Jump to content

புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார்?


Recommended Posts

https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664

 

 

 

பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்கா இராணுவம் கூட தண்டிக்கப்படாத போது, சிறிலங்கா இன அழிப்பு அரசே தமது கங்காரு நீதிமன்றில் விசாரிப்பதாக ஐநாவில் கூறியது 2015 ஆம் ஆண்டு தீர்மானித்த நீதிக்கான ஐநாவின் கலப்பு நீதிமன்றம் மற்றும் ஏனைய பொறிமுறைகளை பகிரங்கமாக மறுத்தது பற்றி இது வரை தாம் தமிழரின் நீதிக்காக செயல்படுகிறோம் என்று கூறிய சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்து கண்டிக்க தவறியுள்ளது. கடந்த January 15, 2021 அன்று மூன்று தமிழ் கட்சிகளும் ஈழத்திலிருந்து ஐநாவுக்கு தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிமன்று வேண்டும் என தெளிவாக கூறியும் இருந்தது.

ஐநா மற்றும் அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகளுக்கு ஐநாவில் தீர்மானித்த படி சர்வதேச நீதிமன்ற போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்காவுக்கு எதிராக உடனே ஆரம்பித்து சிறிலங்காவின் மறுப்பை பகிரங்கமாக நிராகரியுங்கள் என்று கேட்க வேண்டிய தமிழ் அமைப்புகள் சில சிறிலங்காவுடன் தாம் பேச தயார் என்று அறிக்கைகளில் ஈடுபட்டது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இழிவு செய்வதாக உள்ளது. இத்தகைய தெரிந்தே ஏமாற்றும் செயல்பாடுகளையும் அதை செய்யும் அமைப்புகளை நேரடியாக கண்டிப்பது அவசியம். புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்று காட்டுவது மட்டும் தான் இந்த அறிக்கைகளின் ஒரே நோக்கமாகவும் தேவையாகவும் உள்ளது. புலம் பெயர் தமிழர்களை தவறாக 2015 இல் பிரதிநிதி படுத்திய அமைப்புகளையும் அவர்களின் பொய் தோற்றத்தையும் இனம் காண்பது மிக அவசியமாகிறது. கடந்த 12 வருடத்தில் புலம் பெயர் தமிழரின் பிரதிநிதிகள் யார் என்பதையிட்டு சில தரவுகளை பகிர்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

1*XovuD7Z9qJWV5wER0a3Kow.jpeg
Tamils gathered large numbers in front of UK parliament in 2009 for ceacefire and justice

2009 இற்று முன்னர் தமிழீழம் என்று ஒரு நாட்டில் புலிகளும் மக்களும் தியாகங்களின் ஊடாக நிலை பெற்றிருந்த போது, புலம் பெயர் தமிழ் பிரதிநிதிகள் என்று ஒன்று வேண்டியதாக இருக்கவில்லை. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் ஓர்மம், அறம், தியாகம், வீரம், தமிழீழ நாட்டை உலகில் உன்னத மாண்புகளுடன் அமைத்தது, அதிலும் அதிக நேர்மையான தலைமை என பல விடயங்கள் மூலம் தான் பெருகியது. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் உறுதி மற்றும் வெளிப்படை தன்மையாலும் தான் பெருகி இருந்தது. பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு பொறுப்பு கூறுவதை அவர்கள் முதன்மையாக கொண்டிருந்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி இடைக்கால தீர்வாக ISGA போன்ற விடயங்கள் மற்றும் சர்வதேச பேச்சு வார்த்தைகளில் மக்களுக்கு தெளிவூட்டுவதில் மிக கவனமாகவும் இருந்தனர். இதனால் தான் மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து புலம் பெயர் தேசங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்த்தை உறுதிப்படுத்தினர். தமிழீழ அரசின் தூதர்களாகவே அன்றைய புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இயங்கின. 2009 இற்று பின்னர் தமிழீழ அரசும் புலிகளும் மறைந்த பின்னர் புலம் பெயர் தமிழருக்கு தலைமை எதுவும் இருக்கவில்லை. புலிகளின் கடைசி சர்வதேச தலைவர் KP பத்மநாதன் ஆகவே இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) புலிகளின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் புலிகளுக்கு கிடைத்த ஆதரவு TGTE இற்கு கிடைத்திருக்கவில்லை.

அதே கால பகுதியில் உலக தமிழர் பேரவை (GTF) பல நாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளால் உருவாக்க பட்டிருந்தது. இதே கால பகுதியில் TGTE இற்கு மாற்றாக மக்களவை (ICET) என்று ஒன்றும் உருவாகி இருந்தது. இதில் இன்று வரை குறைபாடுகள் மற்றும் செயல்பாடு போதாமல் இருந்தாலும் அன்று தொடங்கிய கொள்கையில் நிலைத்து இருப்பது TGTE மட்டுமே. GTF அமைப்பு இரு வருடம் இயங்கிய பின்னர் பேச்சாளர் சுரேந்திரன் ஈழத்தில் தமிழரசு கட்சி (TNA) சுமந்திரன் பிரிவுடன் இணைந்து சிறிலங்காவின் UNP கட்சியின் ஒரு பிரிவாக 2015 இல் இயங்க தொடங்கியது. ICET செயல்பாடுகள் இன்றி அறிக்கைகளுடன் முடங்கியது. மொத்தத்தில் புலிகள் இல்லாத தமிழினம் ஈழத்தில் நிலமும் இருப்பும் இழந்து போக புலத்திலும் தமிழ் அமைப்புகள் விலை போயும் உணர்விழந்தும் போயின. புலத்தில் தமிழ் அமைப்புகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருந்தும் அறிக்கைகளிலும் மூடிய அறைக்குள் பேச்சிலும் தாமும் மயங்கி மக்களையும் மயக்க முயன்றதே இவர்களின் தவறாகும்.

கடந்த பன்னிரண்டு வருடங்களில் முதல் நான்கு வருடங்கள் தான் நீதிக்கான முழு முயட்சிகளை புலம் பெயர் சமூகம் எடுத்திருந்தது. இதன் போது தமிழரசு கட்சி (TNA) இந்தியா புலிகளின் பின் தீர்வு தருவதாக நம்பியிருந்தது. அதனால் புலிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தாலும் அவர்களின் தலைமை புலிகளின் வரலாற்றை குறைசொல்வதிலேயே காலம் கடத்தியது. 2009 இலிருந்து 2014 வரை, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பல நாடுகளில் சிறு குழுக்களாக நீதிக்காக குரலெழுப்பினர். ஆனால் இந்த நீதிக்கான குரல்களை இலங்கையில் தமக்கு சார்பான ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க இந்தியா போன்ற நாடுகள் பாவித்தன. GTF (Global Tamil Forum), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), USTAG, ATC என்பன 2015 இலிருந்து இந்த ஆட்சி மாற்றத்தில் வந்த சிறிலங்காவின் UNP கட்சியுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு உழைப்பதாக கூறி நீதிக்கான குரல்களை குறைத்தன. பின்னர் GTF/TNA/CTC முழுமையாக சிறிலங்காவின் UNP என வலம் வர, ராஜபக்சே ஆட்சி சீனாவுடன் மீண்டும் 2019 இல் வர, 2020 இல் USTAG/ATC விலகிக்கொண்டன. முடிவில் 2020 இல் GTF முழுமையாக அழிந்தது. இதில் GTF/CTC/USTAG என்பன சிறிலங்கா அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தன ஆனால் இவற்றை புலம் பெயர் தமிழர்களுக்கு தெரிவிக்காமல் மறுத்திருந்தார். மொத்தத்தில் புலம் பெயர் தமிழரின் பலத்தை தவறாக பயன்படுத்தி அதை இழக்க செய்ததும் இந்த CTC/GTF/USTAG மூன்று அமைப்புகளும் தான். இதற்கான விளக்கத்தை இவர்கள் இதுவரை வழங்கவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்தும் தகுதியை முழுமையாக இழக்கிறார்கள்.

GTF அமைப்பு புலம் பெயர் தமிழர்களை இனி பிரதிநிதிப்படுத்த முடியாது என விளக்கமாக பல முறை அறிக்கைகள் கூறியிருந்தன. கனடிய தமிழர் பேரவை தவிர எஞ்சிய எல்லா அமைப்பும் இந்த கூட்டிலிருந்து விலகின. அண்மையில் அதன் பேச்சாளர் சுரேன் தம்முடன் கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏற்கனவே மூடப்பட்டிருந்த UK Tamil Congress போன்ற அமைப்புகள் மூன்றின் பெயர்களை கூறியிருந்தார். பின்கதவு பேச்சுக்களில் 2015 இல் இருந்து ஈடுபடுவதால் யாருமே இவர்களுடன் இல்லை. இல்லாத GTF அமைப்பை இருப்பதாக காட்டும் முயட்சியில் ஈடுபடுவது இந்தியா சிறிலங்கா நாடுகளுக்கு தமது முகவராக புலம் பெயர் தமிழர்களில் ஒரு அமைப்பு தேவை என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. CTC அமைப்பு புலிகள் காலத்தில் இருந்தபோதிலும் 2009 இற்று பின்னர் அது TNA போல புலிகளின் வரலாற்றை மறுத்து அவர்கள் மேல் பழியை போட்டு சிறிலங்கா UNP கட்சியின் வெளிநாட்டு கிளை போல இயங்குவதால். இந்த அமைப்புக்கும் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு இல்லை. மாறாக அது இன்று தெரு விழா மற்றும் பொது விழாக்கள் மட்டுமே இயக்கம் ஒன்றாக மாறியுள்ளது.

இதே கால பகுதியில் BTF, NCCT என்பன தமிழின அழிப்பு என்பதை கூறுவதில் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனாலும் இவர்களால் USTAG/ATC/CTC போன்றவற்றை தவிர்த்து செயல்பட முடியவில்லை. பொதுவாக புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ஐநாவில் பல வேலைகளை செய்ததாக கூறியிருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் UN ECOSOC அமைப்புகள் மூலம் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 300 ஈழம் சார்ந்த அறிக்கைகளை பார்க்கும் போது அதில் இந்த அமைப்புகளின் அறிக்கைகளை காண முடியாது. 2015 இற்று பின்னர் புலம் பெயர் அமைப்புகளின் பணி எப்படியானது என அறிவதோ அல்லது அது பற்றிய செயல் நிதி அறிக்கைகளோ மிக அரிது. இந்த நிலையில் கடந்த வருடம் ஐநாவின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை சொல்லும் போட்டி இப்போது எழுகிறது. அதுவும் சிறிலங்காவுடன் பேசப்போவதில் தான் இந்த போட்டி எழுவது பெரும் வியப்பு.

2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம். இதனை தொடர்ந்து தனிநபராக GTF சுரேன் தமது பங்குக்கு தானே பிரதிநிதி என அறிவித்தார். இதில் தம்முடன் இருக்கும் “UK Tamil Congress” 2020 இல் கலைக்க பட்டதை கூட தெரியாமல் கணக்கு காட்டி இருந்தார். இதை தொடர்ந்து BTF அமைப்பின் பிரமுகர் கூறினார் என IBC எட்டு தமிழ் அமைப்புகள் பேச தயார் என கூறி இருந்தது. பின்னர் NCET தமக்கும் இந்த கூட்டுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிஇருந்தது. USTAG இன் இஸ்தாபகர் ஒருவரும் இந்த அறிக்கை USTAG இன் சம்மதம் பெறாமல் வெளிவந்தது என கூறியிருந்தார். செய்தியில் NCCT நீக்கபட்டு CTC இன் பெயர் போடப்பட்டிருந்தது. முழுமையாக குழம்பி உள்ள இந்த எட்டு தமிழ் அமைப்புகளை யார் வழிநடுத்துகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது.

கடந்த பன்னிரண்டு வருடத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்ற நாடகம் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் வலிமையை பாரிய அளவில் பாதித்துள்ளது. இப்போது இதன் இரண்டாம் பாகம் இப்போது ஆரம்பமாகிறது. GTF/CTC போன்றவை 2015 இல் தமிழின அழிப்பு என்பதை வடக்கு மாகாண சபையே தெளிவாக தீர்மானமாக கூறிய பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது.

புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது. புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

இனி புலம் பெயர் தமிழர்கள் ஒரு கொள்கை கூட்டில் இணைவார்களே அன்றி இந்தியாவையே அமெரிக்காவையே பேச்சளவில் நம்பி ஏமாற தயாராக இல்லை. இதை நேரடியாக சொல்வதற்கும் தயங்கவும் போவதில்லை. நீதிக்கான முயட்சிகள் தொடரத்தான் போகின்றன. இன்னும் பல வருடங்களுக்கு புலம் பெயர் தமிழருக்கு பிரதிநிதி என்று ஒரு கூட்டு வர வாய்ப்பு கொள்கை அடிப்படையில் தான் இருக்கும். அதனால் தமிழ் அமைப்புகள் தாம் தான் பிரதிநிதி என்று பேச்சுக்கு செல்ல எத்தனிக்காமல் சிறு நீதிக்கான விடயங்களை செய்ய எத்தனிக்க வேண்டும். இல்லையேல் இந்த BTF/USTAG/ATC போன்ற அமைப்புகள் மேலும் அந்நியபட வேண்டி இருக்கும். இதில் USTAG அமைப்பை GTF/CTC ஐ தவிர்த்தது போல முழுமையாக எதிர்காலத்தில் தவிர்ப்பது தான் ஒரே வழி. இல்லையேல் அவர்களை கூட்டு சேர்க்கும் கூட்டுகள் அவர்களின் 2015 செயல்பாடுகளுக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும். உலகில் பரந்து இருக்கும் நீதிக்கான முயற்சிகளில் செயலாற்றி வரும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தமக்கான ஒரு கொள்கை சார் கூட்டை இப்போது ஆரம்பித்தால் இனிவரும் வருடங்களில் ஒரு நேர்மையான பொறுப்பான வெளிப்படையான புலம் பெயர் தமிழருக்கான பிரதிநிதிகளை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு உறுதியான புலம் பெயர் தமிழ் அமைப்பை தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அதை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது. ஆனால் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் கொள்கையளவில் ஒருங்கிணைந்து தமது நேரடி வாக்குகளால் இந்த பிரதிநிதித்துவத்தை அமைத்தால் இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எதிர்க்க முடியாது

 

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App storeTo  Medium work, we log user data. By using Medium, you agree to ourPrivacy Policy, including cookie policy
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நல்ல தரமான பழைய கொள்ளைக்கூட்டங்களின் வரலாறுகளை இளந்தலைமுறைக்கு புகட்டும் அருமையான கட்டுரை. எல்லோரும் வாசித்து அறிய வேண்டியது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு இந்த நீண்ட கட்டுரையில் பிடித்த பகுதி இது:

"2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம்

அவசரமேயில்லை!. இன்னும் ஒரு 20 வருடம் காசும், செல்வாக்கும், அகதி விசாக் கோரிக்கையில் குடும்ப மீளிணைவும் சேர்த்து பிள்ளை குட்டிகளை செற்றிலாக்கி விட்டு நாம் ஒய்வெடுக்கும் வரை பொறுத்திருக்கலாம்! என்ன அவசரம் தீர்வுக்கு, பேச்சுக்கு? தாயக தமிழர் பிரச்சினைக்குப் பழக்கப் பட்ட ஆட்கள் - இன்னும் கொஞ்சம் பொறுத்தால் குறைஞ்சா போய் விடுவர்?😠

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

 

எனக்கு இந்த நீண்ட கட்டுரையில் பிடித்த பகுதி இது:

"2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம்

அவசரமேயில்லை!. இன்னும் ஒரு 20 வருடம் காசும், செல்வாக்கும், அகதி விசாக் கோரிக்கையில் குடும்ப மீளிணைவும் சேர்த்து பிள்ளை குட்டிகளை செற்றிலாக்கி விட்டு நாம் ஒய்வெடுக்கும் வரை பொறுத்திருக்கலாம்! என்ன அவசரம் தீர்வுக்கு, பேச்சுக்கு? தாயக தமிழர் பிரச்சினைக்குப் பழக்கப் பட்ட ஆட்கள் - இன்னும் கொஞ்சம் பொறுத்தால் குறைஞ்சா போய் விடுவர்?😠

அதில் அவர் கூறிய விடயம் உங்களுக்கு விளங்கவில்லை. தீடிரென கோத்தவுடன் பேசுவோம் என்று அறிக்கை விட்டதன் பின்னணீ அவர்கள் யாரோ ஒருவரின் அல்லது ஒரு சக்தியின்நூண்டுதலின் பேரிலேயே அதனை விட்டனர் என்னும் பொருளில் எழுதப்படுள்ளது.

இது எவ்வாறுநடந்தது என்பது ஓரளவு எனக்குத் தெரியும். அந்த அ றிக்கை  USTAG இல் இருந்து தீடிரென இராஜினமாச் செய்து GTF இன் பிரதினிதியாக பேட்டி க்டுக்கும் எலயசு ஜெராஜ்ஜினாலும் அவர்து மூன்று சகபாடிகளாலும் எழுதப்பட்டது. ரணில் தலமையினாலநல்லட்ச்சி அரசி அமைப்பிதிலும் சுமந்திரன் சுரேன் உடன் இவர்நெருங்கிச் செயற்பட்டவர்.

இவர் மேற்குலக உளவு அமைப்புக்களுடன் மிகநெருக்கமானவ்ர் என்பதே எனது அபிப்பிராயம். இவர் இருக்கும் அமெஇப்பிலேயெ ப்லருடன் முரண்பட்டும் இவர் தொடர்ந்து இருக்கிறார். GTF இல் இருந்து தாம் விலகுவதாக 2015 ஆம் ஆண்டே  USTAG அறிவுத்து இருந்தது அதன் பின்னரும் GTF இல் இவெர் பணிப்பளாரக இரகசியமாகச் செயற்பட்டார். GTF மேற்குலக உளவு அமைபுக்களால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதெ எனது கணிப்பு. இதில் இருப்பவர்கள் மர்மமான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் எந்த வெளிப்படை தனமியும் இவர்களிடம் கிடையாது. இவர்கள் எந்த மக்கள் சந்திப்பகளையோ கூட்டங்களஒயோநடாதுவதில்லை.

இவர்களின் பின்னால் செல்லும் மற்ற எட்டு மைப்புகளின்நிலை பரிதாபமானது.இதில் தலையில் உள்ளவர்களுக்கு இந்த புரட்டுக்கள் தெரியும்.ஆனால் கீழ் இருக்கும் சாதரண தொண்டர்களை இவர்கள் வெகு காலமாக ஏமாற்றி வருகிறார்கள். கேள்வி கெட்பவர்கள் மேல் தனிநபர் தாக்குதல் செய்வது அதன் மூலம் அவர்களை அமைப்பில் இருந்து ஓரங்கட்டுவது, இது தான் இவர்கள் காலம் காலமாச் செய்து தம் கதிரைகளில் தொடர்ந்தும் இருகிறார்கள்.இதை விட்டால் இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இதில் ஏமாற்றப்படுவது சாதாரணத் தொண்டர்களே. சிறுது காலம் வேலை செய்வார்கள்.ஓரளவு விளங்கிய பின் விட்டுச் சென்விறுடுவார்கள். இவர்கள் வேறு புது இளயோரைத் தேடிப் பிடித்து வேலை வாங்குவார்கள். யாரவது தலமை நோக்கிச் சென்றால் அவர்களையும் வெளியேறச் செய் து விடுவார்கள். அமைப்பை மிகவும் பலவீனமாக்கியவர்கள் எந்தப் பொறுப்புயும் எடுக்காது தொடர்ந்து தமது கதிரையைப் பாதுக்காப்பதிலே குறியாக இருப்பது வெட்கப் படவேண்டிய விடயம்.

Edited by narathar
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

அதில் அவர் கூறிய விடயம் உங்களுக்கு விளங்கவில்லை. தீடிரென கோத்தவுடன் பேசுவோம் என்று அறிக்கை விட்டதன் பின்னணீ அவர்கள் யாரோ ஒருவரின் அல்லது ஒரு சக்தியின்நூண்டுதலின் பேரிலேயே அதனை விட்டனர் என்னும் பொருளில் எழுதப்படுள்ளது.

இது எவ்வாறுநடந்தது என்பது ஓரளவு எனக்குத் தெரியும். அந்த அ றிக்கை  USTAG இல் இருந்து தீடிரென இராஜினமாச் செய்து GTF இன் பிரதினிதியாக பேட்டி க்டுக்கும் எலயசு ஜெராஜ்ஜினாலும் அவர்து மூன்று சகபாடிகளாலும் எழுதப்பட்டது. ரணில் தலமையினாலநல்லட்ச்சி அரசி அமைப்பிதிலும் சுமந்திரன் சுரேன் உடன் இவர்நெருங்கிச் செயற்பட்டவர்.

இவர் மேற்குலக உளவு அமைப்புக்களுடன் மிகநெருக்கமானவ்ர் என்பதே எனது அபிப்பிராயம். இவர் இருக்கும் அமெஇப்பிலேயெ ப்லருடன் முரண்பட்டும் இவர் தொடர்ந்து இருக்கிறார். GTF இல் இருந்து தாம் விலகுவதாக 2015 ஆம் ஆண்டே  USTAG அறிவுத்து இருந்தது அதன் பின்னரும் GTF இல் இவெர் பணிப்பளாரக இரகசியமாகச் செயற்பட்டார். GTF மேற்குலக உளவு அமைபுக்களால் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என்பதெ எனது கணிப்பு. இதில் இருப்பவர்கள் மர்மமான செயற்பாடுகளைக் கொண்டவர்கள் எந்த வெளிப்படை தனமியும் இவர்களிடம் கிடையாது. இவர்கள் எந்த மக்கள் சந்திப்பகளையோ கூட்டங்களஒயோநடாதுவதில்லை.

இவர்களின் பின்னால் செல்லும் மற்ற எட்டு மைப்புகளின்நிலை பரிதாபமானது.இதில் தலையில் உள்ளவர்களுக்கு இந்த புரட்டுக்கள் தெரியும்.ஆனால் கீழ் இருக்கும் சாதரண தொண்டர்களை இவர்கள் வெகு காலமாக ஏமாற்றி வருகிறார்கள். கேள்வி கெட்பவர்கள் மேல் தனிநபர் தாக்குதல் செய்வது அதன் மூலம் அவர்களை அமைப்பில் இருந்து ஓரங்கட்டுவது, இது தான் இவர்கள் காலம் காலமாச் செய்து தம் கதிரைகளில் தொடர்ந்தும் இருகிறார்கள்.இதை விட்டால் இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இதில் ஏமாற்றப்படுவது சாதாரணத் தொண்டர்களே. சிறுது காலம் வேலை செய்வார்கள்.ஓரளவு விளங்கிய பின் விட்டுச் சென்விறுடுவார்கள். இவர்கள் வேறு புது இளயோரைத் தேடிப் பிடித்து வேலை வாங்குவார்கள். யாரவது தலமை நோக்கிச் சென்றால் அவர்களையும் வெளியேறச் செய் து விடுவார்கள். அமைப்பை மிகவும் பலவீனமாக்கியவர்கள் எந்தப் பொறுப்புயும் எடுக்காது தொடர்ந்து தமது கதிரையைப் பாதுக்காப்பதிலே குறியாக இருப்பது வெட்கப் படவேண்டிய விடயம்.

விளக்கத்திற்கு நன்றி நாரதர். நான் தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், மாறி யோசிக்கும் எல்லோரும் ஒரு உளவு அமைப்புடன் தான் வேலை செய்கின்றனர் என யோசிப்பதும் சந்தேகிப்பதும் சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. நானும் ஒரு அரசியல் சாரா தமிழ் அமைப்பில் ஒரு பதவியில் இருக்கிறேன். செயற்குழுவிலேயே மூன்று விதமான அணுகுமுறை, அபிப்பிராயத்தோடு இருப்பார்கள். ஆனால், இதனால் அவர்கள் இரகசிய நோக்கில் இயங்குகின்றனர் என சந்தேகிக்கலாமா? முடியாதல்லவா?. 

இப்படியான சந்தேகங்களை வெளியே அறிக்கைப் போராக விடாமல், நேராக ஒரு கூட்டத்தில் அழைத்து கேட்டு விட முடியாதா? அல்லது இது என் அப்பாவித் தனமான யோசனையா?

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

விளக்கத்திற்கு நன்றி நாரதர். நான் தவறாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், மாறி யோசிக்கும் எல்லோரும் ஒரு உளவு அமைப்புடன் தான் வேலை செய்கின்றனர் என யோசிப்பதும் சந்தேகிப்பதும் சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. நானும் ஒரு அரசியல் சாரா தமிழ் அமைப்பில் ஒரு பதவியில் இருக்கிறேன். செயற்குழுவிலேயே மூன்று விதமான அணுகுமுறை, அபிப்பிராயத்தோடு இருப்பார்கள். ஆனால், இதனால் அவர்கள் இரகசிய நோக்கில் இயங்குகின்றனர் என சந்தேகிக்கலாமா? முடியாதல்லவா?. 

இப்படியான சந்தேகங்களை வெளியே அறிக்கைப் போராக விடாமல், நேராக ஒரு கூட்டத்தில் அழைத்து கேட்டு விட முடியாதா? அல்லது இது என் அப்பாவித் தனமான யோசனையா?

இது அப்பாவித்தனமான எண்ணம் தான். மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார். இது உங்களுக்கு வித்தியாசமானதாகத் தெரியவில்லையா? வெறும் கருத்து வேறுபாடு அல்ல இது. 

மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, narathar said:

இது அப்பாவித்தனமான எண்ணம் தான். மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார். இது உங்களுக்கு வித்தியாசமானதாகத் தெரியவில்லையா? வெறும் கருத்து வேறுபாடு அல்ல இது. 

மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?

இந்த விடயத்தில் நான் அப்பாவி தான் போல, நேரே விடயத்தைப் பேசி முடித்து விட்டு நம் வேலையைப் பார்க்க நகர்வதே நான் செய்து வருவது.

ஆனால், மக்கள் செல்வாக்கு என்பது எந்த அமைப்பிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் இல்லையே? இதில் இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையென்று சொல்ல என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை. 

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

இந்த விடயத்தில் நான் அப்பாவி தான் போல, நேரே விடயத்தைப் பேசி முடித்து விட்டு நம் வேலையைப் பார்க்க நகர்வதே நான் செய்து வருவது.

ஆனால், மக்கள் செல்வாக்கு என்பது எந்த அமைப்பிற்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் இல்லையே? இதில் இவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையென்று சொல்ல என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை. 

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் புலம் பெயர் அரசியற் செயற்பாட்டாளர்கள் எல்லொருக்கும் தெரியும். இது ஒரு நாடகம். உண்மைகள் வெளிவரும். 
 

Link to comment
Share on other sites

On 22/11/2021 at 14:58, narathar said:

மேற்குலகின் ஆட்சி மாற்ற திட்டத்தில் பங்கு கொள்கிறார் அமைப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பற்றித் தெரியாது. பின்னர் சமந்திரனடன் வேறு ஒரு அமைப்பின் சார்பில் பஙீகு கொள்கிறார்.

நீ்ங்கள் மேற்குலகின் எதிரியானால் சீனாவிடம் உதவி கேட்டுப்பாருங்கள். USTPAG மற்றும் GTF மேற்குலகுடன் சேர்ந்து வேலை செய்வது உலகறிந்தது. அமெரிக்க குடிமகன் அமெரிக்க அரசுடன் வேலை செய்யாமல் சீனாவுக்கும் ஈரானுக்குமா வேலை செய்வார்? 

On 22/11/2021 at 14:58, narathar said:

மேலும் வேறு எந்த அமைப்பை யும் அழைக்காமல் எந்த மக்கள் செல்வாக்கும் அற்ற ஒரு அமைப்பு மட்டுமே அழைக்கப் பட்டிருப்பது உங்களுக்கு வித்தியாசமகத் தெரியவில்லையா?

மக்கள் செல்வாக்குள்ள அமைப்புகள் தேர்தலில் வாக்கு கேட்க தான் தேவை. கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும் ஈழத்தில் மாவை சேனாதிராசாவும் இது பற்றி பாடமே நடத்துவார்களே? போனதில்லையா…? மேற்குலகுடன் இருபக்க நலன் தேடி இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்களும் தேவையில்லை, அவர்கள் தாம் செய்வது பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, கற்பகதரு said:

நீ்ங்கள் மேற்குலகின் எதிரியானால் சீனாவிடம் உதவி கேட்டுப்பாருங்கள். USTPAG மற்றும் GTF மேற்குலகுடன் சேர்ந்து வேலை செய்வது உலகறிந்தது. அமெரிக்க குடிமகன் அமெரிக்க அரசுடன் வேலை செய்யாமல் சீனாவுக்கும் ஈரானுக்குமா வேலை செய்வார்? 

மக்கள் செல்வாக்குள்ள அமைப்புகள் தேர்தலில் வாக்கு கேட்க தான் தேவை. கனடாவில் ஹரி ஆனந்தசங்கரியும் ஈழத்தில் மாவை சேனாதிராசாவும் இது பற்றி பாடமே நடத்துவார்களே? போனதில்லையா…? மேற்குலகுடன் இருபக்க நலன் தேடி இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்களும் தேவையில்லை, அவர்கள் தாம் செய்வது பற்றி மற்றவர்களுக்கு சொல்லவும் தேவையில்லை.

நீங்கள் யாருடனும் வேலை செய்யுங்கள் ஆனால் தமிழ் மக்களின் நலன்களை விற்று அவர்களுக்கு வேலை செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். அமைப்பில் இருப்போரை ஏமாற்றாதீர். 

மேற்குலகம் தமது தலங்களையும் இந்திய தலங்களையும் மட்டுமே கவனத்தில் கொள்ள இவர்கள் கருவிகளாகப் பயன் படுகிறார்கள்.

இங்கே பேசப்படுவது தனி நபர் களின் பிரச்சனை அல்ல தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, narathar said:

நீங்கள் யாருடனும் வேலை செய்யுங்கள் ஆனால் தமிழ் மக்களின் நலன்களை விற்று அவர்களுக்கு வேலை செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். அமைப்பில் இருப்போரை ஏமாற்றாதீர். 

மேற்குலகம் தமது தலங்களையும் இந்திய தலங்களையும் மட்டுமே கவனத்தில் கொள்ள இவர்கள் கருவிகளாகப் பயன் படுகிறார்கள்.

இங்கே பேசப்படுவது தனி நபர் களின் பிரச்சனை அல்ல தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.

மேலே கற்பகதரு சொல்வது தமிழர் விடயத்தில் நியாயமான அணுகுமுறை. ரணிலுடன் பேசி விட்டு வந்து எல்லாவற்றையும் வெளியே சொன்னதால் விக்கி ஐயா இன்றும் அரசியல் செய்ய இயலாத வெள்ளந்தி மனிதர் என்று மக்கள் கணக்குப் போட்டு வைத்திருக்கின்றனர்!

நீங்கள் சொல்லுங்கள்: மேற்கிற்கு அல்லது இந்தியாவுக்கு ஒரு விடயத்தைக் கொடுக்காமல் தமிழர்கள் எதைப் பெற முடியும் என நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு என்ன கடமை இருக்கிறது தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள? - moral responsibility இருக்கிறது என்று சொல்ல மாட்டீர்களென நினைக்கிறேன். உலக அரசியலில் moral responsibility என்பது ரொய்லெற் பேப்பர் போன்றது!

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

மேலே கற்பகதரு சொல்வது தமிழர் விடயத்தில் நியாயமான அணுகுமுறை. ரணிலுடன் பேசி விட்டு வந்து எல்லாவற்றையும் வெளியே சொன்னதால் விக்கி ஐயா இன்றும் அரசியல் செய்ய இயலாத வெள்ளந்தி மனிதர் என்று மக்கள் கணக்குப் போட்டு வைத்திருக்கின்றனர்!

நீங்கள் சொல்லுங்கள்: மேற்கிற்கு அல்லது இந்தியாவுக்கு ஒரு விடயத்தைக் கொடுக்காமல் தமிழர்கள் எதைப் பெற முடியும் என நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு என்ன கடமை இருக்கிறது தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள? - moral responsibility இருக்கிறது என்று சொல்ல மாட்டீர்களென நினைக்கிறேன். உலக அரசியலில் moral responsibility என்பது ரொய்லெற் பேப்பர் போன்றது!

நீங்கள் சொல்லனலுங்கள் இவர்களைக் கூப்பிட்டு கதைக்க அமெரிக்கா வுக்கு என்ன அவசியம் இருக்கிறது? 

எதை இவர்கள் கொடுக்கிறார்கள்? எதை அதற்குப் பதிலாக வாங்குகிறார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, narathar said:

நீங்கள் சொல்லனலுங்கள் இவர்களைக் கூப்பிட்டு கதைக்க அமெரிக்கா வுக்கு என்ன அவசியம் இருக்கிறது? 

எதை இவர்கள் கொடுக்கிறார்கள்? எதை அதற்குப் பதிலாக வாங்குகிறார்கள்? 

நாரதர், நான் கேட்டது ஒரு பொதுக் கேள்வி. இவர்கள் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற திட்டத்திற்கு உதவுகிறார்கள் என நீங்கள் சொன்னீர்கள். அப்ப அது தான் இவர்கள் கொடுப்பது. அந்த ஆட்சி மாற்றம் தமிழருக்கு windfall ஆக இருந்தால் கூட  ஒத்துழைப்பதில் என்ன தவறு? 

இப்ப சொல்லுங்கள்: "இவர்கள்" அல்லாத நீங்கள், எதைக் கொடுத்து தமிழர் தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிற படி பெறுவீர்கள்? என்ன இருக்கிறது கொடுக்க?

அல்லது, ஒன்றுமே கொடுக்காமல் எப்படி இன்னொரு நாடு உதவும் என நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Just now, Justin said:

நாரதர், நான் கேட்டது ஒரு பொதுக் கேள்வி. இவர்கள் அமெரிக்காவின் ஆட்சி மாற்ற திட்டத்திற்கு உதவுகிறார்கள் என நீங்கள் சொன்னீர்கள். அப்ப அது தான் இவர்கள் கொடுப்பது. அந்த ஆட்சி மாற்றம் தமிழருக்கு windfall ஆக இருந்தால் கூட  ஒத்துழைப்பதில் என்ன தவறு? 

இப்ப சொல்லுங்கள்: "இவர்கள்" அல்லாத நீங்கள், எதைக் கொடுத்து தமிழர் தீர்வை நீங்கள் எதிர்பார்க்கிற படி பெறுவீர்கள்? என்ன இருக்கிறது கொடுக்க?

அல்லது, ஒன்றுமே கொடுக்காமல் எப்படி இன்னொரு நாடு உதவும் என நினைக்கிறீர்கள்?

 நான் எங்கே ஆட்சி மாற்றத் திட்டம் என்று எழுதினேன்? 

 

இங்கே தமிழர் மீதான மனித உரிமை விடயத்தையே அமெரிக்கா பயன் படுத்துகிறது. அதனால் தமிழர் தரப்பை பயன் படுத்துகிறது. நாம் இவ்வாறான தருணங்களையே எமது தேவைகளுக்கு பயன் படுத்த வேண்டும். அமெரிக்கா விடம் எமது அரசியல் கோரிக்கை களை முன் வைக்க வேண்டும். இதில் இவர்கள் மறைக்க என்ன இருக்கிறது? பொருளாதாரத்தில் நிலை குலைந்துள்ள சிறிலங்கா தனது ஏற்றுமதிச் சந்தைகளை இழக்காது. 

சுமந்திரன் எதைக் கேட்டார் என்று எவருக்காவது தெரியுமாயுமா? 

 

ஏன் பத்திரிகையாளரைச் சந்திப்பதை தவிர்க்கிறார்? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அருமை... பட்டினி கிடந்தாலும், பிரிட்டிஷ்காரன் பிடிச்சுத்தந்த தமிழர் நாட்டினை விட மாட்டோம். பின்ன பண்ணிப்பாருங்கோவன்.  😁
    • பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் - சீமான் By RAJEEBAN 08 FEB, 2023 | 12:00 PM பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.   சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனிமலை திருக்கோயில் அடிவாரத்தில் ஓடும் சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயரமுள்ள உலோகத்திலான வேலினை தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக அகற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வழிபட தற்காலிகமாக நிறுவப்படுகின்ற வேலினை, இந்த ஆண்டு அனுமதி மறுத்து வலுக்கட்டாயமாக அகற்றியிருப்பது எதேச்சதிகாரப்போக்காகும். தமிழ்நாட்டில் எண்ணற்ற வடநாட்டு சாமிகளுக்கும், சாமியார்களுக்கும் சிலைகளும், கோயில்களும், மடங்களும் பல்லாயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் புதிதாகப் பொது இடங்களில் முளைத்தும் வருகின்றன. அவற்றை எல்லாம் மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றுகூறி அகற்றவோ, நிறுவக்கூடாது என்று தடுக்கவோ திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?.   அவற்றையெல்லாம் எவ்வித வரையறையும் இன்றி அனுமதித்துவிட்டு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனுக்காக சண்முகா நதிக்கரை ஓரத்தில் மெய்யன்பர்களால் தற்காலிகமாக வைக்கப்பட்ட வேலினை இரவோடு இரவாக அகற்றியது ஏன்? 60 ஆண்டுகள் ஆண்ட திராவிட ஆட்சியினாரால் ஏராளமான நீர்நிலைகளும், வழித்தடங்களும், பொது இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, பொதுமக்கள் யாரும் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்காதபோது வேலினை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?.   தமிழர்களின் மெய்யியல் கூறுகளைத் திருடி தன்வயப்படுத்திய வடநாட்டு ஆரியர்களிடமிருந்து அவற்றை மீட்டுக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் செய்யாத திராவிட ஆட்சியாளர்கள், அவற்றை மூட நம்பிக்கை, முட்டாள்தனம் என்றெல்லாம் விமர்சித்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும், வழிபாட்டு முறைமைகளையும் ஆரியருக்குத் தாரைவார்த்தனர். Also Read - வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள் அதுமட்டுமின்றி தமிழர் மெய்யியலையும், வழிபாட்டு முறைமைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும் வருகின்றனர். அதன் நீட்சியாகவே தற்போது பழனியில் தற்காலிகமாக நிறுவப்பட்ட முருக வேலினை இரவோடு இரவாக அகற்றிய திமுக அரசின் அத்துமீறிய நடவடிக்கையாகும். கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடியான தமிழ்க்குடியின் வீரத்தின் அடையாளமாகவும், போர்க்கலையின் வடிவமாகவும் திகழ்வது வேலாகும். ஒவ்வொரு ஆண்டும் பழனிமலைக்கு வரும் மெய்யன்பர்கள் சண்முகா நதிக்கரையில் நிறுவப்படும் முருகனது வேலினை வணங்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வந்த நிலையில், அதனை திமுக அரசு அகற்றியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, தமிழ்நாடு அரசு மெய்யன்பர்களின் கோரிக்கையை ஏற்று பழனிமலை சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை அகற்றிய இடத்திலேயே நிரந்தரமாக நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/147687
    • 13ஐ தீயிட்டு கொளுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம் நீதிமன்ற தடையுத்தரவை மீறி பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசிக்க முற்பட்டதால் அமைதியற்ற நிலை By T. SARANYA 08 FEB, 2023 | 04:03 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை கொழும்பில் பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது 'தனிப்பட்ட பிரேரணையூடாக 13ஐ நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. ' என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்தோடு கடந்த 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு அற்றிய விசேட உரையின் போதும் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு வழங்கப்படும் என்றும் , எனினும் நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்' குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை பேரகும்பா பிரிவெனாவில் விசேட சங்க மாநாடொன்றும் இடம்பெற்றது. அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் பாராளுமன்ற வீதியின் ஊடாக பொல்துவ சந்தியைச் சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு நுழைய முயற்சித்தனர். இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதாக பௌத்த பிக்குகள் அறிவித்திருந்த போதிலும் , குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்தல் அத்துமீறிச் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் நுழைவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் தடை விதித்திருந்ததன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு அத்துமீறிச் செல்ல முயற்சித்தனர். எவ்வாறிருப்பினும் இவர்களை பாராளுமன்ற சுற்று வட்டத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொல்துவ சந்தியில் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக குறித்த பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்கள் முற்றாக முடங்கின. இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். அத்தோடு இதன் போது மஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரரினால் 13ஆவது அரசியலமைப்பின் பிரதியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. 'இனியொரு போதும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.' என்று கோஷமெழுப்பியவாறு அவர் அந்த பிரதியை எரித்தார். இதேவேளை, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் காமந்த துஷார என்ற நபர் ஆகியோர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும் , அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமையினால் பின்னர் பொலிஸ் பொறுப்பிலெடுக்கப்பட்டனர். மேலும் 13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகிரிய - ஜயநேகராமயவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு. ஜே.சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/147719
    • காசி ஆனந்தனாக மாறிய காளிமுத்து சிவானந்தன் வைகாசி 6 ஆம் திகதி மாலைவேளை, நல்லூர் முடமாவடிப்பகுதியில் அமைந்திருந்த பத்மனாதனின் வீட்டிற்கு அருகில் தனது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை தங்கத்துரை வேவுபார்க்க அனுப்பியிருந்தார். இருள் பரவத் தொடங்கியவேளை பத்மானாதனும் அவரது மனைவியும் காரில் ஏறிச் சென்றதாக அவருக்கு உறுப்பினர்கள் செய்தியனுப்பினர். அதனையடுத்து பத்மனாதனின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் அவரது உறுப்பினர்கள் சிலரும், அங்கிருந்த பத்மனாதனின் பிள்ளைகள் ஒருவரிடம் தாம் பத்மனாதனின் மனைவியிடம் திருமணம் ஒன்றை பதிவுசெய்வது தொடர்பாகப் பேச வந்திருப்பதாகக் கூறினர். பத்மனாதனின் மனைவி திருமணப் பதிவாளராகச் செயற்பட்டு வந்திருந்தார். தமது பெற்றோர், நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் பிள்ளைகள் தங்கத்துரையிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து, தாம் வீதியின் ஓரத்தில் அவர்கள் வரும்வரைக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்றனர் தங்கத்துரையும் உறுப்பினர்களும்.  பத்மனாதன் திரும்பிவரும்வரை அவரது வீட்டு முகப்பில் அவர்கள் காத்திருந்தனர். பத்மனாதன் காரை விட்டு இறங்கி வாயிற்கதவை திறக்க எத்தனித்தபோது ஜெகன் தனது கைத்துப்பாக்கியினால் பத்மனாதனின் நெற்றிப்பொட்டில் சுட்டார். 55 வயது நிரம்பியிருந்த பத்மனாதன் நிலைகுலைந்து வீழ்ந்து அவ்விடத்திலேயே மரணமானார். அவரைக் கொன்றவர்கள் எதுவித தடயமும் இன்றி இருட்டினுள் மறைந்துபோனார்கள். பத்மனாதனின் கொலையுடன், வடக்கில் பொலீஸாரின் கட்டமைப்பை அழிக்கவே போராளிகள் முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அரசு, தேவநாயகம் தயாரித்து வந்த போராளிகளுக்கெதிரான சட்டங்களை உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியது. அதன்படி புலிகளையும், அவர்களின் அமைப்பினை ஒத்த ஏனைய அமைப்புக்களையும் தடை விதிக்கும் சட்டத்தின் வரைவினை தேவநாயகம் முன்வைத்தார். இந்த வரைபு அரசியலமைப்புச் சட்ட ஆணைக்குழுவினரிற்கு ஜே ஆர் இனால் அனுப்பப்பட்டதோடு, அதனை உடனடியாக சட்டமாக்கும்படியும் அவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்த நீதிமன்றிற்குச் சென்ற தேவநாயகம் இத்தடை சட்டமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த வழக்குத் தொடர்பான சில தகவல்களை நான் டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் பதிவிட்டிருந்தேன்.  இச்சட்டத்தின் ஊடாக பொலீஸாருக்கும், இராணுவத்திபருக்கும் வழங்கப்படவிருக்கும் அதீத அதிகாரம் குறித்து நீதிமன்றம் அச்சம் கொண்டிருந்தது. இச்சட்டம் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களைக் கைதுசெய்தல், தடுத்து வைத்தல், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், மரண தண்டனை வழங்கல் உட்பட பல தங்குதடையின்றிய அதிகாரங்களை வழங்கியிருந்தது. இசாட்டத்தினைப் பாவித்து அரசாங்கம் எதிர்க்கட்சிக்குச் சார்பான தொழிற்சங்கங்களைக் கூட துன்புறுத்த முனையும் என்றும் சிறிமாவின் வழக்கறிஞர் தனது கட்சியின் அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தேவநாயகம் எதிர்க்கட்சியினரது அச்சம் தேவையற்றது என்றும், இச்சட்டம் ஒருவருட காலத்திற்குள் அகற்றப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சட்டத்தை அரசாங்கம் நீட்டித்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா என்று நீதிபதிகள் வினவியபோது, தேவநாயகம் பின்வருமாறு பதிலளித்தார், "நாம் இந்தச் சட்டத்தினை ஒருவருடத்திற்கு மேலாக நீட்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஒருவருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முற்றாக அழித்துவிடுவோம் என்று எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது" என்று கூறினார். இதனையடுத்து இச்சட்ட நகலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இச்சட்டத்தின் மூல அரசியல் யாப்பிற்கு பாதிப்பேதும் ஏற்பட்டுவிடாதென்று கூறியதோடு, இதனை பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாக்கவும் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் இந்த வரைபு பலத்த ஆதரவுடம் வைகாசி 18 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக வக்களிக்க 131 ஆதரவு வாக்குகளுக்கு 25 எதிர் வாக்குகள் என்கிற அடிப்படையில் இந்தத் தடை சட்டமாக உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த அறுதிப்பெரும்பான்மையினைப் பாவித்து மிக இலகுவாக இச்சட்டத்தினை ஜே ஆர் நிறைவேற்றினார். காசி ஆனந்தன்  இச்சட்டத்தினைப் பாவித்து பொலீஸார் பிரபாகரன் தலைமையிலான 38 போராளிகளின் பெயர்களை தேடப்படுபவர்களாக அறிவித்தனர். இந்த போராளிகளின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பிலும், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பொலீஸார் ஒட்டினர். இவ்வாறு தேடப்பட்ட போராளிகளில் பலர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தேடப்பட்டு வந்த 38 இளைஞர்கள் 26 இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்கிணங்க வைகாசி 26 ஆம் திகதி பொலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களுள் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், புஸ்பராஜா, நடேசானந்தன், சிறி சபாரட்ணம், சபாலிங்கம் மற்றும் சந்ததியார் உற்பட பலரும் இருந்தனர். இவர்கள் எவருமே பஸ்டியாம்பிள்ளையின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும், அக்கொலையில் ஈடுபட்ட எவருமே சரணடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.  தேடப்படும் இளைஞர்களின் பட்டியலில் காசி ஆனந்தனின் பெயரும் சேர்க்கப்பட்டது கேலிக்குரிய விடயமாக பல தமிழ் ஊடகவியலாளர்களால் அன்று பார்க்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் காளிமுத்து சிவானந்தன் ஆக இருந்தபோதும், கவர்ச்சிக்காக தனது பெயரை அவர் காசி ஆனந்தன் என்று மாற்றியிருந்தார். அவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கவிதைகளை  எழுதிவந்ததோடு, சமஷ்ட்டிக் கட்சியின் கூட்டங்களில் தனது கவிதைகளைப் பாடியும் வந்தவர். சமஷ்ட்டிக் கட்சி வன்முறையற்ற போராட்டங்களை ஆரம்பித்த 60 களின் காலப்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.  ################################# "பத்துதடவை படை வராது, பதுங்கிப் பாயும் புலியே தமிழா' செத்து மடிதல் ஒரு தரம் அன்றோ?, சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!"  ################################# "வெறிகொள் தமிழர் புலிப்படை, அவர் வெல்வார் என்பது வெளிப்படை"   காசி ஆனந்தனின் கவிதை எழுதும் விருப்புப் பற்றிப் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. இவை புலிகள் அமைப்போ அல்லது அவர்களின் முன்னைய அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்போ உருவாகும் முன்னரே வெளிவந்திருந்த கவிதைகள். தனது கவிதைகளில் புலி எனும் பதத்தினைப் பாவித்தமைக்காகவே காசி ஆனந்தனையும் தேடப்படுவோர் பட்டியலில் பொலீஸார் சேர்த்திருந்தனர். சோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் புலியினை தமது இலட்சினையாக வரிந்துகொள்வது அக்காலத்தில் இயல்பாக இருந்தது. என்னிடம் உமா பேசும்போது பஸ்டியாம்பிள்ளையின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து பிரபாகரன் திருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறினார். பஸ்டியாம்பிள்ளையின் கொலைச் சம்பவத்தினூடாக பொலீஸாரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்த உப தானியங்கித் துப்பாக்கியை பிரபாகரன் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வைத்திருந்ததாக உமா கூறினார். சமூக விரோதிகளின் கொலைகளுக்கான உரிமை கோரல்கள் மற்றும் தம்மீதான தடை ஆகியவற்றின் மூலம் உலகில் அடக்குமுறைக்குள் அகப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காககப் போரிடும் போரட்ட அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள்.   தம்மீதான தடையினை ஜே ஆர் தமக்களித்த பரிசாக பிரபாகரன் கருதியதாக உமா கூறினார். "தமிழ் ஆயுதக் ககுழுவுக்கெதிராக தமது அரசாங்கம் போராடுவதாக ஜே ஆர் உலகிற்கு அறிவித்தார். இதைவிட மேலான பரிசொன்றினை ஜே ஆரினால் புலிகளுக்கு வழங்கியிருக்க முடியாது. ஆகவே, ஜே ஆர் எமக்கு வழங்கிய கெளரவத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தான் என்பதை நிரூபிக்க நாம் ஏதாவது பாரிய நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று எண்ணினோம். இங்கிருந்தே அவ்ரோ விமானத்தைத் தகர்க்கும் திட்டம் உருவானது" என்று உமா மேலும் கூறினார்.  புலிகளையும் ஏனைய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் தடை செய்யும் தீர்மானத்தை ஜே ஆர் நிறைவேற்றியபின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனமை போராளிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தினை அளித்திருந்தது. ஆத்திரமடைந்த இளைஞர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இத்தலைவர்களுக்கு எதிராக யாழ் வைத்தியசாலை மதிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறியது,  " கேட்டது தமிழ் ஈழம்,  கிடைத்ததோ ஜப்பான் ஜீப்"  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்ட ஜப்பானிய ஜீப் வண்டிகளை முன்வைத்தே மேற்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. தந்தை செல்வா இருக்கும்வரை அரசாங்கத்திடமிருந்து வந்த சலுகைகள் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவற்றை மிகுந்த ஆவலுடன் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இறங்கியிருந்தனர்.  அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்த அவரது நிலைப்பாடுபற்றிக் கேட்டேன்,  "அவர்கள் இன்னும் வெறும் பையன்கள் தான். சூழ்நிலையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை" என்று என்னிடம் அவர் கூறினார்.  மேலும், தான் கூறப்போவதை வெளியே பதிவிட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டபடியே, "உங்களின் எதிரி யாரென்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் மீது பாய்வதற்கு அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார். உண்மையாகவே அப்படியான பாரிய திட்டம் ஒன்றில் ஜே ஆர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அவரது நோக்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரை தமிழர்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பலவீனப்படுத்துவதாகவே இருந்தது. இதன் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அடங்கிப்போய், தன்னிடம் பணிந்து வந்து தனது தயவினை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். இதன்மூலம் சர்வதேசத்தில் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்றும், தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பினார்.  தமிழர்களைத் தாக்குவதற்கென்றே ஜே ஆரினால் அரவணைக்கப்பட்டு வந்த சிறில் மத்தியூ எனும் சிங்கள இனவாதியை அமிர்தலிங்கத்தின்மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும்படி ஜே ஆர் ஏவிவிட்டார். இதனையடுத்து விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய சிறில் மத்தியூ புலிகளுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிடுவது அமிர்தலிங்கமே என்று அடித்துக் கூறினார். புலிகளின் உரிமைகோரல் கடிதமே அமிர்தலிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார். இதன்ம்முலம், அமிர்தலிங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ள சிறில் மத்தியுவினால் முடிந்தது. அமிர்தலிங்கமும் சிறில் மத்தியூ வைத்த பொறிக்குள் வீழ்ந்ததுடன், புலிகளால் வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்றும், பொலீஸாரே இந்த கடிதத்தினைப் புலிகளின் பெயரில் வெளியிட்டனர் என்றும் கூறத் தலைப்பட்டார். "சகல சந்தேகங்களுக்கும் அப்பால், இக்கடிதம் பொலீஸாரின் உயர்மட்டத்தின் திட்டப்படி வெளியிடப்பட்டது என்பதை முழு அத்காரத்துடன் என்னால் கூறமுடியும். புலிகளால் வரையப்பட்ட கடிதம் என்று போலியாக அனுப்பப்பட்ட இக்கடிதம் அரச அதிகாரத்திலிருக்கும் சில சக்திகளால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று  பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கூறியதோடு, புலிகள் என்கிற அமைப்பே இல்லையென்றும் வாதிட்டார்.  மேலும், அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசிக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் இறங்கிய சிறில் மத்தியூ, தமது கனவான ஈழத்தை அடைய சிங்களவரின் குருதியில் குளிக்க தமிழர் தயாராக இருப்பதாக மங்கையற்கரசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் அவர் கூறினார். மேலும், சிங்களவர்களின் தோலில் செருப்புக்களைச் செய்து தாம் அணியப்போவதாக மங்கையற்கரசி பேசியதாகவும் அவர் கூறினார். இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் அமிர்தலிங்கம் முற்றாக மறுத்திருந்தார். ஜே ஆர் பின்னர் இன்னொரு பொறியினையும் அமிர்தலிங்கத்திற்கெதிராக வைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஆனி 10 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இதற்கு மிகப்பெரிய பிரச்சாரத்தினையும் வழங்கினார். போராளிகள் இதனால் சினமடைந்தனர். ஆகவே, இந்த அழைப்பினை ஏற்கவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை அமிர்தலிங்கம் நிராகரித்தார்.   தங்கத்துரை அணியினர் மீண்டும் தாக்குதலில் இறங்கினர். பஸ்டியாம்பிள்ளைக்குப் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணித்து வந்த இன்னொரு தமிழ் பொலீஸ் அதிகாரியான  உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் குட்டிப்பிள்ளை குமார், வெள்ளிக்கிழமை அன்று கோயிலிக்குச் செல்லும்போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டுசெல்வதில்லை என்பதை தங்கத்துரை அணியினர் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே ஆனி 9, வெள்ளிக்கிழமை அன்று கோயிலில் பூஜைக்காக வாழைப்பழங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்ய வல்வெட்டித்துறை நகர்ப்பகுதிக்கு கால்நடையாக குமார் வந்தார். அப்பகுதியில் மறைந்திருந்த குட்டிமணியும் ஜெகனும் குமார் மீது பாய்ந்து அவரை கீழே வீழ்த்திக் கொன்றனர். குமாரின் கொலை ஜே ஆருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. ஜே ஆரின் தடைபற்றி தாம் சிறிதும் கவலைகொள்ளவில்லை என்று டெலோ அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்க மிகத் தெளிவானது, "ஜே ஆர் உடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்பதே அது.  அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஆனி 10 ஆம் திகதி அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பேசிய ஜே ஆர், மாவட்ட ரீதியிலான நிர்வாகத்தை மக்கள் முன் எடுத்துச் செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஆகவே மாவட்ட மட்டத்திலான அமைச்சர்களை நியமிப்பது குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டம் வெற்றிபெற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தனக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு நான் சில மாவட்ட அமைச்சர் பதவிகளைத் தரப்போகிறேன், நீங்களே அந்த மாவட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். ஆகவே, இதுபற்றிச் சிந்தித்து, இத்திட்டம் வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து வேலை செய்யலாம்" என்று அவர்களைப் பார்த்து ஜே ஆர் கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இதுபற்றி மேலதிக விபரங்களைத் தாருங்கள், நாம் இதுகுறித்து சாதகாமன் முறையில் பரிசீலிக்கிறோம்" என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையின் தகவல்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான டெயிலி நியூஸ், தினகரன் மற்றும்  தினமின ஆகிய நாளிதழ்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டன. தான் செய்ய விரும்பியதை ஜே ஆர் செய்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் போராளிகளுக்கும் இடையே பகைமையினை இதன்மூலம் அவர் உருவாக்கினார். அமிர்தலிங்கத்தின் இந்த செயற்பாடு போராளிகளை மிகவும் ஆத்திரப்பட வைத்திருந்தது, குறிப்பாக டெலோ இதுகுறித்து கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தது. ஆகவே அவர்களின் பிரச்சாரக் கிளை ஜே ஆர் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தமிழ் மக்களிடமிருந்து போராளிகள் பற்றிய தகவல்களைத் தமக்கு வழங்கிவருபவர்களின் எண்ணிக்கை வற்றுப்போனதையும், தமிழ் மக்கள் பொலீஸாரிடமிருந்தும், இராணுவத்திடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதையும் பொலீஸார் தெளிவாக அறிந்துகொண்டனர்.  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு இங்கிருந்து விரிவாகத் தொடங்கியிருந்தது.    
    • யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 03:57 PM நாடளாவியரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் அங்கு இடம்பெறவில்லை. அதனால் தூரப்பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நோயாளர்களும் சிகிச்சை பெற முடியாத நிலையில் திரும்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/147717
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.