Jump to content

காற்று மாசு ; டெல்லியில் பாடசாலைகளுக்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாசு ; டெல்லியில் பாடசாலைகளுக்கு பூட்டு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் புகை நச்சுமண்டலத்தால் கடந்த 10 நாட்களாக அவதியுற்று வருகிறது. 

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையால் பொதுமக்கள் வெடித்த பட்டாசும் தான் காரணம் என தெரியவந்துள்ளது.

டெல்லி மாநில அரசு முதற்கட்டமாக பாடசாலை, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவித்துள்ளது.

அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தி உள்ளது. 

கட்டுமானப் பணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிலோ மீற்றர் தொலைவுக்குள்ள அனல்மின்நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் வீதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/117342

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமது -பின்-துக்ளக் 

தலைநகர மோடி பிறந்த ஊருக்கு மாத்தி விடுகப்பா ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கும் இனி லொக்டவுண் போடவேணும் கண்டியளோ...😎

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

உதுக்கும் இனி லொக்டவுண் போடவேணும் கண்டியளோ...😎

அரசு பரிசிலித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அரசு பரிசிலித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன

மட்டக்களப்பு பக்கம்  எல்லாம் காத்தோட்டம் எல்லாம் சுத்த பத்தம் தானே? :cool:

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு பக்கம்  எல்லாம் காத்தோட்டம் எல்லாம் சுத்த பத்தம் தானே? :cool:

இங்க இதமான காலநிலை இரவில் மழை பகலில் மப்பும் மந்தாரமும்😄😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்க இதமான காலநிலை இரவில் மழை பகலில் மப்பும் மந்தாரமும்😄😄

ச்சா...அருமை அருமை.....குளிருக்கு போர்த்து மூடிக்கொண்டு படுக்க அந்தமாதிரி இருக்கும் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிட, ஜரி சப்போட் டெல்லியில் இருந்து....

இன்று விசாரித்த போது சொன்னார்கள்.

உண்மையான காரணம்..... வயல்வெளியில்..... அறுவடையின் பின்னர், அடிக்கட்டைகளை..... பசளைக்காக எரிப்பார்களாம்..... அதன் துகள்கள், தீபாவளி வெடி புகையுடன் சேர, இரண்டும் கலந்து, மேலும் போகாமல், கீழேயும் போகாமல்...... அப்படியே நீக்கமற நிறைந்து.... தூசு மண்டலமாக வைத்திருக்கிறதாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

ச்சா...அருமை அருமை.....குளிருக்கு போர்த்து மூடிக்கொண்டு படுக்க அந்தமாதிரி இருக்கும் 🤣

வேலைக்கு போகணும் அதான் பெரிய பிரச்சினையாக தற்போது டிசம்பர் லீவும் இல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வேலைக்கு போகணும் அதான் பெரிய பிரச்சினையாக தற்போது டிசம்பர் லீவும் இல்ல 

சீக்கிரம் விடுமுறை வரும் என்று மருத்துவர்கள் எதிர்வு கூறுகிறாரர்களே.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.