Jump to content

ஏராளனுக்கு வாழ்த்துகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு வாழ்த்துகள்

ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏

உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க

உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

download.thumb.jpg.e571c64070a4c07525613a2069021c7c.jpg

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்+
36 minutes ago, உடையார் said:

ஏராளனுக்கு வாழ்த்துகள்

ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏

உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க

உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

download.thumb.jpg.e571c64070a4c07525613a2069021c7c.jpg

வாழ்த்துக்கள், ஏராளன் அவர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், ஏராளன் …!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அகரம் அமைப்பின் லிங் இணைத்திருந்தார்.அதைப் பார்த்துட்டு ஏதோ இதற்குள் இருக்கிறது என்று நினைத்தேன்நீங்கள் சொல்லீட்டிங்கள் உடையார் அண்ணா நன்றி.

வாழ்த்துக்கள் ஏராளன் மற்றும் அவர்களுக்கு உதவிடும் அனைவருக்கும் 🙏 காலக் கிரமத்தில் கவனிக்கிறன்.👋✍️☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான செயல் செய்த... ஏராளனுக்கு பாராட்டுக்கள். 👍 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் மற்றும் அவரின் புலர் அமைப்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

சேவை மனப்பான்மை அருகிவரும் இக்காலத்தில் அமைப்பைத் தொடங்கி உதவிகள் புரிவதற்கு நன்றிகள்🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அண்ணை அவசரப்பட்டு சொல்லிப்போட்டியளோ!🤔
இப்ப தான் 1 மாதம் தொடங்கி, விசேட தேவையுடையோருக்கு உதவியள் செய்வதோட நீண்ட கால நோக்கில விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைப்பது தான் நோக்கம்.
உடையார் அண்ணாவை தனிப்பட தெரியும், அவரிடம் அமைப்பின் யாப்பு எழுதுவது தொடர்பாக உதவி கேட்ட போது கோஷான் & கற்பகதரு இருவரிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார். நான் கோசான் அண்ணரிடம் மட்டும் தனிமடலில் தொடர்பு கொண்டேன். சில ஆங்கில இணைப்புக்களை தந்தவர், தமிழில் மொழி மாற்றம் செய்து தர கேட்டேன். அதையும் செய்து தந்தார். மிக்க நன்றி கோசான் அண்ணை.

யாழின் நேசக்கரமும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி, அதன் ஊடாகவும் தம்பி சில உதவிகள்/ஒருங்கிணைப்புகள் செய்தவன் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இப்ப 8 கிராமசேவகர் பிரிவிற்குள் செயற்பட முடிவு செய்துள்ளோம். அதனால தான் யாழின் உதவியை நாடவில்லை. வேலைத்திட்டங்கள் கூடும்போது யாழின் துளித்துளியாய் பகுதியில் கட்டாயம் உதவிக் கோரிக்கை வைப்பேன். அப்போது யாழ் உறவுகள் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கோ.

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள். பம்பர்ஸ்  வாங்க மாதம் 2000 ரூபாய் தாய்மாரின் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு Standing order வங்கியில் போட்டிருக்கு. மெத்தையும் ரபர் சீற்றும் நேற்று வாங்கி கொடுத்திருக்கிறோம்.
மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பயனாளிகளை தெரிவு செய்து வழங்க உள்ளோம்.

உடையார் அண்ணாவும் 75281 ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். மிக்க நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தோழர்.. இன்னும் ஏராளமான உதவிகள் புரிய வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது"  பாராட்டுக்கள் புலர் புண்ணியவான்களுக்கு......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்
உங்கள் சேவைமனப்பான்மை பாராட்டுக்குரியது
வாழ்க வளமுடன் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இது சம்பந்தமாக சிந்தித்து செயல்பட முனைந்தது மட்டும் தான் என்னோட பணி. இச் செயற்பாடுகளுக்கான முழுப் பாராட்டும் என்னை ஊக்குவித்து நன்கொடை அளிக்கின்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே உரித்தானது. என்னுடைய பணி ஒருங்கிணைத்தல் மட்டுமே.

கடந்த ஆண்டு மருத்துவப் பேராசிரியை நில்மினியுடனும் இது சம்பந்தமாக தனிமடலில் எழுதியிருந்தேன். விரைவாக பணிகளை ஆரம்பிக்க ஊக்கப்படுத்தினார். அக்காவுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கும் அவர் குழுவுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உடையார் அண்ணை அவசரப்பட்டு சொல்லிப்போட்டியளோ!🤔
இப்ப தான் 1 மாதம் தொடங்கி, விசேட தேவையுடையோருக்கு உதவியள் செய்வதோட நீண்ட கால நோக்கில விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைப்பது தான் நோக்கம்.
உடையார் அண்ணாவை தனிப்பட தெரியும், அவரிடம் அமைப்பின் யாப்பு எழுதுவது தொடர்பாக உதவி கேட்ட போது கோஷான் & கற்பகதரு இருவரிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார். நான் கோசான் அண்ணரிடம் மட்டும் தனிமடலில் தொடர்பு கொண்டேன். சில ஆங்கில இணைப்புக்களை தந்தவர், தமிழில் மொழி மாற்றம் செய்து தர கேட்டேன். அதையும் செய்து தந்தார். மிக்க நன்றி கோசான் அண்ணை.

யாழின் நேசக்கரமும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி, அதன் ஊடாகவும் தம்பி சில உதவிகள்/ஒருங்கிணைப்புகள் செய்தவன் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இப்ப 8 கிராமசேவகர் பிரிவிற்குள் செயற்பட முடிவு செய்துள்ளோம். அதனால தான் யாழின் உதவியை நாடவில்லை. வேலைத்திட்டங்கள் கூடும்போது யாழின் துளித்துளியாய் பகுதியில் கட்டாயம் உதவிக் கோரிக்கை வைப்பேன். அப்போது யாழ் உறவுகள் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கோ.

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள். பம்பர்ஸ்  வாங்க மாதம் 2000 ரூபாய் தாய்மாரின் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு Standing order வங்கியில் போட்டிருக்கு. மெத்தையும் ரபர் சீற்றும் நேற்று வாங்கி கொடுத்திருக்கிறோம்.
மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பயனாளிகளை தெரிவு செய்து வழங்க உள்ளோம்.

உடையார் அண்ணாவும் 75281 ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். மிக்க நன்றி அண்ணா.

ஏராளன் - நீங்கள் செய்வது செயற்கரிய செயல். வாழ்துக்கள்.

வெயிட் பண்ணாமல் துளிதுளியாயில் அமைப்பை அறிமுகம் செய்யுங்கோ.

யாழ்கள உறவுகள் எல்லாரும் முன் வருவார்கள்.

புலர்-ரட்டும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஏராளன் - நீங்கள் செய்வது செயற்கரிய செயல். வாழ்துக்கள்.

வெயிட் பண்ணாமல் துளிதுளியாயில் அமைப்பை அறிமுகம் செய்யுங்கோ.

யாழ்கள உறவுகள் எல்லாரும் முன் வருவார்கள்.

புலர்-ரட்டும்🙏🏾

நன்றி அண்ணை.
அப்பா அகலக் கால் வைக்காதே என்று எச்சரிக்கிறார், மெதுவாக வளருவம்.
புலர் அறக்கட்டளையாகவா(Trust)/தொண்டு நிறுவனமாகவா(Charity) பதிவு செய்வது என்ற தடுமாற்றம் இருக்கிறது. பதிவு செய்ய 6 மாத காலம் தாமதமாகும். எங்களுடைய பணிகளை பார்த்துத் தான் பதிவு செய்வார்கள். எல்லா ஒழுங்குகளையும் ஏற்படுத்திய பின் துளித்துளியாய் பகுதியில் போடுவம்.

மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் நன்றி. உங்கள் ஊக்கமும் உற்சாகப்படுத்தலும் எங்கள் பணியைத் தூண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குரார்ப்பண கூட்டம் நடந்த போது எடுத்த வீடியோ, ஒலி வாங்கி(mic) இல்லாததால் ஒலித் தெளிவு குறைவு. வெளிப்படையாக இயங்குவது என்ற குறிக்கோளில் முதலாவதாக ஒளிப்பதிவை செய்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வது இனிதே வளரட்டும், தேவை உள்ளோரை வளர்க்கட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.