Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி

2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டி-20  உலகக் கிண்ணம் தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Image

2022 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சமீபத்திய டி-20 சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா, 2022 டி-20 உலகக் கிண்ணத்திலும் சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். 

போட்டிகள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அவுஸ்திரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும்.

சிட்னி மற்றும் அடிலெய்டு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

இது தவிர பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களும் போட்டிகளை நடத்தும்.

கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள மாநிலங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அவுஸ்திரேலியாவில் தளர்த்தப்பட்டுள்ளன. 

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் ஏற்கனவே 2022 டி-20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நமீபியா, ஸ்கொட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதல் சுற்றுக் கட்டத்தின் மூலம் போட்டியில் இணைகின்றன. போட்டிக்கான இறுதி நான்கு இடங்கள் இரண்டு தகுதிப் போட்டிகள் மூலம் நிரப்பப்படும். 

தகுதி சுற்று போட்டிகள் ஓமான் மற்றும் சிம்பாப்வேயில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும்.

அவுஸ்திரேலியா இதற்கு முன்பு ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தை நடத்தியதில்லை, ஆனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இரண்டு முறை 50 ஓவர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இடமாக இருந்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/117241

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.