Jump to content

ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!


Recommended Posts

ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!

ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!

 

 
 
ஜெர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐநா 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்.பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாண சபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாக ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் கூட்டமைப்பு தரப்பால் விளக்கம் அளிக்கப் பட்டதாக கே.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

 

ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! (adaderana.lk)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்… தன்னை விட்டுட்டு, இவர்கள் ஜேர்மன் தூதுவரை சந்தித்ததுக்கு… கடுப்பாக போறாரே… 😂 🤣 

அட்டமத்து சனி… இந்த வருசம், சுமந்திரனை போட்டு, சிப்பிலி ஆட்டுது. 🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாடையில பேசியிருப்பினம்?👀 ஜேர்மன்காரருக்கு தமிழ் தெரியாது. இவேலுக்கு தமிழைவிட வேறெதுவும் புரியாது.  அது கிடக்க சுமந்திரன் இல்லாத நேரம் பார்த்து பூந்து விளாடீருக்கினம்.😂சந்திப்புக்குப் போன 3 பேரும் டெலோக்காரர். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

சந்திப்புக்குப் போன 3 பேரும் டெலோக்காரர். 😂

அப்ப என்ன இந்தியாக்காரன் வடிவா எழுதிகொடுத்திருப்பான் !! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

என்ன பாடையில பேசியிருப்பினம்?👀 ஜேர்மன்காரருக்கு தமிழ் தெரியாது. இவேலுக்கு தமிழைவிட வேறெதுவும் புரியாது.  அது கிடக்க சுமந்திரன் இல்லாத நேரம் பார்த்து பூந்து விளாடீருக்கினம்.😂சந்திப்புக்குப் போன 3 பேரும் டெலோக்காரர். 😂

வாலி. ....பாடையில்......பேசவில்லையாம்......😂😛😛😛😂😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே மற்றவர்களை மட்டந்தட்டி எழுதி சுய இன்பம் காணுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இப்படியே மற்றவர்களை மட்டந்தட்டி எழுதி சுய இன்பம் காணுங்கள்.

இது இப்பத்திலிருந்தா என்ன ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.