Jump to content

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. 

ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். 

இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகப் பொருளாதார நெருக்கடி சார்ந்ததும் அயலுறவுக் கொள்கை சார்ந்ததும் ஆகும். எனவே, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, வெறுமனே பொருளியல் நோக்கில் மட்டும் அணுகிவிட முடியாது. 

இந்த உண்மையை, ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், இது மிகவும் கசப்பான உண்மை. இது, இலங்கையின் அரசியல்-சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு சார் மாற்றங்களை வேண்டிநிற்கும். 

எனவே, இதை வசதியாகத் தவிர்த்துவிடுவது நல்லது. இதையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே, கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. 

இலங்கையின் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளை, பொருளியல் அடிப்படைகளில் நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கவியலும். 

1. பொதுக்கடனின் பாரிய அதிகரிப்பு

2. அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு

3. நிதிப்பற்றாக்குறை

4. முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை. 

இந்த நான்கையும் வரவு செலவுத் திட்டம் இனங்காணத் தவறுகிறது. இது தெரியாமல் நிகழ்ந்ததென்று எவரும் நம்பவில்லை. திட்டமிட்டே திசைதிருப்பும் யுத்தியாக, இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு வேறு காரணங்களைக் காட்டும் நோக்கில் அமைந்ததே இந்த பட்ஜெட். இதை, வரவு செலவுத் திட்ட உரையை முழுமையாகக் கேட்ட எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். 

image_d772aab121.jpg

இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் ஒன்று சுற்றுலாத்துறை. ஈஸ்டர் தாக்குதலும் அதைத் தொடர்ந்த கொவிட்-19 பெருந்தொற்றும் இத்துறையை முற்றாகச் சிதைத்துள்ளன. 

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, வரவு செலவுத் திட்ட உரையில், “கொரோனாவை வெற்றிகொண்டதன் விளைவால், சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக, பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மீட்டெடுப்பதற்கு எமக்கு இயலுமாகவிருந்தது” என்றார். இது, அரசாங்கம் உண்மையை ஏற்க மறுத்து, மக்களை ஏமாற்றுகின்றது என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் மட்டுமே!

நிதியமைச்சர், வரவு செலவுத் திட்ட உரையில், இலங்கையின் பிரதானமான மூன்று சவால்களாக இனங்கண்டவை பின்வருமாறு இருந்தன:

1. சர்வதேச போதைப்பொருள் மாபியா

2. நாட்டுக்குத் தீங்குவிளைவிக்கும் அந்நியச் சக்திகள்

3. மோசடியான வியாபாரத் தொழிற்பாடுகள். 

இதில் முதல் இரண்டும், இலங்கைக்கு வெளியே உள்ள காரணிகளைச் சுட்டுகின்றன. மூன்றாவது, மோசடியான வியாபாரத் தொழிற்பாடுகளை, இந்த அரசாங்கம் தான் ஊக்குவிக்கிறது. சான்றாக, பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி, விரும்பிய விலையில் பொருட்களை விற்பதற்கு, இதே நிதியமைச்சர் தான் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதியளித்தார். 

இலங்கையின் சவால்களை, வெளியே அடையாளம் காணுவது வசதியானதும் வாய்ப்பானதும் ஆகும். ஏனெனில், எதிரி வெளியே இருக்கிறான் என்பதனூடு தேசியவாதத்தை வளர்க்கமுடிகின்ற அதேவேளை, இதைக் கையாளுவதற்கான பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளவும் இயலுமாகிறது. 

இம்முறை பட்ஜெட்டின் பெரும்பகுதி, தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான மொத்தச் செலவீனத்தில் 15 சதவீதம் தேசிய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீத அதிகரிப்பாகும். இது, இலங்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதைக் கோடு காட்டுகிறது.  

இலங்கையர்களுக்கு இன்னமும் எஞ்சியுள்ள இரண்டு முக்கியமான சமூகப் பாதுகாப்புகள் இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் ஆகும். கடந்த மூன்று தசாப்தங்களாக அவை, திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கம், கல்வியையும் சுகாதாரத்தையும் எவ்வாறு நோக்குகிறது என்பதற்கு, வரவு செலவுத் திட்ட உரை நல்லதொரு சான்று.

நிதியமைச்சர் தனது உரையில், “கல்வி, சுகாதார வசதிகளில் அடையாளம் காணப்பட்ட மாவட்ட ஏற்றதாழ்வைக் குறைப்பதற்காக, எப்போதும் எமது அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது. இதற்காக, தனியார் துறையும் எப்போதும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளது. இம்முயற்சிகளை, மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன பாணியில் சர்வதேசப் பாடசாலையும் வைத்தியசாலையும் ஏற்படுத்துவதற்கு, முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு காணிகளையும் வரிச் சலுகைகளையும் வழங்குவதற்கு முன்மொழிகிறேன்” என்றார். 

ஏற்ற தாழ்வுகளைக் களைவதற்கு, தனியார் சர்வதேச பாடசாலைகளும் தனியார் வைத்தியசாலைகளும் உதவும் என்ற அரசாங்கத்தின் நோக்கு, அரசாங்கம் மக்களுக்கானது அல்ல; மாறாக, இலாபத்துக்கும் தனியாரின் நலன்களுக்குமானது என்ற உண்மையை, நிதியமைச்சர் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்; இது புதிதல்ல!  

நாட்டின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும், கடந்த 70 வருடகாலப் பாராளுமன்ற ஆட்சி ஊடாக, மாறி மாறி அதிகாரத்துக்கு  வந்தவர்களால் நாடு தேய்ந்து சென்றதே தவிர, வளர்ச்சி அடையவில்லை. அதிலும் குறிப்பாக, கடந்த 43 ஆண்டு (1978-2021) கால ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ், நாடு சகலதுறைகளிலும் சீரழிக்கப் பட்டே வந்துள்ளது. 1977இல் இருந்து, இரண்டு பிரதான விடயங்களை ஆட்சிக்கு வரும் பேரினவாத முதலாளித்துவ சக்திகளால் முன்னெடுக்கப்பட்டன. 

ஒன்று, உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ், தாராளமயம் -  தனியார்மயத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டமை.

இரண்டாவது, இன முரண்பாட்டை, பேரினவாத ஒடுக்குமுறையாக்கி, கொடிய யுத்தத்தைத் திணித்து வளர்த்தெடுத்தமை. 

இந்த இரண்டின் தொடர்ச்சியை, எந்தவொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் கைவிடவில்லை. இதன் தொடர்ச்சியையே முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலும் காண முடிகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளிலும், பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வந்துள்ளன. ரூபாயின் பெறுமதி, வீழ்ச்சி அடைந்து வந்துள்ளது. பணவீக்கம் உயர்வடைந்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்தினதும் விலைகள் உயர்ந்து உள்ளன. வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது, உழைக்கும் மக்கள் திணறி வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு வருடங்களில் பல மடங்காகப் பெருகி உள்ளது. 

பொருட்களின் அதிகரித்த விலை உயர்வுகளுக்கும் சேவைக் கட்டணங்களின் அதிகரிப்புகளுக்கும் கொரோனாவும் உலகச் சந்தையும் தான் காரணம் என, அரசாங்கத்தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளை, சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களை, இனஅடிப்படையில் ஒருவரோடு ஒருவர் மோத வைக்கப்படுகின்றனர்.

ரூபாயின் இன்றைய மதிப்பிறக்கத்தை, ஓர் இடைக்கால நிகழ்வாகக் கருதி, குறுகியகாலத் தீர்வுகளால் கையாள முயலும் போக்கே தொடர்கிறது. அதற்கான காரணங்களை, வசதியாகப் புறத்தே தேடி, தேசியவாத உணர்வுகளைக் கிளறுவதன் மூலம், காலங்கடத்த அரசாங்கம் நினைக்கிறது. அதேவேளை, ஊழலும் அதிகாரத் துர்ப்பாவனையும் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. இவை குறித்துப் பேச, அரசாங்கம் தயராக இல்லை. 

இலங்கையின் பொருளாதாரம், மிகப்பாரிய உள்ளார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகளை, ஒருபுறம் அரசாங்கம் மூடுகிறது. இன்னொருபுறம், இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல், அதற்கு இடம் கொடுக்க மறுக்கிறது. 

இந்த அரசாங்கம், கிராம மட்டத்தில் தனது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சில வேலைத் திட்டங்களை, பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளது. அது, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அரசநிதியை மறைமுகமாக வழங்கும் செயலன்றி மக்களுக்கானதல்ல. பொருளாதாரத்தைச் சீரமைக்காத, மக்களுக்கு எதையும் வழங்காத, இருப்பதையும் உருவிக்கொள்ளும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து, ஆதரவைப் பெற இவ்வரசாங்கத்தால் முடிந்திருக்கிறது. 

மக்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள். நாம் இழப்பதற்கு, இன்னமும் நிறைய இருக்கின்றன.  

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரவு-செலவுத்-திட்டம்-2022-கட்டியிருந்த-கந்தையும்-காணாமல்-போதல்/91-285607

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்கு ஒன்றுமில்லை.....!

பகிர்வுக்கு நன்றி கிருபன் ......!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.