Jump to content

வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது.

தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே,

‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம். ஆனால் இந்த புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகின்றது.

கெளடெங் போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென்னாப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம்.

தென்னாப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு சபையும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘ இன்று உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

தென்னாப்பிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுவிட்டதால், இதன் தோற்றம் தென்னாப்பிரிக்காதான் என தீா்மானித்துவிட முடியாது.

கொரோனா வைரஸின் மரபணுவில் 30 இற்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1252328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் மாறுபாடு ஹொங்கொங்கிலும் கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் மாறுபாடு ஹொங்கொங்கிலும் கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆசிய நாடான ஹொங்கொங்கிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பி.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, செக் லாப் கோக்கில் உள்ள ரீகல் எயார்போர்ட் ஹோட்டலில் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்ட இருவரிடம் இருந்து கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரால் புதிய மாறுபாடு கொண்டுவரப்பட்டதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

36 வயதான இந்த நோயாளி, ஹோட்டலில் பக்கத்து அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கு வைரஸைக் கடத்தியதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

62 வயதான இரண்டாவது நபர், கனடாவில் இருந்து வந்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் B.1.1.529 திரிபு: 50 மரபணு பிறழ்வுகள், ஆபத்துகள் பற்றி அறிவியல் உலகம் கூறுவதென்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

நாம் மீண்டும் நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கே வந்துள்ளோம், கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள் கண்ட திரிபுகளிலேயே இதுதான் மிகவும் மோசமான திரிபு என என்னிடம் கூறினார்.

இது இந்தத் திரிபு தொடர்பான விவரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் ஆரம்ப நாட்களில் கூறப்பட்டவை. இத்திரிபால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திரிபு மேற்கொண்டு பரவியிருக்கலாம் என்பதற்கான சில குறிப்புகளைக் காண முடிகிறது.

இந்தப் புதிய திரிபு எவ்வளவு வேகமாக பரவும், கொரோனா தடுப்பூசிகளால் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் பாதுகாப்பு அம்சங்களை இது எப்படி கடக்கிறது, இந்த புதிய கொரோனா திரிபை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் இப்போது எழுகின்றன.

B.1.1.529 கொரோனா திரிபு குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன, ஆனால் வெகுசில தெளிவான விடைகள் மட்டுமே இருக்கின்றன.

B.1.1.529 திரிபு குறித்து நமக்கு என்ன தெரியும்?

B.1.1.529 என்றழைக்கப்படும் இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்ட உள்ளது.

"புதிய கொரோனா திரிபில் வழக்கத்துக்கு மாறாக பல்வேறு பிறழ்வுகள் உள்ளன. இது மற்ற கொரோனா திரிபுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது" என தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்டர் ஃபார் எபிடமிக் ரெஸ்பான்ஸ் அண்ட் இன்னொவேஷன் என்கிற அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா கூறினார்.

இந்த கொரோனா திரிபு எங்களை ஆச்சரியத்படுத்துகிறது. இத்திரிபு, அதன் பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பிறழ்வுகளை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக் புரோட்டின் இடையில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாகவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் இலக்கு வைக்கின்றன. அதேபோல மனிதர்களின் உடலுக்குள் ஊடுறுவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.

மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள் உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.

கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலிலிருந்து இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுவாக அதிக பிறழ்வுகள் என்றாலே ஆபத்தானவை என்று பொருள் அல்ல, அந்த பிறழ்வுகள் என்ன செய்கின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

ஆனால் இங்கு பிரச்னை என்னவெனில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து, இந்த திரிபு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கொரோனா வைரஸின் ஒரிஜினல் ஸ்டரெயின் என்றழைக்கப்படும். ஆரம்பகால இழைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் B.1.1.529 கொரோனா திரிபுக்கு எதிராக அதிக செயல் திறனற்றுப் போகலாம்.

இந்த புதிய திரிபில் காணப்படும் சில பிறழ்வுகள், ஏற்கனவே வேறு சில பிறழ்வுகளில் காணப்பட்டுள்ளன. எனவே அந்த பிறழ்வுகள் எப்படி செயல்படலாம் என சில விவரங்களை நமக்கு வழங்குகின்றன.

"இந்த கொரோனா வைரஸ் திரிபு பரவும் தன்மையை அதிகரித்திருக்கலாம், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வேகமாகப் பரவம் திறனை அதிகரித்திருக்கலாம் என கவலை அளிக்கிறது, ஆனால் இத்திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகளை வெற்றிகரமாக கடக்கலாம்" என தென்னாப்பிரிக்காவில் உள்ள க்வாசுலு நடல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் லெஸ்செல்ஸ் கூறினார்.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

காகிதத்தில் மிகவும் அச்சுறுத்த கூடியதாக தோன்றும் பல கொரோனா திரிபுகள், எதார்த்தத்தில் ஒன்றுமில்லாமல் போய் உள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸின் பீட்டா (beta) திரிபு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் அச்சுறுத்த கூடியதாக மக்களின் கவலைக்குரியதாக இருந்தது. அத்திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிக்காமல் தப்பிப்பதில் சிறந்து விளங்கியது. ஆனால் எதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு உலகை தவிக்க வைத்தது.

"பீட்டா திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தை கடப்பதில் மட்டுமே சிறந்து விளங்கியது, ஆனால் டெல்டா (delta) திரிபோ தொற்றுத்தன்மை மற்றும் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்கும் திறன் என இரண்டையும் கொண்டிருந்தது. இந்த இரு திறன்களும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா.

ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் இது தொடர்பான தெளிவுகளை வழங்கும், ஆனால் எதார்த்தத்தில் உலகில் பரவும் வைரஸை கண்காணிப்பதன் மூலம் இத்திரிபு தொடர்பான விடை விரைவாகக் கிடைக்கும். இது அரம்ப கட்டம் என்பதால், இப்போது எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.

தென்னாப்பிரிக்காவின் கெளடெங் மாகாணத்தில் 77 பேரும், போட்ஸ்வானாவில் நான்கு பேரும், ஹாங்காங்கில் ஒருவரும் இத்திரிபால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் தென்னாப்பிரிக்கா உடன் பயணத் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

இத்திரிபு இன்னும் பரவலாக பரவியிருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்த திரிபை முழுமையான மரபணு சோதனை செய்யாமல், நிலையான பரிசோதனைகளிலேயே (Standard Test) இந்த திரிபை கண்டுபிடிக்க முடியும்.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

இச்சோதனையில் கெளடெங் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 90% பேர் இத்திரிபால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், மற்ற மாகாணங்களிலும் இத்திரிபு பரவியிருக்கலாம் என்றும் இச்சோதனை பரிந்துரைக்கிறது.

டெல்டா திரிபை விட இத்திரிபு அதிவேகமாக பரவக் கூடியதா, அதன் தீவிரத்தன்மை என்ன, தடுப்பூசிகளால் கிடைக்கும் பாதுகாப்பை இத்திரிபால் எந்த அளவுக்கு கடக்க முடியும் என்பதை எல்லாம் அச்சோதனை நமக்கு வெளிப்படுத்தாது.

மேலும், அதிகம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நாடுகளில் இத்திரிபு எப்படி பரவும் என்பது குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தாது. தென்னாப்பிரிகாவில் 24% பேர் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றாலும், அந்நாட்டில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரிபை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும், அதோடு என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என ஆழமாக கேள்விகளைக் கேட்க வேண்டும். நமக்கு எல்லா விடைகளும் கிடைக்கும் வரை நாம் காத்திருக்க முடியாது என்பது இந்த பெருந்தொற்றில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

https://www.bbc.com/tamil/science-59426476

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்ரான்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை புதிய திரிபு மீண்டும் தாக்குமா? முதற்கட்ட தரவுகள் சொல்வதென்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது விரைவாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் இறுதியானதல்ல என்றாலும், ஒமிக்ரான் திரிபு தொடர்பான கவலைக்கு இவ்வாய்வின் முடிவுகள் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு அம்சங்களை இத்திரிபு பாதிக்குமா என்பது குறித்தும் இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகும், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து புரிந்து கொள்ள உலகம் பதற்றத்தோடு முயன்று கொண்டிருக்கிறது.

இப்போது தான் இத்திரிபு தொடர்பான புதிரின் முதல் பகுதி சரியான இடங்களில் பொருந்திப் போகத் தொடங்கியுள்ளது.

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் முன்பே எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் முன்னிருக்கும் புதிரின் புதிய கேள்வி என்னவெனில், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒமிக்ரான் திரிபால் தொற்று ஏற்படுமா என்பது தான்.

இந்த பெருந்தொற்று காலம் முழுக்க, தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 36,000 மாதிரிகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர்.

பீட்டா திரிபின் போதோ, டெல்டா திரிபின் போதோ மறுதொற்று (ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது) ஏற்படவில்லை என்றது சோதனை முடிவுகள். ஆனால் தற்போது அப்பரிசோதனையில் மறுதொற்று ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு வருகின்றனர். அவர்கள் மறுதொற்று ஏற்பட்ட அனைவரையும் ஆய்வு செய்து ஒமிக்ரான் திரிபு தான் என நிரூபிக்கவில்லை என்றாலும், ஒமிக்ரான் திரிபு தான் மறுதொற்றை அதிகரிப்பதாக தொற்று காலம் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள்.

ஒமிக்ரான் திரிபு
 
படக்குறிப்பு,

ஒமிக்ரான் திரிபு

இந்த ஆய்வுகளை சக விஞ்ஞானிகள் இதுவரை முறையாக பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒமிக்ரான் திரிபு இதுவரையான திரிபுகளை விட இரண்டு மடங்கு அதிகம் மறுதொற்றுக்கு காரணமாகலாம் என விஞ்ஞானிகளின் மதிப்பீடுகள் கூறுகின்றன.

'ஒமிக்ரான் திரிபு, குறைந்தபட்சமாக, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பரவும் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு பரவுகிறது என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன" என ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியட் புல்லியம் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினர். இருப்பினும் இது புதிரின் ஒரேயொரு பகுதி மட்டுமே.

தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு எவ்வளவு குறைந்தால் ஒருவர் உடலில் கொரோனா திரிபுகள் பரவும், எதுவரை பாதுகாப்பாக இருக்க முடியும் என பல கேள்விகள் எழுகின்றன.

இது ஒரு அதிவேக பகுப்பாய்வு, காலப்போக்கில் இன்னும் நமக்கு நிறைய தரவுகள் கிடைக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பான்கள், இந்த வைரஸை எத்தனை சிறப்பாக தாக்கும் என்பது குறித்த ஆய்வக ஆராய்ச்சி முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

"ஒமிக்ரான் திரிபால் மனித உடலின் இயற்கையான மற்றும் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமான அளவுக்கு கடக்க முடியும் என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.

"ஆனால் எந்த அளவுக்கு ஒமிக்ரானால் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடக்க முடியும் என தெளிவாகத் தெரியவில்லை. முழுமையாக நோயெதிர்ப்பு மண்டலத்தை கடக்க முடியுமா என்பது சந்தேகமே" என்று கூறியுள்ளார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ஹன்டர்.

ஒருவேளை கொரோனா தடுப்பூசிகளால் முழுமையாக தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் கூட, கொரோனாவால் மோசமான உடல் நலக்குறைவு ஏற்படுவதிலிருந்தும், கொரோனா உயிரிழப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் என பெரும்பாலான விஞ்ஞானிகளின் உள்ளுணர்வாக இருக்கிறது.

அப்படி இருந்தால் கூட, ஒமிக்ரான் திரிபால் அதிக அளவில் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென்றால், அது மருத்துவமனைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கூட இரு வாரங்கள் தேவை.

"ஓமிக்ரான் திரிபு அதிக மறுதொற்று ஏற்படுவதற்கான வல்லமை பொருந்தியது என்கிற மதிப்பீட்டில் அதிகம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அத்திரிபின் ஸ்பைக் புரோட்டீன் இழையில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளால் அது எதிர்பார்த்த ஒன்றே. இதனால் அத்திரிபு, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை கடப்பதற்கான வலிமை அதிகமாகிறது" என லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபரான்கோயிஸ் பல்லாக்ஸ் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-59537828

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.