Jump to content

சிங்கள வீரன் புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

FB_IMG_1583150174313.jpg?resize=695%2C525&ssl=1

'தமிழீழ தாதியர் & சிங்கள வீரன் புஷ்பகுமார'

 

 

ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர்.

ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும்.

எம் வேட்கையை எம்மவரிடம் தக்க  வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும்.

 மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை  எல்லாச் சமூகத்தினருக்கும் எடுத்தியம்ப வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

அதைச் செய்ய வேண்டியதுதான் எமது வேலையுமாகும். அந்த வகையில்  மாந்த நேசத்தை வெளிப்படுத்திய எண்ணிலடங்கா நிகழ்வுகளில்  ஒன்றை உங்களுடன் பகிர்கின்றோம்.

இதனை வெறுமனே வாசித்து விட்டகலாது, வேற்று மொழிகளில் பெயர்த்து பலருடன் பகிர்வதும், இது போன்ற வெளிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை வெளிப்படுத்துவதும் நாம் ஆற்ற வேண்டிய கடமையாகும்.

“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட
களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் படுகாயடைந்தார்.

இவரின் பெயர் புஷ்பகுமார ஆகும். பதவி நிலையும் படைப்பிரிவும் நினைவில் இல்லை.

2009ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான சமரில்
தமிழர்சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.

களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.

மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக மேலதிக சிகிச்சைக்காக
பத்திரமாக அனுப்பட்டார்.

யுத்தக் கைதிகளை எவ்வாறு
பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.

“எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!

எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு” ….

என கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் மானமிகு தேனிசை செல்லப்பா பாடிய பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to சிங்கள வீரன் புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும்
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கள் கிளிநொச்சி மாநகரைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா இராணுவம் பரந்தனில் இருந்து முரசுமோட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

முரசுமோட்டைப் பகுதி களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் தலையில் படுகாயம் அடைந்தார்.

இவரின் பெயர் H.M சமன்_புஷ்பகுமார ஆகும். இராணுவத்தில் சமன் புஷ்பகுமாரவின் பதவிநிலை லான்ஷ் கோப்ரல் என்பதும் எந்தன் நினைவுப் பெட்டகத்தில் உண்டு.

சிங்கப் படையணி, கஜபாகு படையணி, கெமுனு காவற்படை என பல சண்டை உருவாக்கங்களைக் கொண்ட ஶ்ரீலங்கா இராணுவத்தில் லான்ஷ் கோப்ரல் H.M சமன் குமார எந்தச் சண்டை உருவாக்கங்கத்தைச் சேர்ந்தவர் என்பது எந்தன் நினைவில் இல்லை.

2009 ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான தொடர் சமரில் தமிழர் சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.

களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் (DGH Kilinochchi) அனுமதிக்கப்பட்டார்.

இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.

சமன் புஷ்பகுமாரவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாய் "காலைக்கடன்" உட்பட தனது அன்றாட கடமைகளைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாகச் சொன்னால் ஒரு கையை முழுமையாகவே அசைக்க முடியாதிருந்தார்.(Mobility level 1 ) அந்த நேரம் ஒரு குழந்தையைப் போலவே இவர் அன்போடும் கருணையோடும் பராமரிக்கப்பட்டார். புஷ்பகுமாரவுக்கு பல்துலக்கி, உடலெல்லாம் இளஞ்சூட்டு நீரினால் துடைத்துப் பாராமரித்த எமது வைத்தியப் பணியாளர்களை யான் நினைந்து அதிகம் அதிகம் பெருமைப்படுகின்றேன்.

மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஊடாக மேலதிக சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பட்டார்.

தரணி எங்கும் மானுடநேயம் தள்ளாடிக் கொண்டிருக்க தமிழர்தம் செயலிலும் சொல்லிலும் அந்த மானுடநேயம் தனித்துவமாய் நடைபயின்றது.

யுத்தக் கைதிகளை எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.

"எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு" ....

என உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய இந்தப் பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கின்றது. 

இதே போன்று புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முல்லை படைய மருத்துவமனையிலும் 6 காயமடைந்த சிங்களத்து சிப்பாய்கள் மிக நேர்த்தியாக சிகிச்சை அளிக்கப்பட்டு (இதில் இருவர் மேஜர் தர அதிகார நிலையை உடையவர்களாவர்) தலைவர் அவர்களால் தை 2009 ல் விடுவிக்கப்பட்டனர் என்பனை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.  இதே போல் கல்மடுவிலும் ஒருவரை வைத்திருந்தோம். மேலும் கல்லாறு பகுதியில் நாங்கள் 3 படையினர் - ஒருவர் தலைக்காயம், இன்னும் ஒருவர் கால் முறிவு , இன்னும் ஒருவர் சிறு சிறு காயங்களுடன் - கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு வைத்து பராமரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்திருக்கின்றோம். 

 

தமிழீழ மருத்துவர் தணிகை

https://www.facebook.com/photo.php?fbid=1209614659205880&set=pb.100004720719988.-2207520000.&type=3

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.