Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.  
https://tamilwin.com/article/demonstration-against-chanakyan-ma-sumanthiran-1637449340

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாரிய ஆர்ப்பாட்டத்தின் ஒளிப் படங்களைப் பார்க்க ஆவலாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

பாரிய ஆர்ப்பாட்டம்..?

😉

கொரனா காலத்திலை ..இதுவே காணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

கொரனா காலத்திலை ..இதுவே காணும்...

யுத்தத்தில் அழிந்தது போதாதென்று கொறொனாவாலும் அழியட்டும் என்கிறீரா..?

சுத்தம்..

😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஒரு ஆர்ப்பட்டம் கத்தரிக்கா ஒண்டும் இல்ல சும்மா 4, 5  பேர் குழம்ப வெளிக்கிட்டவை அவை ஆர் ஆக்கள் எண்டு தெரியும் தானே. பொலீசை கண்டோண அடக்கி வாசிச்சிட்டினம். ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே பொலீசுக்கு சரியான தகவல்களைக் கொடுத்து ஏற்பாடு செய்திருக்கினம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

உங்க ஒரு ஆர்ப்பட்டம் கத்தரிக்கா ஒண்டும் இல்ல சும்மா 4, 5  பேர் குழம்ப வெளிக்கிட்டவை அவை ஆர் ஆக்கள் எண்டு தெரியும் தானே. பொலீசை கண்டோண அடக்கி வாசிச்சிட்டினம். ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே பொலீசுக்கு சரியான தகவல்களைக் கொடுத்து ஏற்பாடு செய்திருக்கினம். 😂

இந்தப் படத்திலை 4, 5 பேரே நிக்கினம்..

15 minutes ago, Kapithan said:

யுத்தத்தில் அழிந்தது போதாதென்று கொறொனாவாலும் அழியட்டும் என்கிறீரா..?

சுத்தம்..

😔

அப்ப வந்தாலும் குற்றம்....வராட்டிலும் குற்றமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்பு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார்.

இவர்கள் நேற்று கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது. 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சுமந்திரனை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

https://seithy.com/breifNews.php?newsID=275156&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு வற்சப்பில் செய்தி வந்தது. பின்னர் இந்த காணொலியும் வந்தது.

https://www.facebook.com/KrishnaLiveTelecast/videos/936092323686260/

4 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.  
https://tamilwin.com/article/demonstration-against-chanakyan-ma-sumanthiran-1637449340

கூட்டத்துக்கு வந்தவர்கள் குறைந்த அளவிலான ஆட்கள். குழப்ப வந்தவர்கள் அதிலும் மிக குறைந்த அளவு ஆட்கள். குழப்ப வந்தவர்களின் எண்ணைக்கையை விட காவல் கடமைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றியது. வந்தவரில் ஒருவர் பச்சை துரோகி பச்சை துரோகி என சத்தம் இட்டார். இன்னொருவர் சுமந்திரன் அவர்கள் களவு செய்து பாராளுமன்றம் சென்றதாக விளம்பினார். ஆக மொத்தத்தில் ரிம் ஹோட்டன் கோப்பியை குடித்துவிட்டு கனடா தமிழ் மக்கள் சிலர் தங்களின் குரலை பயிற்சி செய்துவிட்டு சென்று உள்ளார்கள். இனி அடுத்து..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சாய்… மினக்கெட்டு கனடா வந்து, அவமானப் பட வேண்டி வந்திட்டுதே…

- சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ச்சாய்… மினக்கெட்டு கனடா வந்து, அவமானப் பட வேண்டி வந்திட்டுதே…

- சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்- 

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை....ஒன்றும் தெரியாதவர்களும். எவனுமில்லை.....இலங்கையிலிருந்து வந்து.  கனடாவில் அரசியல் படிப்பிக்க முடியாது ஆனால் கனடாகாரர். இலங்கைக்குச் சென்று. அரசியல் படிப்பிக்கலாம்.  இதனை சுமந்திரன்.  அனுபவரீதியாக. உணர்ந்து இருப்பார் 

சுமந்திரனின் நோக்கம்  ஆயுதப் போராட்டத்துக்கு முன்பு இருந்த நிலையை  இலங்கையில் தோற்றுவித்து  தங்கள் தொடர்ந்தும் அரசியல் செய்வது மட்டுமே   தமிழ் மக்களின் உரிமை பற்றி சுமத்திரனுக்கு. 1%கூட  கவலை...சிந்தனை கிடையாது ஆனால் இதனை சொல்லமாட்டார. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்(Rasamanickam Shanakkiyan) மற்றும் எம்.ஏ சுமந்திரன்(M.A.Sumanthiran) ஆகியோர் கலந்துகொண்ட கனடா கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்றில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி 'சுமந்திரன் தமிழினத் துரோகி' என்று கோசமிட்டு கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதன் காரணமாக குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுடதுடன், கூட்டத்தின் இடைநடுவே சுமந்திரன் வெளியேறிச் சென்றார்.

இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

https://tamilwin.com/article/video-of-sumanthiran-escaping-from-a-1637472974

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கூட்டத்தில் இருந்து சுமந்திரன் தப்பியோடும் வீடியோ வெளியானது!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கனடா கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்றில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி 'சுமந்திரன் தமிழினத் துரோகி' என்று கோசமிட்டு கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதன் காரணமாக குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுடதுடன், கூட்டத்தின் இடைநடுவே சுமந்திரன் வெளியேறிச் சென்றார்.

https://ibctamil.com/article/protest-against-sumanthiran-1637456804?itm_source=parsely-top

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ச்சாய்… மினக்கெட்டு கனடா வந்து, அவமானப் பட வேண்டி வந்திட்டுதே…

- சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்- 

இதுவே அவுஸ்ரேலியாவாக இருந்திருந்தால்.....?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

இதுவே அவுஸ்ரேலியாவாக இருந்திருந்தால்.....?:grin:

இனி, இங்கிலாந்தில்... என்ன நடக்கப் போகுதோ... 😂
அதையும்... பார்க்க, ஆவலாக உள்ளது. 🤣

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

இதுவே அவுஸ்ரேலியாவாக இருந்திருந்தால்.....?:grin:

ஒரு மனுசன் ஒரு வீடியோ எடுத்தது ஒரு குற்றம் எண்டு கண்டம் கண்டமா கண்டம் பண்ணுராங்க யுவர் ஆனார்🤣

4 minutes ago, தமிழ் சிறி said:

இனி, இங்கிலாந்தில்... என்ன நடக்கப் போகுதோ... 😂
அதையும்... பார்க்க, ஆவலாக உள்ளது. 🤣

நான் போ விடுப்பு பார்க்க போறன்😎.

* போய் ( புது உறுப்பினர் எடிட் செய்யவும் ஏலாதாம்🤦‍♂️).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கோஷானின் ஆவி said:

ஒரு மனுசன் ஒரு வீடியோ எடுத்தது ஒரு குற்றம் எண்டு கண்டம் கண்டமா கண்டம் பண்ணுராங்க யுவர் ஆனார்🤣

நான் போய் விடுப்பு பார்க்க போறன்😎.

Rotten tomatoes without picking on the plants || கட்டுப்படியான விலை  கிடைக்காததால்செடிகளில் பறிக்காமல் அழுகும் தக்காளி

கோஷானின் ஆவி... :grin:  மறக்காமல்... அழுகின தக்காளிப் பழம் கொண்டு போகவும். 😂
நீங்கள், வீடியோ எடுத்து.. உண்மை நிலவரத்தை, எமக்கு பதிவு செய்ய வேண்டும்.
மேலுள்ள காணொளியில்... "பச்சை  கள்ளன்" என்று ஒரு குரல் கேட்டதை  கவனித்தீர்களா. 🤣

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

Rotten tomatoes without picking on the plants || கட்டுப்படியான விலை  கிடைக்காததால்செடிகளில் பறிக்காமல் அழுகும் தக்காளி

மறக்காமல்... அழுகின தக்காளிப் பழம் கொண்டு போகவும். 😂
நீங்கள், வீடியோ எடுத்து.. உண்மை நிலவரத்தை, எமக்கு பதிவு செய்ய வேண்டும்.
மேலுள்ள காணொளியில்... "பச்சை  கள்ளன்" என்று ஒரு குரல் கேட்டதை  கவனித்தீர்களா. 🤣

மாஸ்க்கை போட்டு கொண்டு போய் மரண பங்கம் செய்ய ஆசைதான்🤣. ஆனால் பொலிஸ் பிடிக்குமோ எண்டுதான் பயமா கிடக்கு.

அது சரி உங்களுக்கு ஆவி பாசையும் விளங்குதா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கோஷானின் ஆவி said:

மாஸ்க்கை போட்டு கொண்டு போய் மரண பங்கம் செய்ய ஆசைதான்🤣. ஆனால் பொலிஸ் பிடிக்குமோ எண்டுதான் பயமா கிடக்கு.

அது சரி உங்களுக்கு ஆவி பாசையும் விளங்குதா🤣.

அப்படியென்றால்.. உரத்து, சுமந்திரனின்... காது குளிருகிற மாதிரி, சவுண்டை கொடுங்கோ.
மாஸ்க் போட்டிருக்கிற படியால்... "சவுண்டு" விட்டது யாரென்று கண்டு பிடிக்க மாட்டார்கள்.  🤣

எங்கடை சகவாசமே... ஆவிகளுடன் தான்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இதுவே அவுஸ்ரேலியாவாக இருந்திருந்தால்.....?:grin:

2015´ம் ஆண்டு....  அவுஸ்திரேலியாவில் சுமந்திரன், வாங்கிக் கட்டிய போது...   🤣

Link to comment
Share on other sites

8 minutes ago, தமிழ் சிறி said:

எங்கடை சகவாசமே... ஆவிகளுடன் தான்.... :grin:

அண்ணை என்ன நரகத்தில போட்டுட்டாங்கள் அண்ணை.

இஞ்ச பிரேமதாசா, கொப்பேகடுவ, லலித் எல்லாரும் நிக்கினம்.

கதிர்காமர் சுமந்திரனை விசாரிச்சதா சொல்ல சொல்லுறார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கோஷானின் ஆவி said:

அண்ணை என்ன நரகத்தில போட்டுட்டாங்கள் அண்ணை.

இஞ்ச பிரேமதாசா, கொப்பேகடுவ, லலித் எல்லாரும் நிக்கினம்.

கதிர்காமர் சுமந்திரனை விசாரிச்சதா சொல்ல சொல்லுறார்🤣.

அட... பெரிய கதிர்காமர், சின்னக் கதிர்காமரை விசாரித்து இருக்கிறார், 😂
சர்வதேச அளவில், சுமந்திரன் புகழ் ஓங்கி ஒலிக்குது.. என்று சொல்லி விடுங்கோ. 🤣

Link to comment
Share on other sites

11 minutes ago, தமிழ் சிறி said:

அட... பெரிய கதிர்காமர், சின்னக் கதிர்காமரை விசாரித்து இருக்கிறார், 😂
சர்வதேச அளவில், சுமந்திரன் புகழ் ஓங்கி ஒலிக்குது.. என்று சொல்லி விடுங்கோ. 🤣

ஆவி உலகில் கூட சுமந்திரன் தான் ஹாட் டாபிக்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கோஷானின் ஆவி said:

அண்ணை என்ன நரகத்தில போட்டுட்டாங்கள் அண்ணை.

இஞ்ச பிரேமதாசா, கொப்பேகடுவ, லலித் எல்லாரும் நிக்கினம்.

கதிர்காமர் சுமந்திரனை விசாரிச்சதா சொல்ல சொல்லுறார்🤣.

11 minutes ago, தமிழ் சிறி said:

அட... பெரிய கதிர்காமர், சின்னக் கதிர்காமரை விசாரித்து இருக்கிறார், 😂
சர்வதேச அளவில், சுமந்திரன் புகழ் ஓங்கி ஒலிக்குது.. என்று சொல்லி விடுங்கோ. 🤣

கனடாப்பக்கம் வராதை.......இனி வராதை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.