-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! May 23, 2022 – பாகம் 1 கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியும் சரி, இப்போர் நீண்டகாலம் நீடிக்கலாம்; எனவே அதற்கான தயாரிப்புகளில் இறங்க வேண்டும் என்று கூறுகின்றன. போர் நிறுத்தத்திற்கோ அமைதிப் பேச்சு வார்த்தைக்கோ எந்த தரப்பும் தாயாரில்லை. குறிப்பாக, உக்ரைனை பலிகடாவாக்கி இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போரை (Proxy War) நடத்திவரும் அமெரிக்கா பின்வாங்கத் தயாராக இல்லை. தீவிரப் போர் வெறியோடு செயல்பட்டு வருகிறது. போரின் நெருக்கடிகள் மக்களின் தலையில்.. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த நாய்ச்சண்டையில் பலியாகிக் கொண்டிருப்பதோ உக்ரைன் உழைக்கும் மக்கள்தான். போரில் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தம் குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதும் பெற்றோர்களின் அவலம் குறித்த செய்தி நமது நெஞ்சை உலுக்குகிறது. உக்ரைனில் அரசாட்சி செய்கிற நவநாஜி கும்பலோ போரில் இரஷ்ய இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க பெண்கள், குழந்தைகள் என சொந்த நாட்டு மக்களையே மனிதக் கேடயமாகப் (Human Shield) பயன்படுத்தி வருகின்றனர். போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட (40,19,287) மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியேறியவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 18 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் கட்டாய இராணுவ சேவைக்கு தேவைப்படுவார்கள் என்பதால், உக்ரைன் நாஜி அரசு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆனால், இரஷ்யப் படையினரே உக்ரைன் குடிமக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றுகொண்டிருப்பதாக, ஒருதலைபட்சமான பல பேய்க்கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள். இரஷ்யா உலக அளவில் பெட்ரோல் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. பலநாடுகளின் கோதுமை தேவைகள் உக்ரைன், இரஷ்யாவின் ஏற்றுமதி மூலமே நிறைவுசெய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே இப்போரின் காரணமாக உலக நாடுகளில் எரிவாயு விலை உயர்ந்து காணப்படுகிறது; பல நாடுகளில் கோதுமைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பல உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு எனப் போர் உண்டாக்கியிருக்கும் நெருக்கடிகள் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தலையிலேயே விழுகின்றன. மூன்றாம் உலகப்போர் அபாயம்! ஏப்ரல் 24 அன்று உக்ரைனுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனும் பாதுகாப்புத்துறைச் செயலர் லொயிட் ஆஸ்டினும் இரஷ்யாவை இராணுவ ரீதியில் முடமாக்குவதே இப்போரில் எங்களது (அமெரிக்கா) நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தனர். அமெரிக்காவின் செல்லப் பிராணியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களுக்குத் தேவை ஆயுதங்கள், மென்மேலும் கூடுதலான ஆயுதங்கள்” என்று எஜமானருக்குத் தோதாக ஊளையிடுகிறார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தும் இப்போரில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்கு ஐரோப்பில் தனது 8,000 துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது. இரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு மலைமலையாக பணத்தை வாரியிறைத்து வருகிறது அமெரிக்க அரசு. போர் தொடங்கியபோது உடனடியாக 1.3 கோடி டாலர்களை வழங்கியது. மார்ச் மாத தொடக்கத்தில் 20 கோடி டாலர்களை ஒதுக்கியது. பிற்பாடு சிறிது நாட்களிலேயே 80 கோடி டாலர்களை அறிவித்தது. தற்போது உக்ரைனுக்கு உதவுவதற்காக 3,500 கோடி டாலர்கள் வரை வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் அதிபர் பைடன். நிதி உதவி மட்டுமல்லாது விமான எதிர்ப்பு கருவிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், அதிநவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய போர்க் கருவிகளையும் தனது உளவுத்துறையின் உதவியையும் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது அமெரிக்கா. உக்ரைனில் அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிக் கும்பலான அசோவ் பட்டாலியன் படையினர். தன் நாட்டு ஆயுதங்களை உக்ரைனுக்கு தங்குதடையின்றி வழங்குவதற்காக ‘உக்ரைன் – ஜனநாயக பாதுகாப்புக் கடன் மற்றும் குத்தகைச் சட்டம் 2022’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார் பைடன். இரண்டாம் உலகப்போரின்போது, இங்கிலாந்துக்கு தன்னுடைய ஆயுதங்களை வழங்குவதற்காக, முதன்முதலாக 1941-ம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உக்ரைனுக்காக அதை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் பைடன். குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் இணைந்து பெரும்பான்மை ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாது 30 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகின்றன. இராணுவ வல்லரசான இரஷ்யாவினுடைய தாக்குதலை உக்ரைன் இத்தனை நாள் சமாளிப்பதற்குப்பின் உள்ள காரணம் இதுவே. மேலும் ஏப்ரல் 19 அன்று ஜெர்மனியில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் உள்ளிட்டு 43 நாடுகள் ஒன்றுகூடி, போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். உக்ரைனுக்கு போர்ச் செலவினங்களுக்காக நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தங்களது திட்டம் பற்றி இக்கூட்டமைப்பு நாடுகள் ஆலோசிக்க இருக்கின்றன. நிலைமைகளை அவதானிக்கும்போது, இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் மூன்றாம் உலகப் போருக்கான அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனை அமெரிக்காவும் இரஷ்யாவுமே மாறிமாறிச் சொல்லிக் கொள்கின்றன. எனவே இருதரப்புமே எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி, அம்மணமாக தங்களது நோக்கங்களை அறிவித்துக் கொண்டு, போர்த் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. பனிப்போரின் தொடர்ச்சியும்; நேட்டோவில் உக்ரைன் இணைப்பும் இரஷ்ய-உக்ரைன் போரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் நடைபெற்ற பனிப்போரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக 1950-களின் பிற்பகுதி தொடங்கி, 1991 வரையுள்ள காலகட்டம் மற்றும் 1991-லிருந்து தற்போது வரையிலான காலகட்டம் என இரண்டாகப் பிரித்து, நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவானது ஏகாதிபத்திய முகாமிலேயே தலைமை தாதாவாக – மேல்நிலை வல்லரசாக வளரத்தொடங்கியது. 1950-களின் பிற்பகுதியில், சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தனர்; ஆகையால் சோசலிச சோவியத் யூனியன், சமூக ஏகாதிபத்தியமாக (சொல்லில் சோசலிசம்; செயலில் ஏகாதிபத்தியம்) சீரழிந்து அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்கான போட்டா போட்டியில் இறங்கியது. இதற்கு முன்னதாக, 1945-ம் ஆண்டு – இரண்டாம் உலகப் போரின் முடிவில், பாசிச ஹிட்லரின் பிடியிலிருந்த நாடுகளை சோவியத் செம்படை விரட்டியடித்து அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி வரை விடுவித்திருந்தது. இந்த நாடுகளெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் சோசலிச குடியரசுகளாக மாறின. இந்நிலையில், சோசலிசம் பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக உருவாக்கிய அரசியல்-இரணுவக் கூட்டணியே நேட்டோ. 1949-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் வடபகுதியைச் சேர்ந்த நாடுகளான பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐலாந்து, இத்தாலி, லுக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்சுகல், இங்கிலாந்து, அமெரிக்கா என 12 நாடுகள் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நேட்டோவை ஏற்படுத்தின. வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு என்பதன் சுருக்கமே நேட்டோ (NATO) ஆகும். மறுபக்கம் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளை தனது சுரண்டலுக்கான தொங்கு சதை நாடுகளாக ஆக்கிக் கொண்டது சோவியத் சமூக ஏகாதிபத்தியம்; மேலும் 1955-ம் ஆண்டு நேட்டோவை எதிர்கொள்வதற்காக அந்நாடுகளை ஒருங்கிணைத்து வார்சா ஒப்பந்த அமைப்பை (WTO) ஏற்படுத்தியது. இதுவும் நேட்டோவைப் போலான அரசியல்-இராணுவக் கூட்டணியாகும். சுமார் 35 ஆண்டு காலத்திற்குமேல் நடைபெற்ற பனிப்போரில், 1990-1992களில் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்காவிடம் தோற்றது. 90-களின் இறுதியில் வார்சா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. இரஷ்யாவுடனான சோவியத் கூட்டமைப்பிலிருந்து 14 நாடுகள் வெளியேறியதால் சோவியத் யூனியனும் சிதறியது. ஆனால் இதே காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கிரீஸ், துருக்கி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட நாடுகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்தது. 90-களுக்குப் பின் செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் 1999-ம் ஆண்டும்; பல்கேரியா, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 2004-ம் ஆண்டிலும்; அல்பேனியா மற்றும் க்ரோஷியா 2009-ம் ஆண்டிலும்; மண்டேநீக்ரோ 2017-ம் ஆண்டிலும்; 2020-ம் ஆண்டில் வடக்கு மாசிடோனியாவும் நோட்டோவில் இணைந்தன. வட அட்லாண்டிக் பிராந்திய நாடுகளை மட்டுமே கொண்டிருந்த நோட்டோ படை, முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகள் உள்ளிட்டு பெரும்பான்மையான கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பாகத் திகழ்கிறது. தற்போது 30 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளார்கள். 000 பனிப்போர் காலத்தில், மேலும் கிழக்கு நோக்கி எங்களது படைகளை விரிவுபடுத்த மாட்டோம் என்று இரஷ்யாவுக்கு கொடுத்த வாக்கை மீறியுள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ. தற்போது நேட்டோ நாடுகள் இரஷ்யாவை சுற்றிவளைத்துள்ளன. உக்ரைனுக்கு போர் உதவிகள் வழங்குவது பற்றி நாடாளுமன்றத்தில் உரையாடும் அதிபர் பைடன். இரஷ்யாவின் நிலப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை நேட்டோவில் இருக்கின்றன. தற்போது இரஷ்யாவுடன் மிகப்பரந்த அளவில் நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளக்கூடிய உக்ரைனையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா. உக்ரைனைப் போலவே நார்வே, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. தனது மேலாதிக்கப் பரப்பை விரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இரஷ்யாவை சுற்றி வளைத்துத் தாக்கவும் உகந்த புவிசார் முக்கியத்துவமிக்கப் (Geo-political importance) பகுதியாக உக்ரைனைக் கருதுகிறது அமெரிக்கா. இதை முறியடிப்பதற்காகத்தான் இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. எனவே இப்போர் ஒரு திடீர் நிகழ்வல்ல. அமெரிக்க-இரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் தொடர்ச்சி. அமெரிக்கப் பதிலிப் போரின் முன்தயாரிப்பு பணிகள் 2000-ம் ஆண்டிலிருந்து உலகின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2021-ம் ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவை. 1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது. அதுவே ஒப்பீட்டு நோக்கில் 2014-2021 வரையான குறுகிய ஆண்டுகளில், 240 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளாக அதிகரித்திருக்கிறது. இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகுதான் அமெரிக்காவும் நேட்டோ கூட்டணியும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கிவருகின்றனர் என்பது கிடையாது; ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா உக்ரைனை களமாகக் கொண்டு இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போருக்கு தாயரித்துள்ளது என்பதை விளக்கும் சித்திரம்தான் மேற்சொன்ன புள்ளிவிவரம். 000 இசுலாமிய நாடுகளில் ஒசாமா பின்லேடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபான் உள்ளிட்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிட்டதைப் போல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வும் அந்நாட்டின் இராணுவத் தலைமையகமும் 500 கோடி டாலர் செலவுசெய்து உக்ரைனில் அசோவ் எனும் நவநாஜிக் கும்பல்களை வளர்த்துவிட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில், இரஷ்யப் படையினரை எதிர்த்து சண்டையிடுவது உக்ரைன் இராணுவம் மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து அசோவ் பட்டாலியன் எனும் நவநாஜி ஆயுதப் படையும் சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்கள் இக்குழுவினரின் கட்டுப்பாட்டிற்கே செல்கின்றன. உக்ரைனில் தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை உருவாக்க ஆட்சிக் கவிழ்ப்புகளையும் அமெரிக்கா நடத்தியிருக்கிறது. 2004-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். இதைப் பொறுக்காத அமெரிக்கா தனது விசுவாசக் கும்பல்கள் மூலம் உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ என்ற பெயரில், ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அரங்கேற்றி அமெரிக்க ஆதாரவளரான விக்டர் யுஷ்செங்கோவை அதிபராக்கியது. 2010-இல் நடைபெற்ற தேர்தலில், இரஷ்ய ஆதரவாளரான யனுகோவிச் மீண்டும் அதிபரானார். இவர் இரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிசக் கும்பல்கள் போராட்டங்களில் இறங்கின. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக அதிபர் பதவியிலிருந்து யனுகோவிச் விலகினார். பாசிசக் கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றின. தற்போது ஆட்சியிலிருக்கும் ஜெலன்ஸ்கியும் நவநாஜிக் கும்பலின் ஆசி பெற்ற அதிபரே. இனவெறி கொண்ட உக்ரைன் நவநாஜிக் கும்பல்கள் இரஷ்யர்கள் அதிகம் வாழும் கிரீமிய தீபகற்பம் மற்றும் டான்பாஸ் பிரதேசம் ஆகியவற்றில் இனவெறி அடக்குமுறை – அத்துமீறல்களை அரங்கேற்றி வந்தன. இந்த உள்நாட்டு இன அழிப்புப் போரில் 14,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரஷ்யா 2014-ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. (தொடரும்…) பால்ராஜ் https://www.vinavu.com/2022/05/23/russia-ukraine-war-risk-of-world-war-part-1/ -
நல்ல மனிதர்......நலம் பெற வேண்டுகிறேன்.......! 🙏
-
By தமிழ் சிறி · Posted
தமிழையும், ஈழத்தையும் நேசிக்கும் அருமையான மனிதர். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றோம். 🙏 -
By கிருபன் · பதியப்பட்டது
டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை! மின்னம்பலம்2022-05-24 உடல்நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல அவசர ஆலோசனை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் டி.ராஜேந்தர். நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகத் தன்மை கொண்டவர். தீவிரமாக அரசியல் களத்தில் குதித்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு எங்கும் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். லட்சிய திமுகவை உருவாக்கி தலைவராக செயல்படுகிறார். இவ்வாறு பல துறைகளிலும் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்த டி.ராஜேந்தர், மது, சிகரெட் என எதையும் தொடாமல் தனி மனித ஒழுக்கத்திலும் சிறந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டது. உடனடியாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் ரத்த சோகையால் சோர்வுடனே காணப்பட்டார். வயிறு வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்படவே ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்திருக்கு வயிறு தொடர்பான சிகிச்சையில் சிறப்பானவரான மருத்துவர் பாலசிங்கம் சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவர் பாலசிங்கம், வயிற்று வலி உள்ளவர் நடந்து வரும் போதே அவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறியும் அளவுக்கு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இந்நிலையில் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் டி.ராஜேந்தருக்கு வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டி,ராஜேந்தருக்கு இதயத்தில் பிளாக் இருக்கும் நிலையில், தற்போது புற்றுநோயும் கண்டறியப்பட்டதால் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். https://minnambalam.com/politics/2022/05/24/20/T-Rajender-going-to-US-for-cancer-treatment -
By ஏராளன் · பதியப்பட்டது
தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? - உலக தைராய்டு தினம் ரவி குமார் பனங்கிப்பள்ளி பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMMED HANEEFA NIZAMUDEEN / GETTY IMAGES தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது என்கிறார் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற உள்சுரப்பியியல் நிபுணர் (Endocrinologist) மருத்துவர் பெல்லம் பரணி. எப்போதும் இளமையாக இருப்பது எப்படி? - முதுமை 'நோயை' போக்க வழி உலக நாடுகளில் பரவும் குரங்கம்மை: அறிகுறிகள் என்ன? வைரஸ் என்றால் என்ன? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள் மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் (Hypo-thyroidsim) எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் (Hyper-thyroidism) எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும். பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்தக் குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை. தைராய்டு நோய்க்கான அறிகுறிகள் என்ன? ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்: உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள். ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்: போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று மருத்துவர் பரணி கூறுகிறார். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை. தைராய்டு சுரப்பிக்கு உண்டாகும் நோய்களில் இதுதான் முக்கியமான பிரச்னை என்று ஸ்பானிஷ் சொசைட்டி ஆஃப் எண்டோக்ரைனாலஜி எனும் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் பிரான்சிஸ் சேவியர் சாண்டா மரியா முன்னதாக பிபிசியிடம் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு: ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறா? - அரசின் ஆய்வு எழுப்பும் சந்தேகங்கள் ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ? மேஜிக் காளான்களில் உள்ள சைலோசிபின் மன அழுத்தத்திற்கு மருந்தாக பயன்படுகிறதா? எடுத்துக்காட்டாக ஹைப்போ-தைராய்டிசம் இருப்பவர்களுக்கு, நாள்பட்ட மன அழுத்தம் இருப்பதாகத் தவறாக நோய் கண்டறியப்படலாம். ஹைப்போ-தைராய்டிசம் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலே இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குத் தாமதமாகவே சிகிச்சை தொடங்கப்படுகிறது. தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத் தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது. வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. சிலருக்கு நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஹைப்போ-தைராடிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு பின்னரும் 'ஆட்டோ-இம்யூன் ரெஸ்பான்ஸ்' (நோய் கிருமிகளைத் தாக்காமல் உடல் உறுப்புகளையே நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்குவது) தாமாகவே உள்ளுறுப்புகளைத் தாக்குவது தொடரும் என்று மருத்துவர் சாண்டா மரியா கூறுகிறார். பட மூலாதாரம்,ASHISH KUMAR / GETTY IMAGES படக்குறிப்பு, தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது. (சித்தரிக்கும் படம்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போல தைராய்டில் எந்த அளவு குறைபாடு இருக்கிறது என்று துல்லியமாக நிர்ணயிக்க முடியாது என்று மருத்துவர் பரணி கூறுகிறார். T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு? ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு லிட்டர் ரத்தத்தில் 0.5 முதல் 5 மில்லி வரை தைராய்டு இருக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ரத்தத்தில் டி.எஸ்.ஹெச் அளவு என்பது தைராய்டு சுரப்பி சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். ஆனால் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என ஆளுக்கு ஆள் இந்த அளவு மாறுபடும். அதாவது வயதைப் பொருத்த வரையில் கூட இந்த அளவு மாறுபடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் பரணி. கொளுத்தும் வெயில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? – எப்படி தற்காத்துக் கொள்வது? திரவ உணவு முறை என்றால் என்ன? அது பாதுகாப்பானதா? ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார். இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதா? ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும். இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு. குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுக்கு பிரச்னை இருந்து அது கண்டறியப்படாமல் விட்டால் அவர்களது மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், அவர்களது ஐ.க்யூ அளவும் (அறிவாற்றல்) குறையும். மிகவும் எளிதாக சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய இந்த பிரச்னை கண்டுகொள்ளப்படாமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலமே சிக்கலுக்கு உள்ளாகி விடும். தைராய்டு பிரச்னை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது உடல் உயரம் போதிய அளவு இல்லாமல் போகும். ஹைப்போ-தைராய்டிசம், ஹைப்பர்-தைராய்டிசம் ஆகியவை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்காமல்விட்டால் சில நேரங்களில் அவை உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறும். https://www.bbc.com/tamil/science-61565224
-
Recommended Posts
Please sign in to comment
You will be able to leave a comment after signing in
Sign In Now