Jump to content

இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன?

யாழ்ப்பாணத்தில், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களால், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மாத நினைவுகள்  தொடர்பில் நடாத்தப்பட்ட மரம் நாட்டும் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.

ஜெயபாஸ்கர் மதுரையை சேர்ந்த வெளிநாட்டு சேவையியல் அதிகாரி. அதேவேளை கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் (ரா?) உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். 

மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. இம்முறை இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப்பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர். இது ஒரு முக்கிய செய்தியை சொல்லும் நிகழ்வாக பத்திரிக்கையாளர்களால் கருத்தப்படுகின்றது.

தமிழர்களை நெருங்கி செல்ல, இந்திய அரசு சில முடிவுகளை எடுத்து, அதனை வெளிப்படுத்த தொடங்கி உள்ளதாக கருத்தப்படுகினறது.

large_Jaff.JPG.20b23ee1dd00f328627e87fa057d2253.JPG

large.Jaff1.JPG.45977eec82eaee7203b2c05e2294e596.JPG

ம் .... ம்ம்ம்ம் 

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். சீனாக்காரன் பேச கூப்புடுறான் என்றவுடன் நடக்கும் எதிர்வினையோ, யாமறியோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அல்லது தமிழர்தாயகம் அல்லது தமிழர்கள் செறிந்துவாழும் வட-கிழக்கு நிலப்பரப்பின் பெறுமதியைத் தமிழரையும் விலைபோகும் தமிழ் அரசியல் வியாதிகளையும் விட வடவரும் சீனரும் மேலைநாட்டவரும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் தமது சட்டையிலே கார்த்திகைப் பூவைக் குத்திவிட்டு அந்தப்பூ வாடமுன் முதுகிலே பாறைகளைப் பிரட்டி அமத்திவிடுவார்கள் என்பதையும் எப்போதும் மனதிலே கொண்டு செயற்படவேண்டும். அதுதான் தமிழினத்தின் பட்டறிவுமாகும். வெறும் அடையாளநிகழ்வுகளூடாகவே கிந்தியாவும் சிங்களமும் தமது நலன்களை அடைகின்றன. சிறுபிள்ளைகள் கோவிற்திருவிழாவிலே உரூபாய் கணக்கிலான விலையுடைய விளையாட்டுப்பொறி கேட்க, வெறும் சதக்கணக்கிலான பொரியுருண்டையையோ , தும்புமிட்டாயையோ வேண்டிக் கொடுத்து ஏமாற்றுவதற்கொப்பானதொன்றே இந்தப் பூ அணிதலும்.............. பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் பாவமிந்த ஆபிரகாம் சுமந்திரன் ஐயா தான்தான் கதைத்துக் அணியவைச்சனான் என்று சொல்லாமலிருந்தால் சரி.  

சொல்ல மறந்துபோனன், நேரமொதுக்கி எழுதியமைக்கு நாதமுனியவர்களுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தமிழர்களை நெருங்கி செல்ல, இந்திய அரசு சில முடிவுகளை எடுத்து, அதனை வெளிப்படுத்த தொடங்கி உள்ளதாக கருத்தப்படுகினறது.

மிகவும் முக்கியமான செய்தி.

தகவலுக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருதடவை இலங்கைத் தமிழர்களை மேற்கு அழைத்தால்,  இந்தியாவில் மாவீரர் நாள்  கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய ******  வாஞ்சையோடு வருகிறது தமிழா... கல்லும் கையுமாய் கவனமா இரு. 

உன்ர வீட்டுப் பெண்களுக்கு இந்தியப் படை செய்ததை மறந்திராத.

இப்பிடி வந்துதான் எம்மினப் பெண்களை பாலிய வல்லுறவிற்கு உட்படுத்தினவங்கள், 87 இல்.

"எந்தக் காலத்திலும் இந்தியனை அறவே நம்பக்கூடாது"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

இந்திய ****** வாஞ்சையோடு வருகிறது தமிழா... கல்லும் கையுமாய் கவனமா இரு. 

உன்ர வீட்டுப் பெண்களுக்கு இந்தியப் படை செய்ததை மறந்திராத.

இப்பிடி வந்துதான் எம்மினப் பெண்களை பாலிய வல்லுறவிற்கு உட்படுத்தினவங்கள், 87 இல்.

"எந்தக் காலத்திலும் இந்தியனை அறவே நம்பக்கூடாது"

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... அரசியல் நேர்மை அற்ற, நாடு. அதனை நம்பாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இன்னும் ஒருதடவை இலங்கைத் தமிழர்களை மேற்கு அழைத்தால்,  இந்தியாவில் மாவீரர் நாள்  கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤪

நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.

இம்முறை ஈழத்தமிழர், ஸ்ராலினின் பொங்கல் பரிசு பெறுவதையும் கவனித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, Kapithan said:

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

😂

காலங்காலமாக எங்களை வைத்து தமது காரியத்தை சாதிப்பதே இந்தியர்களின் வேலையாகிவிட்டது. 😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

எப்படி சும்முக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறு பக்கம் இந்தியாவுக்கு எதிராய் நிற்க முடியுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எப்படி சும்முக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறு பக்கம் இந்தியாவுக்கு எதிராய் நிற்க முடியுது ?

தென் தமிழீழத்தாருக்கு நேர்மையாக இருப்பதாக கூறிக்கொண்டு எப்படி சிங்களத்திற்கும் கொட்டாபயவிற்கும் ஆதவளிக்க கொம்மானால் முடியுதோ அப்படித்தான் நானும் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுகிறேன்..🤪

🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்களுக்கு குத்திற நேரம் சீன ரகனை அழைத்து குத்தினால்.. தாக்கம் இன்னும் பலமாக இருக்கும். 

சீனா புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் வைக்கவில்லை. ஆனால்.. ஹிந்தியாவும் அமெரிக்காவும் சொறீலங்காவும் வைத்துள்ளன. சிந்திக்க வேண்டும். சீன ஆட்லறிகள் வன்னியில் முழங்கிய காலம் உண்டு. 

ஆனால் சீன ஆக்கிரமிப்புக்கு தலைமை இடமளிக்கவில்லை. அமெரிக்கனை சுனாமியில் கூட தமிழீழத்துக்குள் அனுமதிக்கவில்லை. 

அமெரிக்காவும் ஹிந்தியாவும் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு அதே தமிழர்களிடம் வெகுமதி எதிர்பார்க்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

தென் தமிழீழத்தாருக்கு நேர்மையாக இருப்பதாக கூறிக்கொண்டு எப்படி சிங்களத்திற்கும் கொட்டாபயவிற்கும் ஆதவளிக்க கொம்மானால் முடியுதோ அப்படித்தான் நானும் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுகிறேன்..🤪

🤣🤪

அவர்கள் மட்டக்களப்பில் ஒரு கதை . கொழும்புக்கு போய் இன்னோர் கதை கதைக்கவில்லை ...தாங்கள் அரசுடன் சேர்ந்து தான் இயங்குவோம் என்று வெளிப்படையாய் சொல்லித் தான் வாக்கு கேட்டார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.