-
Tell a friend
-
Topics
-
8
ஈழப்பிரியன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
இறுதியாக கிடைத்த தகவலின்படி " சிரிப்பு சிங்கன் குழு " போலிச்செய்தியை பரப்புவதாக இலங்கை இந்தியா கூட்டுப்படை வலை வீசித் தேடுகிறார்கள். கண்டு பிடிப்பவருக்கு சன்மானமாக ஆயிரம் கோடி வெகுமதி என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
-
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களில் இருந்தவேளை ஆட்டம் மழையால் தடைபட்டது. முடிவு: DLS முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.
-
7ரன்ஸ் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி என நடுவர் தெரிவித்துள்ளார் மழை பெய்ததால் ரன் அடிப்படையில் பஞ்சாப் வெற்றி...............
-
நான் நேற்று விடுதலை பார்த்தேன். வெற்றிமாறனின் இன்னுமொரு கனதியான, ஒவ்வொரு காட்சியும் அதன் உச்ச செலுமையுடன் எடுக்கப்பட்ட, தரமான ஒரு தமிழ் படம். அதிகாரத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடும் சமூகத்தின் குரலாகவும் அதை ஒடுக்க முனையும் அதிகாரத்தின் கோர முகமுமாக படம் அமைந்திருப்பதால் பல காட்சிகளை எம் போராட்ட வாழ்வுடன் connect பண்ண முடிகிறது. சூரியால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றார்.. அதுவும் காதலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் தவிப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடும் போது முழு audience சையும் அவர் பின்னால் ஓட வைக்கின்றார். விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவு. ஆனால் வந்து போகும் அனைத்துக் காட்சிகளிலும் தன் உச்ச நடிப்பை தருகின்றார். இளையராஜாவின் இசை! படத்தின் ஆன்மாவை எமக்குள் நிரப்பும் இசை. இத்தனை வயதிலும் அவரால் எப்படி இப்படி இசையமைக்க முடிகிறது..! பின்னனி இசையை ஒரு album ஆகவே வெளிவிடலாம். வெற்றிமாறனின் உழைப்பும் ஒவ்வொரு காட்சிக்கு அவர் கொடுக்கும் நேர்த்தியும், detailing மும் அருமை! மகளையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தோம். அதிகாரத்தின் brutality பற்றியும் அதை எம் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் அவளுக்குள் கடத்த முடிந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
-
மழையால் விளையாட்டு தடை பட்டு இருக்கு..................ரன் அடிப்படையில் பஞ்சாப் வெல்வதா அம்பியர் அறிவிக்க கூடும்...................
-
Recommended Posts