Jump to content

கலியாணத்தன்று மழை - Dr. T. கோபிசங்கர்

Recommended Posts

கலியாணத்தன்று மழை  

“இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். 

வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும் விளக்கீட்டுக்கு ஒரு பந்தம் வைக்கிறது வழக்கம் . ஊர் வழியவும் தனிக்க கொட்டிலுக்க தான் அம்மி , உரல் ஆட்டுக்கல் எல்லாம் இருக்கும். ஒதுக்கபட்ட வாழ்க்கை சில உயர்திணைக்கு மட்டுமில்லை அஃறினைக்கும் வைச்சது ஏனெண்டு தெரியாது. 

“அம்மி பொழியிறது… கத்தி சாணை “ எண்டு ரோட்டால கத்திக்கொண்டு போனவனைப் பிடிச்சு போன மாசம் தான் அம்மி பொழிஞ்சது. நடுவில பூ design போட்டு பொழிஞ்சு தந்தவன். பொழிஞ்ச அம்மியை ரெண்டு தரம் பழைய தேங்காய்ப்பூ வைச்சு அரைச்சு பொழிஞ்ச தூசு மண் எல்லாம் தேச்சு கழுவோணும் , இருந்தாலும் ரெண்டு நாளைக்கு மண் கடிபடும். 

அம்மியோட குழவியையும் சேத்துத் தான் பொழியிறது. சில குழவிகள் ரெண்டு பக்கமும் முனை மழுங்கி இருக்கும். மற்றதுகள் ஒரு பக்கம் முனை மழுங்கி மற்றப்பக்கம் வட்டமாயும் இருக்கும். குழவியை பிடிச்சு அம்மியின்டை நீளத்துக்கு இழுத்து அரைக்கேக்க ,முதல்ல முழங்கையை நீட்டி குழவியைத் தள்ளி பிறகு நாரியால முன்னுக்கு சரிய குழவியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகும் . 

திருப்பி இழுக்கேக்க இறுக்காமலும் அதேவேளை உருளாமலும் மெல்ல குழவியைப் பிடிச்சி தோள்மூட்டால இழுத்து நாரியை நிமித்த குழவி திருப்பி வர “சம்பல் அரைக்கயில என் மனசை அரைச்சவளே” எண்ட இளையராஜா பாட்டு ஓடும். குழவியை உருட்டி உருட்டி அரைக்கிறேல்லை ஆனாலும் ஒவ்வொரு இழுவைக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாத் திரும்பும் நல்லூர் சப்பறம் மாதிரி.  

வாங்குப்பலகையில குந்திக்கொண்டிருந்து நனையப் போட்ட எட்டு பெரிய செத்த மிளகாயை நடுவில வைச்சு அதோட சிரட்டையில இருக்கிற கல்லு உப்பை சேத்து குழவியை ரெண்டு பக்கமும் பிடிச்சு சத்தம் வாற மாதிர கடகட எண்டு தட்டி மிளகாயை சப்பையாக்கீட்டு மிளகாய் ஊறப்போட்டிருந்த தண்ணீல கையை நனைச்சிட்டு அந்த நுனி விரலால சொட்டிற தண்ணியை அதுக்க மேல விட்டிட்டு நாலு உரிச்ச வெங்காயத்தை வைச்சு நசிச்சுக்கொண்டு இழுத்து அரைக்கத் தொடங்கினன்.

நாலு தரம் கொஞ்சம் இழுத்து அரைக்க மிளகாய் அருவல் நொருவலா வந்திச்சுது. குழவியால நசிக்கேக்க பறந்த வெங்காயத்தை தேடி எடுத்து தண்ணீல அலசீட்டு திருப்பியும் நசிச்சு கருவப்பலையையும் சேத்து அரைச்சு எல்லாம் கலந்து வர அதை எதிர்ப்பக்கமாத் தள்ளிப்போட்டு ,தட்டில இருக்கிற தேங்காய்ப்பூவை தும்பில்லாம எடுத்து நடு அம்மீல வைச்சு மிளகாயோட சேத்து ரெண்டு இழுத்தரைக்க செம்மை வெண்மையை ஆட்கொண்டது.

தேங்காய் பூவை சேத்து அரைக்கேக்க அம்மிக்கும் நோகாம தேங்காய்ப் பூவுக்கும் நோகாம அரைக்க வேணும், இல்லாட்டி சம்பல் குழையலாத்தான் வரும். கடைசீல கொட்டை எடுத்த ரெண்டு பழப்புளியை சேத்து அரைச்சிட்டு குழவி அம்மி எல்லாம் வழிச்சு தட்டில போட்டுக் கொண்டு எழும்ப அண்ணா ரோஸ் பாணோட உள்ள வர, “ அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்” சந்தர்ப்பம் கூறி விளக்குக எண்டு படிச்சது தான் ஞாபகம் வந்திச்சிது. 

ரொலக்ஸ் பேக்கரீல போடுற அச்சுப் பாண் , ரோஸ் பாண் ( அதுக்கு நீங்க இங்கலீசில என்ன பேர் வைச்சாலும் நமக்கு ரோஸ் பாண் தான்) வெந்து வாற மணம் காலமை alarm அடிச்ச மாதிரி எழுப்பும் . சம்பலை விட்டா பாணுக்கு பழைய மீன் குளம்பு தான் பேரின்ப பெரு வாழ்வைத்தரும். 

“ சீலையை வித்தாவது சீலா வாங்கு எண்டு சொல்லிறவை “ எண்ட மீன் பெட்டிக்காரன்டை கதையைக் கேட்டு , வாங்கிக்கொண்டு வந்து மீன் bag ஐ வீட்டை குடுத்தன். அரிவாளில செதில் சீவி , துண்டறுத்து பிறகு கழுவி எடுத்துக் கொண்டந்து மண்சட்டீல வைக்கிற மீன்குழம்பு அடுத்த நாள் காலமை வரைக்கும் demand இல இருக்கும் . குழம்பின்டை ருசி அரைச்சுப்போடிற தேங்காய் கூட்டில தான் இருக்கு. 

அம்மம்மா ஒரு காலை மடக்கி மற்றதை நீட்டி சுளகில பிடைக்கிற மாதிரி இருந்து தான் அரைப்பா. மீன் குழம்புக்கு கூட்டரைக்குறதில அவ expert. தேங்காயை அரைக்கேக்க மிளகாயத்தூள் உப்புச்சேத்து குழவியை இறுக்கிப் பிடிச்சு தேங்காய்ப்பூவை அமத்தி அரைக்கப் பட்டுப்போல கூட்டு வரும் . 

தேங்காய் அரைச்சு பிறகு மிளகு ,சின்னச்சீரகம் ,உள்ளி எல்லாம் சேத்து அதையும் அரைச்சு எடுத்து வைச்சிட்டுத்தான் குழம்பு வைக்கத் தொடங்கிறது . கப்பிப்பாலில புளிவிட்டு வெங்காயம் ,மிளகாய் உப்புப் போட்டு மண்சட்டீல விட்டு கொதிக்கத் தொடங்க கச்சேரி தொடங்கும் . முதல் கொதியோட மீனையும் அரைச்ச கூட்டையும் போட்டு கடைசீல சீரக உருண்டையைப் போட்டு கொதிக்க விட மீனின் ஆத்மா சாந்தி அடைஞ்சு குழம்போட ஐக்கியமாகும் . 

அவசரத்துக்கு அம்மி உரலாயும் திரிகையாயும் மாறும். கை உரல் வர முதல் ஏலக்காயில இருந்து இஞ்சிவரை நசிச்சோ குத்தியோ போடிறதெண்டா அம்மீல தான் . குழவியை வைச்சு தட்டுப் பெட்டீல பழைய பேப்பரைப் போட்டிட்டு பயறு , உழுந்து கோது உடைக்கிறதும் சில வேளை அம்மீல வைச்சு மாவும் அரைக்கிறது . 

சாமத்திய வீட்டில மொம்பிளைக்கு , குழவியை வைச்சுக்கொண்டு நிக்க விடுறதாம் எண்டு ஆச்சி சொல்லிறவ. ஆலாத்தி முடியும் வரை அதைத் தாங்கிக்கொண்டு நிண்டா நாளைக்கு எதையும் தாங்குவாளாம் எண்டதுக்குத்தான் அப்பிடி எண்டும் சொல்லிறவ. அது பிறகு குடமாகி , பிறகு செம்பாகி இப்ப Make up காரர் குடுக்கிற bouquet ஆக மாறீட்டுது. 

சாமத்தியம் தாண்டி கலியாணத்திலேம் அம்மிக்கு இடம் இருக்கு மிதி படுறதுக்கு . மச்சாளின்டை கலியாண வீடண்டு விடாம மழை பெய்யேக்க , மாமி வருண பகவானுக்கு நேந்து தேங்காய் உடைச்சு வைச்சிட்டு ,” அப்பவும் உனக்குச் சொன்னான் அம்மீல வைச்ச தேங்காய்ப் பூவை எடுத்துச் சாப்பிடாதை எண்டு இப்ப பார் மழை விடமாட்டன் எண்டிது “ எண்டு மச்சாளைப் பேச , அண்டைக்கு நானும் சம்பல் அரைக்கேக் சாப்பட்டதை நெச்சு கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினன் நல்ல வேளை மனிசி அம்மிப்பக்கம் போகாத படியா மழை பெய்யேல்லை.

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

 • Like 8
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எல்லா வீட்டிலயும் நடந்திருக்கு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் (டாகடர் )இவ்வளவுக்கு   விளக்கமாக எழுதுவது ஆச்சரியமாக உள்ளது. சமையல் விடயத்தில் டிப்ளோமா எடுத்தவர் போல  அல்லது தாயுடன் அதிக நேரம் சமையலில் ஈடுபடடவர் போல இருக்கிறார். நல்ல அவதானி. இதை அவருக்கு சொல்லி விடவும். சமையலிலும் டாகடர் படடம் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

உடலுழைப்புக்கான சந்தர்ப்பங்களை நவீனங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம்.

Link to comment
Share on other sites

28 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

அது இங்கும் விக்கிது நிழலி .......இப்ப அதை வாங்கி பரிசளிப்பதும் ஒரு பேஷனாகிப் போச்சுது.....பொம்பிளைகளும் ரெண்டு நாளைக்கு வச்சு அரைப்பினம் பின்பு அது சாமான்கள் வைக்கிற தட்டுபோலத்தான் பயன்படும்........!   😂

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

நிழலியவர்களே, இணைப்புக்கு நன்றி. உண்மை சுவியவர்களே, எமது வாழ்வியலின் ஒவ்வொரு விடயங்களும் மனிதனது உடல் நலனைப்பேணும் பாங்காக உள்ளமையானது எங்களின் உணவுப் பண்பாட்டின் மேன்மையைக் காட்டுறது. 'அரைச்ச கறி' என்ற கறியை முதல்நாளவித்து வைத்து ஒடியல்புட்டோடு உண்பதும் அதன் சுவையும் எமது தலைமுறையோடு சரியென்றே நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

20211117-085947-1.jpg

9 hours ago, நந்தன் said:

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

 • Like 3
 • Haha 1
Link to comment
Share on other sites

8 hours ago, suvy said:

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

ஏக்கம் தலையில் விழாத வரைக்கும் ஓகே  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

20211117-085947-1.jpg

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

ஒருபோதும் கஷ்டங்கள் தானாக வருவதில்லை கந்தையா நாங்களாக தேடிபோனால்தான் உண்டு.....ஒரு கோப்பை பாலுக்கு ஒரு பசுவை வைத்து பராமரிக்கிறதே அதிகம் இதற்குள் இன்னொன்று தேவையா......!  😂

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இவ்வளவுக்கும் இவர் தலைமை ஆசிரியராம். உந்த அடி வாங்கிப் போட்டு, பெடியளை… எப்பிடி, மேய்க்கப் போறார் எண்டு தெரியவில்லை
  • யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன்  85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை. அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள். வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட. ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது.. ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும். இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே எங்கள் உயிர் மூச்சு!. யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. – குறியீடு (kuriyeedu.com)  
  • இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்... இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭
  • பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player   பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39   06:0
  • இதென்ன கொடுமையப்பா…. வீட்டிலை ஒரு சின்னப்பிள்ளையை, வைத்துக் கொண்டு  புருசனுக்கு,   இந்த அடி… அடிக்குது, மனிசி. அந்த மனுசனும்…. திருப்பி ஒரு அடி அடிக்காமல், ஓடி… ஓடி… அடி வாங்கிறார். உந்த மனுசன்…. ஆண்களுக்கே அவமானச் சின்னம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.