Jump to content

திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு”

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு”

இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று(புதன்கிழமை)  குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்திற்கு “கல்யாணி தங்க நுழைவு” (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2021-11-24-at-11.55.40-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.44-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.51-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.52-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.55-PM-1.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.56-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.55.58-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.56.01-PM-1.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.56.02-PM-1.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.56.04-PM.jpeg

WhatsApp-Image-2021-11-24-at-11.56.05-PM-1.jpeg

https://athavannews.com/2021/1252081

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிசயம் ஐயாவை இருக்கவிட்டு பரிசு குடுக்கினம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி பொன் நுழைவாயிலில் இன்று பி.ப. 3.00 மணிக்கு பின்னர் பொது மக்கள் பயணிக்கலாம்

பொது மக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட “கல்யாணி பொன் நுழைவாயில்” (Golden Gate Kalyani) இன்று பி.ப. 3.00 மணி முதல் மக்கள் தமது வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளலாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

May be an image of 2 people, bridge and night

இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்ப கேபிள் தங்கும் பாலமான புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

May be an image of 9 people, people standing and outdoors

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற மற்றும் வெளியேறுகின்ற வாகனங்கள் காரணமாக, களனிப் பாலத்தில் ஏற்படுகின்ற அதிக வாகன நெரிசலுக்குத் தீர்வாக, இந்தப் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பங்களிப்புடன் - 2012 ஆம் ஆண்டில் இதற்கான அடிப்படைத் திட்டம் தயாரிக்கப்பட்டு - 2013 ஆம் ஆண்டு சாத்தியவள ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் - நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி - 2014ஆம் ஆண்டில் கிடைத்தது.

அந்த ஆண்டிலேயே இதற்குரிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான காணிகள் என்பன வேறு இடங்களில் வழங்கப்பட்ட பின்னர் - 2017ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு, 55,000 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இப்பணியை நிறைவு செய்வதற்கு, நான்கு வருடகாலம் தேவைப்பட்டது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் வரையான 06 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து ஒருகொடவத்தை மற்றும் இங்குறுகடைச் சந்தி வரை 04 வழித்தடங்கள், இந்தப் புதிய மேம்பாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், இங்குறுகடைச் சந்தியிலிருந்து கொழும்புத் துறைமுகநகர் வரையும் ஒருகொடவத்தையிலிருந்து அத்துருகிரிய வரையிலும் - தூண்களின் மேல் அமைக்கப்படுகின்ற அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

களனி ஆற்றின் நீர் வடிந்தோடலுக்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாத வகையில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும், சுற்றாடலின் அழகைப் பாதுகாக்கும் வகையில் கொபோநீலம், எசல (திருக்கோனை), மாராமரம், இலுப்பை, கும்புக்கன் உள்ளிட்ட மரங்கள் இப்பாதையின் இரு மருங்கிலும் நடப்பட்டிருப்பதும் - சிறப்பம்சமாகும்.

Image

May be an image of 1 person, monument, road and bridge

“கல்யாணி பொன் நுழைவாயில்”  திறப்பு நிகழ்வில் மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், அமைச்சரவையின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/117842

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி பொன் நுழைவாயில் எண்டவுடனை நகைக்கடையாக்கும் எண்டு நான் நினைச்சன்...😎

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு மொழிபெயர்ப்பு! நான் நகை கடை ஏதோ திறப்பு என நினைத்தேன்.

கொழும்பு போக்குவரத்து நெரிசலை இது குறைக்குமா? பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலத்துக்கு கட்டணம் அறவிட மாட்டார்களோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 11:57, ஈழப்பிரியன் said:

இந்த பாலத்துக்கு கட்டணம் அறவிட மாட்டார்களோ?

சிறுபான்மை மக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை ...அவர்கள் அரசாங்கத்தின் செல்ல பிள்ளைகளாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2021 at 21:40, குமாரசாமி said:

பொன் நுழைவாயில் எண்டவுடனை நகைக்கடையாக்கும் எண்டு நான் நினைச்சன்

பொன் ஆசை யாரைத்தான் விட்டது?

சாமியார்! உங்களை நான் என்னவோ நினைச்சேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

பொன் ஆசை யாரைத்தான் விட்டது?

சாமியார்! உங்களை நான் என்னவோ நினைச்சேன்.

இன்னுமொரு சொல் குறைகின்றதே 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இன்னுமொரு சொல் குறைகின்றதே 😎

அந்த ஒரு சொல். 

1....பெண் ஆசை

2...மண் ஆசை

ஏது சரியானது என்று தெரிந்தவர்கள் கூறவும்” 

மேலும் கல்யாணி. என்பது சிங்களச் சொல்லா.?....தமிழ் எனில்   ஏன் வைத்தார்கள். ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மேலும் கல்யாணி. என்பது சிங்களச் சொல்லா.?....தமிழ் எனில்   ஏன் வைத்தார்கள். ?

களனி ஆறு பண்டைய காலத்தில் கல்யாணி ஆறு என்று அழைக்கப்பட்டது!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

....பெண் ஆசை

2...மண் ஆசை

10 hours ago, குமாரசாமி said:

இன்னுமொரு சொல் குறைகின்றதே 😎

இந்த மூன்று ஆசையும் எந்த சாமியாரையும் சலனம் அடையச் செய்து தடம் பிறழ வைத்துவிடும். இந்த ஆசைகளை வென்றவர்கள் உண்மையான ஞானிகள். நம்ம சாமியார் எது ஒன்றை தவற விட்டீர்கள் எதை? வெறுக்கிறீர்கள்? அறிய ஆவல்! அதை வைத்து சாமியாரை மடக்கி விடலாம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

களனி ஆறு பண்டைய காலத்தில் கல்யாணி ஆறு என்று அழைக்கப்பட்டது!

அப்படியென்றால் களனி பிரதேசம் தமிழர் பிரதேசமாக பண்டைய காலத்தில் இருந்ததா சார்? 😎

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் களனி பிரதேசம் தமிழர் பிரதேசமாக பண்டைய காலத்தில் இருந்ததா சார்? 😎

கேள்விமேல கேள்வி கேட்டு எரிச்சலூட்டக்கூடாது!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

அந்த ஒரு சொல். 

1....பெண் ஆசை

2...மண் ஆசை

ஏது சரியானது என்று தெரிந்தவர்கள் கூறவும்” 

45 minutes ago, satan said:

இந்த மூன்று ஆசையும் எந்த சாமியாரையும் சலனம் அடையச் செய்து தடம் பிறழ வைத்துவிடும். இந்த ஆசைகளை வென்றவர்கள் உண்மையான ஞானிகள். நம்ம சாமியார் எது ஒன்றை தவற விட்டீர்கள் எதை? வெறுக்கிறீர்கள்? அறிய ஆவல்! அதை வைத்து சாமியாரை மடக்கி விடலாம்.

எனக்கு வெவ்வேறு முக்கிய வேலைகள் இருப்பதால்......மீண்டுமொருமுறை சந்திப்போம்.:cool:

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எனக்கு வெவ்வேறு முக்கிய வேலைகள் இருப்பதால்......மீண்டுமொருமுறை சந்திப்போம்.:cool:

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs

சாமர்த்தியம் .....! பிறகு வாருங்கள், சாவகாசமாக பேசலாம் இதுபற்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

களனி ஆறு பண்டைய காலத்தில் கல்யாணி ஆறு என்று அழைக்கப்பட்டது!

களனி. எனபதையும். கல்யாணி என்று ஏன் மாற்றக்கூடாது.?. தகவலுக்கு  மிக்க நன்றி கிருபன்   இதுவும்   தமிழ்ஈழத்தின். ஒரு பகுதி தான். 🤣

41 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் களனி பிரதேசம் தமிழர் பிரதேசமாக பண்டைய காலத்தில் இருந்ததா சார்? 😎

பண்டைய. காலத்தில் முழு  இலங்கையும். தமிழர். பிரதேசம் தான்   சிங்களவன். துரிதமாக இனப்பெருக்கம் செய்தமையால். நாடு அவனுடையது. என்றானது 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

பண்டைய. காலத்தில் முழு  இலங்கையும். தமிழர். பிரதேசம் தான்   சிங்களவன். துரிதமாக இனப்பெருக்கம் செய்தமையால். நாடு அவனுடையது. என்றானது 

அப்பிடியான ஈழத்தமிழனுக்கு இப்ப இருக்க இடமில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி. இன்றிருக்கும் ஒட்டுக்குழுக்கள் போல் பண்டைய காலத்திலும் இருந்திருக்குமா கந்தையர்? 😶

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

களனி. எனபதையும். கல்யாணி என்று ஏன் மாற்றக்கூடாது.?. தகவலுக்கு  மிக்க நன்றி கிருபன்   இதுவும்   தமிழ்ஈழத்தின். ஒரு பகுதி தான். 🤣

பண்டைய. காலத்தில் முழு  இலங்கையும். தமிழர். பிரதேசம் தான்   சிங்களவன். துரிதமாக இனப்பெருக்கம் செய்தமையால். நாடு அவனுடையது. என்றானது 

அடுத்த கேள்விக்கே இடமில்லாமல் செய்து விட்டீர்களே!

பிறகுமா.....? நினைச்சேன்! கேள்வி கேட்காவிட்டால் சாமியாருக்கு மண்டையே வெடித்து விடுமே என்று. உங்களையெல்லாம் பள்ளிக்கூடத்தில் வைத்து கட்டியவிழ்த்த ஆசிரியர்களுக்கு கோவில் கட்டி கும்பிடோணும்! பெற்றோருக்கு அதுக்குமேல...

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்பிடியான ஈழத்தமிழனுக்கு இப்ப இருக்க இடமில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி. இன்றிருக்கும் ஒட்டுக்குழுக்கள் போல் பண்டைய காலத்திலும் இருந்திருக்குமா கந்தையர்? 😶

இல்லை.  ஓட்டுக்குழுக்களின். ஆயுள்   30....40.     வருடங்கள்.  மட்டும் தான் 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி. இன்றிருக்கும் ஒட்டுக்குழுக்கள் போல் பண்டைய காலத்திலும் இருந்திருக்குமா கந்தையர்? 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பிடியான ஈழத்தமிழனுக்கு இப்ப இருக்க இடமில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி. இன்றிருக்கும் ஒட்டுக்குழுக்கள் போல் பண்டைய காலத்திலும் இருந்திருக்குமா கந்தையர்? 😶

நிச்சயமாக இருந்திருப்பார்கள். 

தமிழன் ஆண்டதை விட காட்டிக்கொடுத்த வரலாறுதானே அதிகம்.

😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Kandiah57 said:

பண்டைய. காலத்தில் முழு  இலங்கையும். தமிழர். பிரதேசம் தான்   சிங்களவன். துரிதமாக இனப்பெருக்கம் செய்தமையால். நாடு அவனுடையது. என்றானது 

1 hour ago, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி. இன்றிருக்கும் ஒட்டுக்குழுக்கள் போல் பண்டைய காலத்திலும் இருந்திருக்குமா கந்தையர்? 

தேவை இருந்திருக்காது என நினைக்கிறன். இருந்தாலும் கோள் சொல்பவர்கள் இருந்திருப்பார்கள். இதுக்குமேல கேள்வி கேட்கப்படாது, தந்தளவு விளக்கம் போதும் தெரிந்து கொள்வதற்கு!

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.