார்ப்பம் என்ன நடக்குது என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

அட மேலும் ஒண்டா  ஏற்கனவே நடந்த அசம்பாவிதம்கள் ஊடகர்களுக்கு நல்ல கவனிப்பு போட்டு அமுக்கினவையள் இனி பார்ப்பம் என்ன நடக்குது என்று .

துப்பறியும் சங்கர்லால் மீண்டும் ரெயின் கோர்ட் போட்டு ரவுண்ஸ் வருவாரோ🤪.

அண்ணனும், தம்பிகளும் #எரியுதடி மாலா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சமூக அறிவியல் என்ற பெயரில் வரலாறு + புவியியல் + அடிப்படை கிந்திய சட்டம்  மூன்றையும் இணைத்து 6ம் வகுப்பு முதல் 10 வரை வைத்திருக்கினம் .. 

சமூக வாழ்வியல்..? 

KUPPAI-2.jpg

குப்பையை குப்பை தொட்டியில் போடுதல் , அதை காலையில் 8 மணிக்கு வரும் நகர , மாநகர குப்பை சேகரிப்பு வண்டியில் போடுதல் (?) யாராவது சொல்லி தருவார்களா.? ரெல் மீ.

அப்புறம் எங்களுக்கு அரசு நிவாரணம் வரல.. கொடுத்த காசிலும் 50% கொமிசின் எடுத்துதான் ஏரியா கவுன்சிலர் கொடுத்தார்.(?)

நாட்டில் பாதி அடைப்புகள் பிளாஸ்டிக் கழிவுகளால் வருகுது.😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.