Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் – நிழலரசின் நிஜமுகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

FB_IMG_1589383312495.jpg?resize=696%2C464&ssl=1

 

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள்.

நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த உதவி மருத்துவர்களும் தாதியர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

புதிய புதிய சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்தவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் எங்களால் உயிர்காக்கப்பட்டவர் ஆன்மாவின் ஆழத்தில் இவர்கள் இருக்கிறார்கள.

இருதரப்பிலும் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை பெற்றோர் பார்வையிடவும், களத்திடை எதிரியின் கைகளில் அகப்பட்ட வித்துடல்களை வாங்கித் தரவும் மீதமாய் மருத்துவ உதவிகளும் செய்த ICRC அடுத்தத கட்டமாய் அந்தரித்த எமது மக்களை கைவிட்டனர்.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

இங்கே மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த #தாதியர்களும்_உதவிமருத்துவர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்த புதியவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் இங்கே இந்த ஒளிகொண்ட ஒளிப்படத்தில் இருப்பவர்களால் பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் இவர்களும் இருக்கிறார்கள்.

 

 

https://vayavan.com/?p=11334

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.