Jump to content

இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

November 26, 2021
 
gajenrakumar parl இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கைவின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ள நிலையில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்நிலையில் இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்து அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் எனக் கருதினால் அது ஒருபோதும் வெற்றி பெறாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு,வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் வெளிவிவகார கொள்கையில் தேசிய வேலைத்திட்டம் உள்வாங்கப்படுவது அவசியம்.ஆனால் இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பெளத்த,சிங்கள கொள்கையில் பயணித்து, சிங்கள பெளத்த அடையாளத்தை வெளிப்படுத்தவே முனைகின்றனர். அதன் விளைவாக உள்நாட்டிலேயே எதிரிகளை உருவாக்கிக்கொண்டுள்ளன. இதற்கு தமிழர்கள் பிரதான இலக்காகியதுடன், இன்று முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்கையில் அரசு பயணிப்பதால் இந்த நாட்டின் தமிழர்கள், தென்னிந்திய தமிழர்களுடன் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கிறது என்ற நோக்கத்தில் பார்க்கும் மனநிலையும் உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழலால் இந்தியாவையும் எதிரி என நினைக்கும் நிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆகவே இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ளது. ஒவ்வொரு அரசும் இதே கொள்கையில் தான் பயணிக்கின்றன.

1980களில் ஜெயவர்த்தன அரசின் காலத்தில், உலக பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக உறவை பின்பற்றிய சூழ்நிலையில், இலங்கை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவை வெறுப்பேற்றியது.. இதன் விளைவாக இந்தியா தலையிட்டு இலங்கையை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட வேண்டாம் என வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நிலைமைகள் மாறின.

தற்போது உலகை வல்லரசாக சீனா ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், இலங்கை மீண்டும் சிங்கள பெளத்த கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு தமது அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் சீனாவின் நலனுக்காக அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவவும் இடமளித்துள்ளனர். சீனாவும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு இலங்கையில் அவர்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இது பூகோள அரசியலில் பாரிய நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

வல்லரசுகளான இந்தியா, சீனா, அமெரிக்காவை நாட்டுக்குள் இடமளித்து இலங்கை நெருக்கடிக்குள் விழுந்துள்ளது. ஆனால் இந்த பூகோள அரசியலை இலங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு முதலில் உள்நாட்டு கொள்கையில் மாற்றங்களை செய்தாக வேண்டும். அதன் மூலமாக நமது நலனுக்காக வல்லரசுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் நாம் அவ்வாறான வெளிப்படை கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பதில்லை., சிங்கள பெளத்த பேரினவாதத்தையே ஆட்சியாளர்கள் கையில் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் சிங்கள பெளத்த வாக்குகளில் ஆட்சிக்கு வந்ததாக கொண்டாடி வருகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய செயற்பாடு.

ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு அடிப்படைவாதியான ஞானசார தேரரை நியமித்துள்ளீர்கள், பல செயலணிகளில் இராணுவத்தை உள்நுழைத்துள்ளீர்கள். இந்த கொள்கை, ஒருபோதும் நலன்களுக்கு கைகொடுக்காது.

அரசியல் நிலைப்பாட்டில் எதுவாக இருந்தாலும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறித்து தனிப்பட்ட மரியாதையை நாம் கொண்டுள்ளோம். சட்ட வல்லுனராக மிகப்பெரிய மதிப்பை அவர்மீது கொண்டுள்ளேன். ஆனால் இப்போது அவர் வெளிவிவகார அமைச்சராக இத்தாலியில் கூறிய சில விடயங்களை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதே மாநாட்டில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார். அவரது கொள்கை அதுவாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பீரிஸும் இந்த நாட்டில் பல்லின சமூகம், மத கலாசார அடையாளங்களை வெளிப்பாடு வேண்டிய அவசியம் இல்லையென கூறியது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பீரிஸின் நிலைப்பாடாக இருக்க கூடாது. சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியில் இருக்கின்றோம் என அவரும் கூறுவது மதிப்புக்குரிய விடயம் அல்ல.

இன்று நாம் பல்வேறு பிரச்சினைகளில் சறுக்கி வருகின்றோம்.. இவ்வாறான நிலையில் உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரையில், பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களும் இங்கு வேறு வல்லரசுகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் என நீங்கள் கருதினால் அது ஒருபோதும் வெற்றிபெறாது.

இதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை, இலங்கையை பன்மைவாத நாடாக்குவதுடன் ,தேசிய கொள்கையை மாற்றிக்கொள்வதும், புதிய அரசியல் அமைப்பின் மூலமாக அதனை உறுதிப்படுத்துவதும் மட்டுமேயாகும். பிரிவுகளுக்கு இடமளிக்காது பூகோள அரசியலை கையாளுவதுமே சகலருக்கும் சாதகமாக அமையும் என்றார்.

https://www.ilakku.org/இந்தியாவின்-செல்வாக்கை-க/

Link to comment
Share on other sites

சிங்களம் மாறும் என்பது நடக்காது. அழுத்தம் இல்லாதவரை அவர்கள் மாற மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

4 minutes ago, nunavilan said:

சிங்களம் மாறும் என்பது நடக்காது. அழுத்தம் இல்லாதவரை அவர்கள் மாற மாட்டார்கள்.

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம்.

ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.
ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.
ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்
இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்
இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

கடைசீல, நான் சொன்னதை நீங்களும் சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

கீரைக் கடைக்கும் எதிர்கடை வேணும்.... கஜன், கஜேந்திரன் கோஸ்ட்டி.... வேற வழி ராஜதந்திரத்தினை முன் எடுக்க வேண்டும்.

பிரித்து மேய வேண்டும். இல்லாவிடில் வேலைக்காகாது.

Link to comment
Share on other sites

50 minutes ago, Nathamuni said:

கடைசீல, நான் சொன்னதை நீங்களும் சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

கடைசியில் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவியாக இருக்காது என்று எழுதி வருகின்றேன். இது யாழில் எழுதக் தொடங்கிய காலத்தில் இருந்து அல்ல, இலங்கையில் சரிநிகர் பத்திரைகையில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

அமெரிக்காவில்  சுமந்திரன், சாணக்கியன் பங்குபற்றிய பேச்சுக்களிலும் இந்தியாவே பெரும் பங்கு  வகித்தது போலுள்ளது.  தமிழர்களுக்கான தீர்பு நிராசை ஆகி விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

தாயகத்தில் சீனாவுடனான ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தத் தயங்குவதற்குக் கரணியமாக இருப்பது தமிழ் அரசியல்வாதிகள் தமது பாதுகாப்பு மற்றும் சொத்துகள் தொடர்பான அச்ச உணர்வாக இருக்கலாம். ஏன் புலத்திலே மொழியாளுமை மிக்க இளையோர் குழாமொன்றை இனங்கண்டு இருவாரப் பயணமாகச் சீனா சென்று சீன மக்கள் கட்சியின் இளையோரை சந்தித்தல் மற்றும் பண்பாட்டை அறிதல் என்று ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்கி அனுப்புவோமாயின் இந்தியா போன்ற நாடுகள் சிந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் யார் பூனைக்கு மணிகட்டுவது. அதற்குமுன் சீனாவின் தூதரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை ஊடகங்களில் செய்தியாக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

23 minutes ago, nochchi said:

 ஏன் புலத்திலே மொழியாளுமை மிக்க இளையோர் குழாமொன்றை இனங்கண்டு இருவாரப் பயணமாகச் சீனா சென்று சீன மக்கள் கட்சியின் இளையோரை சந்தித்தல் மற்றும் பண்பாட்டை அறிதல் என்று ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்கி அனுப்புவோமாயின் இந்தியா போன்ற நாடுகள் சிந்திக்க வாய்ப்புள்ளது. 

நல்லதொரு யோசனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கடைசியில் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவியாக இருக்காது என்று எழுதி வருகின்றேன். இது யாழில் எழுதக் தொடங்கிய காலத்தில் இருந்து அல்ல, இலங்கையில் சரிநிகர் பத்திரைகையில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து.

அப்போது..... சீனா களத்தில் இல்லையே ராசா .....

சீனாவுடன், கஜன், கஜேந்திரன் ..... தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டும் என்று இங்கே சொல்லி...... அதனால்.....பரிகாசம் செய்யப்பட்டேன்.....

அது தான்..... நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றேன்.

இன்றும், இந்தியா.... இதயசுத்தியுடன் இல்லை என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

******

இன்னும் ஒரு விசயமும் சொல்லி இருக்கிறேன்......

அதனையும் மீண்டும் சொல்கிறேன்....

சும்மாவாகினும்.... குட்டையை குழப்ப வேணும்..... கஜன்.... கஜேந்திரன் செய்யவேண்டிய இன்னும் ஒரு வேலை....

தமிழர்கள் சேர்ந்து, உங்களுக்கு ஜந்து பில்லியன் டொலர் தருகிறோம்..... உங்கள் கடனை அடைத்து நிம்மதியாக இருங்கள்.....

நாட்டை வெளியார் யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை.

நாட்டை தமிழருடன் பங்கு கொள்ளும் சட்டமூலத்தை நிறைவேற்றி, ஜநாவுக்கும் அறிவித்தது விடுங்கள்.

சிங்களவர் குழம்புவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று ஒரு பலம் இருக்கும்வரை நான் ஏனையோர் தயவில் வாழ்வதைத் தடுக்க முடியாது. அந்தப் பலம் என்பது எமது ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை தனித்தனியாகவே அரசியல் அரசியல் செய்துவருகிறோம். 

தலைவர் எம்மை ஒன்றிணைத்து வைத்திருந்த காலம் இனி வரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எமக்கென்று ஒரு பலம் இருக்கும்வரை நான் ஏனையோர் தயவில் வாழ்வதைத் தடுக்க முடியாது. அந்தப் பலம் என்பது எமது ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை தனித்தனியாகவே அரசியல் அரசியல் செய்துவருகிறோம். 

தலைவர் எம்மை ஒன்றிணைத்து வைத்திருந்த காலம் இனி வரப்போவதில்லை. 

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிராதவராக  இருந்தால்... சிறப்பு....

காரணம்...  நடுநிலைமை பேண முடியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பரிகாசம் செய்யப்பட்டேன்.....

நீங்கள் பரிகாசம் செய்யபடவில்லை. சீனாவிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராதவிடத்து எப்படி சீனாவிடம் பேச முடியும் என்றே கேட்கப்பட்டது.

இப்போதும் என்னை மதிரயில கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக என்று கதைதான் வருகிறதே ஒழிய சீனா உண்மையிலேயே தமிழர் தரப்பை அணுகியதாக? என்பது தெளிவில்லை.

6 hours ago, nunavilan said:

அமெரிக்காவில்  சுமந்திரன், சாணக்கியன் பங்குபற்றிய பேச்சுக்களிலும் இந்தியாவே பெரும் பங்கு  வகித்தது போலுள்ளது.  தமிழர்களுக்கான தீர்பு நிராசை ஆகி விடுமா?

வா என்று அணைக்கவும் முடியாது….

போ என்று துரத்தவும் முடியாது….

எம்மை பொறுத்தவரை இந்தியா ஒரு நித்திய-கோவிட். 

அதன் எம்மீதான தாக்கத்தை manage பண்ணத்தான் முடியும், eradicate பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இப்போதும் என்னை மதிரயில கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக என்று கதைதான் வருகிறதே ஒழிய சீனா உண்மையிலேயே தமிழர் தரப்பை அணுகியதாக? என்பது தெளிவில்லை.

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎

காலதாமதமின்றி நகர்த்தப்பட வேண்டிய விடயம்.

6 minutes ago, goshan_che said:

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

தாயகத்தில் உள்ள தலைமையோடு இணைந்து சமாந்திரமாக நகரும் தலைமை புலத்திலும் தேவை. பல்வேறு வேலைத்திட்டங்களை ஒருங்கிணைக்க உதிரிகளாக நின்று யாருமின்றி ஆளாளாளுக்கு நகர்வது தவிர்த்து புலத்திலும் தாய்நிலத்திலுமாக ஒருங்கிணைந்து செல்வதும் அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎

இந்தியா, சீனா போன்ற நாடுகள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தமது கொள்கை என்ன என்பதை வகுத்து அதன்படியே செயல்படுகிறன. 

இந்தியாவின் இலங்கை கொள்கை - அங்காலேயும் பாடி, இங்காலேயும் பாடுவது.

சீனாவின் இலங்கை கொள்கை (இன்று வரைக்கும்) - இலங்கை அரசுக்கு மட்டுமே ஆதரவு. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வருவதாக கதை ஒன்று வருகிறது. அப்படி ஒரு மாற்றம் வந்தால் - அதற்கான சமிக்ஞை தெரிந்தால் அதை கஜன் அல்லது டயஸ்போரா பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அப்படி ஒரு மாற்றத்துக்கான சமிக்ஞையே இன்றி பெய்ஜிங்கில் போய் அதிகம் சாதிக்க முடியாது. லண்டனிலாவது அகமட் சந்தித்தார். அது கம்யூனிஸ்ட் நாடு - பியோனையும் சந்திக்க முடியுமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

அப்படி சொல்ல முடியாதே...

யூதர்கள் உதாரணம், நம் முன்னே உள்ளதே. அவர்களுக்கு புலத்தில் தலைமை இருக்கவில்லை. ஆனால் உணர்வு இருந்தது.

நாடு அடைவதில் முடிந்தது. ஜெருசலேம் என்னும் கிறித்தவ முக்கிய தலத்தினை, இஸ்லாமியர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய மேற்கின் தேவைக்கூடாக, யூத மதத்தை சேர்ந்தவர்கள் நாடு அடைந்த கதை.

ஆக, இன்றும் உண்டாகியுள்ள ஒரு மேற்கின் தேவைக்கூடாக, நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

தாயகத்தில் உள்ள தலைமையோடு இணைந்து சமாந்திரமாக நகரும் தலைமை புலத்திலும் தேவை. பல்வேறு வேலைத்திட்டங்களை ஒருங்கிணைக்க உதிரிகளாக நின்று யாருமின்றி ஆளாளாளுக்கு நகர்வது தவிர்த்து புலத்திலும் தாய்நிலத்திலுமாக ஒருங்கிணைந்து செல்வதும் அவசியமானது.

நிச்சயமாக. அதற்கு தாயகத்தில் குறைந்த பட்சம் பாராளுமன்ற அங்கதுவம் உள்ள கட்சிகள் யாவும் சேர்ந்து ஒரு minimum working plan ஐ உருவாக்க வேண்டும்.

அந்த plan அடிப்படையில் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றாகி தமக்கு ஒரு தலைமையை/கூட்டு தலைமையை தேருதல் வேண்டும்.

தாயக கட்சிகளின் குழுவும், புலம்பெயர் கூட்டு தலைமையும் சந்தித்து, ஒருமித்து, மேற்சொன்ன plan அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலே சொன்னபடி தாயகத்தில் இருப்பவர்கள், புலம் பெயர் அமைபுகளுடன் சேர்ந்து இயங்க முட்டுகட்டையாக இருக்கும் சில விடயங்களை புலம்பெயர் அமைப்புகள் தற்காலிகமாகவேனும் விட்டு கொடுக்க வேண்டும்.

அவை யாவை என எழுதினாலே என்னை இங்கே தோய்த்து தொங்க விடுவார்கள்.

ஒன்றில் நாம் தாயக அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து அடையகூடிய தீர்வுக்கு முயல வேண்டும். அல்லது தனியே புலம்பெயர் நாட்டில் இருந்து கொண்டு இலட்சிய தீர்வுக்காக குரல் (மட்டும்) கொடுத்தபடி இருக்க வேண்டும்.

 Don’t let the prefect be the enemy of the good என்ற வாக்கியம் எனது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நேற்று அல்ல, நான் இந்த தளத்தில் இணைந்த நாள் முதல் சொல்வது..... மீண்டும் சொல்கிறேன்.

ஆசியாவின் பொருளாதார பெருமையமான ஹொங்கொங்கினை, சீனாவிடம் இழந்த மேற்கு தேடும் புதிய தளம், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆசிய பொருளாதார புலி நாடுகளில் இல்லை.

மத்திய கிழக்கில், இஸ்ரேல் போல, ஆசியாவில் தனது கடவுசீட்டுக்களை கொண்ட, ஈழத்தமிழர் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு பொருளாதார மையம் அமையக்கூடிய இடம், இலங்கைத்தீவில், தமிழர் பகுதி மட்டுமே.

அது நோக்கியே....சகலமும்.... இயல்பாக.... நடை போடும்... அதனை தடுக்கும் சக்தியை சிங்களம் இழக்கும்.

சீனாவின் உள்நுழைவு காரணமாக, இனி.... இது கொஞ்சம் வேகமெடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாதே...

யூதர்கள் உதாரணம், நம் முன்னே உள்ளதே. அவர்களுக்கு புலத்தில் தலைமை இருக்கவில்லை. ஆனால் உணர்வு இருந்தது.

நாடு அடைவதில் முடிந்தது. ஜெருசலேம் என்னும் கிறித்தவ முக்கிய தலத்தினை, இஸ்லாமியர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய மேற்கின் தேவைக்கூடாக, யூத மதத்தை சேர்ந்தவர்கள் நாடு அடைந்த கதை.

ஆக, இன்றும் உண்டாகியுள்ள ஒரு மேற்கின் தேவைக்கூடாக, நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

யூத வரலாற்றினதும், இஸ்ரேல் உருவாக்கத்தினதும் தவறான புரிதல் இது.

Aliyah என்பது சையோனிசத்தின் ஒரு அடிப்படை தத்துவம். அதாவது யூதர்கள் நாடு மீளல். 1882 இல் இருந்து பெருஎடுப்பிலான ஆலியா ஆரம்பமாகிவிட்டது. யூதர்கள் சிறுக சிறுக தமது பலத்தை நாட்டில் பெருக்கி கொண்டு வரும் போது 2ம் உலக யுத்தமும், பல்வோர் ஒப்பந்தமும் அவர்களுக்கு சாதகமாக அமைகிறது அல்லது அமையவைக்கிறார்கள்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக பல காலம் முன்னரே அவர்களின் தலைமை British mandated Palestine இல்தான் இருந்தது.

பென் கூரின் போன்ற தலைவர்கள் எல்லாம் பலஸ்தீனியத்யில் இருந்தபடிதான் நாட்டுருவாக்கத்தை, கலகங்களை, போர்களை முன்னேடுத்தனர். பென்கூரின் 1906 இல் நாடு திரும்பி, 1948 வரை அங்கிருந்து போராடி, இஸ்ரேலின் முதல் பிரதமராகினார்.

அதற்கான backup தான் புலம்பெயர் நாட்டில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நீங்கள் தரும் தகவல் எனக்கு தெரியாது.

ஆனால்... நான் சொன்னது தவறு இல்லை. 

மத்திய காலத்தில் இருந்து, பாப்பரசரின் வேண்டுகோளின் பெயரில் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக ஐரோப்பிய கிறிஸ்தவர்களும், மத்திய கிழக்கு இஸ்லாமியர்களும் The Crusade என்னும், தொடர் மோதலில் ஈடு பட்டார்கள் என்பது வரலாறு.

ஆக, மேலை நாட்டு, கிறிஸ்தவர்களின் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில், இஸ்ரேலியர்களை மேற்கு ஆதரித்தது, ஆதரிக்கிறது, ஆதரிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் தரும் தகவல் எனக்கு தெரியாது.

ஆனால்... நான் சொன்னது தவறு இல்லை. 

மத்திய காலத்தில் இருந்து, பாப்பரசரின் வேண்டுகோளின் பெயரில் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக ஐரோப்பிய கிறிஸ்தவர்களும், மத்திய கிழக்கு இஸ்லாமியர்களும் The Crusade என்னும், தொடர் மோதலில் ஈடு பட்டார்கள் என்பது வரலாறு.

ஆக, மேலை நாட்டு, கிறிஸ்தவர்களின் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில், இஸ்ரேலியர்களை மேற்கு ஆதரித்தது, ஆதரிக்கிறது, ஆதரிக்கும்.  

மேற்கு இஸ்ரேலை ஆதரிக்க மத, புவியியல், வள காரணங்கள் இருப்பது உண்மை.

ஆனால் இதற்கு முந்திய பதிவில் நான் தலைமை எப்போதும் தாயகத்தில்தான் அமையவேண்டும் என எழுதியதை மேற்கோள்காட்டி, இல்லையே என இஸ்ரேல் உதாரணத்தை எழுதினீர்கள்.

அதற்குத்தான் சொல்கிறேன். இஸ்ரேலின் தலைமையும் வெளிநாட்டில் இருக்கவில்லை, நான் சொன்னது போல் தாயகத்தில்தான் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.