Jump to content

தமிழ் இணைய வரலாறும் யாழ்.கொம்மும்


Recommended Posts

//சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பறித்துவிட்டாரோ? :-)). இந்த 01/01/2003 பதிவுகளிலே பல ஈழவிடுதலை ஆதரவான இடுகைகள்; உ+ம்: திலீபன் சிறப்புக்கவிதாஞ்சலி .

"......நாட்கள் கடந்தன்

காந்தீயப் போர்வைகள் கிழிந்தன,

மகாத்மா என்ற மாபெரும் வார்த்தையை

தனக்கே உரித்தான

தனியான அணிகலனாக

தானே தனக்குச் சூடிக்கொண்ட பாரதம்

வேஷம் கலைந்து

விவஸ்தை கெட்டு-வெறும்

கோதாரியாக குறிகெட்டு நின்றது

காந்தீயமென்று போற்றிப் பூஜிக்கும்

குவலயத்து மக்களெல்லாம்

குருடர்களாய்ப் போயினரோ! ....." என்ற வரிகளை உள்ளடக்கிய இக்கவிதையைச் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' உள்ளடக்கி ஏற்றுக்கொள்ளுமா என்பதை அப்பாரம்பரிதை முன்வைத்தவரையே தீர்மானித்துக்கொள்ளவிட்டுவ

Link to comment
Share on other sites

ஆரம்பகாலம் குறித்து எனக்கும் முழுமையாக தெரியாது. தெரிந்ததை முன்பு ஒரு முறை உங்களுக்கு களத்தில் பதிலாக எழுதியிருக்கின்றேன். முழுமையாக அறிந்தவர்கள் அது குறித்து எழுதினால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது:

2003ம் என்று பார்த்தாலும் 10 வருடங்களை நிறைவு செய்யக் காத்திருக்கும் யாழ் வரலாற்றில் பாதி காலத்தைக் கூட 2003ம் ஆண்டு எட்டிவிடாது. கடந்த 4 ஆண்டு காலக் கணிப்பினை வைத்து யாழ் வரலாற்றை ஒப்பிடுவதா?

2003ம் ஆண்டு என்பது பழைய கருத்துக்களத்தில் இருந்து புதிய கருத்துக்களத்துக்கு மாறியதால் இருக்கும் என நினைக்கின்றேன். சென்ற வருடம் தான் Phpbb இருந்து Ip.Board க்கு மாற்றப்பட்டிருந்தது. இதற்கு முதல் பல கருத்துக்களங்கள் பாவிக்கப்பட்டிருந்தன.

நிர்வாகம் இது பற்றி உண்மைகளை ஆவணப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பற்றிய பிரிதொரு கருத்து பின்னோட்டத்தில் இருந்து

சந்திரவதனாவின் யாழ்.கொம் பதிவு 12/31/2002 காட்டினாலுங்கூட வேறோர் இரண்டாம்நிலை ஆதாரத்தினை, சரிபார்ப்பினைத் தேடியபோது, யாழ்.கொம்மிலே வலைப்பதிவுகள் பற்றி அறிவித்தவர், நவன் உடைய பதிவினைப் பார்த்துவிட்டே அறிவித்தார் என்றும் அதன் பின்னரே யாழ்.கொம்மிலே பதிவுவசதி தொடக்கப்பட்டிருந்திருக்கலா
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.