Jump to content

புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார்?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664

பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்கா இராணுவம் கூட தண்டிக்கப்படாத போது, சிறிலங்கா இன அழிப்பு அரசே தமது கங்காரு நீதிமன்றில் விசாரிப்பதாக ஐநாவில் கூறியது 2015 ஆம் ஆண்டு தீர்மானித்த நீதிக்கான ஐநாவின் கலப்பு நீதிமன்றம் மற்றும் ஏனைய பொறிமுறைகளை பகிரங்கமாக மறுத்தது பற்றி இது வரை தாம் தமிழரின் நீதிக்காக செயல்படுகிறோம் என்று கூறிய சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்து கண்டிக்க தவறியுள்ளது. கடந்த January 15, 2021 அன்று மூன்று தமிழ் கட்சிகளும் ஈழத்திலிருந்து ஐநாவுக்கு தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிமன்று வேண்டும் என தெளிவாக கூறியும் இருந்தது.

ஐநா மற்றும் அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகளுக்கு ஐநாவில் தீர்மானித்த படி சர்வதேச நீதிமன்ற போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்காவுக்கு எதிராக உடனே ஆரம்பித்து சிறிலங்காவின் மறுப்பை பகிரங்கமாக நிராகரியுங்கள் என்று கேட்க வேண்டிய தமிழ் அமைப்புகள் சில சிறிலங்காவுடன் தாம் பேச தயார் என்று அறிக்கைகளில் ஈடுபட்டது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இழிவு செய்வதாக உள்ளது. இத்தகைய தெரிந்தே ஏமாற்றும் செயல்பாடுகளையும் அதை செய்யும் அமைப்புகளை நேரடியாக கண்டிப்பது அவசியம். புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்று காட்டுவது மட்டும் தான் இந்த அறிக்கைகளின் ஒரே நோக்கமாகவும் தேவையாகவும் உள்ளது. புலம் பெயர் தமிழர்களை தவறாக 2015 இல் பிரதிநிதி படுத்திய அமைப்புகளையும் அவர்களின் பொய் தோற்றத்தையும் இனம் காண்பது மிக அவசியமாகிறது. கடந்த 12 வருடத்தில் புலம் பெயர் தமிழரின் பிரதிநிதிகள் யார் என்பதையிட்டு சில தரவுகளை பகிர்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

1*XovuD7Z9qJWV5wER0a3Kow.jpeg
Tamils gathered large numbers in front of UK parliament in 2009 for ceacefire and justice

2009 இற்று முன்னர் தமிழீழம் என்று ஒரு நாட்டில் புலிகளும் மக்களும் தியாகங்களின் ஊடாக நிலை பெற்றிருந்த போது, புலம் பெயர் தமிழ் பிரதிநிதிகள் என்று ஒன்று வேண்டியதாக இருக்கவில்லை. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் ஓர்மம், அறம், தியாகம், வீரம், தமிழீழ நாட்டை உலகில் உன்னத மாண்புகளுடன் அமைத்தது, அதிலும் அதிக நேர்மையான தலைமை என பல விடயங்கள் மூலம் தான் பெருகியது. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் உறுதி மற்றும் வெளிப்படை தன்மையாலும் தான் பெருகி இருந்தது. பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு பொறுப்பு கூறுவதை அவர்கள் முதன்மையாக கொண்டிருந்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி இடைக்கால தீர்வாக ISGA போன்ற விடயங்கள் மற்றும் சர்வதேச பேச்சு வார்த்தைகளில் மக்களுக்கு தெளிவூட்டுவதில் மிக கவனமாகவும் இருந்தனர். இதனால் தான் மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து புலம் பெயர் தேசங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்த்தை உறுதிப்படுத்தினர். தமிழீழ அரசின் தூதர்களாகவே அன்றைய புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இயங்கின. 2009 இற்று பின்னர் தமிழீழ அரசும் புலிகளும் மறைந்த பின்னர் புலம் பெயர் தமிழருக்கு தலைமை எதுவும் இருக்கவில்லை. புலிகளின் கடைசி சர்வதேச தலைவர் KP பத்மநாதன் ஆகவே இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) புலிகளின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் புலிகளுக்கு கிடைத்த ஆதரவு TGTE இற்கு கிடைத்திருக்கவில்லை.

அதே கால பகுதியில் உலக தமிழர் பேரவை (GTF) பல நாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளால் உருவாக்க பட்டிருந்தது. இதே கால பகுதியில் TGTE இற்கு மாற்றாக மக்களவை (ICET) என்று ஒன்றும் உருவாகி இருந்தது. இதில் இன்று வரை குறைபாடுகள் மற்றும் செயல்பாடு போதாமல் இருந்தாலும் அன்று தொடங்கிய கொள்கையில் நிலைத்து இருப்பது TGTE மட்டுமே. GTF அமைப்பு இரு வருடம் இயங்கிய பின்னர் பேச்சாளர் சுரேந்திரன் ஈழத்தில் தமிழரசு கட்சி (TNA) சுமந்திரன் பிரிவுடன் இணைந்து சிறிலங்காவின் UNP கட்சியின் ஒரு பிரிவாக 2015 இல் இயங்க தொடங்கியது. ICET செயல்பாடுகள் இன்றி அறிக்கைகளுடன் முடங்கியது. மொத்தத்தில் புலிகள் இல்லாத தமிழினம் ஈழத்தில் நிலமும் இருப்பும் இழந்து போக புலத்திலும் தமிழ் அமைப்புகள் விலை போயும் உணர்விழந்தும் போயின. புலத்தில் தமிழ் அமைப்புகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருந்தும் அறிக்கைகளிலும் மூடிய அறைக்குள் பேச்சிலும் தாமும் மயங்கி மக்களையும் மயக்க முயன்றதே இவர்களின் தவறாகும்.

கடந்த பன்னிரண்டு வருடங்களில் முதல் நான்கு வருடங்கள் தான் நீதிக்கான முழு முயட்சிகளை புலம் பெயர் சமூகம் எடுத்திருந்தது. இதன் போது தமிழரசு கட்சி (TNA) இந்தியா புலிகளின் பின் தீர்வு தருவதாக நம்பியிருந்தது. அதனால் புலிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தாலும் அவர்களின் தலைமை புலிகளின் வரலாற்றை குறைசொல்வதிலேயே காலம் கடத்தியது. 2009 இலிருந்து 2014 வரை, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பல நாடுகளில் சிறு குழுக்களாக நீதிக்காக குரலெழுப்பினர். ஆனால் இந்த நீதிக்கான குரல்களை இலங்கையில் தமக்கு சார்பான ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க இந்தியா போன்ற நாடுகள் பாவித்தன. GTF (Global Tamil Forum), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), USTAG, ATC என்பன 2015 இலிருந்து இந்த ஆட்சி மாற்றத்தில் வந்த சிறிலங்காவின் UNP கட்சியுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு உழைப்பதாக கூறி நீதிக்கான குரல்களை குறைத்தன. பின்னர் GTF/TNA/CTC முழுமையாக சிறிலங்காவின் UNP என வலம் வர, ராஜபக்சே ஆட்சி சீனாவுடன் மீண்டும் 2019 இல் வர, 2020 இல் USTAG/ATC விலகிக்கொண்டன. முடிவில் 2020 இல் GTF முழுமையாக அழிந்தது. இதில் GTF/CTC/USTAG என்பன சிறிலங்கா அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தன ஆனால் இவற்றை புலம் பெயர் தமிழர்களுக்கு தெரிவிக்காமல் மறுத்திருந்தார். மொத்தத்தில் புலம் பெயர் தமிழரின் பலத்தை தவறாக பயன்படுத்தி அதை இழக்க செய்ததும் இந்த CTC/GTF/USTAG மூன்று அமைப்புகளும் தான். இதற்கான விளக்கத்தை இவர்கள் இதுவரை வழங்கவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்தும் தகுதியை முழுமையாக இழக்கிறார்கள்.

GTF அமைப்பு புலம் பெயர் தமிழர்களை இனி பிரதிநிதிப்படுத்த முடியாது என விளக்கமாக பல முறை அறிக்கைகள் கூறியிருந்தன. கனடிய தமிழர் பேரவை தவிர எஞ்சிய எல்லா அமைப்பும் இந்த கூட்டிலிருந்து விலகின. அண்மையில் அதன் பேச்சாளர் சுரேன் தம்முடன் கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏற்கனவே மூடப்பட்டிருந்த UK Tamil Congress போன்ற அமைப்புகள் மூன்றின் பெயர்களை கூறியிருந்தார். பின்கதவு பேச்சுக்களில் 2015 இல் இருந்து ஈடுபடுவதால் யாருமே இவர்களுடன் இல்லை. இல்லாத GTF அமைப்பை இருப்பதாக காட்டும் முயட்சியில் ஈடுபடுவது இந்தியா சிறிலங்கா நாடுகளுக்கு தமது முகவராக புலம் பெயர் தமிழர்களில் ஒரு அமைப்பு தேவை என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. CTC அமைப்பு புலிகள் காலத்தில் இருந்தபோதிலும் 2009 இற்று பின்னர் அது TNA போல புலிகளின் வரலாற்றை மறுத்து அவர்கள் மேல் பழியை போட்டு சிறிலங்கா UNP கட்சியின் வெளிநாட்டு கிளை போல இயங்குவதால். இந்த அமைப்புக்கும் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு இல்லை. மாறாக அது இன்று தெரு விழா மற்றும் பொது விழாக்கள் மட்டுமே இயக்கம் ஒன்றாக மாறியுள்ளது.

இதே கால பகுதியில் BTF, NCCT என்பன தமிழின அழிப்பு என்பதை கூறுவதில் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனாலும் இவர்களால் USTAG/ATC/CTC போன்றவற்றை தவிர்த்து செயல்பட முடியவில்லை. பொதுவாக புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ஐநாவில் பல வேலைகளை செய்ததாக கூறியிருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் UN ECOSOC அமைப்புகள் மூலம் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 300 ஈழம் சார்ந்த அறிக்கைகளை பார்க்கும் போது அதில் இந்த அமைப்புகளின் அறிக்கைகளை காண முடியாது. 2015 இற்று பின்னர் புலம் பெயர் அமைப்புகளின் பணி எப்படியானது என அறிவதோ அல்லது அது பற்றிய செயல் நிதி அறிக்கைகளோ மிக அரிது. இந்த நிலையில் கடந்த வருடம் ஐநாவின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை சொல்லும் போட்டி இப்போது எழுகிறது. அதுவும் சிறிலங்காவுடன் பேசப்போவதில் தான் இந்த போட்டி எழுவது பெரும் வியப்பு.

2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம். இதனை தொடர்ந்து தனிநபராக GTF சுரேன் தமது பங்குக்கு தானே பிரதிநிதி என அறிவித்தார். இதில் தம்முடன் இருக்கும் “UK Tamil Congress” 2020 இல் கலைக்க பட்டதை கூட தெரியாமல் கணக்கு காட்டி இருந்தார். இதை தொடர்ந்து BTF அமைப்பின் பிரமுகர் கூறினார் என IBC எட்டு தமிழ் அமைப்புகள் பேச தயார் என கூறி இருந்தது. பின்னர் NCET தமக்கும் இந்த கூட்டுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிஇருந்தது. USTAG இன் இஸ்தாபகர் ஒருவரும் இந்த அறிக்கை USTAG இன் சம்மதம் பெறாமல் வெளிவந்தது என கூறியிருந்தார். செய்தியில் NCCT நீக்கபட்டு CTC இன் பெயர் போடப்பட்டிருந்தது. முழுமையாக குழம்பி உள்ள இந்த எட்டு தமிழ் அமைப்புகளை யார் வழிநடுத்துகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது.

கடந்த பன்னிரண்டு வருடத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்ற நாடகம் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் வலிமையை பாரிய அளவில் பாதித்துள்ளது. இப்போது இதன் இரண்டாம் பாகம் இப்போது ஆரம்பமாகிறது. GTF/CTC போன்றவை 2015 இல் தமிழின அழிப்பு என்பதை வடக்கு மாகாண சபையே தெளிவாக தீர்மானமாக கூறிய பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது.

புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது. புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

இனி புலம் பெயர் தமிழர்கள் ஒரு கொள்கை கூட்டில் இணைவார்களே அன்றி இந்தியாவையே அமெரிக்காவையே பேச்சளவில் நம்பி ஏமாற தயாராக இல்லை. இதை நேரடியாக சொல்வதற்கும் தயங்கவும் போவதில்லை. நீதிக்கான முயட்சிகள் தொடரத்தான் போகின்றன. இன்னும் பல வருடங்களுக்கு புலம் பெயர் தமிழருக்கு பிரதிநிதி என்று ஒரு கூட்டு வர வாய்ப்பு கொள்கை அடிப்படையில் தான் இருக்கும். அதனால் தமிழ் அமைப்புகள் தாம் தான் பிரதிநிதி என்று பேச்சுக்கு செல்ல எத்தனிக்காமல் சிறு நீதிக்கான விடயங்களை செய்ய எத்தனிக்க வேண்டும். இல்லையேல் இந்த BTF/USTAG/ATC போன்ற அமைப்புகள் மேலும் அந்நியபட வேண்டி இருக்கும். இதில் USTAG அமைப்பை GTF/CTC ஐ தவிர்த்தது போல முழுமையாக எதிர்காலத்தில் தவிர்ப்பது தான் ஒரே வழி. இல்லையேல் அவர்களை கூட்டு சேர்க்கும் கூட்டுகள் அவர்களின் 2015 செயல்பாடுகளுக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும். உலகில் பரந்து இருக்கும் நீதிக்கான முயற்சிகளில் செயலாற்றி வரும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தமக்கான ஒரு கொள்கை சார் கூட்டை இப்போது ஆரம்பித்தால் இனிவரும் வருடங்களில் ஒரு நேர்மையான பொறுப்பான வெளிப்படையான புலம் பெயர் தமிழருக்கான பிரதிநிதிகளை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு உறுதியான புலம் பெயர் தமிழ் அமைப்பை தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அதை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது. ஆனால் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் கொள்கையளவில் ஒருங்கிணைந்து தமது நேரடி வாக்குகளால் இந்த பிரதிநிதித்துவத்தை அமைத்தால் இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எதிர்க்க முடியாது

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App storeTo  Medium work, we log user data. By using Medium, you agree to ourPrivacy Policy, including cookie policy
 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நல்ல தரமான பழைய கொள்ளைக்கூட்டங்களின் வரலாறுகளை இளந்தலைமுறைக்கு புகட்டும் அருமையான கட்டுரை. எல்லோரும் வாசித்து அறிய வேண்டியது.

 • Like 1
Link to comment
Share on other sites

எனக்கு இந்த நீண்ட கட்டுரையில் பிடித்த பகுதி இது:

"2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம்

அவசரமேயில்லை!. இன்னும் ஒரு 20 வருடம் காசும், செல்வாக்கும், அகதி விசாக் கோரிக்கையில் குடும்ப மீளிணைவும் சேர்த்து பிள்ளை குட்டிகளை செற்றிலாக்கி விட்டு நாம் ஒய்வெடுக்கும் வரை பொறுத்திருக்கலாம்! என்ன அவசரம் தீர்வுக்கு, பேச்சுக்கு? தாயக தமிழர் பிரச்சினைக்குப் பழக்கப் பட்ட ஆட்கள் - இன்னும் கொஞ்சம் பொறுத்தால் குறைஞ்சா போய் விடுவர்?😠

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அதில் அவர் கூறிய விடயம் உங்களுக்கு விளங்கவில்லை. தீடிரென கோத்தவுடன் பேசுவோம் என்று அறிக்கை விட்டதன் பின்னணீ அவர்கள் யாரோ ஒருவரின் அல்லது ஒரு சக்தியின்நூண்டுதலின் பேரிலேயே அதனை விட்டனர் என்னும் பொருளில் எழுதப்படுள்ளது.

இது எவ்வாறுநடந்தது என்பது ஓரளவு எனக்குத் தெரியும். அந்த அ றிக்கை  USTAG இல் இருந்து தீடிரென இராஜினமாச் செய்து GTF இன் பிரதினிதியாக பேட்டி க்டுக்கும் எலயசு ஜெராஜ்ஜினாலும் அவர்து மூன்று சகபாடிகளாலும் எழுதப்பட்டது. ரணில் தலமையினாலநல்லட்ச்சி அரசி அமைப்பிதிலும் சுமந்திரன் சுரேன் உடன் இவர்நெருங்கிச் செயற்பட்டவர்.

இவர் மேற்குலக உளவு அமைப்புக்களுடன் மிகநெருக்கமானவ்ர் என்பதே எனது அபிப்பிராயம். இவர் இருக்கும் அமெஇப்பிலேயெ ப்லருடன் முரண்பட்டும் இவர் தொடர்ந்து இருக்கிறார். GTF இல் இருந்து தாம் விலகுவதாக 2015 ஆம் ஆண்டே  USTAG அறிவுத்து இருந்தது அதன் பின்னரும் GTF இல் இவெர் பணிப்பளாரக இரகசியமாகச் செயற்பட்டார். GTF மேற்குலக உளவு அமைபுக்களால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதெ எனது கணிப்பு. இதில் இருப்பவர்கள் மர்மமான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் எந்த வெளிப்படை தனமியும் இவர்களிடம் கிடையாது. இவர்கள் எந்த மக்கள் சந்திப்பகளையோ கூட்டங்களஒயோநடாதுவதில்லை.

இவர்களின் பின்னால் செல்லும் மற்ற எட்டு மைப்புகளின்நிலை பரிதாபமானது.இதில் தலையில் உள்ளவர்களுக்கு இந்த புரட்டுக்கள் தெரியும்.ஆனால் கீழ் இருக்கும் சாதரண தொண்டர்களை இவர்கள் வெகு காலமாக ஏமாற்றி வருகிறார்கள். கேள்வி கெட்பவர்கள் மேல் தனிநபர் தாக்குதல் செய்வது அதன் மூலம் அவர்களை அமைப்பில் இருந்து ஓரங்கட்டுவது, இது தான் இவர்கள் காலம் காலமாச் செய்து தம் கதிரைகளில் தொடர்ந்தும் இருகிறார்கள்.இதை விட்டால் இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இதில் ஏமாற்றப்படுவது சாதாரணத் தொண்டர்களே. சிறுது காலம் வேலை செய்வார்கள்.ஓரளவு விளங்கிய பின் விட்டுச் சென்விறுடுவார்கள். இவர்கள் வேறு புது இளயோரைத் தேடிப் பிடித்து வேலை வாங்குவார்கள். யாரவது தலமை நோக்கிச் சென்றால் அவர்களையும் வெளியேறச் செய் து விடுவார்கள். அமைப்பை மிகவும் பலவீனமாக்கியவர்கள் எந்தப் பொறுப்புயும் எடுக்காது தொடர்ந்து தமது கதிரையைப் பாதுக்காப்பதிலே குறியாக இருப்பது வெட்கப் படவேண்டிய விடயம்.

Edited by narathar
 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, narathar said:

விளக்கத்திற்கு நன்றி நாரதர். நான் தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், மாறி யோசிக்கும் எல்லோரும் ஒரு உளவு அமைப்புடன் தான் வேலை செய்கின்றனர் என யோசிப்பதும் சந்தேகிப்பதும் சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. நானும் ஒரு அரசியல் சாரா தமிழ் அமைப்பில் ஒரு பதவியில் இருக்கிறேன். செயற்குழுவிலேயே மூன்று விதமான அணுகுமுறை, அபிப்பிராயத்தோடு இருப்பார்கள். ஆனால், இதனால் அவர்கள் இரகசிய நோக்கில் இயங்குகின்றனர் என சந்தேகிக்கலாமா? முடியாதல்லவா?. 

இப்படியான சந்தேகங்களை வெளியே அறிக்கைப் போராக விடாமல், நேராக ஒரு கூட்டத்தில் அழைத்து கேட்டு விட முடியாதா? அல்லது இது என் அப்பாவித் தனமான யோசனையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இது அப்பாவித்தனமான எண்ணம் தான். மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார். இது உங்களுக்கு வித்தியாசமானதாகத் தெரியவில்லையா? வெறும் கருத்து வேறுபாடு அல்ல இது. 

மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

14 hours ago, narathar said:

இந்த விடயத்தில் நான் அப்பாவி தான் போல, நேரே விடயத்தைப் பேசி முடித்து விட்டு நம் வேலையைப் பார்க்க நகர்வதே நான் செய்து வருவது.

ஆனால், மக்கள் செல்வாக்கு என்பது எந்த அமைப்பிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் இல்லையே? இதில் இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையென்று சொல்ல என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் புலம் பெயர் அரசியற் செயற்பாட்டாளர்கள் எல்லொருக்கும் தெரியும். இது ஒரு நாடகம். உண்மைகள் வெளிவரும். 
 
Link to comment
Share on other sites

On 22/11/2021 at 14:58, narathar said:

மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார்.

நீ்ங்கள் மேற்குலகின் எதிரியானால் சீனாவிடம் உதவி கேட்டுப்பாருங்கள். USTPAG மற்றும் GTF மேற்குலகுடன் சேர்ந்து வேலை செய்வது உலகறிந்தது. அமெரிக்க குடிமகன் அமெரிக்க அரசுடன் வேலை செய்யாமல் சீனாவுக்கும் ஈரானுக்குமா வேலை செய்வார்? 

On 22/11/2021 at 14:58, narathar said:

மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?

மக்கள் செல்வாக்குள்ள அமைப்புகள் தேர்தலில் வாக்கு கேட்க தான் தேவை. கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும் ஈழத்தில் மாவை சேனாதிராசாவும் இது பற்றி பாடமே நடத்துவார்களே? போனதில்லையா…? மேற்குலகுடன் இருபக்க நலன் தேடி இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்களும் தேவையில்லை, அவர்கள் தாம் செய்வது பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

நீ்ங்கள் மேற்குலகின் எதிரியானால் சீனாவிடம் உதவி கேட்டுப்பாருங்கள். USTPAG மற்றும் GTF மேற்குலகுடன் சேர்ந்து வேலை செய்வது உலகறிந்தது. அமெரிக்க குடிமகன் அமெரிக்க அரசுடன் வேலை செய்யாமல் சீனாவுக்கும் ஈரானுக்குமா வேலை செய்வார்? 

மக்கள் செல்வாக்குள்ள அமைப்புகள் தேர்தலில் வாக்கு கேட்க தான் தேவை. கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும் ஈழத்தில் மாவை சேனாதிராசாவும் இது பற்றி பாடமே நடத்துவார்களே? போனதில்லையா…? மேற்குலகுடன் இருபக்க நலன் தேடி இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்களும் தேவையில்லை, அவர்கள் தாம் செய்வது பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் தேவையில்லை.

நீங்கள் யாருடனும் வேலை செய்யுங்கள் ஆனால் தமிழ் மக்களின் நலன்களை விற்று அவர்களுக்கு வேலை செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். அமைப்பில் இருப்போரை ஏமாற்றாதீர். 

மேற்குலகம் தமது தலங்களையும் இந்திய தலங்களையும் மட்டுமே கவனத்தில் கொள்ள இவர்கள் கருவிகளாகப் பயன் படுகிறார்கள்.

இங்கே பேசப்படுவது தனி நபர் களின் பிரச்சனை அல்ல தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.

Link to comment
Share on other sites

53 minutes ago, narathar said:

மேலே கற்பகதரு சொல்வது தமிழர் விடயத்தில் நியாயமான அணுகுமுறை. ரணிலுடன் பேசி விட்டு வந்து எல்லாவற்றையும் வெளியே சொன்னதால் விக்கி ஐயா இன்றும் அரசியல் செய்ய இயலாத வெள்ளந்தி மனிதர் என்று மக்கள் கணக்குப் போட்டு வைத்திருக்கின்றனர்!

நீங்கள் சொல்லுங்கள்: மேற்கிற்கு அல்லது இந்தியாவுக்கு ஒரு விடயத்தைக் கொடுக்காமல் தமிழர்கள் எதைப் பெற முடியும் என நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு என்ன கடமை இருக்கிறது தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள? - moral responsibility இருக்கிறது என்று சொல்ல மாட்டீர்களென நினைக்கிறேன். உலக அரசியலில் moral responsibility என்பது ரொய்லெற் பேப்பர் போன்றது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் சொல்லனலுங்கள் இவர்களைக் கூப்பிட்டு கதைக்க அமெரிக்கா வுக்கு என்ன அவசியம் இருக்கிறது? 

எதை இவர்கள் கொடுக்கிறார்கள்? எதை அதற்குப் பதிலாக வாங்குகிறார்கள்? 

Link to comment
Share on other sites

2 hours ago, narathar said:

நீங்கள் சொல்லனலுங்கள் இவர்களைக் கூப்பிட்டு கதைக்க அமெரிக்கா வுக்கு என்ன அவசியம் இருக்கிறது? 

எதை இவர்கள் கொடுக்கிறார்கள்? எதை அதற்குப் பதிலாக வாங்குகிறார்கள்? 

நாரதர், நான் கேட்டது ஒரு பொதுக் கேள்வி. இவர்கள் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற திட்டத்திற்கு உதவுகிறார்கள் என நீங்கள் சொன்னீர்கள். அப்ப அது தான் இவர்கள் கொடுப்பது. அந்த ஆட்சி மாற்றம் தமிழருக்கு windfall ஆக இருந்தால் கூட  ஒத்துழைப்பதில் என்ன தவறு? 

இப்ப சொல்லுங்கள்: "இவர்கள்" அல்லாத நீங்கள், எதைக் கொடுத்து தமிழர் தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிற படி பெறுவீர்கள்? என்ன இருக்கிறது கொடுக்க?

அல்லது, ஒன்றுமே கொடுக்காமல் எப்படி இன்னொரு நாடு உதவும் என நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

 நான் எங்கே ஆட்சி மாற்றத் திட்டம் என்று எழுதினேன்? 

இங்கே தமிழர் மீதான மனித உரிமை விடயத்தையே அமெரிக்கா பயன் படுத்துகிறது. அதனால் தமிழர் தரப்பை பயன் படுத்துகிறது. நாம் இவ்வாறான தருணங்களையே எமது தேவைகளுக்கு பயன் படுத்த வேண்டும். அமெரிக்கா விடம் எமது அரசியல் கோரிக்கை களை முன் வைக்க வேண்டும். இதில் இவர்கள் மறைக்க என்ன இருக்கிறது? பொருளாதாரத்தில் நிலை குலைந்துள்ள சிறிலங்கா தனது ஏற்றுமதிச் சந்தைகளை இழக்காது. 

சுமந்திரன் எதைக் கேட்டார் என்று எவருக்காவது தெரியுமாயுமா? 

ஏன் பத்திரிகையாளரைச் சந்திப்பதை தவிர்க்கிறார்? 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.